ராகவா லாரன்ஸ் வாழ்கை பயணம்
ராகவா லாரன்ஸ் வாழ்கை பயணம்
இந்தியாவின் சிறந்த நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குனரை தாண்டி திரையில் நடிப்பு, இயக்கம், பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் லாரன்ஸ். 1993 - ல் சிறந்த நடன இயக்குனர் என அங்கிகாரத்திற்கு பிறகு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
'பேய் படம்' என்றால் பயந்து கொண்டிருந்த நேரத்தில் பேய் படத்திற்க்கென்று தனி வழிதடத்தை அமைத்தவர், லாரன்ஸ். Horror + comedy என்று புதுவித முயற்ச்சியில் வெற்றிபெற்றார். நடிகராக மட்டுமல்லாமல் நல்ல மனிதராகவும் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
தனது 22 வயதின் போது தெலுங்கு திரைப்படத்தில் முதன்முறையாக தோன்றினார். தன் வாழ்நாள் முழுவதும் முன்னணி கதாநாயகர்களுடனும், இயக்குனர்களுடனும் பணிபுரிந்தார். இவரின் தனிச்சிறப்பு என்றால் hip hop மற்றும் Western நடன அசைவுகள்தான்...
பிறப்பு
ராகவேந்திரா லாரன்ஸ் 29 அக்டோபர் 1976ஆம் ஆண்டு பூந்தமல்லியில் பிறந்தார். இவருக்கு எல்வின் என்ற ஒரு சகோதரர் உண்டு.
பெயர் காரணம்
லாரன்ஸ் குழந்தையாக இருக்கும்போது அவருக்கு மூளையில் கட்டி இருந்தது. எனவே அவர் குறைந்த நாட்களே பள்ளிக்கு சென்றார். இவர் குணமடைய வேண்டும் என்பதற்க்காக லாரன்ஸின் அன்னை ராகவேந்திரா சுவாமி கோவிலுக்கு சென்று வந்தார்.
அதன்பிறகே, லாரன்ஸ் குணமடைந்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு ராகவேந்திராவின் மீது அதிக நம்பிக்கை கொண்டவராக மாறினார், லாரன்ஸ். எனவே ராகவேந்திரா எனும் பெயரை தன் பெயரோடு சேர்ந்து கொண்டார். ஆவடி - அம்பத்தூர் வழியே , திருமுல்லைவயலில், ராகவேந்திரா சுவாமி பிருந்தாவனம் கோவிலை கட்டி ஜனவரி 1, 2010 - ல் திறந்து வைத்தார்.
திரைப்பயணம்
முதலில் ராகவா லாரன்ஸ் சூப்பர் சுப்பராயனிடத்தில் கார் சுத்தம் செய்பவராக பணிபுரிந்தார். ரஜினிகாந்த் இவரின் நடனத் திறமையை கண்டு நடன கலைஞர்களின் தொழிற்சங்கத்தில் ( Dancers union) சேர்த்தார்.
நடன இயக்குனராக
(1993 - இல் இருந்து,.... )
சிரஞ்சீவி, தனது ஹிட்லர் படத்தில் லாரன்ஸ்க்கு நடனஇயக்குனராக பணிபுரிய வாய்ப்புக் கொடுத்தார். இவரின் திறமையை பார்த்து தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் வாய்ப்பு கிடைத்தது.
1989- ஆம் ஆண்டு T. ராஜேந்திரன் இயக்கிய 'சம்சார சங்கீதம்' என்ற தமிழ்படத்தின் ஒரு பாடலில் முதன்முறையாக தோன்றினார்.
ஜெண்டில்மேன் படத்தில் ' சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே ' எனும் பாடலில் பின்னணியில் நடனமாடி இருப்பார்.
ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக 1993 - ல் உழைப்பாளி ( உழைப்பாளி இல்லாத ),
1994- இல் சின்னமேடம்
1995- இல் தாய் தந்தை பாசம்
1999- இல் அமர்க்களம்( மஹா கணபதி)
2000- இல் உன்னை கொடு என்னைத் தருவேன் ( சொல்லு தலைவா)
மற்றும் திருநெல்வேலி ( ஏலே அழகம்மா )
2002- இல் வருஷமெல்லாம் வசந்தம் ( நீங்க ரெடியா)
ரோஜாக்கூட்டம் (அப்பம்மா )
பாபா (மாயா மாயா)
2003- இல் புதிய கீதை ( அண்ணாமலை )
திருமலை (தாம்தக தீம்தக)
2010- இல் பெண் சிங்கம் ( அடி ஆடி அசையும் இடுப்பு),
2015- இல் கதை திரைக்கதை வசனம் இயக்கம் ( Live the movement) போன்ற தமிழ்படங்களில் நடனஇயக்குனராக பணிபுரிந்தார்.
நடிகராக
(1998 -ல் இருந்து,...)
தயாரிப்பாளரான TVD பிரசாத் speed dancer என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க லாரன்ஸ்க்கு முதன்முதலாக வாய்ப்பு கொடுத்தார் . இவரின் முதல்படம் தோல்வியை தழுவியது. இதன்பிறகு இரண்டு தமிழ் படங்களில் நடித்தார், லாரன்ஸ். இவையும் தோல்விதான்.
இருந்தாலும் தனது நம்பிக்கையில் மனம் தளரவில்லை. பிறகு, இயக்குனரான K. பாலச்சந்திரனின் 100- வது படத்தில் நடிக்க லாரன்ஸ்க்கு ஒரு அழைப்பு வந்தது.
கதாநாயகனாக தனது வெற்றிப்பயணத்தை
'பார்த்தாலே பரவசம்' (2001) படத்திலிருந்து தொடங்கினார். 2007ல் வெளியான முனி திரைப்படம் இவரது திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்தது. 2000- உன்னைக்கொடு என்னை தருவேன், பார்த்தேன் ரசித்தேன் 2001 - ல் பார்த்தாலே பரவசம், 2002- ல் அற்புதம், 2004- ல் தென்றல், 2007- ல் முனி, 2008- ல் பாண்டி, 2009 - ல் ராஜாதிராஜா, 2010-ல் இரும்புகோட்டை முரட்டு சிங்கம், 2011-ல் முனி காஞ்சனா 2, 2017- ல் மொட்டசிவா கெட்டசிவா, சிவலிங்கா போன்ற தமிழ்படங்களில் நடித்துள்ளார். ஸ்டைல்(2002), டான் (2007), போன்ற தெலுங்கு படங்களிலும் நடிகராக வலம்வந்தார்,
லாரன்ஸ்.
இயக்குனராக
(2004 ல் இருந்து,.... )
தானாகவே படத்தை இயக்கி, நடிக்கவும் செய்தார் லாரன்ஸ்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
மஸ்தானா மஸ்தானா.
சமூக சேவை
சுமார் 160 குழந்தைகளுக்கு மேல் இருதய சிகிச்சை மற்றும் கண்சிகிச்சைக்கு தேவையான பணத்தை அறக்கட்டளை மூலம் நன்கொடையாக கொடுத்துள்ளார். இவர் மேலும் பலரின் படிப்பிற்க்காக உதவிகளையும், பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.
விருதுகள்
பிலிஃம் பேர் விருதுகள் :
2000, 2001, 2002 ஆம் ஆண்டின் சிறந்த நடன இயக்குனருக்கான விருதை அன்னயா, பார்த்தாலே பரவசம், இந்திரா போன்ற படத்திற்க்காக வென்றார்.
2006ஆம் ஆண்டின் சிறந்த நடன இயக்குனருக்கான விருதை தெலுங்கு படமான 'ஸ்டைல் ' படத்திற்க்காக பெற்றார்.
தமிழ்நாடு மாநில திரைபட விருதுகள் :
1999 ஆண்டு சிறந்த நடன இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில விருதை 'கண்ணுப்பட போகுதய்யா' படித்திற்க்காக பெற்றார். அதோடு 2016ஆம் ஆண்டு காஞ்சனா படத்திற்க்காக தமிழ்நாடு மாநில திரைபட விருது பெற்றார்.
நந்தி விருதுகள் :
2000- ம் ஆண்டு 'அன்னய்யா' படத்திற்க்காகவும், 2002 ஆண்டு 'இந்திரா 'எனும் தெலுங்கு படத்திற்காகவும், 2006 ஆண்டு ' style' படத்திற்காகவும் சிறந்த நடன இயக்குனருக்கான நந்தி விருதை பெற்றார்.
எடிசன் விருதுகள் :
2015 - மனித நேயத்திற்க்கான விருது லாரன்ஸ்க்கு வழங்கப்பட்டது.
2015 - எக்ஸ்ட்ரார்டினரி பர்ஃபார்மன்ஸ்க்கான விருது, காஞ்சனா 2 படத்திற்காக வழங்கப்பட்டது.
கண்மணி ராகவா லாரன்ஸ்
மொட்டை சிவா கெட்ட சிவா படத்தின் டைட்டில் கார்டில் ராகவா லாரன்ஸ்க்கு ' மக்கள் சுப்பர் ஸ்டார்' என்ற பட்டம் அடைமொழியாகக் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு விளக்கம் தரும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார், லாரன்ஸ் . அதில் இத்திரைப்படத்தில் எனக்கு இன்ப அதிர்ச்சி தருவேன் என்று இயக்குனர் கூறியிருந்தார், அது என்ன என்பதை இப்போது புரிந்து கொண்டேன்.
உண்மையிலேயே இந்த பட்டத்துக்கு நான் தகுதியானவன் இல்லை. சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் இருக்க முடியும், அதுவும் நம்முடைய தலைவர் ரஜினிகாந்த்தாக தான் இருக்க முடியும். என்னை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் அவர்தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் நான். இனிமேல் வரும் படங்களில் எனது பெயர் 'கண்மணி ராகவா லாரன்ஸ்' என்றே வரும் ; என்னுடைய தாயின் பெயரை என் பெயரின் முன்னால் வைப்பதை விட பெரிய சந்தோஷம் எதுவும் கிடையாது, என்று விளக்கம் அளித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
லாரன்ஸ், ' லதா ' என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ராகவி என்ற ஒரு பெண் குழந்தையும் உண்டு.
ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அம்மா என்றால் அன்பு, அன்பு என்றால் அம்மா என்பதைபோல தன்னை பெற்று வளர்த்த தாய்க்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கோவில் கட்டியுள்ளார்.
முன்னதாக ராகவா லாரன்ஸ் தனது அன்னை கண்மணி அம்மையாருக்கு கோவில் நிறுவப்படுவது குறித்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், இந்த கோவில் திறப்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதில், இந்த கோவிலை திறக்கும் வகையில் 5 நாட்கள் தொடர் பூஜை நடத்தப்படுகிறது. விழாவில் பங்கேற்க விரும்புபவர்கள், கோவில் திறப்பு விழாவிற்கு வருகை தர வேண்டும். இந்த கோவில் என்பது எனது அன்னைக்கு மட்டும் அல்லாமல், உலகிலுள்ள அனைத்து அன்னையருக்கும் சமர்ப்பணம். எனவே, விழாவிற்கு வரும் போது தங்கள் தாயாரையும் அழைத்து வர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயில் ராகவேந்திரர் பிருந்தாவனததில், கோவில் திறப்பு விழா நடைபெற்றது. கண்மணி அம்மையாரின் பளிங்கு சிலையுடன் காயத்ரி தேவி சிலை, சிவலிங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. நடைபெற்ற இந்தவிழாவின் போது சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் இந்த கோவிலை திறந்துவைத்தார். ராகவா லாரன்ஸ், அவரது தாயார் கண்மணி, மனைவி லதா, மகள் ராகவி, சகோதரர்ககள் எல்வின், முரளி உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், தயாரிப்பாளர் ரவீந்திரன், இயக்குனர் சாய் ரமணி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து ராகவா லாரன்ஸுன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடவுளின் கருணையாலும், உங்களின் பிராத்தனையாலும், எனது அன்னையின் கோவில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. உலகத்திலேயே அன்னைக்கு நிறுவப்பட்டுள்ள முதல் கோவில் என்ற சிறப்புடன், உலகில் உள்ள அனைத்து அன்னையருக்கும் இதனை சமர்ப்பிக்கிறேன். எனது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
‘என்னை வாழவைக்கும் தமிழ் மண்ணுக்கு 1 கோடி ரூபாயை நான் நன்கொடையாகக் கொடுக்கிறேன். கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளுக்கு எனத் தகுதியானவர்களுக்கு இதை அளிக்க வேண்டும். ஊருக்கு நல்லது செய்ய விரும்புகிற 100 இளைஞர்கள் மூலம், விகடன் குழுமத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த விரும்புகிறேன்’ என்ற லாரன்ஸின் விருப்பம்,
‘‘நான் சாப்பிடுற ஒவ்வொரு வேளை சாப்பாடும் மக்கள் கொடுத்ததுதான். அவங்களுக்கு நான் என்ன செய்றேன்? என்ன வேணாலும் செய்ற அளவுக்கு சக்தி இருக்கிற சாமி இல்லை நான். ஆனா, சாப்பிடும்போது கொஞ்சம் சாப்பாட்டை சாமிக்காக, நம் முன்னோர்களுக்காக ஓரத்துல எடுத்துவைக்கிற மாதிரி நமக்கு உதவி செஞ்சவங்களுக்கு ஏதாவது திரும்பக் கொடுக்கணும்னு தோணிச்சு. ‘காஞ்சனா 2’-வுக்கு அட்வான்ஸ் வாங்கும்போதே கொடுத்துடலாம்னு ஒரு கோடி ரூபாய் எடுத்துவெச்சேன். ஆனா, அப்போ மனத் தடுமாற்றம், கொடுக்கலை.
இப்போ ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘நாகா’ ரெண்டு படங்களையும் தயாரிக்க வேந்தர் மூவீஸ் வந்தாங்க. ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் தந்தாங்க. அதை ‘மேடையிலேயே கொடுங்க’னு சொல்லி கலாம் ஐயா பெயரில் உதவி பண்றதா அறிவிச்சேன். அதுதான் இந்தத் திட்டம்’’ என்கிறார் லாரன்ஸ்.
இதன்படி முதல் 20 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் சுறுசுறுப்பாகத் தங்கள் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
‘‘அறம் செய விரும்பு’ திட்டத்தின் 100 தன்னார்வலர்களுள் ஒருவராக நானும் இணைந்துகொள்கிறேன்’ என விருப்பம் தெரிவித்து பலர் விகடனைத் தொடர்புகொண்டவண்ணம் உள்ளனர். தங்களால் இயன்றதை உதவ விரும்புவோரும், படிப்பு / மருத்துவச் செலவுக்கு நிதி உதவி தேவை எனவும் கேட்டு பலர் தொடர்புகொள்கின்றனர். அத்தனை கோரிக்கைகளையும் பரிசீலித்து ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கிறோம்.
திட்டத்தின் முதல் 10 தன்னார்வலர்களில் ஒருவரான திருநங்கை பானு, ‘‘அரசு பெண்கள் பள்ளிகளிலும், பெண்கள் விடுதிகளிலும் பயன்படுத்திய சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்துவது பெரும் பிரச்னையாக இருக்கிறது. ‘சானிட்டரி நாப்கின் டிஸ்போஸல் மெஷின்’களை வாங்கி அரசுப் பள்ளிகளின் கழிப்பறைப் பகுதியில் பொருத்தலாம். ஒரு பள்ளியில் ஓர் இயந்திரம் பொருத்தினாலும் நூற்றுக்கணக்கான மாணவிகளின் பிரச்னை சரிசெய்யப்படும்’’ என்றார். சானிட்டரி நாப்கின்களை எரித்து சாம்பலாக்கும் இயந்திரங்களை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசுப் பள்ளி மாணவிகள் விடுதிகளில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை தவிர்த்த தமிழ்நாட்டின் இதரப் பகுதிகளில் மின்வெட்டு இப்போதும் முக்கியப் பிரச்னை. அது, மாவட்டத் தலைநகரங்களைவிட வட்டாரப் பகுதிகளில் இன்னும் மோசம். ‘இந்தப் பகுதிகளில் இருக்கும் அரசுப் பள்ளிகளின் ஹாஸ்டல்களுக்கு இன்வெர்ட்டர் அமைத்துத் தரலாம். மின்வெட்டு நேரத்தில் மாணவர்கள் அங்கு அமர்ந்து படிக்க வசதியாக இருக்கும்’ என்பதும் உதவி குறித்த ஓர் ஆலோசனை. கிராமப்புற மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில்கொண்ட இந்த உதவி முக்கியமானதே. இதற்கான இன்வெர்ட்டர் வாங்குவதற்கான வேலைகளும், பொருத்தமான அரசுப் பள்ளி விடுதிகளை அடையாளம் காணும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
‘‘பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆடியோ லைப்ரரி பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார் தன்னார்வலர்களில் ஒருவரும், பார்வையற்ற மாற்றுத்திறனாளியுமான, உதவிப் பேராசிரியர் நாகராஜன். மதுரை தியாகராசர் கலை அறிவியல் கல்லூரியில் சுமார் 40 பார்வையற்ற மாணவர்கள் படிக்கிறார்கள் எனவும், அங்கு ‘ஒலி நூலகம்’ அமைத்தால் மாணவர்கள் பயன்பெற வாய்ப்பாக இருக்கும் எனவும் கூறினார். இதுதொடர்பாக தியாகராசர் கல்லூரி முதல்வர் எயினியிடம் பேசியபோது, ‘‘மிகுந்த மகிழ்ச்சி. உரிய இடவசதியை அளிக்கத் தயார்’’ என்றார். அடுத்தகட்டப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
‘‘சென்னை சிந்தாதரிப்பேட்டை கூவம் கரையோரக் குடிசைப் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு, அதே பகுதியில் வசிக்கும் படித்த மாணவி ஒருவர் மாலை நேர டியூஷன் வகுப்புகள் நடத்துகிறார். இப்போது திறந்தவெளியில் நடைபெற்றுவரும் இந்த வகுப்புகளுக்கு ஒரு ஷெட் அமைத்துத் தந்தால் பேருதவியாக இருக்கும்’’ என்பது உதவி இயக்குநர் கவின் ஆண்டனியின் பரிந்துரை.
தாய், தந்தை இருவருமே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருக்கும் ஒரு மாணவன், குறைந்தபட்ச கல்விக் கட்டணத்தைக்கூட செலுத்த முடியாமல் சிரமப்படுவதையும், அந்தக் கிராம மக்களே அந்தப் பையனின் போக்குவரத்துச் செலவுகளை ஏற்றுக்கொள்வதையும் பற்றி கூறினார் ஆசிரியர் ஆனந்த். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மாணவருக்கான முழுக் கல்விக் கட்டணத்தையும் செலுத்துவதற்கான விசாரணைகள், ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இப்படி தன்னார்வலர்கள் பரிந்துரைக்கும் ஒவ்வொரு கோரிக்கைக் குரலின் பின்னாலும் தீர்க்கப்படாத நம் சமூகச் சிக்கலின் பல அடுக்குகள் மறைந்திருக்கின்றன. ‘அறம் செய விரும்பும்’ நல் உள்ளங்களின் உதவியோடு அந்த இருள் அகற்றும் பணி தொடர்கிறது.
அறம் செய விரும்பு திட்டம் - எப்படிச் செயல்படும்?
ராகவா லாரன்ஸ் அவர்கள் ‘வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட்’டுக்கு 1 கோடி ரூபாயை அளித்துள்ளார். அந்த 1 கோடி ரூபாய் 100 தன்னார்வலர்களுக்கு தலா ஒரு லட்சம் என ஒதுக்கப்படும். அந்த 100 பேர் கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட பல மக்கள் சேவைப் பணிகளுக்கு என உதவ, தகுதியான பயனாளிகளைத் தன்னார்வலர்கள் கண்டுபிடித்துப் பரிந்துரைக்க வேண்டும். லாரன்ஸ் மற்றும் விகடன் குழுமத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, தக்க பயனாளிகளுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ப உதவித் தொகை நேரடியாக அளிக்கப்படும்.
மிண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் .......
கருத்துகள்