உங்கள் மனம் விரும்பாத வேலையைச் செய்கின்றீர்கள் என்பதற்கு 8 அறிகுறிகள்
உங்கள் மனம் விரும்பாத வேலையைச் செய்கின்றீர்கள் என்பதற்கு 8 அறிகுறிகள்
நாம் அனைவரும் நமது வாழ்வின் மிகப்பெரும் பகுதியை வேலை செய்வதிலேயே செலவிடுகின்றோம்.
நாம் எந்த வேலை செய்தபோதும் நமது பிரதான நோக்கம் பணம் சம்பாதித்தால் மட்டுமே.
வெறும் பணத்தினை வைத்துக்கொண்டு வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ முடியுமா எனக்கேட்டால் கண்டிப்பாக இல்லை.
நாம் செய்யும் வேலையில் நமக்கு திருப்தி இருக்க வேண்டும் அப்போதே வாழ்வில் நிம்மதி கிடக்கும்.
நீங்கள் உங்கள் மனதிற்குப் பிடிக்காத. வேலையைச் செய்துகொண்டிருக்கின்றீர்கள் என்பதற்கு 8 அறிகுறிகளைப் பார்க்கலாம்.
1. தொடர்ந்து சலிப்புத்தன்மை தோன்றும்.
நீங்கள் வேலை செய்யும்போது அல்லது வேலையைப்பற்றி எண்ணும்போது கூட உங்கள் மனம் சலிப்படைகின்றதா? அப்படியானால் அந்த வேலை உங்கள் மனதிற்குப் பிடிக்கவில்லை என்று பொருள்.
2. உங்கள் திறமைகள்
அங்கீகரிக்கப்படமாட்டாது.
உங்கள் வேலையில் உங்களிடமுள்ள திறமைகளுக்கு மரியாதை கிடைக்காது. மாறாக உங்களது குறைகளையே அனைவரும் சுட்டிக்காட்டிக்கொண்டிருப்பார்கள்.
3. நீங்கள் செய்யும் வேலைகளால் உங்கள் இலக்கை அடையமுடியாது.
உங்கள் எதிர்காலம் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என உங்களிடம்
ஒரு என்ணம் இருக்கும்.
ஆனால் உங்கள் மேனேஜர் தரும் வேலைகளைச் செய்வதால் உங்கள் எதிர்காலம் அவ்வாறு மாறப்போவதில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
4. உடலளவிலும், மனதளவிலும் மிகவும் சோர்வாக உணர்வீர்கள். வேலையில் ஆர்வம் இல்லாமையே சோர்வை உருவாக்குகின்றது. இந்த சோர்வினால் உங்களால் எந்த வேலையிலும் கவனம் செலுத்தமுடியாமல் போய்விடும்.
5. உங்களால் என்றும் வெற்றிபெறமுடியாது என்ற எண்ணம் தோன்றும்.
நீங்கள் செய்யும் வேலை உங்களிற்குள் தன்னம்பிக்கையை வளர்க்கவேண்டும். மாறாக அது உங்களினுள் தாழ்வுமனப்பாண்மையை வளர்க்குமானால், அந்த வேலை உங்களிற்குப் பொருத்தமில்லாதது,
அதை உங்கள் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பொருள்.
6. மிக அதிகமான வேலைப்பளுவினை உணர்வீர்கள்.
உங்களுடன் வேலைசெய்யும் சக நண்பர்களைவிட உங்களிற்கு மிக அதிகமான வேலைப்பளு, மன அழுத்தம் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அந்த வேலை உங்களிற்குப் பொருத்தமில்லாதது என அர்த்தம்.
7. உங்களால் வேலையில் மற்றவர்களுடன் சிரித்து மகிழ்ச்சியாகப் பழக முடியாது.
இவ்வாறு உங்களிற்கு இருக்குமானால், இந்த வேலையை விட்டுவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். ஒரு இடத்தில் உங்களால் சிரிக்கக்கூட முடியவில்லை எனில் அங்கு வாழ்நாள் முழுக்க இருந்து என்ன பலன்??
8. மகிழ்ச்சியைவிட மன அழுத்தத்தையே அதிகம் உணர்வீர்கள்.
உங்கள் வேலையில் கிடைக்கும் பணம், புகழ் என்பவற்றைவிட அதன் மூலம் வரும் மன அழுத்தமே உங்களுக்கு பெரிதாகத் தோன்றும்.
மேலேயுள்ள 8 அறிகுறிகளும் நீங்கள் மனதிற்குப் பிடிக்காத வேலையைச் செய்துகொண்டிருக்கின்றீர்கள் என்பதைக் காட்டுகின்றன. மேலுள்ள அறிகுறிகளில் உங்களிற்குப் பொருந்துகின்றவை எத்தனை என்பதைப் பாருங்கள். உண்மையிலேயே நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்குத் திருப்தியில்லை எனத் தோன்றினால், அந்த வேலையை விட்டுவிடுவது நல்லது. ஆனால் அதற்கு முன், உங்கள் வாழ்வாதாரத்திற்குப் போதுமான வருமானம் பெறக்கூடிய இன்னொரு வழியை ஏற்படுத்திவிட்டு வேலையை விடுவதைப் பற்றி சிந்தியுங்கள்.
அடுத்த பதிவில் சந்திப்போம் .......
கருத்துகள்