திரைக்கதை 02




Chapter 1 – What is a Screenplay? (Contd)



திரைக்கதைக்கு    ஒரு    வடிவம்    உண்டு.   
அந்த    வடிவத்தைப்     பார்க்கு   முன்,   
சென்ற    கட்டுரையில்,     திரைக்கதைக்கு 
ஒரு      தெளிவான    வடிவம்     
இருக்குமானால்,       







David Lean   போன்ற    இயக்குநர்கள்     
எழுதும்    திரைக்கதைகள்,   
ஒரே      வடிவம்     கொண்டதாக இருப்பதில்லையே?   
என்று    நண்பர்    கொழந்த    ஒரு   
கேள்வி    கேட்டிருந்தார்.     அது   போலவே,   
நான்   லீனியர்      திரைக்கதைகளுக்கும்   
இந்த   விதி    பொருந்துமா    என்றும்   
நண்பர்    ஆனந்த்   ஒரு   கேள்வியைப் போட்டிருந்தார்.         








இவற்றைப்     பற்றிப்     பார்த்துவிட்டுத் தொடரலாம்.      டேவிட் லீன்,     க்வெண்டின் டாரண்டினோ      போன்ற   
இயக்குநர்கள்       கையாளும்     
திரைக்கதை      முறை,     
நான்   லீனியர்      எனப்படும்.       
அதாவது,   ஆரம்பம்,    நடுப்பகுதி,     
இறுதி    ஆகிய   ஒரே     வரிசையில்   
இல்லாமல்,   கதையின்    போக்கு, 
முன்னாலும்     பின்னாலும்    மாறி     
மாறி     இருக்கும்.     இருந்தாலும்,     
அப்படி   மாறி   மாறி    நான்  லீனியராக   
வரும்    பகுதிகளை     எடுத்துப்     
பார்த்தாலும்,       







அப்பகுதிகளுக்கே    ஒரு    ஆரம்பம், 
நடுப்பகுதி    மற்றும்    முடிவு   ஆகியன 
இருந்தே     தீரும்.     
சிட் ஃபீல்ட்     என்ன    சொல்கிறார்     
என்றால்,         நான்   லீனியர்   
திரைக்கதைகளும்     இந்த    வடிவத்தில்   
வந்தே     தீரும்    என்று.     
எத்தகைய       திரைக்கதையை   
எழுதினாலும்,   சிட் ஃபீல்ட்     சொல்லும் திரைக்கதை      வடிவத்தில்தான்     
அதனை     எழுத    முடியும்   
(அந்த   வடிவம்    என்னவென்றே   
தெரியாமல்     இருந்தால்    கூட).     
அதுதான்    சிட் ஃபீல்டின்     ஜீனியஸ். க்வெண்டின்     மற்றும்     டேவிட் லீன் படங்களிலிருந்து     சில   
உதாரணங்களைப்      போகப்போகப் பார்ப்போம்.       










இப்போது,    திரைக்கதையின்   வடிவம்.   
கீழே     கொடுத்திருக்கும்     படத்தை,   
ஆற    அமரப்     பாருங்கள்.     
பார்த்தாயிற்றா?         இந்தப்    படமே,   
சிட் ஃபீல்ட்      சொல்லும்     திரைக்கதை   
வடிவம்.         இதில்      உள்ளவற்றைப்     
பற்றிக்      கவலை      வேண்டாம்.     
ஒன்றுமே      புரியவில்லை    என்றால்   
இன்னும்     நல்லது.     வாருங்கள்.   
இந்த    வடிவத்தை     அலசலாம்.   









Act 1 is the Setup   



சிட் ஃபீல்ட்     ஏற்கெனவே    சொன்னதை நினைவு       கொள்ளுங்கள்.     
திரைக்கதை     என்பது     என்ன?     
திரைக்கதை    என்பது,    காட்சிகள்,      வசனங்கள்     மற்றும்     விவரிப்பின்   
மூலமாகச்      சொல்லப்பட்டு,   
விறுவிறுப்பான    ஒரு     கட்டமைப்பினுள் வைக்கப்படும்     ஒரு    கதை.   
ஆகவே,    எந்தக்    கதையாக   
இருந்தாலும்,         அவற்றில்     ஒரே   
போன்று      இருப்பது     என்ன?     
எந்தக்     கதைக்கும்    ஒரு     
ஆரம்பம்,    ஒரு     நடுப்பகுதி   மற்றும்   
ஒரு    முடிவு     ஆகியன     இருந்தே   
தீரும்     அல்லவா?       






(ஆனால்,   சில   நான்   லீனியர்   
படங்களில்,   இந்த  வரிசை    மாறக்கூடும் என்பதையும்   நினைவு   கொள்க).   
இங்கே,    இன்னொரு    விஷயத்தையும்    பார்த்து     விடலாம்.      பொதுவாக,   
ஒரு     ஆங்கிலப்    படம்,     
128   நிமிடங்களே    இருக்கும்.      அமெரிக்காவில்,     ஒரு     ஸ்டுடியோ, இயக்குநரிடம்     ஒப்பந்தம்    போடும்போது, திரைப்படம்,     128.    நிமிடங்களுக்கு   
மேல்    செல்லக்கூடாது    என்ற   விதியே   
அந்த   ஒப்பந்தத்தில்      பிரதானமாக இடம்பெறும்.    ஏன்     128   நிமிடங்கள்?










ஹாலிவுட்டில்,     ஒரு    ஸ்டுடியோவில் திரைப்படம்      தயாரிக்கப்படும்போது,   
ஒரு     நிமிடத்துக்கு,    சுமார்   
பதினைந்தாயிரம்      டாலர்கள்    செலவாகின்றன.   (இப்போது   புரிகிறதா?    பீட்டர் ஜாக்ஸன்,     லார்ட்   ஆஃப்  த 
ரிங்ஸ்    படங்களை,    ந்யூஸிலாந்தில் 
எடுத்த    ரகசியம்?) .   
ஆகவே,     கூடிய     விரைவில்   
திரைப்படம்     முடிக்கப்பட    வேண்டும். இரண்டாவது,     ஒரு    இரண்டு   மணி 
நேரப்படம்,      மல்டிப்ளெக்ஸ்களில்   
நிறையப்    பணத்தை   ஈட்டித்   தரும்.   
பல  ஷோக்கள்    ஓடுவதன்   மூலமாக.   
(இதற்கு  சில  விதிவிலக்குகளும்  உண்டு). ஆக,    திரைப்படம்    எடுப்பதன்   மூல 
விதி என்னவெனில், திரைக்கதையின் ஒரு பக்கம்,      திரைப்படத்தின்    ஒரு   
நிமிடத்துக்குச்     சமம்.    எனவே, நூற்றியிருபத்தெட்டு     நிமிடங்கள்   
ஓடும்    ஒரு     திரைப்படத்துக்கு, நூற்றியிருபத்தெட்டு     பக்கங்கள்   
உள்ள   திரைக்கதையே    எழுதப்பட
வேண்டும்.










அதற்குமேல்      போனால்,     அது    திரைப்படத்தின்   பட்ஜெட்டை    பாதிக்கும். ஆனால்,      இதற்கு   சில 
விதிவிலக்குகளும்     உள்ளன.   
Fellowship of the Ring    படத்தின் 
திரைக்கதை,     மொத்தம்   118   
பக்கங்கள்    மட்டுமே.    ஆனால்,   படமோ,    மூன்று    மணி    நேரத்துக்கும்   மேல். 
இப்போது,       மேலே     உள்ள.   படத்தை 
ஒருமுறை     பார்த்துக்கொள்ளுங்கள்.   








திரைக்கதையின்     Act 1     அல்லது   
முதல்   பகுதி,     கிட்டத்தட்ட    முப்பது   
பக்கங்கள்      இருக்க    வேண்டும்   
என்கிறார்      சிட் ஃபீல்ட்.     
இந்த   முதல்    பகுதியில்   
பிரதானமாக    இருப்பது,   
செட் அப்.   அதாவது,    துவக்கம்.   
கதையை    செட்டப்    செய்வது.    திரைக்கதையின்     இந்த    முதல்   
பகுதியில்,        திரைப்படம்   
எதனைப்பற்றியது      என்பது   
புரியவேண்டும்.         திரைப்படத்தில்   
வரும்    கதாபாத்திரங்கள்    அனைவரும்,    இந்தப்     பகுதியில்தான்     அறிமுகம் செய்துவைக்கப்படுவார்கள்.     
அதேபோல்,    இந்தக்    கதாபாத்திரங்களுக்கு இடையே      உள்ள     உறவுமுறையும்   
(குடும்ப    உறவு     இல்லை.     
கதாபாத்திரங்கள்      எவ்வாறு ஒருவரோடொருவர் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள்      என்பது)   
இந்த     முதல்     பகுதியில்தான்   
சொல்லப்படும்.    கதாபாத்திர   அறிமுகம், திரைப்படத்தின்     மையக்கரு எதனைப்பற்றியது    என்ற 
அறிமுகம்      ஆகியவை,   








இந்த   முதல்   பகுதியின்   பிரதான.  விஷயங்கள்.     இந்த    விஷயங்களை, பார்வையாளர்களுக்குப்      புரியவைக்க 
ஒரு      திரைக்கதையாசிரியருக்குத்   
தரப்படும்   நேரம்  –  முதல்   பத்து     
அல்லது     பதினைந்து     நிமிடங்கள்   
மட்டுமே.        அதாவது,     ஒரு     
திரைக்கதையின்     முதல்   பத்து   
அல்லது     பதினைந்து     பக்கங்கள்.   
ஒரு   திரைப்படத்தின்    ஆரம்ப   பத்து நிமிடங்களில்,       அந்தப்    படம்     
என்ன    சொல்ல    வருகிறது   
என்பது    ஆடியன்ஸுக்குப்   புரியவில்லை என்றால்,       அப்படம்    காலி    என்பது   
சிட் ஃபீல்ட்     சொல்லும்    முக்கியமான  விஷயம்.       









ஆகவே,     திரைக்கதையின்   
ஆரம்பப்      பத்து     பக்கங்களில்,   
பிரதான    கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு,   
கதை     ஆரம்பித்து  விட   வேண்டும்.   
முதல்     பத்து     நிமிடங்களில்   
கதை    ஆரம்பிக்கப்படவில்லை   என்றால்,    அது   எந்த   நாட்டு     ஆடியன்ஸாக 
இருந்தாலும்     சரி –     அவர்கள்   
மனதில்    படத்தைப்    பற்றிய   
நெகட்டிவ்      கருத்து,     
தெரிந்தோ       தெரியாமலோ   
உருவாகிவிடும்       என்கிறார்   
சிட் ஃபீல்ட் .         இந்தக்     கருத்து,   
மெதுவே     வலுப்பட     ஆரம்பித்து,   
பாதி    படத்திலேயே    ‘கருமண்டா . . .கொல்றானுங்களே’      என்றெல்லாம் 
சொல்ல    ஆரம்பித்து,     அதன்பின்      உடனடியாக    வீட்டுக்குச்    சென்று, 
கருந்தேள்    அல்லது    குலேபகாவலி 
போன்ற   வலைப்பூக்களில்   படத்தைத் திட்டுவதில்    சென்று    அது    முடியும்.









ஆகவே,      ஒரு     திரைக்கதையின்   
மிக   மிக  மிக     முக்கியமான   
பகுதி –   அதன்    முதல்    பத்து   
பக்கங்கள்.     
ஒரு     உதாரணமாக,     எல்லோருக்கும் 
தெரிந்த    ஒரு    படத்தை   எடுத்துக்    கொள்வோம்.      Fellowship  of  the  Ring 
படத்தின்     முதல்    ஆறு   
நிமிடங்களிலேயே,   
மோதிரத்தின்    முன்கதை    நமக்குக் காண்பிக்கப்படுகிறது.   
கூடவே,    ஷையரில்    பில்போவைப் பார்க்கிறோம்.    ஃப்ரோடோவையும். காண்டால்ஃப்      தனது     வண்டியில்   
வருவது,     
முதல்      ஆறு     நிமிடங்களுக்குள் 
தான்.       மிடில்     எர்த்    பற்றிய   
அறிமுகமும்      நமக்குக்   
கிடைத்துவிடுகிறது.     
ஆக,       படத்தைப்    பற்றிய   ஒரு   
தெளிவான    அறிமுகம்    நமக்கு   
முதல்    சில     நிமிடங்களிலேயே வந்துவிடுகிறது. 






அதேபோல்,  Chinatown   படத்தில்,    கதாநாயகன்     ஜாக்   நிகல்ஸன்,   
படத்தின்     முதல்    செகண்டிலேயே   
நமக்கு     அறிமுகம் செய்துவைக்கப்பட்டுவிடுகிறார்.   
அடுத்த    நொடியிலேயே,   
அவர்    ஒரு    தனியார்    துப்பறிவாளர்   
என்பதும்    நமக்குத்    தெரிந்துவிடுகிறது. படத்தின்     இரண்டாவது    நிமிடத்தில்,    அவரைப்     பார்க்க   ஒரு    பெண்   
வருகிறார்.           இந்தப்    பெண்,   
தனது      கணவனின்    நடத்தையில்   
சந்தேகம்       இருப்பதாகவும்,   
அதனைத்       துப்பறியவேண்டும்   
என்றும்      ஜாக்   நிகல்ஸனிடம்    கேட்டுக்கொள்ள,     படத்தின்   
கதை,      நான்காவது    நிமிடத்தில்    துவங்குகிறது.     
ஜாக்   நிகல்ஸன்     இந்தக்   கேஸில்   
துப்பறிய.     ஆரம்பிப்பது  தான்   
படத்தின்      முதுகெலும்பு.     
எனவே,      எந்தத்     திரைக்கதை எழுதப்படும்போதும்,     
முதல்     பத்து     நிமிடங்களுக்குள் கதாபாத்திரங்கள்     அறிமுகப்படுத்தப்பட்டு, படத்தின்     மையக்கரு   
ஆடியன்ஸுக்குப்     புரிந்து    விடவேண்டும். இல்லையேல்,     படம்    டண்டணக்கா    ஆகிவிடும்      என்பதை     நினைவு கொள்ளுங்கள்     என்கிறார் 
சிட் ஃபீல்ட்.




  
Act 2 is the Confrontation





திரைக்கதை     வடிவத்தின்   
இரண்டாவது     பகுதி,   
confrontation     அல்லது     
எதிர்கொள்ளுதல்      என்று அழைக்கப்படுகிறது.     
இந்த     இரண்டாவது    பகுதி,   
முதல்       பகுதியின்      முடிவில்     
இருந்து    –    அதாவது,      இருபது   
அல்லது      முப்பதாம்      பக்கத்தில்     
இருந்து,        கிட்டத்தட்ட     மொத்தம்   
ஐம்பது      அல்லது     அறுபது     
பக்கங்கள்      வரை     எழுதப்படும்   
பகுதி.       அதாவது,     திரைக்கதையின்   
எண்பது    அல்லது    தொண்ணூறாவது 
பக்கம்    வரை.        அப்படியென்றால்,   
நமது     திரைக்கதை     விதிப்படி,   
படத்தின்     முப்பதாம்      நிமிடத்திலிருந்து, படத்தின்   தொண்ணூறாம்   
நிமிடம்    வரை.     








இந்தப்     பகுதியில்,     படத்தின்   
மைய    கதாபாத்திரம்,     தனது     
நோக்கத்தை     நிறைவேறப்   
பாடுபடும்போது,      ஒவ்வொன்றாக கஷ்டங்களை     எதிர்கொள்ளும்.   
நோக்கம்    என்பது,      திரைப்படத்தில்   
அந்தக்     கதாபாத்திரம்    அடைய   
நினைக்கும்    குறிக்கோள்   அல்லது   
லட்சியம்    என்று     பொருள்படும்.   
இந்த    நோக்கம்   தெரிந்துவிட்டால், 
பல   தடைகளை   நாம்    உருவாக்கி, திரைக்கதையில்     சுவாரஸ்யம்   
ஊட்டலாம்.     ஆகவே,    முதல்   
பகுதியில்       அறிமுகப்படுத்தப்பட்ட கதாபாத்திரம்,     இரண்டாம்    பகுதியில்,   
தனது    நோக்கத்தை    நிறைவேற்ற முயலுகையில்,   
பல     எதிர்ப்புகளையும்     
கஷ்டங்களையும்     தடைகளையும் எதிர்கொள்கிறது.     
ஒரு     உதாரணமாக,     
Fellowship  of the  Ring. 
படத்தையே     எடுத்துக்கொள்ளலாம்.   
இதில்,       திரைக்கதையின்    முதல்   
பகுதியில்     அறிமுகப்படுத்தப்பட்ட    ஃப்ரோடோ    என்ற    கதாபாத்திரம், திரைக்கதையின்    இரண்டாம்   
பகுதியில்     (கிட்டத்தட்ட   முதல்   
முப்பது   நாற்பது   நிமிடங்கள்   கழித்து) 
தனது    நோக்கமான    மோதிரத்தை   
அழிப்பது     என்ற     லட்சியத்தை   
நிறைவேற்ற    ஒரு    பயணத்தை மேற்கொள்கிறது.     







வழியில்   மற்ற    கதாபாத்திரங்களோடு    சேர்ந்து     எண்ணிலடங்கா   
எதிர்ப்புகளையும்     எதிர்கொள்கிறது. Chinatown  படத்தில்,    முதல்   பகுதியில்,   
ஒரு     பெண்ணினால்   
கொண்டுவரப்படும்     கேஸைத்   
துப்பறிய     ஆரம்பிக்கும்   
ஜாக்   நிகல்ஸன்,     இரண்டாம்   
பகுதியில்,     அந்தப்    பெண்ணின்   
கணவர்    இறப்பதை    அடுத்து,   
அந்தக்   கொலைக்குக்    காரணமானவர்   
யார்     என்று    வெறியுடன்   
துப்பறியத்      துவங்குகிறார்.   
ஆனால்    இந்த   முயற்சிக்குப்   பல 
தடைகள்     வருகின்றன.     
எல்லாவற்றையும்    உடைக்கிறார். 
ஆக,    திரைக்கதையின்    இந்த   
இரண்டாவது     பகுதியில்,   
மையக்    கதாபாத்திரம்    அடைய   
நினைக்கும்     லட்சியத்துக்குப்   பல 
தடைகள்     உருவாக்கப்படுதல்   
வேண்டும்.      இதனால்,   அதன்   
லட்சியம்    பாதிக்கப்பட    வேண்டும்.   
அந்தத்   தடைகளை   உடைக்கும்   
வழிகளை   அந்தக்    கதாபாத்திரம் செயல்படுத்த    வேண்டும்.






Act 3 is Resolution 






திரைக்கதை    வடிவத்தின்    மூன்றாவது 
பகுதி,    resolution   அல்லது    தெளிவான. 
முடிவு     என்று     அழைக்கப்படுகிறது. திரைக்கதையின்     எண்பது   
அல்லது       தொண்ணூறாவது   
பக்கத்தில்     இருந்து,     சுமார்    முப்பது 
பக்கங்கள் –     அதாவது,     
நூற்றிருபதாம்     பக்கம்     வரை   
எழுதப்படுவதே     இந்த    resolution . திரைப்படத்திலும்,     எண்பது   
அல்லது     தொண்ணூறாம்    நிமிடத்தில்    இருந்து     இறுதி    வரை    வரும்   
காட்சிகள்,     இதில்     அடங்கும்.   
இந்தப்     பகுதி    என்ன    சொல்கிறது? திரைப்படத்தின்     மையக்   
கதாபாத்திரம்,     தான்    அடைய   
நினைக்கும்    லட்சியத்தை    அடைந்ததா? அல்லது      அடையவில்லையா?     
என்பதை,      ஆடியன்ஸுக்குக்   
குழப்பம்     இல்லாமல்    சொல்வதே   
இந்த    மூன்றாவது    பகுதி.








  
Resolution   என்பதற்கு,   முடிவு   (ending)   
என்று    பொருள்     கொள்ளாமல்,   
விடை     என்றே    பொருள்   
கொள்ளுமாறு     சிட் ஃபீல்ட்    அறிவுறுத்துகிறார்.     
படத்தின்     முடிவு    (ending)     
என்பது,    கடைசி   ஷாட்.    இந்தப்   
பகுதி    அல்ல.     ஒரு    படத்தின்   
மையக்    கதாபாத்திரம்,   
சாகிறதா?    அல்லது    பிழைக்கிறதா? திருமணம்     செய்துகொள்கிறதா?   
சொந்த     நாட்டுக்குப்     பத்திரமாகத் திரும்புகிறதா?     
அதன்    மைய    லட்சியத்துக்கு   
விடை      கிடைக்கவேண்டும்.     
அதுதான்     Resolution .      அதாவது,   
கதையைத்      தெளிவாக     
முடித்து     வைக்கும்    பகுதியே 
இந்த    மூன்றாவது    பகுதி.     
ஆரம்பம்  –   நடுப்பகுதி  –  முடிவு =   
Setup  –  confrontation  –  Resolution .   
இந்த     மூன்று     பகுதிகளே,     
திரைக்கதையின்     துண்டுகளை ஒன்றிணைத்து,     முழுக்கதையாக்கும் பகுதிகள்.    சரி.    ஆனால்,   
ஒரு    கேள்வி   வருகிறது    அல்லவா?   
முதல்    பகுதியில்    இருந்து   
இரண்டாம்     பகுதிக்கு     எப்படிக்   
கதையை     நகர்த்துவது?   
அதேபோல்,      இரண்டாம்    பகுதியில்   
இருந்து   மூன்றாம்    பகுதிக்குக்   
கதை    எப்படிச்    செல்லும்?     
இதற்கு   விடை,    மிகச்சுலபம்.





 அது . . . . ..





 தொடரும் . . . . .











கருத்துகள்

பிரபலமான இடுகைகள்