படிப்பை பாதியில் விட்ட பிரபல கோடீஸ்வரர்கள்

படிப்பை   பாதியில்   விட்ட     பிரபல    கோடீஸ்வரர்கள்.




Steve  Jobs,   Bill Gates     மற்றும்   Mark Zuckerberg      இது   போன்ற    உலகப் பிரபல்யம்     பெற்ற   பல      கோடீஸ்வரர்கள் தங்கள்     படிப்பைப்      பாதியில் விட்டவர்களே     என்பதை     நீங்கள் அறிவீர்களா?






இவர்கள்   படிப்பை   பாதியில்   விட்ட 
பின்னர்   தங்கள்   கனவு    நிறுவனங்களை ஆரம்பித்தார்கள்.              அவற்றில் வெற்றியும்      கண்டனர்.          பட்டப்படிப்பு ஒன்றை      முடித்தால்       மட்டுமே    வாழ்வில் வெற்றியடையமுடியும்     என்பது     நமது சமூகத்தின்       அசைக்கமுடியாத    நம்பிக்கை        வெற்றிபெற     பட்டப்படிப்பு தேவையில்லை     முயற்சி     ஒன்றே 
போதும்      என்பதற்கு     இந்த கோடீஸ்வரர்களைவிட    சிறந்த 
 உதாரணம்        இருக்கமுடியாது.









மேலும்     PayPal     நிறுவனத்தின்    இணை நிறுவனரும்    பிரபல      முதலீட்டாளருமான Peter Thiel,      திறமை      வாய்ந்த மாணவர்கள்     தங்கள்      படிப்பைப்  பாதியில்     விட்டுவிட்டு    தொழில் முயற்சியை      ஆரம்பிப்பதாக       இருந்தால் அவர்களிற்கு      ஒரு     லடசம்     அமெரிக்க டாலர்கள்      பரிசாக      வழங்குகின்றார். இதுதான்      கோடீஸ்வரர்களிற்கு பட்டப்படிப்பு      மீதுள்ள       நம்பிக்கை.   
சரி    இவ்வாறு     படிப்பை      பாதியில் 
விட்டு    உலக      பிரபல்யம்     பெற்ற கோடீஸ்வரர்கள்      பட்டியலை   
நாம்      இங்கு       பார்க்கலாம்.






1.  Michael Dell






Dell    நிறுவனத்தை      தெரியாதவர்கள்    யாரும்     இருக்க.      முடியாது.   
கணனிகள்     வடிவமைப்பில்     இன்றும் அசைக்க     முடியாத     நிறுவனம்.   
இந்த    நிறுவனத்தை     ஆரம்பித்தவரே  இந்த    Michael Dell.        இவர்      Texas பல்கலைக்கழகத்தில்     சேர்ந்து    ஒரே வருடத்தில்,         அதனைவிட்டு வெளியேறிவிட்டார்.        அப்போது   
இவரின்      வயது     19.      அதன்    பின்னரே Dell.     நிறுவனத்தை        ஆரம்பித்தார்.




சொத்து   மதிப்பு :-    27.5   பில்லியன் அமெரிக்க     டாலர்கள்.  (2018)






2.  Steve  Jobs






Steve Jobs,     பிரபல    Apple     நிறுவனத்தை ஆரம்பித்தவர்.       படிப்பைத்     தொடர போதிய     பணம்     இல்லாததால்   
தனது   19   ஆவது    வயதில்     படிப்பைக் கைவிட்டார்.        அதன்    பின்பே     தனது நண்பனுடன்     சேர்ந்து     உலகப்    புகழ்பெற்ற    Apple    நிறுவனத்தை ஆரம்பித்தார்.
Apple    நிறுவனத்தின்      இன்றைய சொத்துமதிப்பு     ஒரு    டிரில்லியன் அமெரிக்க     டாலர்களை    விட அதிகரித்துவிட்டது.         இதுவே     உலகில் அதிக      பெறுமதியுள்ள       நிறுவனமாக 2018    இல்    பார்க்கப்படுகின்றது.





சொத்து   மதிப்பு :-   10.2    பில்லியன் அமெரிக்க     டாலர்கள்.







3.  Bill Gates





Microsoft     நிறுவனத்தை        ஆரம்பித்தவர். Harvard      பல்கலைக்கழகத்தில்     
சேர்ந்து      2   வருடத்தில்    படிப்பைக் கைவிட்டவர்.       "Harvard's   most  successful dropout"    என      பல்கலைக்கழக நிர்வாகிகளால்      புகழப்பட்டவர். 
இன்று      உலகின்     இரண்டாவது செல்வந்தர்.





சொத்து   மதிப்பு :-     90.2    பில்லியன் அமெரிக்க     டாலர்கள்.







4.  Mark Zuckerberg






Facebook     நிறுவனத்தை      ஆரம்பித்தவர் . இவர்     Harvard      பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போதே     Facebook இணையதளத்தை        ஆரம்பித்துவிட்டார். Facebook     இனை       நிர்வாகிப்பதற்கு போதிய     நேரம்      இல்லாமையினால்  தனது     படிப்பை      பாதியில்     விட்டார். படிப்பை     விடவேண்டும்     என்ற    முடிவை இவர்    வெறும்     5  நிமிட    சிந்தனையிலேயே      எடுத்துவிட்டாராம்.



சொத்து   மதிப்பு :-   67.1   பில்லியன் அமெரிக்க      டாலர்கள்.






5.  Jan Koum






WhatsApp      நிறுவனத்தை     ஆரம்பித்தவர். பட்டம்     பெறுவதற்கு     ஒரு      சில  மாதங்கள்     முன்      படிப்பைக்   
கைவிட்டவர்.          முதலில்     Yahoo நிறுவனத்தில்      பணிபுரிந்தார்.       பின்னர் தனது       நண்பனுடன்      சேர்ந்து     WhatsApp நிறுவனத்தை       ஆரம்பித்தார்.   
2014   இல்     WhatsApp    இனை   
Facebook    19  பில்லியன்     அமெரிக்க டாலர்கள்     பெறுமதி     கொடுத்து வாங்கியது.   




சொத்து    மதிப்பு :-    9.6.    பில்லியன் அமெரிக்க      டாலர்கள்.





6.   Travis Kalanick.







Uber    நிறுவனத்தை     ஆரம்பித்தவர். University  of  California,   Los   Angeles 
இல்   கல்வி     கற்றுக்கொண்டிருந்தபோது, Scour   என்ற    தனது     முதலாவது நிறுவனத்தை      ஆரம்பிப்பதற்காக படிப்பைக்     கைவிட்டார்.     
அதன்     பின்னரே     Uber      நிறுவனத்தை ஆரம்பித்தார். 




சொத்து    மதிப்பு :-    5.9   பில்லியன் அமெரிக்க      டாலர்கள்.





7.    Evan Williams






Twitter    நிறுவனத்தை      ஆரம்பித்தவர். தனது    படிப்பு     முடிவதற்கு     ஒன்றரை வருடங்கள்     முன்பு     அதனைக் 
கைவிட்டார்.         பின்னர்   Google,   HP போன்ற     நிறுவனங்களில்    பணிபுரிந்தார். அதன்பின்     தனது      நண்பர்களுடன் சேர்ந்து     Twitter      நிறுவனத்தை ஆரம்பித்தார்.




சொத்து    மதிப்பு :-   1.8.   பில்லியன் அமெரிக்க    டாலர்கள்.






மிண்டும்    அடுத்த     பதிவில    சந்திப்போம் ...




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்