விநாயகருக்கு இரண்டு மகன்களா?
விநாயகருக்கு இரண்டு மகன்களா?
விநாயகரை வணங்காமல் எந்த ஒரு செயலும் தொடங்கப்படுவதில்லை.
காரணம் "வினை தீர்ப்பான் விநாயகன்" என்பது தான். ஒரு செயல் தொடங்கும்போது விநாயகரை வணங்கினால் அந்த செயல் நல்லபடியாக முடியும்வரை விநாயகரின் அருள் நம்முடனேயே இருக்கும் என்பது நம்முள் ஊறிப்போன ஒரு நம்பிக்கை.
நாம் குறைந்தது பத்து இடங்களிலாவது பிள்ளையாரை பார்த்துவிடுவோம், ஏனெனில் நம் சமூகத்தில் பெயர் இல்லாத தெருக்கள் கூட இருக்கலாம் ஆனால் பிள்ளையார் இல்லாத தெருக்கள் மிகவும் குறைவு. இவ்வளவு ஏன் இவர் முன்னே ஆடாத தமிழ் நடிகர்களே இல்லை எனலாம் .
தென்னிந்தியாவில் பிள்ளையார் என்று கொண்டாடுவது போல் வட இந்திய சகோதர்கள் கணேசன் என. கோலாகலமாக கொண்டாடிவருகிறன்றனர்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கடவுளாக இருப்பவரும் இவர் தான். தென்னிந்தியாவில் இவர் பிரம்மச்சாரி கடவுளாக கருதப்பட்டாலும் வட இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் இவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாக கருதப்படுகிறது. அது மட்டுமின்றி இவருக்கு இரண்டு மகன்களும் இருப்பதாக புராணங்கள் கூறுகிறது.
பிறப்பு
விநாயகர் சிவன்-பார்வதியின் மூத்த மகன் என்பது அனைவருக்கும் தெரியும். சிவ புராணத்தின் படி பார்வதி தேவியின் நண்பர்களான ஜெயா மற்றும் விஜயா ஆகியோரே விநாயகரை உருவாக்கும்படி பார்வதி தேவியிடம் கூறினார்கள். ஏனெனில் அனைத்து தேவர்களும் சிவபெருமானின் கூற்றுப்படியே நடந்தார்கள், எனவே பார்வதியின் கூற்றுப்படி நடக்க. சக்திவாய்ந்த ஒருவர் வேண்டுமென விநாயகரை உருவாக்கும்படி பார்வதியிடம் கூறினர். அவரும் அவர்கள் சொல்வதும் சரிதான் என விநாயகரை உருவாக்கியதாக புராணங்கள் கூறுகிறது. சிவ மகாபுராணத்தில் பிள்ளையாரின் உடல் பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கேமென கூறப்பட்டுள்ளது.
மகிமைகள்
விநாயகரே அனைத்திற்கும் முழுமுதற் கடவுளாவார். விநாயகர் படைக்கப்பட்டதன் நோக்கமே மனிதர்களையும், தேவர்களையும் பாதுகாப்பதுதான்.
தன் சிறிய வாகனமான எலியை வைத்துக்கொண்டு இவர் புரிந்த சாகசங்களை நாம் குழந்தை முதலே கேட்டுவருகிறோம். விநாயகர் வெற்றி மற்றும் வீரத்தின் அடையாளமாக கருதப்படுகிறார். இவரை வணங்கி தொடங்கும் அனைத்துமே வெற்றிதான் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறது. இந்து மதத்தின் பிரதான ஐந்து தெய்வங்களில் ஒருவராக விநாயகர் இருக்கிறார்.
யானை முகம்
விநாயகரின் தலை பற்றி பல கருத்துக்கள் நிலவி வருகின்றன.
சிவ புராணத்தில் ஈசன் தான் விநாயகரின் தலையை கொய்ததாக உள்ளது, அதே சமயம் பிரம்ம புராணத்தில் சனீஸ்வர பகவான் ஆசீர்வதிப்பதற்காக பிள்ளையாரின் முகத்தை நேரடியாக பார்த்த போது தலை கொய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதனால் தான் சனிபகவான் பிள்ளையாரை எப்போதும் பிடிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
சிவன் பெற்ற சாபம்
ஒருமுறை சூரிய தேவன் மீது கோபம் கொண்ட சிவபெருமான் தனது திரிசூலத்தால் சூரியனை தாக்கினார் . இதனால் மனமுடைந்த சூரிய தேவனின் தாய் தன் மகன் உடலை சிதைத்தது போல சிவபெருமான் அவருடைய
மகனின் உடலையும் சிதைக்க வேண்டிய சூழல் வரும் என சாபமிட்டார்.
அதுவே பின்னாளில் நடந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
பிரம்மதேவனின் பரிசு
தேவர்கள் அனைவரும் விநாயகருக்கு பரிசு அளித்துக் கொண்டிருக்கும்போது பிரம்ம தேவர் விநாயகருக்கு அளித்த பரிசு பிள்ளையார் உட்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பிரம்ம தேவர் தன் சக்தி மூலம் ரித்தி (செழிப்பின் கடவுள்) மற்றும் சித்தி (ஞானத்தின் கடவுள்) இருவரையும் உருவாக்கி பிள்ளையாருக்கு பரிசளித்ததாக புராணங்கள் கூறுகிறது.
திருமண வாழ்வு
பிள்ளையாரின் திருமண வாழ்க்கை என்பது இன்று வரை சர்ச்சைக்குள்ளானதாகவே உள்ளது. தென்னிந்தியாவில் பிள்ளையார் பிரம்மச்சாரி கடவுள் என அனைவராலும் நம்பப்படுகிறது, ஆனால் வட இந்தியாவில் பிள்ளையார் தனக்கு பரிசாக கிடைத்த ரித்தி மற்றும் சித்தியை திருமணம் செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.
இதற்கு புராணங்களில் எந்தவித சான்றும் இல்லையென்றாலும் பரவலாக பலராலும் நம்பப்படும் நம்பிக்கையாகும். இதைவிட அதிர்ச்சிகரமான செய்தி கணேசருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என நம்பப்படுவதுதான்.
மகன்கள்
உண்மைதான். கணேசருக்கு இரண்டு மனைவிகளும், இரண்டு மகன்களும் இருப்பதாக தென்னிந்தியா தவிர மற்ற இடங்களில் பலராலும் நம்பப்படுகிறது. ரித்தியின் மகன் ஷேத்ரா (சுபீட்சத்தின் கடவுள்) மற்றும் சித்தியின் மகன்
லபா (லாபத்தின் கடவுள்) எனவும் கூறப்படுகிறது. நம்புவதற்கு சற்று சிரமமாய் இருப்பினும் கோடிக்கணக்கான மக்கள் இதனை நம்பி கணேசரை அவர் துணைவியர்களுடன் வழிபட்டு கொண்டிருக்கின்றனர். இது பற்றிய குறிப்புகள் கணேச புராணத்தில் உள்ளது.
பரசுராமருடன் போர்
பரசுராமர் சிவபெருமானின் முதன்மையான பக்தன் ஆவார். ஒருமுறை அவர் கைலாயத்திற்கு
ஈசனை பார்க்க. வந்தபோது சிவபெருமான் தியானத்தில் இருந்ததால் பிள்ளையார் அவரை தடுத்தார். இதனால் கோபமுற்ற பரசுராமர் சிவன் தனக்கு அளித்த ஆயுதத்தின் மூலம் பிள்ளையாரை தாக்கினார்.
தன்னுடைய அப்பா வழங்கிய
ஆயுதத்தை செயலிழக்க வைக்க விரும்பாத பிள்ளையார் அந்த தாக்குதலை ஏற்றுக்கொண்டார். அதனால்தான் அவருடைய யானை முகத்தில் இருக்கும் ஒரு தந்தம் உடைந்திருக்கும்.
ஏன் ஒரு எலி அவரது வாகனம்?
விநாயகர் மற்றும் அவரது சகோதரர் கார்த்திகேயனுக்கும் இடையே ஒரு நாள் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் இருவரில் சிறந்தவர் யார் என்று தீர்மானிக்க, பிரபஞ்சத்தினை முதலில் யார் ஒரு சுற்று சுற்றிவருகிறார்கள் என்ற ஒரு பந்தயத்தை மேற்கொண்டார்கள். போட்டி ஆரம்பித்தவுடன், கார்த்திகேயர் தனது மயில் வாகனத்தின் மீது ஏறி சவாரி செய்தார். அது அவருக்கு மிக. எளிது.
விநாயகர், சவாரி செய்வதற்கு வாகனம் ஏதும் இல்லாததால், அவரது தந்தை சிவனிடம் சென்று தனக்கு ஒரு வாகனத்தை வழங்கவும், ஒரு நியாயமான. விளையாட்டை உருவாக்கவும் கேட்டார். உடனே சிவ பெருமான் ஒரு எலியை வாகனமாகக் கொடுத்தார். எலி மீதேறி இந்தப் பிரபஞ்சத்தை சுற்றி வந்து கார்த்திகேயனை வெற்றி கொள்வது கடினம் என்பதையறிந்த கணேசன் புத்திசாலித்தனமாக யோசித்தார் . பெற்றோரே ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பிரபஞ்சம் என்பதால் பெற்றோர்களை ஒரு சுற்று சுற்றி வந்தால் அது நிச்சயமாக பிரபஞ்சத்தை சுற்றி வந்ததாகவே அர்த்தம் என்பதை உணர்ந்து அவ்வாறே தன் எலி வாகனத்தோடு செய்து முடித்தார்.
தன் எலி வாகனத்தோடு அந்தப் போட்டியில் வெற்றியும் பெற்றார்.
மற்ற மதங்கள்
பிள்ளையார் இந்து மதத்திற்கு மட்டுமே சொந்தமானவர் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரமிது. பிள்ளையார் மஹாயான புத்த மதத்திலும் கடவுளாக கருதப்படுகிறார்,
அதுவும் புத்த மதத்தில் நடனம் ஆடும் பிள்ளையாரை வழிபடுகின்றனர்.
திபெத், சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் பிள்ளையார் தனித்துவமான பிராந்திய சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கிறார்.
இந்தோனேஷியாவில் பிள்ளையார் உருவம் அச்சிடப்பட்ட பணமே பயன்படுத்தப்படுகிறது.
புத்தர்களின் வழிப்பாட்டு தளங்களில் விநாயகரின் திருவுருவம் இடம்பெற்றிருக்கிறது.
ஜப்பானிலும் பிள்ளையாரின் உருவத்தை வழிபடுகின்றனர்…
ஆனால் அங்கு அவருக்கு பெயர் ‘கங்கிடென்’ (KANGITEN) என்பார்களாம்.
வலது தந்தம் உடைந்திருக்கும் காரணம்-
விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் குறித்து கேள்வி பட்டிருப்போம்.
கடும் கோபத்திற்கு முன் உதாரணம் பரசுராம். இவர் கடவுள் சிவ பெருமானின் நண்பனாக இருந்தார்.
ஒரு முறை ஆழ்ந்த தியானத்தில்
இருந்த. சிவ பெருமானை பார்க்க
வந்த பரசுராமனை காவலில்
இருந்த குட்டி பிள்ளையார் உள்ளே விடாமல் தடுத்தி நிறுத்தினார்.
சிவனின் தவ நிலையை அறியாத பரசுராமர், தன்னை உள்ளே அனுமதிக்கவில்லையே என கோபத்தில் கொந்தளித்து தன் கையில் இருந்த கோடாரியை தூக்கி எரிந்தார். அக்கோடாரி சிவபெருமான் அருளியது என்பதை கண்டுக்கொண்ட கணேஷன் அதனை எதிர்த்தும் செயல்படாமல்,
கீழே விட்டு வீணாக்காமலும் தன் தந்தத்தில் தாங்கிக் கொண்டாராம். இதனால் தான் அவரின் தந்தம் உடைந்ததுக்கான கதை.
துளசி தோன்றிய கதை-
கங்கை நதிக்கரையில் அமர்ந்திருந்த விநாயகர் ஆழ்ந்த தவத்தில் இருந்தபோது, துளசிதேவி என்பவர் அந்தப்பக்கம் சென்றிருக்கிறார். கணேசனின் அழகைக் கண்டு காதல் வயப்பட்ட துளசி தேவி தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கணேஷனிடம் வேண்டிருக்கிறாள். முடியவே முடியாது என விக்னேஷ்வரர் மறுத்து விடவே, ‘நீ விரைவில் திருமண பந்தத்தில் விழுவாய்’ என சபித்தாளாம் துளசி தேவி.
எனக்கே சாபம் விடுகிறாயா…
என கோபத்தில் கொதித்த கணபதி நீ தாவரமாக கடவாய்’ என்று சாபம் விட்டாராம். இதனால் வருந்திய
துளசி தேவி தவறை உணர்ந்து மன்னிப்பு கோர, சாதாரண செடியாக அல்லாமல் நீ புனிதத்தின் ரூபமாக திகழ்வாய் என்று கூறி அருளினாராம்.
மகாபாரத்தத்தினை எழுதியவர் கணேஷ பெருமாள்-
பாண்டவர்கள், கௌரவர்களின் மூதாதையர் பராசர மகரிஷி.
இவரது மகன் வியாசர். மகாபாரத யுத்தத்தை நூலாக எழுத எண்ணிய பராசர மகரிஷி, அதற்கு தகுந்த படைப்பாற்றல் பெற்ற ஒருவரை கொண்டுவருமாறு வியாசரிடம் கூறினாராம். அப்போது வியாசர் பிரம்மனிடம் சரியான. ஆளை கண்டுபிடிக்க உதவி வேண்டி காத்திருக்க, அவர் முன் பிரம்மன் தோன்றி கணேஷ பெருமாளை நாடி தவமிருந்தால் தீர்வு கிடைக்கும் என்றாராம்.
அதன்படி வியாசர் தவத்திற்கு கிடைத்த பலனாக கணபதியே எழுதித்தருவதாக முன்வந்தாராம். தன் உடைந்த தந்தத்தை எழுத்தாணியாக மாற்றினாராம். அவ்விதம், மகாபாரதம் வியாசர் எடுத்துக்கூற விக்னேஷ்வரர் கையால் எழுத்து வடிவம் பெற்றதாம்.
மிண்டும் அடுத்த பதிவில சந்திப்போம். ....
கருத்துகள்