திரைக்கதை 21






சென்ற    கட்டுரையில் ,      
ஒரு    ஸீனை   எப்படி   எழுத    
வேண்டும்     என்று    ஸிட் ஃபீல்ட் சொல்லியிருப்பதைப்    பார்த்தோம்.    




சுருக்கமாக  –  ஒரு   ஸீனின்       
சூழ்நிலையை    ( context )   உருவாக்கிவிட்டு,  
அதன்    நோக்கத்தைத்   
 ( purpose )    தெளிவுபடுத்திவிட்டு,     
இடம்   மற்றும்   காலம்     
ஆகியவற்றை    உருவாக்கிவிட்டு,    
அந்த    ஸீனின்    பொருளடக்கத்தை    
எழுதிவிட்டு    (  ஸீனில்    
யாரெல்லாம்     
வருகிறார்கள்  –  பிரதான   
கதாபாத்திரங்களைத்   தவிர ),    
இவர்களுக்குள்   நிகழும்    
சம்பவத்தை    சுருக்கமாகக்    காட்டினால்,    
ஸீன்   தயார்.








ஆனால்,    திரைக்கதை   என்பது     
வெறும்    ஸீன்களின்    தொகுப்பு     
அல்லவே?     தனித்தனியாக     
ஸீன்களை     எழுதிவிட்டு     
அவற்றை     வரிசைப்படுத்தினால்     
மட்டும்    போதாதே?     
இப்படி    எழுதப்பட்ட    ஸீன்களை     
எப்படி    ஒன்றோடொன்று    இணைப்பது?     
எந்தத்     திரைப்படத்திலும்,     
ஒரே    குறிப்பிட்ட    நோக்கத்தோடு     
பல   ஸீன்கள்    இருப்பதைப்    
பார்க்கலாம். 








அதாவது,    ஒரு    பாங்க்   கொள்ளை.    
அல்லது    ஒரு    க்ளைமேக்ஸ்.     
அல்லது   ஒரு   கார்   சேஸ்.    இப்படி,     
ஏதோ    ஒரு    நோக்கத்தை     
நிறைவேற்றும்    பொருட்டு    
பல   ஸீன்கள்   வரிசையாக     
இருக்கவேண்டி    வரும்.     
இப்படி    இருந்தால்தான்     
திரைக்கதை    சுவாரஸ்யம்    அடையும்.     
இந்த    வரிசையான   ஸீன்களை    
‘ஸீக்வென்ஸ்’    என்று    அழைப்பார்கள்.    
இப்படி     ஸீக்வென்ஸ்களை     
எழுதுவது    எப்படி?







அதற்கு    முன்    இன்னொரு     
விஷயத்தைத்     
தெளிவுபடுத்திவிடவேண்டும்    
என்று     நினைக்கிறேன்.






ஹாலிவுட்டைப்     
பொறுத்தவரை,     
விறுவிறுப்பான.   படங்களுக்கே     
மவுசு    ஜாஸ்தி.     அப்படங்கள்     
பெரும்பாலும்     
மசாலாக்களாகவே     அமைகின்றன.    
Bourne  Series   ஒரு   உதாரணம்.    
டெர்மினேட்டர்,    ஏலியன்,   அவதார்,    
டைட்டானிக்    போன்ற    படங்கள்     
இவ்வகையே.         இப்படிப்பட்ட    
மசாலாக்களை     எடுப்பதில்     
தலைசிறந்து    விளங்குபவர்     
ஜேம்ஸ்   கேமரூன்.     அவரது   தளம்   அது.    
அவரால்    ஒரு    அருமையான    
கலை    அனுபவத்தை   வழங்கும்    
படம்    ஒன்றை   எடுக்க    முடியாது.     
இப்படிப்பட்ட    மசாலாக்களை    
சிறந்த    வகையில்   எடுப்பது   எப்படி?    
என்பதே    ஸிட் ஃபீல்டின்    புத்தகத்தில்    
இருக்கும்    ஃபார்முலா.     
ஆகவே,    இந்தத்    தொடரும்     
இப்படிப்பட்ட    விறுவிறுப்பான     
மசாலாக்களை    எடுப்பதைப்     
பற்றியே     விளக்குகிறது.








ஆனால்,     ஒரு   சிறந்த   படத்தை     
இந்த     ஃபார்முலாவை    வைத்து     
எடுக்க    முடியும்    
என்பதையும்    மறந்துவிடக்கூடாது.    
Shawshank  Redemption    அல்லது    
Forrest  Gump   அல்லது   Road to Perdition   
அல்லது    Seven   போன்ற   cult  படங்கள்    
இப்படி     எடுக்கப்பட்டவையே.    
அதேபோல்    நம்மூர்    
ஆரண்ய காண்டம்    படத்தையும்     
ஸிட் ஃபீல்டின்    இந்த    
விதிகளுக்குள்    கொண்டுவந்துவிட    
முடியும்.     இருப்பினும்,      
ஒரு    ஐரோப்பியப்    படத்தையோ     
அல்லது    இரானியப்    படத்தையோ    
அல்லது    கிம் கி டுக்    அல்லது    
ரித்விக் கடக்    அல்லது     
சத்யஜித் ரே    படங்களையோ     
இப்படி    அலசிவிட     முடியாது.     
கலைப்படங்கள்    என்பது     
ஒரு    தனி    கேடகரி.     
இதையும்    மறந்துவிடக்    கூடாது.








இந்தத்    தெளிவான    
பார்வையோடு,      ஸிட் ஃபீல்டின்    
புத்தகத்தின்    அடுத்த     
அத்தியாயத்தை    நோக்கலாம்     
வாருங்கள்.






                     Chapter 11 – The Sequence





நவீன    உலகின்    கணினி     
ஒன்றை    எடுத்துக்கொண்டால்,     
அந்தக்    கணினியில்   பல   தனிப்பட்ட    
கருவிகள்    அல்லது   பாகங்கள்    உள்ளன.    
ஹார்ட் டிஸ்க்,   RAM ,   மதர் போர்ட்,     
பவர் யூனிட்    ஆகியவை   CPU க்குள்    
இருப்பவை.    டிஸ்ப்ளே,    கீபோர்ட்,    
மௌஸ்    ஆகியவை    வெளியே.     
இப்படிப்பட்ட     தனித்தனி    
பாகங்கள்    ஒன்றுசேர்ந்து  
செயல்படுவதாலேயே    கணினியின்     
இயக்கம்    நடைபெறுகிறது.    
எந்த   ஒரு    விஷயத்தையும்    
இப்படிப்பட்ட    சிறுசிறு    தனித்தனி    
பாகங்களின்     
ஒன்றுசேர்ப்புதான்    
சாத்தியப்படுத்துகிறது.     
மனித   உடல்     
அப்படிப்பட்டதுதான்.     
விண்வெளியின்    Solar  System    
அப்படியே.     
இதைப்போலத்தான்     
திரைக்கதையும்.     தனித்தனி    விஷயங்கள்   
பல   அதில்    இருக்கும். 







ஆரம்பம்,   முடிவு,   Plot Points,   இசை,     
லொகேஷன்     போன்றவை.     
இவையெல்லாம்    ஒன்றுபடுவது,   
action  –  அதாவது   செயல்,     
Character  –  அதாவது    
கதாபாத்திரங்களின்    குணாம்சம்   
மற்றும்    dramatic  premise  –  அதாவது    
ஒரு   நோக்கம்   ஆகிய    
மூன்று    விஷயங்களால்தான்.
இப்படிப்பட்ட   பல   விஷயங்களில்,    
ஒரு    திரைக்கதைக்கு    முக    
அவசியமான  –  மிக    முக்கியமான    
அம்சம்  –  ஸீக்வென்ஸ்    
என்கிறார்   ஸிட் ஃபீல்ட்.





ஏன்?




ஸீக்வென்ஸ்    என்பது   –   ஆரம்பம்,    
நடுப்பகுதி    மற்றும்    முடிவோடு    
கூடிய     ஸீன்களின்    வரிசை.     
இந்த   ஸீன்கள்   ஒரு   குறிப்பிட்ட     
நோக்கத்தோடு    அமைந்திருக்கும்.    
இந்த   நோக்கம்    என்பதுதான்    
அந்த     வரிசையான     ஸீன்களை     
இணைக்கும்    புள்ளி.     
உதாரணத்துக்கு,     
நாம்    மேலே   பார்த்ததுபோல்,        
ஒரு    பாங்க்    கொள்ளை.    அல்லது     
ஒரு   மரண    ஊர்வலம்.    அல்லது    
ஒரு   திருமணம்.    அல்லது   ஒரு   துரத்தல்.   
அல்லது   ஒரு   தேர்தல்.     
அல்லது    ஒரு    பயணம்.      
ஒரு    ஸீக்வென்ஸ்   என்பதன்     
நோக்கத்தை    ஓரிரு    
வார்த்தைகளில்    சொல்லமுடிய    
வேண்டும்.     திரைக்கதைகளில்     
பலமுறை,     
இந்த    ஸீக்வென்ஸ்களை வரிசைப்படுத்துவதன்   
மூலமே    திரைக்கதை     
முழுமையடைந்திருக்கிறது.







ஒரு   உதாரணம்   பார்க்கலாம்.     
ஸிட் ஃபீல்டின்    புத்தகத்தில்     
இருக்கும்    உதாரணம்,   Seabiscuit   என்ற   
படத்தைப்    பற்றி.     அந்தப்    படத்தை    
நம்மில்    பார்த்திருப்பவர்கள்     
மிகக்    கம்மி    என்பதால்,     
எல்லோருக்கும்    தெரிந்த   ஒரு    உதாரணம்.




Nolan





The Dark Knight .    முதல்   காட்சி.     
ஜோக்கர்    அறிமுகம்.    அக்காட்சி,     
ஒரு    வங்கியை    கொள்ளையடிக்க      
முயலும்    சில    முகமூடி     
அணிந்த     கோமாளிகளின்     
அறிமுகத்தோடு     துவங்குகிறது.    
அவர்கள்     வங்கிக்குள்     
துப்பாக்கிகளோடு     நுழைகின்றனர்.     
இது   ஆரம்பம்.     அனைவரையும்    
துப்பாக்கி    முனையில்     
அமர்த்திவிட்டு,     
கொள்ளையை     ஆரம்பிக்கின்றனர்.    
அப்போது    பாங்க்    மானேஜர்    திடீரென்று    
சுட    ஆரம்பிக்கிறார்.     
இது   நடுப்பகுதி.    இறுதியில்,     
அனைவரும்    இறந்தபின்,    
ஜோக்கர்    தன்னுடைய    முகத்தை    
நமக்குக்    காண்பிக்கிறான்.     
அதன்பின்     கொள்ளையடித்த    
பணத்தோடு     அங்கிருந்து    
எஸ்கேப்    ஆகிறான்.    அந்த   வங்கி,     
கோதம்    நகரின்   சமூக    
விரோதிகளின்    பணத்தைப்    
பாதுகாக்கும்    வங்கி   என்ற    
தகவலும்     அக்கொள்ளையின்போதே    
நமக்குத்     
தெரிகிறது   –   தொலைபேசி     
லைன்களை    செயலிழக்க    
வைக்கும்    திருடனின்    மூலம்.








இந்த    ஸீக்வென்ஸ்   ஒரு   மினி   சினிமா.   
ஆரம்பம்,   நடுப்பகுதி,   இறுதி    
ஆகியவையோடு    ஒரு    நோக்கமும்    
இருப்பதால்.    கதாபாத்திர    அறிமுகமும்    
இதில்    இருக்கிறது.     
அவர்களின்     நோக்கமும்     
தெளிவாகத்    தெரிகிறது.     
அந்த   நோக்கத்தில்   ஜோக்கர்     
கதாபாத்திரம்    வெற்றியும்    
அடைகிறது.     அதைவிட     முக்கியமாக,    
ஜோக்கர்    என்ற    கதாபாத்திரத்தின்    
குணம்    நமக்குப்    புரிகிறது.     
அந்தக்    கதாபாத்திரம்     
அழிவை     விளைவிப்பதை     
ஜஸ்ட்   லைக்   தட்   செய்கிறது.    
அதன்   எல்லா   முயற்சிகளுக்குப்    
பின்னரும்   ஒரு   வலுவான    
காரணம்    இருந்தாலும்,     
அந்தக்   காரணம்     
நிறைவேறியபின்னரும்     
தேவையே    இல்லாத   அழிவை    
விளைவிப்பதில்    ஜோக்கருக்கு     
எந்தப்    பிரச்னையும்   இல்லை    
என்பதை    நமக்குப்   புரிய    
வைக்கும்    ஸீக்வென்ஸ்   இது.     
இந்தப்   புரிதல்   நமது     
மனதில்    பதிந்துவிடுவதால்,     
படம்   முழுக்க    ஜோக்கர்    நிகழ்த்தும்    
அழிவுகளை   மிக   எளிதாக    
நம்மால்    புரிந்துகொள்ளவும்    
முடிகிறது.      இதுதான்   ஒரு     
ஸீக்வென்ஸின்    வெற்றி.    
கதாபாத்திரங்களைப்   பற்றிய    
செய்திகள்    
கிடைக்கவேண்டும்.    
கதாபாத்திரங்களின்    குணாதிசயங்கள்   
புரிய     வேண்டும்.     
அதே    சமயம்   கதையும்     
முன்னே   செல்ல    வேண்டும்.    
சுவாரஸ்யமாக.








தமிழில்,    மகாநதி   படத்தில்    
சிட்ஃபண்ட்    ஆரம்பிக்க    நாயகன்     
செய்யும்    முயற்சிகள்     
ஒரு   ஸீக்வென்ஸ்.   போலவே    
கில்லி    படத்தில்    
கதாநாயகியை     அழைத்துக்கொண்டு    
நாயகன்    தப்பிப்பது     
ஒரு    ஸீக்வென்ஸ்.     
பருத்திவீரனில்    இப்படி    
பல   ஸீக்வென்ஸ்கள்    
இருக்கின்றன.     
போலீஸ்காரரை    தூக்கிக்கொண்டு    
இருவரும்    ஓடுவது,     
ஆரம்ப    திருவிழா   காட்சிகள்,     
ஃப்ளாஷ்பேக்    என    விருமாண்டியில்   
இறுதியில்    ஜெயிலை    
உடைத்துக்கொண்டு    நாயகன்    
வெளியே    வருவது    ஒரு   ஸீக்வென்ஸ்.   
இந்த      ஸீக்வென்ஸின்   
நோக்கம்,    கொத்தாளத்தேவனை     
தடுப்பது.     அதிலேயே     ரிப்போர்ட்டரைக்    
காப்பது    என்ற   நோக்கமும்     
சேர்கிறது.








தற்போதைய    ஹாலிவுட்     
திரைக்கதைகள்,     தனித்தனி     
ஸீன்களில்    கவனம்     
செலுத்துவதைவிட,     
இப்படிப்பட்ட      ஸீக்வென்ஸ்களிலேயே    
அதிக   கவனம்   வைக்கின்றன    
என்று   ஸிட் ஃபீல்ட்    சொல்கிறார். 





அதற்கு உதாரணமாக,     
டெர்மினேட்டர் 2    படத்தை    அலசுகிறார்.    
இந்தப்    படமே,   மொத்தம்     
ஆறே    ஆறு   ஸீக்வென்ஸ்களால் உருவாகியிருக்கிறது.     
இந்த    ஆறு     
ஸீக்வென்ஸ்களையும்    
இணைத்தால்    அப்படத்தின்    
முழு    திரைக்கதையும்     ரெடி.




அவை    என்ன     ஸீக்வென்ஸ்கள்?



1.    சிறுவன்   ஜான்   கான்னரை    
அர்னால்ட்   காப்பது


2.    ஜான்    கான்னரின்    
தாயை    மருத்துவமனையிலிருந்து   
விடுவிப்பது



3.   ஸாரா,   ஜான்  கான்னர்    
மற்றும்    அர்னால்ட்    ஆகியோர்    
பாலைவனத்தில்     ரெஸ்ட்     
எடுப்பது   –   இந்த   ஸீக்வென்ஸின்     
நோக்கம்,    ஆரம்பத்தில்    
இருந்து   action   காட்சிகளால்     
தாக்குண்ட    ஆடியன்ஸையும்    
கொஞ்சம்    ஆசுவாசப்படுத்துவது    
என்று     ஜேம்ஸ்  கேமிரோன் சொல்லியிருக்கிறார்.     
அதாவது  Pit Stop.




4.    வருங்காலத்தில்    இயந்திரங்களின்    
புரட்சி    ஏற்படக்   காரணமாக     
இருக்கும்   விஞ்ஞானியை   ஸாரா    
கொல்ல    முயல்வது




5.    Cyberdyne  Systems   அலுவலகத்தை    
போலீசார்   முற்றுகையிடுவது



6.    க்ளைமேக்ஸ்.    ஸ்டீல் ஃபேக்டரி    
மோதல்.      இந்த    ஸீக்வென்ஸ்களை    
வரிசையாக    இணைத்தால்    
டெர்மினேட்டர் 2வின்    
திரைக்கதை    ரெடி.







இப்படி    சில    ஸீக்வென்ஸ்களை    
மட்டும்    எழுதி   இணைத்தால்    
திரைக்கதை    தயாராகிவிடுமா?    
அல்லது    வேறு    ஏதாவது    
தேவையா?       இதைப்பற்றியும்,     
ஒரு    action    படத்துக்கு   எப்படித்     
திரைக்கதை     எழுதவேண்டும்    
என்பது    பற்றியும்    அடுத்த    
கட்டுரையில்   காணலாம்.      அதுவரை










தொடரும் . . .











கருத்துகள்

பிரபலமான இடுகைகள்