திரைக்கதை 14
சென்ற கட்டுரையில் ,
Inciting Incident மற்றும்
Key Incident ஆகிய
இரண்டு திரைக்கதையின்
பிரிவுகளைப் பற்றிப் பார்த்தோம்.
அதில், இந்த இரண்டு
விஷயங்களைப் பற்றிச்
சரியாக விளக்கவில்லை
என்பது தெரிந்தது. அதாவது,
இந்த இரண்டு ‘சம்பவங்களைப்’
பற்றி சில கேள்விகள்
எழுகின்றன.
1. Inciting Incident என்பது
ஒரு குறிப்பிட்ட காட்சி.
திரைக்கதையில் ஒரு
சுவாரஸ்யமான ஓபனிங்
கொடுப்பது.
இந்தக் காட்சிக்குப் பின்,
அடுத்து என்ன நடக்கப்போகிறது
என்ற எதிர்பார்ப்பு
ஆடியன்ஸுக்கு எழவேண்டும்.
அத்தகைய ஒரு thumping
ஸீனே Inciting Incident
என்று அழைக்கப்படுகிறது.
அதுவரை ஒகே. ஆனால்,
அது படத்தின் ஆரம்பத்தில்
மட்டும்தான் வரவேண்டுமா?
நான் லீனியர்
முறையில் – அதாவது,
திரைக்கதையின் ஆரம்பம்,
நடுப்பகுதி மற்றும் முடிவு
ஆகியன வரிசையாக
எழுதப்படாமல் மாற்றி
மாற்றி எழுதப்பட்டிருந்தால்,
அப்போது எந்த இடத்தில்
Inciting Incident வரவேண்டும்?
2. Key Incident என்பது,
இன்ஸைட்டிங் இன்ஸிடென்ட்டுக்குப் பின்னால் வருவது.
அதாவது, கதையில்
இன்ஸைட்டிங் இன்ஸிடென்ட் (சுவாரஸ்யமான ஓபனிங் )
என்ற ஒரு ஸீன் நிகழ்ந்தபின்,
அதற்குப் பிறகு என்ன ஆகிறது
என்பதே Key Incident .
அப்படியென்றால்,
இன்ஸைட்டிங் இன்ஸிடென்ட்டுக்குப்
பிறகு வரும்
திரைக்கதையின் முழுப்பகுதியுமே
Key Incident ஆகிவிடுமா?
அல்லது Key Incident என்பது
இன்ஸைட்டிங் இன்ஸிடென்ட்
போல ஒரு குறிப்பிட்ட
ஸீன் மட்டுமா?
3. திரைக்கதை எதனைப்பற்றி
என்பதைப் புரியவைப்பது
என்றால், அப்போது
திரைக்கதையின் முதல் Plot Point
அல்லவா நினைவு வருகிறது?
Key Incident மற்றும்
இந்த Plot Point 1 என்பது
இரண்டுமே ஒன்றுதானா?
இவற்றைப் பற்றியும் சிட் ஃபீல்ட்
பிரித்து மேய்ந்திருக்கிறார்.
வாருங்கள். இந்தக்
கேள்விகளுக்கு விடையைத்
தேடுவோம்.
Chapter 8 – The Two Incidents (தொடர்ச்சி)
இந்த இரண்டு சம்பவங்களைப்
பற்றி மேலும் சில
உதாரணங்கள் கொடுக்கிறார்
சிட் ஃபீல்ட்.
அவைகளைப் பார்ப்போம்.
Bridges of Madison County –
க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் இந்த
அழகான படத்தில்,
தொடக்கத்தில்,
கதாநாயகி ஃப்ரான்செஸ்கா
இறப்பது காட்டப்படுகிறது.
அவளது மகனும் மகளும்,
தாயாரின்
பொருட்களை அடுக்கிக்கொண்டிருக்கையில்,
அவளது நாட்குறிப்புகளைப்
பார்க்கிறார்கள். அவற்றைப்
படிக்கவும்
துவங்குகிறார்கள்.
நாட்குறிப்புகளைக் கண்டுபிடிக்கும்
இந்தக் காட்சிதான் இப்படத்தின்
Inciting Incident.
காரணம், அதிலிருந்துதான்
கதை துவங்குகிறது.
Pulp Fiction – ஹனி பன்னியும்
அவளது காதலன்
பம்ப்கின்னும்
ரெஸ்டாரெண்ட்டில் விவாதிக்கும்
ஆரம்பக் காட்சி நினைவிருக்கிறதா?
இந்தக் காட்சியின் முடிவில்,
தங்களது துப்பாக்கிகளை உருவி
எடுக்கும் இருவரும்,
அந்த ரெஸ்டாரெண்ட்டைக் கொள்ளையடிக்கும்
முயற்சியில்
ஈடுபடுகிறார்கள்.
துப்பாக்கிகளை உருவதோடு
காட்சி ஃப்ரீஸ் ஆகி,
ஜான் ட்ரவோல்டாவும் ஸாமுவேல் ஜாக்ஸனும் பேசிக்கொண்டிருக்கும்
காட்சி தொடங்குகிறது.
இந்த சீக்வென்ஸில்,
இருவரும் துப்பாக்கியை
உருவும் காட்சிதான்
படத்தின் Inciting Incident.
Lord of the Rings – இப்படத்தின்
படத்தின் Inciting Incident
என்ன?
மோதிரத்தின் கதை
விவரிக்கப்படும் ஆரம்பக்
காட்சியில், பில்போவிடம் மோதிரம்
சிக்கும் காட்சி
நினைவிருக்கிறதா?
அதுதான். இக்காட்சிக்குப்
பின்னர், பில்போவிடம்
மோதிரம் வந்தபின்தானே படத்தின்
கதை துவங்குகிறது?
ஆகவே, இந்த மோதிரத்தின்
கதையே படத்தின் Inciting Incident.
இந்த இடத்தில்,
ஒரு விஷயம்.
இன்ஸைட்டிங் இன்ஸிடென்ட்
என்பது ஒரு ஸீன். அதாவது,
சில ஷாட்களின் கலவை.
ஒரு சம்பவம். ஆனால்,
அட்டகாசமான
ஜீனியஸ்களின் திரைப்படங்களில்,
அது ஒரு ஷாட்டாகக்
கூட இருக்கலாம். திரைக்கதையில்
எது வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும்
இருக்கலாம்.
‘திரைக்கதையில் விதிகளே
இல்லை’ என்னும் பிரதான
விதியை நினைவுபடுத்திக்
கொள்ளுங்கள். ஆனால்,
இவை எல்லாவற்றுக்கும்
ஏதோ ஒரு தொடர்பு
இருக்க வேண்டும்.
மனம்போன
போக்கில் அமைந்துவிடக்கூடாது.
Inciting Incident என்பது வேகமான
action காட்சிகளைக் கொண்டோ,
அல்லது தீவிரமான
உணர்ச்சிகளோடு கூடிய
காட்சிகளுடனோ இருக்கலாம்.
உதாரணத்துக்கு, சைனாடவுன்
படத்தைப் பற்றி விளக்குகிறார்
சிட் ஃபீல்ட் படம்
தொடங்கும்போது, துப்பறிவாளர்
ஜாக் நிகல்ஸனை,
தனது கணவன் இன்னொரு
பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும்,
அதனைத் துப்பறியவேண்டும்
என்றும் சொல்லி, ஒப்பந்தம்
செய்கிறார் ஒரு பெண்மணி.
இதுதான் Inciting Incident .
அதன்பின், படத்தின் பாதியில்,
அப்பெண் போலி
என்று கதாநாயகன்
அறிந்துகொள்கிறான்.
ஏனெனில், அவன்முன்னர்
ஒரிஜினல்
பெண்மணி நின்றுகொண்டிருக்கிறாள்.
இந்தக் காட்சியே Key Incident.
அதாவது, படத்தின்
திரைக்கதைக்கு சுவாரஸ்யமான
துவக்கம் கொடுத்த காட்சி
Inciting Incident.
அந்தக் காட்சிக்குப் பின்னர்
என்ன நடக்கிறது?
கதை எப்படி நகர்கிறது?
என்பதற்கு ஒரு துவக்கமாக
இருக்கும் காட்சி, Key Incident .
Inciting Incident மற்றும்
Key Incident ஆகிய இரண்டு
காட்சிகளும், ஒன்றோடொன்று
தொடர்பு
உடையவையாக
இருக்கவேண்டும்.
மேலே சொன்ன உதாரணத்தில்,
தன்னை ஒரு பெண்
ஒப்பந்தம் செய்வதால்தான்
அப்பெண்ணின் கணவனைத்
துப்பறிய ஆரம்பிக்கிறான்
கதாநாயகன்.
அதனால்தான் அப்பெண் போலி
என்றும் அவனுக்குத் தெரிய
வருகிறது.
ஆகவே, Inciting Incident,
திரைக்கதையின் Key Incidentடுக்கு
நம்மை இட்டுச்
செல்கிறது.
Inciting Incident —> Key Incident
என்பதே தாரக மந்திரம்.
Key Incident ட்டாக இருக்கும்
காட்சியைப் படித்தால்,
கதை எதைப்பற்றி இருக்கிறது
என்பது நமக்குத்
தெரியவேண்டும்.
தன்னை அமர்த்திய பெண் ஒரு
போலி என்பதைத்
தெரிந்துகொண்ட கதாநாயகன்,
என்ன செய்யப்போகிறான்?
அதனைப் பொறுத்தே திரைக்கதை
முடிவு அடைகிறது.
ஆகவே, Key Incident என்பது,
திரைக்கதை என்ன
சொல்லப்போகிறது என்பதன்
துவக்கமாக இருக்கவேண்டும்.
எந்தத் திரைப்படமாக இருந்தாலும்,
இந்த இரண்டு
காட்சிகளைத் தெரிந்துகொள்வது
ஓரளவு சுலபம் என்கிறார் சிட் ஃபீல்ட்.
லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தையே
மறுபடி எடுத்துக்கொள்வோம்.
படத்தின் Inciting Incident என்பது,
மோதிரத்தின்
கதை விவரிக்கப்படும்
ஆரம்பக் காட்சி.
அப்படியென்றால், படத்தின்
Key Incident என்பது எது?
Key Incident டின் வேலை என்ன
என்பதை மறுபடி நினைவு
கொள்வோம்.
படத்தின் கதை
என்னவாக இருக்கப்போகிறது
என்பதற்கு ஒரு துவக்கமாக
அமையும் காட்சியே Key Incident
அல்லவா?
அப்படி, லார்ட் ஆஃப் த ரிங்ஸ்
படத்தின் கதை இப்படித்தான்
இனி இருக்கப்போகிறது என்பதை
நமக்கு உணர்த்தும் காட்சி எது?
எந்தக் காட்சியைப் பார்த்தபின்,
‘ஓஹோ… ரைட். எனக்குப்
புரிந்துவிட்டது. இனிமேல் இப்படத்தின்
கதை இதுதான்’
என்பது நமக்குப் புரிகிறது?
பில்போவின் மோதிரத்தை
ஃப்ரோடோ எடுத்துக்கொள்ளும்
காட்சி.
மோதிரம் ஃப்ரோடோவின்
பொறுப்பில் வந்தபின்னர்தான்
படத்தின் போக்கு புரிகிறது
அல்லவா?
மோதிரம் அழிக்கப்படவேண்டும்;
அதனை ஃப்ரோடோதான்
செய்ய வேண்டும்;
அதற்கு ஃபெலோஷிப் துணை
நிற்கும் என்ற அத்தனை
நிகழ்ச்சிகளுக்கும் ஆரம்பமாக
இருப்பது,
ஃப்ரோடோவின் வசம்
மோதிரம் வந்தபின்னர்தான்
இல்லையா?
ஆகவே, அந்தக் காட்சி தான்
படத்தின் Key Incident இத்திரைக்கதையிலும், இந்த இரண்டு
சம்பவங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கின்றன.
மோதிரத்தைப் பற்றி முதலில்
நாம் Inciting Incident
மூலம் அறிந்துகொள்கிறோம்.
அதன்பின் அம்மோதிரத்தை
ஃப்ரோடோ தனது
பொறுப்பில் எடுத்துக்கொண்டு
(Key Incident ) அதனை அழிப்பதையே
ஒரு பயணமாக
மேற்கொள்வதையும்
அறிந்துகொள்கிறோம்.
ஆக, இரண்டு
நிகழ்ச்சிகளும்
ஒன்றோடொன்று சம்மந்தப்பட்டவை.
Key Incident மற்றும் Plot Point 1
ஆகியவை பெரும்பாலும்
ஒன்றாகவே இருக்க வாய்ப்புகள்
உண்டு என்று சொல்கிறார்
சிட் ஃபீல்ட்.
முதல் ப்ளாட் பாயின்ட் என்பது
என்ன?
திரைக்கதையின் முதல் பகுதி
( முதல் முப்பது பக்கங்கள் )யின்
முடிவில்,
கதையை நோக்கித்
திரைக்கதையின் போக்கைத்
திருப்பும் ஒரு சம்பவமே
முதல் ப்ளாட் பாயின்ட்
என்பது
நினைவிருக்கிறதல்லவா?
அதைத்தானே Key Incidentட்டும்
செய்கிறது? ஆனால்,
இந்த இரண்டும்
வேறுவேறாகவும் இருக்கலாம்.
அது, திரைக்கதையைப்
பொறுத்து முடிவு செய்யப்படும்
விஷயம்.
இப்போது, இக்கட்டுரையின்
ஆரம்பத்தில்
கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு
விடை காண முயலலாம்.
கேள்விகளை
ஒருமுறை
படித்துக்கொள்ளுங்கள்.
பதில்கள்:
1. நான் லீனியராகத்
திரைக்கதை
எழுதப்பட்டிருந்தாலும்,
எப்படியும் அத்திரைக்கதையின்
ஆரம்பத்தில் – அதாவது,
படத்தின் துவக்கத்தில்
Inciting Incident
வந்தால்தான் ஆடியன்ஸுக்கு
அப்படத்தில் ஒரு சுவாரஸ்யம்
ஏற்படும்.
Inciting Incident
திரைக்கதையின் பாதியிலோ
அல்லது கடைசியிலோ
வருவதால் திரைக்கதைக்கு
எந்தப் பயனும்
இல்லையல்லவா?
Pulp Fiction படத்தை
உதாரணமாக
எடுத்துக்கொள்ளுங்கள்.
நான் லீனியர் திரைக்கதைக்கு
ஒரு அருமையான
உதாரணம் அது.
அதில்கூட,
ரெஸ்டாரெண்ட்டைக்
கொள்ளையடிக்கும் காட்சி,
முதலில்தானே வருகிறது?
2. திரைக்கதையின்
போக்கைப் புரியவைக்கும்
Key Incident ட்டும், படத்தின்
ஆரம்பத்தில் வரும்
Inciting Incident ட்டுக்குப்
பின்னர் அமைந்துள்ள
திரைக்கதையின் மீதியும்
ஒன்றுதானா?
இல்லை. இரண்டும் வேறானவை.
Key Incident என்பது ஒரு குறிப்பிட்ட
ஸீன் என்பது
நண்பர்களுக்குப்
புரிந்திருக்கும்.
திரைக்கதை எதை நோக்கிச்
செல்கிறது என்று நமக்குப் புரியும்
அந்த ஒரு காட்சி – அதுதான்
Key Incident . ஆகவே,
திரைக்கதையில் உள்ள
ஒரு காட்சியே Key Incident .
அதுவே முழுத்
திரைக்கதையுமாக ஆகிவிடாது.
3. இதற்கான விடையைக்
கொஞ்சம் முன்னர்தான் பார்த்தோம்.
Key Incident மற்றும் Plot Point 1
ஆகியவை பெரும்பாலும்
ஒன்றாகவே இருக்க வாய்ப்புகள்
உண்டு என்று சொல்கிறார்
சிட் ஃபீல்ட்.
ஆனால், இந்த இரண்டும்
வேறுவேறாகவும் இருக்கலாம்.
அது, திரைக்கதையைப்
பொறுத்து முடிவு செய்யப்படும்
விஷயம்.
Inciting Incident, Key Incident
ஆகிய
இரண்டையும் குழப்பிக்கொண்டுவிடவேண்டாம்.
இந்தக் கட்டுரையைப்
பொறுமையாக இன்னொரு
முறை படித்துப் பாருங்கள்.
அதன்பின், அடுத்த கட்டுரையில்,
ஒரு டக்கரான படத்தை
உதாரணமாக வைத்து,
இந்த இரண்டு விஷயங்களைப்
பற்றியும் புரிந்து கொள்ள
முயற்சிக்கலாம்.
திரைக்கதை என்பதன்
அடிப்படை வடிவத்தையே
காலி செய்து,
படம் பார்ப்பவர்கள்
அனைவரையும் மூக்கின்மேல்
விரல் மட்டுமல்லாமல்
மொத்த கையையும்
வைத்து குத்திக்கொள்ள
வைத்த அந்தப் படம்…….?
தொடரும் . . . . .
கருத்துகள்