திரைக்கதை 15
இதற்கு முந்தைய பாகத்தில்
இப்படி எழுதி இருந்தேன்.
Inciting Incident, Key Incident
ஆகிய இரண்டையும் குழப்பிக்கொண்டுவிடவேண்டாம்.
இந்தக் கட்டுரையைப்
பொறுமையாக இன்னொரு
முறை படித்துப் பாருங்கள்.
அதன்பின், அடுத்த கட்டுரையில்,
ஒரு டக்கரான படத்தை
உதாரணமாக வைத்து,
இந்த இரண்டு விஷயங்களைப்
பற்றியும் புரிந்து கொள்ள
முயற்சிக்கலாம்.
ஆகிய இரண்டையும் குழப்பிக்கொண்டுவிடவேண்டாம்.
இந்தக் கட்டுரையைப்
பொறுமையாக இன்னொரு
முறை படித்துப் பாருங்கள்.
அதன்பின், அடுத்த கட்டுரையில்,
ஒரு டக்கரான படத்தை
உதாரணமாக வைத்து,
இந்த இரண்டு விஷயங்களைப்
பற்றியும் புரிந்து கொள்ள
முயற்சிக்கலாம்.
திரைக்கதை என்பதன்
அடிப்படை வடிவத்தையே காலி
செய்து, படம் பார்ப்பவர்கள்
அனைவரையும் மூக்கின்மேல்
விரல் மட்டுமல்லாமல்
மொத்த கையையும் வைத்து
குத்திக்கொள்ள வைத்த
அந்தப் படம் …..?
அடிப்படை வடிவத்தையே காலி
செய்து, படம் பார்ப்பவர்கள்
அனைவரையும் மூக்கின்மேல்
விரல் மட்டுமல்லாமல்
மொத்த கையையும் வைத்து
குத்திக்கொள்ள வைத்த
அந்தப் படம் …..?
இதோ அந்தப் படத்தைப்
பற்றி இப்போது
பார்க்கப்போகிறோம்.
அதுமட்டுமல்லாமல், இனிமேல்
பெரிய gap விடாமல்,
வெகு விரைவில் வரிசையாக
எழுதி, இதனையும் LOTR
தொடரையும் முடிக்கப்போகிறேன்.
Right. Let’s begin.
Inciting Incident மற்றும்
Key Incident ஆகியவற்றை
சிட் ஃபீல்ட் Pulp Fiction
படத்தில் தேடியபோது,
முதலில் பயங்கரமாகக்
குழம்பியே போயிருந்திருக்கிறார்.
ஏனெனில், படம் முழுக்கப்
பல சம்பவங்கள்
நடக்கின்றன. மட்டுமல்லாமல்,
படமே நான் – லீனியர்
ஸ்டைலில் இருக்கிறது.
முன்பின்னாகப் பல
சம்பவங்கள் நடக்கின்றன.
இவை மட்டுமல்லாமல்,
Pulp Fiction படத்தின்
திரைக்கதை ஆரம்பிக்கும்போதே,
Pulp Fiction என்பதன் இரண்டு
அகராதி விளக்கங்கள்
திரைக்கதையின் முதல்
பக்கங்களில்
கொடுக்கப்பட்டிருக்கிறது.
கூடவே, ‘மூன்று கதைகளைப் பற்றிய
ஒரு கதை’ என்ற விளக்கமும்
அதில் இருக்கிறது. இதெல்லாம்
ஒன்றுமே இல்லை என்னும்
அளவுக்கு, அடுத்த பக்கத்தில்
இருந்த விஷயம் தான் டாப்.
அப்பக்கத்தில்,
அத்தியாயங்களின்
தலைப்புகளோடு
திரைக்கதையின் பொருளடக்கம்
இடம் பெற்றிருந்தது!
அதாவது, திரைக்கதையின்
எந்தப் பக்கத்தில் எது இருக்கிறது
என்ற பொதுவான பொருளடக்கம்
இல்லை. திரைக்கதையே,
பொருளடக்க வடிவில் கொடுக்கப்பட்டிருந்தது.
அந்தப் பொருளடக்கமும்
திரைக்கதையில் ஒரு பிரதான
பங்கு வகிக்கிறது.
திரைக்கதையில்
பொருளடக்கத்தை இதுவரை
சிட் ஃபீல்ட் பார்த்திருக்கவில்லை
என்பதால், முதலில் குழம்பவே
செய்தார்.
அதன்பின், ஒவ்வொரு பகுதியாக
இந்தத் திரைக்கதையைப்
பிரிக்க முடிவுசெய்து,
பகுதி பகுதியாகப் படித்தார்.
அப்போது அவருக்கு மெல்ல மெல்ல
இந்தத் திரைக்கதையில் தெளிவு
பிறக்க ஆரம்பித்தது.
திரைக்கதையின் பிரிவுகளின்படி,
ஐந்து பிரிவுகளாக இந்தத்
திரைக்கதை பிரிக்கப்பட்டிருக்கிறது.
முதல் பாகம் : Prologue – முன்னுரை
இரண்டாம் பாகம் : Vincent Vega & Marcellus Wallace’s Wife
மூன்றாம் பாகம் : The Gold Watch
நான்காம் பாகம் : The Bonnie Situation
ஐந்தாம் பாகம்: Epilogue – முடிவுரை
இந்த ஐந்து பாகங்களையும்
படித்த சிட் ஃபீல்ட், இந்த
ஐந்து பாகங்களுமே,
ஒரே ஒரு
சம்பவத்தினாலேயே
முக்கியத்துவம் பெறுகின்றன
என்பதை அறிந்துகொண்டார்.
அந்த சம்பவம் என்ன?
( இதிலிருந்து, புத்தகத்தில்
இல்லாத, என்னுடைய
தனிப்பட்ட அனாலிசிஸ்
ஆரம்பம் )
ஜூல்ஸும் ( ஸாமுவேல் ஜாக்ஸன் ) வின்சென்ட்டும் ( ட்ரவோல்டா ),
மார்செலஸ் வாலஸின் பெட்டியை
நான்கு இளைஞர்களிடமிருந்து
மீட்கும் காட்சி
நினைவிருக்கிறதா?
Burger Scene என்ற பெயரில்
படத்தின் புகழ்பெற்ற ஸீன்களில்
இது ஒன்று.
இந்த நிகழ்ச்சிதான் அந்த
முக்கியமான நிகழ்ச்சி.
அது ஏன் என்று கொஞ்சம் பார்க்க
முயற்சி செய்யலாமா?
Pulp Fiction படத்தின் கதையை
ஒரே நேர்க்கோட்டில் சொல்ல
முடிந்தால் அது இப்படி இருக்கும்
( இது என்னுடைய
ஒரிஜினல் முயற்சியாக்கும் ).
மார்செலஸ் வாலஸ் –> அடியாட்கள் வின்சென்ட் & ஜூல்ஸ் –> பெட்டியை திரும்பப்பெறும் முயற்சி –> பெட்டியைத் திருடியவர்கள் சுடப்படுதல் –> எதிர்பாராமல் சுடப்பட்டும் காயமே இல்லாமல் உயிர்பிழைக்கும் வின்சென்ட் & ஜூல்ஸ் –> ஜூல்ஸின் ஞானோதயம் –> இருவரும் சாப்பிடப் போதல் –> ரெஸ்டாரென்ட் ஹைஜாக் by honey bunny & pumpkin –> ஜூல்ஸ் சூட்கேஸ் பறிப்பு –> ஜூல்ஸின் துப்பாக்கி முனையில் honey bunny & pumpkin –> இருவரையும் ஜூல்ஸ் விட்டுவிடுதல்
( ஞானோதய effect ) –> தொழிலை விட்டுவிடும் ஜூல்ஸ் –> இப்போது, வின்சென்ட் மட்டும் மார்செலஸின்
அடியாள் –> வின்சென்ட் மற்றும் மார்செலஸின் மனைவி –> புட்ச்சிடம் மார்செலஸ், boxing போட்டியில்
தோற்கச் சொல்லுதல் –> போட்டியில் திருப்பம் –> புட்ச்சின் escape –> வின்சென்ட் புட்ச்சைக் கொல்ல அவன்
வீட்டுக்கு அனுப்பப்படுதல் –> வின்சென்ட்டை accidentalலாகக் கொல்கிறான் புட்ச் –> மார்செலஸ் & புட்ச், gayகளால் அடைக்கப்படுதல் –> புட்ச் ஒருவனைக் கொல்லுதல் –> மார்செலஸ் இன்னொருவனின் விரைகளில் சுடுதல் –> இருவரும் தப்பித்தல் –> மார்செலஸ், புட்ச்சை ஊரைவிட்டே ஓடிவிடச்
சொல்லுதல் –> சுபம்.
இந்த வரிகளை மாற்றிப்
போட்டுத்தான் இந்தத்
திரைக்கதை
உருவாக்கப்பட்டிருக்கிறது
( திரைக்கதையை இப்படி
சிம்பிளாக எழுதிக்கொள்வதன்
நன்மையைப் பார்த்தீர்கள்
அல்லவா? )
இதில், block செய்யப்பட்டிருக்கும்
வரிகளை மட்டும் உற்றுக்
கவனியுங்கள்.
இதுதான் மேலே உள்ள
வீடியோவில் இடம்பெற்றிருக்கும்
ஸீன். படத்தின் உயிர்நாடியான ஸீன்.
இந்தக் காட்சியால்தான்,
ஜூல்ஸ் மனம்
திருந்துகிறான்.
அதனால்தான் மார்செலஸிடம்
இருந்து பிரிகிறான்.
அதனால்தான் வின்சென்ட்
தனியாக புட்ச்சைத் தேடி
அவன் வீட்டுக்குச்
செல்கிறான்.
அதனால்தான் புட்ச், பாத்ரூமில்
இருந்து வெளிவரும்
வின்சென்ட்டை சுட்டுக்
கொல்கிறான்.
அதனால்தான் புட்ச்சால் தப்பிக்க
முடிகிறது. அதனால்தான்
புட்ச்சும் மார்செலஸும்
gay வில்லன்களிடம்
பிடிபடுகிறார்கள்.
ஆகையால்தான் அந்த
இரண்டு வில்லன்களும் கொல்லப்படுகிறார்கள்.
அதனால்தான் – அவர்களில்
ஒருவனைக் கொன்று
தன்னைக் காப்பாற்றிய
புட்ச்சை – மார்செலஸ் மன்னித்து,
ஊரை விட்டே ஓடிவிடச்
சொல்கிறான்.
இதனால்தான், இந்த ஒரு
காட்சிதான் படத்தின் பிரதானமான
காட்சி என்று புரிந்துகொண்டார்
சிட் ஃபீல்ட்.
இது புரிந்தவுடன், திரைக்கதையின்
போக்கும் தெளிவாகிவிட்டது.
இந்த மூன்று கதைகளை எடுத்துக்கொண்டால்
( ஹனி பன்னி & பம்ப்கின் கதை,
வின்சென்ட் & ஜூல்ஸ் கதை
மற்றும் புட்ச்சின் கதை ),
இதிலுள்ள ஒவ்வொரு கதை
படத்தில் இடம்பெறும்போதும்,
அந்த ஒவ்வொரு கதைக்குமே
தெளிவான ஆரம்பம்,
நடுப்பகுதி மற்றும் முடிவு ஆகியவை
இதே வரிசையில் இருப்பதையும்
சிட் ஃபீல்ட் புரிந்துகொண்டார்.
அதேபோல், நாம் ஏற்கெனவே
பார்த்த முரண்கள்
( contradictions. – கதையில் முரண்கள் இருந்தால்தான் படம்
சுவாரஸ்யமாக இருக்கும்
என்று ஆரம்பத்தில்
பார்த்தோமே )
இப்படத்தில் விரவி
இருக்கின்றன. உதாரணத்துக்கு,
படத்தின் ஆரம்பக்
காட்சியான
ரெஸ்டாரென்ட்
கொள்ளையடிக்கப்படும் காட்சியில்,
ஹனி பன்னி & பம்ப்கின் ஆகிய
இருவரும் துப்பாக்கிகளோடு
எழும் காட்சியோடு
திரை ஃப்ரீஸ் ஆகி,
வின்சென்ட் மற்றும் ஜூல்ஸ்
ஆகிய இருவரையும்
பார்க்கிறோம்.
அதில், இருவரும் படு
சுவாரஸ்யமாக Mcdonalds
பற்றி விவாதித்துக்கொண்டே,
எங்கோ நடந்து செல்கிறார்கள்
என்று அறிகிறோம்.
அவர்கள் ஒரு கதவைத் தட்டி,
அது திறக்கப்பட்டு, உள்ளே சென்று,
ஜூல்ஸ் பேச
ஆரம்பிக்கும்போதுதான்
அவர்கள் இருவரும் அடியாட்கள்
என்பதே நமக்குத் தெரிகிறது.
இதுதான் முரண். இருவரும்
வாழ்க்கையின் அபத்தங்களைப்
பற்றிப் பேசுவதையும்,
திடுதிப்பென்று
துப்பாக்கிகளை உருவுவதையும்
ஒப்பிட்டால் இந்த முரண் புரியும்.
இப்படிப்பட்ட முரண்கள்
திரைக்கதையில் இருப்பது,
படம் பார்க்கும்
ஆடியன்ஸை சுவாரஸ்யப்படுத்தும்
என்று சொல்கிறார் சிட் ஃபீல்ட்.
ஆக, படத்தின் key incident
என்பது, ஜூல்ஸும்
வின்சென்ட்டும்
மார்செலஸ் வாலஸின்
பெட்டியை நான்கு
இளைஞர்களிடமிருந்து மீட்கும்
காட்சி என்பது நமக்குப் புரிகிறது.
அப்படியென்றால், படத்தின்
inciting incident என்ன?
இதற்கு சிட் ஃபீல்ட்
விடையளிக்கவில்லை. இருந்தாலும், படத்தைப் பார்ப்பவர்களுக்கே
அது எளிதில் புரிந்துவிடும்.
ஆகவே, என் விளக்கத்தைக்
கொடுக்க முயல்கிறேன்.
அதற்கு முன்னர், inciting incident
என்றால் என்ன என்பதையும்
ஒருமுறை பார்த்துவிடுவோம்.
Inciting Incident என்பது ஒரு
குறிப்பிட்ட காட்சி. திரைக்கதையில்
ஒரு சுவாரஸ்யமான ஓபனிங்
கொடுப்பது. இந்தக்
காட்சிக்குப் பின், அடுத்து
என்ன நடக்கப்போகிறது என்ற
எதிர்பார்ப்பு ஆடியன்ஸுக்கு
எழவேண்டும். அத்தகைய
ஒரு thumping ஸீனே Inciting Incident
என்று அழைக்கப்படுகிறது.
குறிப்பிட்ட காட்சி. திரைக்கதையில்
ஒரு சுவாரஸ்யமான ஓபனிங்
கொடுப்பது. இந்தக்
காட்சிக்குப் பின், அடுத்து
என்ன நடக்கப்போகிறது என்ற
எதிர்பார்ப்பு ஆடியன்ஸுக்கு
எழவேண்டும். அத்தகைய
ஒரு thumping ஸீனே Inciting Incident
என்று அழைக்கப்படுகிறது.
Pulp Fiction படத்துக்கு அப்படிப்பட்ட
ஓபனிங் கொடுத்த காட்சி எது?
ரெஸ்டாரண்டைக் கொள்ளையடிக்க
ஹனி பன்னி மற்றும் பம்ப்கின்
முடிவுசெய்து, துப்பாக்கிகளோடு
எழும் காட்சி. அங்குதான்
காட்சி ஃப்ரீஸ் செய்யப்பட்டு,
டைட்டில்கள் வருகின்றன.
இப்படிப்பட்ட ஒரு ஓபனிங்
காட்சியைப் பார்க்கும்
ஆடியன்ஸ், தியேட்டரை
விட்டு எழுந்துபோய்விடுவார்களா என்ன?
( இந்தக் காட்சியிலுமே,
இரண்டு காதலர்கள்
பேசிக்கொள்வதைப் போல
ஆரம்பித்து, திடீரென்று
இருவரும் ரெஸ்டாரண்டைக் கொள்ளையடிப்பதில் உள்ள
முரணையும் கவனியுங்கள்).
திரைக்கதை எந்த
விதத்தில் எழுதப்பட்டிருந்தாலும்,
key incident மற்றும்
inciting incident ஆகியவை
இல்லாமல் போகாது என்கிறார்
சிட் ஃபீல்ட்.
திரைக்கதை புரியவில்லை
என்றால், திரைக்கதையை
சிறு சிறு துணுக்குகளாகப் பிரித்துக்கொண்டால்,
முடிவில் இந்த இரண்டு
சம்பவங்களும் புரிந்துவிடும்
என்பது அவரது கருத்து.
இதேபோல், க்வெண்டினின்
மற்றொரு மாஸ்டர்பீஸான Kill Bill
படத்தின் பிரதான சம்பவம் எது?
எந்த சம்பவம் நடந்ததால்,
படத்தின் மற்ற காட்சிகள்
நடக்கின்றன?
Bride, திருமணத்தின்போது
சுடப்படும் காட்சி.
ஆக, அதுதான் அப்படத்தின்
key incident .
அப்படியென்றால், படத்தின்
inciting incident ?
படத்தின் ஆரம்பக் காட்சி.
மரணத் தருவாயில்,
மூச்சிரைத்துக்கொண்டு
தரையில் விழுந்திருக்கும்
கதாநாயகியின் தலையில்
வில்லன் பில் சுடும் காட்சி
( என்பது என் விளக்கம் ).
இப்படியாக, திரைக்கதையின்
முதல் வரி எழுதப்படும் முன்னரே
inciting incident மற்றும்
key incident ஆகியவை
தயாராக இருக்கவேண்டும்
என்கிறார் சிட் ஃபீல்ட்.
படத்தின் ஓபனிங் ஸீனும்,
படத்தின் அதிமுக்கியமான
ஸீனும் நம்மிடம் இருந்தால்,
அவற்றை வைத்து
திரைக்கதையில் விளையாட
முடியும். க்வெண்டின்
அமைத்ததுபோல், நான் லீனியர்
திரைக்கதை ஒன்றை அமைத்து, ஆடியன்ஸை
சுவாரஸ்யப்படுத்தலாம்.
இத்துடன், சிட் ஃபீல்டின்
புத்தகத்தில் எட்டாவது அத்தியாயமான
Two Incidents என்பது
முடிவடைகிறது.
‘ஓபனிங் ஸீன் என்னிடம்
இருக்கிறது. படத்தின்
பிரதான ஸீனும் தெரியும்.
அடுத்து நான் என்ன
செய்யவேண்டும்?’
என்று கேட்கும் நண்பர்களுக்கு….
இதோ அடுத்த அத்தியாயத்தில்
பதில் அளிக்கிறார்
சிட் ஃபீல்ட் …
வெகு விரைவில் !
தொடரும்…..
கருத்துகள்