திரைக்கதை
வெகுநாட்களாகவே, இந்த விஷயத்தைப் பற்றிப் பகிரவேண்டும் என்பது எனது ஆசையாகவே இருந்தது.
ஆசை என்பதைவிட, ஆர்வம்
என்று சொன்னால் சரியாக
இருக்கும்.
ஏன்னா திரைக்கதை பற்றி Net ல
தேடி பார்த்தேன் ஒன்றும் கிடைக்கலை. அப்படி தேடும் போது தான்
சுஜதா எமுதின புத்தகத்தை பார்த்தேன்.
அதுவும் Online order பண்ணுறது.
நானும் ஆர்வ கோலரில
ஆர்டர் பண்ணினேன்.
அநியாயமா காசு தான் போனது
மிச்சம்.
சரி போனது போகட்டும்
என்று விட்டுட்டன்.
அதுக்கு அப்புறம் யாழ்பாணத்தில்
உள்ள எல்லா புத்தக கடையிலும்
கேட்டு பார்த்திடன் இல்லை என்று சொல்லிடாங்க.
சில கடையில order பண்ணி தான் தரனும் என்று சொன்னாங்க.
நானும் சரி என்று சென்னேன்
ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு
இன்னும் வரலை என்று
தான் சொல்லுறாங்க.
அப்புறம் இன்னெரு கடையில்
போய் கேட்டேன் அவங்க.
இருக்கு தம்பி நாளைக்கு
வாங்க பார்த்து வைக்கிறன் .
என்று சொன்னாங்க.
சரி என்று சொல்லி வந்திட்டன்.
இரவு நித்திரையே வரலை எப்ப
விடியும் புத்தகத்தை வேண்டி
படிக்கலாம்.
என்று இருத்திச்சு அடுத்த
நாள் கடைக்கு போய்
கேட்கிறன்.
இருத்திச்சு தம்பி முடிச்சிடிச்சு
order பண்ணி
தான் தரனும் என்றாங்க.
சரி என்று நம்பரை
கொடுத்திட்டு வந்தோன்.
வந்தா Call பண்ணுறன்
என்று இன்று வரைக்கும்
Call பண்ணல.
நானும் வெறுத்துப்போய்.
அப்படியே விட்டுட்டன் இன்று
வரைக்கும் அந்த புத்தகத்தை வாங்கி
படிக்கலை.
அதுக்கு அப்புறம் தான்
Rajesh அண்ணாவுடைய Blog
படிக்க ஆரம்பிச்சேன்.
அவ்வளவு சூப்பரா எமுதி
இருத்தார்.
திரைக்கதை என்றால் எப்படி
எமுதனும் என்று அவருடைய
Blog ல இருத்து தான் கத்துகிட்டன்.
திரைக்கதை பற்றி கத்து
தத்ததில எனக்கு அவர் தான்
குரு என்று சொல்லுவேன்.
இனி இந்த திரைக்கதை பதிவில
வாருகிற எல்லாம் பதிவும் அவர்
Blog ல இருத்து காப்பி பண்ணி
போட்டிருக்கேன்.
ஏன்ன சினிமா பற்றின எல்லா
பதிவும் என்னுடைய Blog இருக்கனும் என்கிறதுக்காக தான்.
சினிமா ஆர்வம் உள்ளவங்க
மட்டும் தான் படிக்கனும் என்று
இல்லை எல்லாரும் படிக்கலாம்.
திரைக்கதை என்றால் என்னென்று எல்லாரும் தெரிச்சுக்கனும்.
சில இயக்குனர் மெக்க படத்தை
எடுத்திட்டு அதுக்கு ஒரு காரணம்
சொல்லுவாங்க பாருங்க.
அது என்னென்றால் ரசிகர்களுக்காக
தான் படம் பண்ணுறம் அவங்க
இதை தான் எதிர்பார்க்கிறாங்க.
அன்றையில் இருத்து இன்றைக்கு வரைக்கும் இதை சொல்லி தான்
நம்மள ஏமாந்துறாங்க.
இனியாச்சும் திரைக்கதை என்றால்
என்ன நாம தெரிச்சுகிட்டா
இனி அவங்க மாறுவாங்கள
என்று பார்ப்போம்.
திரைக்கதை எழுதுவது என்பது பொதுவாகவே ஒரு கடினமான
வேலை. ஆகவே,
திரைக்கதை என்றால் என்ன?
அதன் உள்ளடக்கங்கள் என்னென்ன? திரைக்கதை வடிவம் என்பது எப்படி
இருக்க வேண்டும்?
ஆகிய விஷயங்களைப் பற்றி,
சில விஷயங்களை எழுதவேண்டும்
என்று நினைத்தேன். உடனேயே,
‘நீ என்ன பெரிய பாக்யராஜா?
ஓவரா பேசாதடா’ என்றெல்லாம்
நினைக்க ஆரம்பிக்காமல்,
கொஞ்சம் பொறுமையாக மேலே படியுங்கள்.
திரைக்கதைகளைப் பற்றி நான்
எழுத நினைத்ததற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது.
எந்தப் படத்தை நான் பார்க்க. ஆரம்பித்தாலும், சில விஷயங்களை
அந்தப் படத்தில் தேடுவேன்.
அந்த விஷயங்கள் இருந்தால்
தான் அப்படம் அலுக்காமல்
செல்லும்.
ஒரு படத்தைப் பார்க்க
ஆரம்பிக்கும் வெகுசில
நிமிடங்களிலேயே அப்படம்
அலுக்கிறதா அல்லது சுவாரஸ்யமாக இருக்கிறதா என்று தெளிவாக இப்போதெல்லாம் தெரிந்துவிடுகிறது. இதற்குக் காரணம், இந்த
விஷயங்கள் தான்.
திரைக்கதை வடிவம் பற்றியும், திரைக்கதைகள் பற்றியுமே எனக்குத் தெரிந்து கடந்த நான்கு
வருடங்களாகப் படித்து வருகிறேன். ‘படித்து’ என்றால், பரீட்சைக்குப்
படிப்பது போல் அல்ல.
அவ்வப்போது திரைக்கதை
வித்தகர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்தும், அதில் சொல்லப்பட்ட திரைக்கதைகளைப் படித்தும், திரைப்படங்களைப் பார்க்கையில்
நான் படித்திருக்கும் விஷயங்கள்
அதில் இருக்கிறதா என்று
பரிசோதித்தும் வருவதால்,
தற்போது, திரைக்கதைகள் பற்றிய தெளிவான ஒரு புரிதல்
என்னிடம் இருக்கிறது.
சிட் ஃபீல்ட் |
இந்தப் புரிதலை, அவ்வப்போது
சில படங்களைப் பார்த்துப்
பரிசோதிப்பது எனது வழக்கம். படங்களைப் பார்க்கையில்,
பொதுவாகவே எனது புரிதல்
சரியாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
ஆகவே, அப்படி நான் முதன்
முதலில் படித்துப் பிரமித்த
ஒரு அருமையான புத்தகத்தைப்
பற்றி இங்கே எழுதுவதே நோக்கம்.
திரைக்கதை எழுதவேண்டும் என்ற
ஆவல் இருக்கும் நண்பர்கள்,
முதலும் கடைசியுமாக இந்தப்
புத்தகத்தைப் படித்தால் போதும்.
இதை எழுதியவர், ஹாலிவுட்டில்
கடந்த முப்பது வருடங்களுக்கும்
மேலாக திரைக்கதைகள் எழுதும் தொழிலில் இருப்பவர்.
‘திரைக்கதை வடிவம்’ என்பதே,
இவர் கண்டுபிடித்துச்
சொன்னபின்தான் வெளியுலகத்துக்கு வந்தது.
ஆகவே, இவர் 1979 ல் எழுதிய
‘Screenplay :
The Foundations of Screenwriting ‘ என்ற புத்தகத்தில் இவர்
சொல்லியிருந்த பல விஷயங்கள், இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மிகப்பிரபல இயக்குனர்களான. ஸ்பீல்பெர்க்,
ஜேம்ஸ் கேமரூன், மைக்கேல் பே போன்றவர்களே,
இந்தப் புத்தகத்தை உபயோகித்து அருமையான பல படங்கள்
எடுக்கும் அளவுக்கு இவர் பிரபலம். மட்டுமல்லாமல், மொத்தம் முப்பது மொழிகளுக்கும் மேல் இவரது
புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அத்தனை
திரைப்படக் கல்லூரிகளிலும்
இவரது இந்தப் புத்தகம்
பாடமாக வைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் தற்போது
திரைக்கதை வகுப்புகள் எடுத்து,
பல இயக்குனர்களின் சந்தேகங்களை அவ்வப்போது தீர்த்து வைக்கும் திரைக்கதையின் பிதாமகர் இவர்.
Syd Field
சில வருடங்களுக்கு முன்,
‘திரைக்கதை எழுதுவது எப்படி?’
என்று சுஜாதா ஒரு புத்தகத்தை எழுதியிருந்தார்.
அந்தப் புத்தகத்தை, லேட்டாகத்தான் படித்தேன். அதைப் படித்து,
வழக்கப்படி அதிர்ந்துபோனேன்.
ஏனெனில், சுஜாதா, சரளமாக
இந்த ஆங்கிலப் புத்தகத்தின்
பல பக்கங்களை, பல
அத்தியாயங்களை, என்னமோ
தானே யோசித்து எழுதியதுபோல சுட்டிருந்தார். புத்தகத்தின்
முன்னுரையில் சிட் ஃபீல்ட் பற்றிய
ஒரு மிகச்சிறிய. reference வருகிறது. அவ்வளவே. அதன்பின்,
தமிழ் சினிமாவின் காப்பி
சரித்திரத்தைப் பார்க்கையில்தான், இதற்கு சுஜாதா மட்டும் விதிவிலக்கா என்ன? என்று புரிந்தது.
சுஜாதா, பல இடங்களில், தனது அனுபவத்தில் இருந்து எழுதியதாக, திரைக்கதை பற்றிய பல
விஷயங்களை எழுதியிருப்பார்.
அவையெல்லாம், இந்த ஆங்கிலப் புத்தகத்தில் இருந்து ‘மொழிபெயர்க்கப்பட்டவையே’
(குறிப்பு – இந்தப் புத்தகத்துக்கு
முன்னுரை எழுதியிருப்பது,
மணிரத்னம் !!).
இந்தக் கட்டுரைகளை எழுதப்போகும் காரணம் இன்னொன்றும் உண்டு.
சுஜாதா எழுதியுள்ள. புத்தகத்தில், ஒரிஜினலில் சொல்லப்பட்டுள்ள உதாரணங்கள் வரும்போதெல்லாம், சட்டென்று மணிரத்னம் படங்களில்
உள்ள உதாரணங்களைச் சொல்லத் தொடங்கிவிடுவார்.
அது, மொக்கையாக. இருக்கும்.
மூல நூலில் உள்ள உதாரணங்களை அப்படியப்படியே பேசி விவாதிப்போமே என்பதால்தான் இக்கட்டுரைகள்.
ரைட். முன்னுரை போதும்.
இந்தப் புத்தகத்தின் நேரடி
வரிக்கு வரி மொழிபெயர்ப்பாக
இந்தக் கட்டுரைகள் இருக்காது.
ஒவ்வொரு அத்தியாயத்திலும்
சிட் ஃபீல்ட் விளக்கியுள்ள பல
அருமையான. விஷயங்களைப் பற்றி விவாதிப்பதே நோக்கம்.
திரைத்துறையில் இருக்கும் பல நண்பர்களால், இந்த ஒரிஜினல்
ஆங்கிலப் புத்தகத்தை வாங்க
இயலாமல் இருக்கலாம்.
அல்லது அதில் கையாளப்பட்டுள்ள
மொழி புரியாமல் இருக்கலாம்.
ஆகவே, எளிதாகப் புரியும்
வகையில் இப்புத்தகத்தை விவாதிக்கலாம். திரைத்துறையில் இல்லாத நண்பர்களும்,
இக்கட்டுரைகளைப் படிக்க இயலும்.
பல சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைக்கும்.
இக்கட்டுரைகளைப் படிக்க
ஆரம்பித்தபின், அதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் , நீங்கள் பார்க்கும் திரைப்படங்களில் இருக்கிறதா என்று கவனியுங்கள்.
இதைக் கவனித்துவந்தாலே
போதும். ஒரு நல்ல
திரைக்கதையை நாமே எழுத
இயலும்.
Okay . Lets discuss the original book .
Chapter 1 : திரைக்கதை என்றால் என்ன?
புத்தகத்தின் இந்த முதல்
அத்தியாயத்தில், புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் F. Scott Fitzgerald பற்றிய அறிமுகத்தோடு துவங்குகிறார்
சிட் ஃபீல்ட். Scott Fitzgerald ,
பல. காவியங்களை எழுதியவர். இன்றளவும் புகழ்பெற்று
விளங்கும் பல நாவல்களின்
ஆசிரியர். இருந்தாலும்,
வாழும் காலத்தில், மிக.
ஏழ்மையில் வருந்தி,
அளவுக்கதிகமாகக் குடித்து,
பெருமளவு பணத்தைக் கடனாக
வாங்கி, ஒரு கொடுமையான வாழ்க்கையில் உழன்றவர்.
F. Scott Fitzgerald |
ஆகவே, தனது வறுமையைப்
போக்கும் மருந்தாக,
திரைப்படங்களில் திரைக்கதை
எழுதும் முடிவைத் தேர்ந்தெடுத்தார்.
1937 ல், ஹாலிவுட்டில் காலடி எடுத்துவைத்தார். அதிலிருந்து, மிகக்கடுமையாக உழைக்க
ஆரம்பித்தார்.
தான் எழுதப்போகும் ஒவ்வொரு திரைக்கதையிலும், முதல்
வார்த்தையை எழுதும் முன்னரே, ஒவ்வொரு கதாபாத்திரத்தைப்
பற்றியும் பக்கம் பக்கமாக
எழுதிவைத்துக் கொண்டார். இதன்பின்னரே திரைக்கதைகள் எழுத ஆரம்பித்தார். ஆனாலும், அவரால், திரைக்கதை என்றால் என்ன
என்ற இறுதி முடிவுக்கு வர
இயலவில்லை.
தேர்ந்த நாவலாசிரியராக இருந்ததால், திரைக்கதைகளையும் அவ்வண்ணமே கையாள எண்ணினார் Fitzgerald . ஹாலிவுட்டில் அவர் இருந்த
மூன்று வருடங்களில், ஒரே
ஒரு படத்தில் மட்டுமே அவரது
பெயரைப் பார்க்க முடியும்.
ஆனால், அந்தத் திரைக்கதையும் இன்னொருவரால் செம்மைப்படுத்தப்பட்டது.
1941 ல் இறந்துபோகும்வரை,
தொடர்ந்து திரைக்கதைகள் எழுதிக்கொண்டே இருந்த ஒரு
மனிதர் அவர். பக்கம் பக்கமாக
எழுதியும், இறக்கும்வரை அவரால், திரைக்கதை வடிவத்தைப்
புரிந்துகொள்ள இயலவே இல்லை
என்று எழுதுகிறார் சிட் ஃபீல்ட்.
Scott Fitzgerald பற்றிய
அறிமுகம் எதற்கு?
திரைக்கதை வடிவத்தைப் புரிந்துகொள்வதற்காகவே.
ஹாலிவுட்டில், இப்போதும் கூட,
நாம் சந்திக்கும் மனிதர்களில் நான்குபேர்களில் ஒருவர்,
திரைக்கதை ஒன்றினை எழுதிக்கொண்டிருப்பார்.
இதுதான் ஹாலிவுட், மக்களின்
மனதில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்.
ஒரே ஒரு திரைக்கதை, திரைப்படமாக்கப்பட்டால் கூட,
பெரும் படம் அங்கே கிடைக்கும்.
ஆகவே, எல்லோருமே திரைக்கதைகளை எழுதியவண்ணமே இருக்கிறார்கள்.
சரி. நாமுமே பல திரைப்படங்களைப் பார்க்கிறோம் அல்லவா?
சில வருடங்களுக்கு முன் வரை,
எந்தத் தமிழ்ப் படமாக இருந்தாலும்,
படத்தின் டைட்டில் முடிந்துபோன
பின், கதாநாயகன்
அறிமுகமாகும்போதோ அல்லது
வேறு ஏதாவது காட்சியின்போதோ,
‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ என்று வரிசையாகப் பல வரிகள்
போட்டு,
ஒரு இயக்குனரின் பெயர் அறிமுகம் செய்யப்படும். இதைப் பார்த்தே வளர்ந்தவர்கள் நாம் ஆதலால்,
நமது மனதிலும், திரைக்கதை என்பது, கதை, வசனம், இயக்கம்
சம்மந்தப்படாத வேறு ஏதோ விஷயம் போலும் என்ற எண்ணம் வலுப்பட்டிருக்கும்.
ஆனால், அது சரியா?
இதற்கு சிட் ஃபீல்ட் பதில் சொல்ல நேர்ந்தால், இப்படி டைட்டில்
போடும் இயக்குனர்களின்
மண்டையில் ஓங்கி ஒரு போடு
போடுங்கள் என்றே
சொல்லியிருப்பார்.
உண்மையில், கதை, வசனம்,
திரைக்கதை ஆகிய மூன்றும்,
ஒரே ட்ராக்கில் பயணிப்பவை.
கதை இல்லாமல், திரைக்கதை
எழுதவே முடியாது. போலவே,
வசனம் என்பது, திரைக்கதையில்
இல்லாத, தனிப்பட்ட. விஷயம்
இல்லவே இல்லை. திரைக்கதை
என்பதில், வசனங்களும் அடக்கம்.
வசனம் இல்லாமல், திரைக்கதை எழுதுவது சாத்தியமே இல்லை
(வசனங்கள் பக்கம் பக்கமாகப்
பேசப்படும் திரைப்படங்களை
மனதில் வைத்தே சொல்கிறேன்.
மற்றபடி, படத்தில் வசனம்
இல்லை என்றால்,
திரைக்கதையிலும் வசனங்கள் தேவையில்லை).
இன்னொரு கேள்வி எழலாம்.
திரைக்கதை என்பது, ஒரு நாவலா? இதற்குக் காரணம், ஒரு நாவலிலும், வசனங்கள் இடம்பெறுகின்றன.
நீண்ட பல வர்ணனைகள் உள்ளன. அல்லது, ஒரு திரைக்கதையை,
ஒரு நாடகத்தோடு ஒப்பிட முடியுமா? இரண்டும் ஒரே போன்று தானே
உள்ளன? வசனங்கள், சம்பவங்கள் இத்யாதி?
ஒரு திரைக்கதைக்கும், நாவல்
அல்லது சிறுகதை அல்லது நாடகம் ஆகியவற்றுக்கும் உள்ள பிரதான வித்தியாசம், ஒரு நாவலில்
இடம்பெறும் எந்தச் சம்பவமானாலும்
சரி, முக்கியமான கதாபாத்திரத்தின் தோளிலேயே அவை பயணிக்கின்றன. நாவலின் ஹீரோ எதையாவது
செய்யத் தலைப்படும்போது தான்
அந்த சம்பவத்தைப் பற்றி
நாம் தெரிந்துகொள்கிறோம். கதாநாயகனது பார்வையில்தான்
நமக்குச் சம்பவங்கள் சொல்லப்படுகின்றன.
எந்தக் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அந்தக் கதாபாத்திரத்துடன் சிறிது நேரம் பயணித்துவிட்டு,
மறுபடியும் நாம் கதாயகன்
அல்லது நாயகியிடமே திரும்பிவிடுகிறோம்.
அதாவது, ஒரு நாவலின் கதை,
பிரதான பாத்திரத்தின் மூளைக்குள் நடக்கிறது. அதேபோல்,
ஒரு நாடகத்தில், அந்த
மேடையில் இடம்பெறும் பாத்திரங்கள் பேசும் வசனங்கள் மூலமாகவே
கதை நகர்கிறது. அவர்களுடைய சந்தோஷம், துக்கம், காதல்
ஆகிய அத்தனை உணர்வுகளும், வசனங்களின் ஊடாகவே பயணிக்கின்றன. ஆதலால்,
ஒரு நாடகத்தின் கதை,
மொழியின் வடிவாகவே இருக்கிறது.
ஆனால், ஒரு திரைப்படம்
என்பது, பல காட்சிகளின்
வழியாகவே சொல்லப்படுகிறது.
ஒரு கடிகாரம் திடீரென
ஒலிப்பதைக் காண்கிறோம்.
தொலைவில், ஒரு பால்கனியில், தன்னந்தனியான மனிதன் ஒருவன் சாலையையே நோக்கிக்கொண்டு நிற்பதைக் காண்கிறோம்.
இரண்டு மனிதர்கள் பேசியபடியே நடக்கிறார்கள். பின்னணியில் வாகனங்களின் இரைச்சல்.
யாரோ யாரையோ கூப்பிடும்
சத்தம். ஆலையின் சங்கு
ஊதும் சத்தம். இப்படி,
ஒரு திரைப்படம் என்பது,
பல காட்சிகளின் தொகுப்பாக
இருக்கிறது.
படங்கள். ஒளிப்படங்கள்.
ஆகவே, திரைக்கதை என்பதை
இப்படிச் சொல்கிறார் சிட் ஃபீல்ட் – திரைக்கதை என்பது, காட்சிகள்,
வசனங்கள் மற்றும் விவரிப்பின்
மூலமாகச் சொல்லப்பட்டு,
விறுவிறுப்பான ஒரு கட்டமைப்பினுள் வைக்கப்படும் ஒரு கதை.
screenplay is a story told with pictures,
in dialogue and description,
and placed within the context of dramatic structure.
அது என்னய்யா கட்டமைப்பு?
நாம என்னா கட்டிடமா
கட்டிக்கிட்டு இருக்கோம்?
என்பவர்களுக்கு – வெறுமனே வசனங்களாலும் விவரிப்புகளாலும் நிரப்பப்பட்டுவிட்டால் மட்டுமே அது
ஒரு முழுமையான திரைக்கதையாகிவிடாது.
அப்படி நிரப்பப்படுவது ஏன்?
கதையில் என்ன நடக்கிறது?
ஆகிய விஷயங்கள் தெளிவாக விளக்கப்படுதல் வேண்டும். திரைக்கதையில் இடம்பெறும்
ஒரு சிறிய புள்ளி கூட,
அவசியம் இல்லாமல் எழுதப்படல் கூடாது. ஆகவேதான்,
திரைக்கதையில் ஒரு சுவாரஸ்யமான
கதை சொல்லப்படுதல் வேண்டும். இதைத்தான் விறுவிறுப்பான
கட்டமைப்பு என்று சிட் ஃபீல்ட்
சொல்கிறார்.
ஒரு சிறிய உதாரணமாக
சிட் ஃபீல்ட் சொல்வது,
செஸ் (நடுவில் ‘க்’கன்னாவெல்லாம் இல்லை) விளையாட்டு.
செஸ்ஸில் நான்கு பகுதிகள்
உள்ளன.
1. காய்கள் – ராஜா, ராணி, சிப்பாய் மற்றும் மந்திரி
2. விளையாடும் நபர்கள்
3. செஸ் போர்ட் (board)
4. விளையாட்டு விதிகள்
இந்த நான்கு பகுதிகள் இல்லையென்றால்,
செஸ் விளையாட்டு சாத்தியம்
இல்லை. இந்த நான்கு
விஷயங்களும் முழுமையடைவதே
செஸ் விளையாட்டு. அதாவது,
இந்த நான்கு பகுதிகளுக்கும்
இடையில் இருக்கும் உறவு – அதுவே விளையாட்டைத் தீர்மானிக்கிறது. இதைப்போலவே, கதை என்பது, முழுமையான ஒன்று. இந்தக்
கதையை உருவாக்கத் தேவையான பகுதிகள் – கதாபாத்திரங்கள்,
செய்கைகள், பிரச்னைகள்,
காட்சிகள், வசனம், இசை,
ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியன – இவற்றுக்குள் ஏற்படும் உறவுமுறையே, கதையைத் தீர்மானிக்கிறது.
ஒரு நல்ல கட்டமைப்பு என்பது, ஐஸ்கட்டிக்கும் தண்ணீருக்கும் உள்ள உறவைப் போன்றது என்பது
சிட் ஃபீல்டின் உதாரணம். ஐஸ்கட்டி தண்ணீரில் கரையும்போது,
இரண்டுக்கும் வேறுபாடு என்பதே இல்லாமல் போய்விடுகிறதல்லவா? அதைப்போலவே, இந்தக் கட்டமைப்பே, கதையை சுவாரஸ்யமாக்குகிறது. கட்டமைப்பும் கதையும் ஒன்றில்
ஒன்று கரைந்துவிட்டால்,
நமக்கு நல்லதொரு திரைப்படம் கிடைக்கிறது.
கட்டமைப்பைப் பற்றி நிறைய விவாதித்துவிட்டோம்.
இந்தக் கட்டமைப்புக்கு ஏதாவது
வடிவம் உள்ளதா?
உள்ளது.
ஒரு மேஜையை எடுத்துக்கொண்டால், நான்கு கால்கள் மற்றும்
ஒரு சமதளப் பரப்பு.
இதுதான் அதன் வடிவம்.
இந்த வடிவத்தை வைத்துக்கொண்டு,
சிறிய மேஜை, பெரிய மேஜை
போன்ற எந்த மேஜையை வேண்டுமானாலும் செய்யமுடியும்.
இது போன்ற எந்த மேஜையானாலும்,
அதன் வடிவம் மாறாது.
அது – நான்கு கால்கள் மற்றும்
ஒரு சமதளப் பரப்பு. இதைப்போலவே, திரைக்கதைக்கும் ஒரு வடிவம் உண்டு.
அது ?
தொடரும் . . . . .
கருத்துகள்