நோலனின் த பிரஸ்டீஜ் 02

                                             த பிரஸ்டீஜ் 02




இந்த   பதிவில      தி   பிரஸ்டீஜ்  
படத்தின்       இரண்டாவது .
கதையை      பார்ப்போம்.






இந்த       படத்தோட        கதையை  பார்க்கிறாதுக்கு        முன்னாடி 
ஒரு      விஷயத்தை       சொல்லலாம்
என்று         நினைக்கிறேன்.   
எனக்கு     ரொம்ப     பிடிச்ச      படங்களில் 
இந்த      படமும்      ஒன்று      ஏன்னா 
இந்த     படத்தோட       திரைக்கதை  அவ்வளவு       சூப்பரா       எமுதி     
இருப்பாரு    நோலன்.









நோலனுடைய     படங்களில் 
இந்த   படம்     தான்    பெஸ்ட்     என்று    சொல்ல    முடியாது .
ஏன்னா     நோலனுடைய     மெமென்டோ  படம்    தான்     பெஸ்ட்      படம் 
என்று       நினைத்திருந்தேன்.
இதை     விட     ஒரு     படம்     நோலனால்  கொடுக்க      முடியுமா.








என்ற     சந்தேகம்      இருந்திச்சு. 
ஆனா    தி    பிரஸ்டீஜ்     படம்     பார்த்த    பிறகு    எது     பெஸ்ட்     படம்      என்று      என்னால  சொல்ல     முடியலை.
அவ்வளவு     சூப்பரா     இருந்திச்சு.
நான்    அடிக்கடி     பார்க்கிற    படங்களில்        இதுவும்     மெமென்டோவும்    ஒன்று 
இந்த     இரண்டையும்      விட   
இன்னொரு     படமும்  இருக்கு   
அதை     பற்றி      எமுதும்     போது  சொல்லுறன்.







மெமென்டோ      படம்     மாதிரி      இந்த
படமும்      என்னுடைய    குரு 
நான்  லீனியர்    ஸ்டையிலில்     எமுதி    இருக்கிறார்.   
உங்களுக்கு    புரியிர    மாதிரி     இந்த    படத்தை    லீனியரா  எமுதி   இருக்கேன் .  படிச்சு   பார்த்திட்டு   படத்தை பார்த்திங்கன்னா      புரியும். 
பார்த்தவங்க     புரியலை      என்றால் 
இத    படிச்சிட்டு     மறுபடியும்     பாருங்க  உங்களுக்கு    ஒரு     புது    அனுபவத்தை      கொடுக்கும்       என்று      உறுதிய    சொல்லுறேன்.






சரி     இனி     கதைக்கு     வருவோம்...








ஒரு     படைப்பு,       ரசிகனும்     பங்கு பெறுவதற்கான       வாய்ப்பைக் கொடுக்கும்போது       இலக்கியம்
ஆகிறது. 
மோனலிசா      ஓவியம்,       பார்க்கும் ஒவ்வொருவருக்கும்       ஒவ்வொருவித அனுபவத்தைக்      கொடுப்பது      போல.
நோலனும்     பல      விஷயங்களைத்
தன்      படங்களில்       வாசகனின்
அனுமானத்திற்கே       விட்டுவிடுகிறார்.





கதை 



போர்டானுடைய  TRANSPOTED  MAN ட்ரிக்கை  பார்த்த   பிறகு    ஆஞ்ஜியாருக்கு பைத்தியமே   பிடிச்ச்சிடிச்சு   என்று    சொல்லலாம்.
ஏன்னா  அந்த  ட்ரிக்க  எப்படியாச்சும்   அவன்  பண்ணனும்    என்ற    வெறி    வந்திடுச்சு.      கட்டர்   ஒரு    அரங்கத்தை  புக்  செய்து ஷோவுக்கான    வேலையை
ஆரம்பிக்கிறாரு.







ஆஞ்ஜியர்   அந்த   TRANSPOTED MAN ட்ரிக்கை   தன்னோட    ஷோவில பண்ணனும்    என்று    சொல்லுறான்.  அதுக்காக    போர்டானோட   ஷோவை பார்க்க    கட்டரும்    ஒலிவியாவும்    போறாங்க.







அந்த   ட்ரிக்கை    எப்படி    போர்டன் பண்ணினான்.      என்று   ஆஞ்ஜியர்    கட்டரை   கேட்க.   
போர்டன்   அநேகமா   அவன   மாதிரி இன்னொரு    ஆளை    தயார்   செய்து
தான்    அந்த     ட்ரிக்கை    பண்ணி இருக்கணும்.    என்று   கட்டர்   சொல்லுறாரு. ஆனா   அது   ரெண்டு   போர்டன்    இல்லை ஒரே    போர்டன்    தான்   என்று   ஒலிவியா  சொல்லுறாள்.










எப்படி   அவ்வளவு    கண்டிப்பா   சொல்லுற  என்று    கேட்கும்     போது.      ட்ரிக்ஸ்          செய்தப்போ   ஒரு    கதவுக்குள்ளோ        போன போர்டானுக்கும்   மறு   கதவு  வழியே    வந்த   போர்டானுக்கும்   கைல   அடிபட்ட        விரல்கள்   இருந்திச்சு  என்று   சொல்லுறாள் .









ஆஞ்ஜியர்   அந்த   ட்ரிக்கை   போர்டன்          மாதிரி   மக்கள்   கிட்ட   பண்ணனும்   என்று    சொல்லுறான் .     ஆனா   கட்டர்   போர்டன்      அந்த   ட்ரிக்கை   எப்படி  பண்ணினான் .  என்று   தெரியலை   அதனால  இப்போதைக்கு   அந்த   ட்ரிக்கை      ஆஞ்ஜியர்   பண்ணனும்  என்றால்      ஆஞ்ஜியர்  மாதிரி  ஒருத்தனை  கூட              வைச்சிகிட்டாதான்   பண்ண   முடியும்            என்று    சொல்லுறாரு.









அதனால    ஆஞ்ஜியர்   போல    இன்னொரு    ஆளை    கட்டரும்    ஒலிவியாவும்    கண்டு      பிடிக்கிறாங்க.








இதே   நேரத்தில  போர்டானும்   தன்னோட      ஷோவின்   முலமாக     கொஞ்சம்            கொஞ்சமாக    வளர்த்துக்கிட்டு    வாறன்      சொத்தமாக    ஒரு    வீட்டை    தன்னோட          குடும்பத்துக்கு   கொடுக்கிற    அளவுக்கு        அவனுடைய  மாஜிக்   ஷோவ்
வளர்த்திருக்கு.




Root





ஆஞ்ஜியர்   தன்னை   மாதிரியே   இருக்கிற    Root.    என்கிற   குடிகாரனை     கண்டு            பிடிக்கிறாங்க .
Root க்கும்   ஆஞ்ஜியாருக்கும்   உருவம்  தான் ஒற்றுமையே   தவிர   கொஞ்சம்   கூட          குணம்    ஒத்துப்போகளை   இதுக்கு  அப்புறம் சில   நாட்கள்   போகுது  .        ஆஞ்ஜியர்          மாதிரியே   Root டை    தயார்   செய்யிறாங்க ,,









ஆஞ்ஜியாருடைய.    ஷோவுக்கு கடைசிலதான்   TRANSPOTED MAN   ட்ரிக்ஸ்    வரப்போகுது.    அந்த    ட்ரிக்குக்கான  பயிற்சிகளை   பண்ண   ஆரம்பிக்கிறாங்க.
ட்ரிகின்  படி   முதல்ல  மேடையில்    நீண்ட.      இடைவெளி    விட்டு   ரெண்டு   கதவு                இருக்கும்.
ஒரு    பக்க    கதவில்  இருந்து   மஜிசியன்        தன்னுடைய   தொப்பியை   மறு  கதவுக்கு      தூக்கி    எறிந்துட்டு     கதவை    திறந்து உள்ளே    ஓடிப்போயிடுவாரு.
அந்த   தொப்பி    மறு   கதவுக்கு வருகிறதுக்குள்ளே   அதே  மஜீசியன்     மறு  கதவை    திறந்து   தொப்பியை    வந்து          பிடிப்பாரு .   
இது   தான்    ட்ரிக்    ஆனா    கட்டர்  ஆஞ்ஜியாருக்கு   இதை    எப்படி              பண்ணனும்   என்று       சொல்லுறாரு.









உண்மையான   ஆஞ்ஜியர்    முதல்ல        தொப்பியை    தூக்கி     எறித்துட்டு.          கதவை   திறக்க   அங்கே   ஒரு     வழி      இருக்கும்.       ஆஞ்ஜியர்     குதிக்க ஏற்கனவே    மேடைக்கு   கீழே    இருக்கும்      Root   மறு    கதவு    பக்கமா    இருக்கிற ரகசிய    வழிக்கு    உடனே   ஒரு     லிப்ட்          மூலமாக    மேலே     போயிடுவான்.







மேலே   மேடைக்கு   மறு   கதவு     வந்த      உடனே   Root  அந்த   தொப்பியை பிடிக்கணும்.     
இது   தான்   இந்த.    ட்ரிக்கோட   திட்டம்            என்று    கட்டர்     சொல்லுறாரு.






பயங்கர    பயிற்சிக்கு    பிறகு    ஆஞ்ஜியாருடைய     ஷோவில. 
TRANSPOTED  MAN    ட்ரிக்கை    செய்யிறாங்க.      தொப்பியை   தூக்கி ஏறிச்சிட்டு   ஆஞ்ஜியர்   மேடைக்கு
கீழே   போக    மேடைக்கு   கீழே    இருக்கிற      Root   இன்னொரு   ரகசிய    வழி            மூலமா    மேடைக்கு   வந்து   அதே            தொப்பியை    பிடிக்க.    இப்படி          வெற்றிகரமாக   அந்த   ட்ரிக்கை    பண்ணி    மக்களோட    கை   தட்டலை   வாங்கிறாங்க. ஆனா   எல்லா    கை  தட்டலும்    மேடைக்கு    மேலே    இருக்கிற   Root க்கு    போது.







எனக்கு     இல்லை    என்று    ஆஞ்ஜியர்          வருத்தப்படுறான்.     அடுத்த     தடவை        ட்ரிக்    பண்ணும் போது     மேடைக்கு          மேலே    நான்    வாறேன்      Root              மேடைக்கு   கீழே    போகட்டும்    என்று              ஆஞ்ஜியர்     சொல்லுறான்.
ஆனா   Root    குடிகாரன்    என்கிறதால        அவனோட    உடல்      பாவனைகளை        மக்கள்    ஆரம்பத்திலையே   பார்த்தால்      சுலபமா     கண்டு     பிடிச்சுடுவாங்க.










அது   மட்டும்    இல்லாமல்    ஆஞ்ஜியர்        போல    Root க்கு    மஜிசியன்   மாதிரி      ட்ரிக்கை   அறிமுகம்  கொடுக்க   தெரியாது.
கட்டர்   இவ்வளவு     சொல்லுறதால
ஆஞ்ஜியர்   ட்ரிக்கை    இப்படியே பண்ணலாம்    என்று   வேறு   வழியில்லாமல் ஒத்துக்கிறான்     ஆனால்      ஆஞ்ஜியாரால போர்டானேடா   ட்ரிக்கை     தெரிச்சுக்காமல்    இருக்க   முடியலை.       போர்டானுடைய          ட்ரிக்   என்னன்னு       தெறிச்சுகிட்ட            ஆஞ்ஜியாருக்கு    ஒரு       டுப்ளிக்கட்          வைக்கிற   வேலையே      இருக்காது        என்று     நினைத்து      போர்டானுடைய        ட்ரிக்கை    திருட    ஒரு     யோசனை செய்யிறான் .










போர்டானுடைய   ட்ரிக்கை    திருடுறதுக்காக ஒலிவியாவை    போர்டன்   கிட்ட    வேலை      செய்ய    சொல்லுறான்        ஆஞ்ஜியர்.
ஆனா   ஒலிவியாவுக்கு   விருப்பமில்லை          என்றாலும்   ஆஞ்ஜியர்     மேலே          இருக்கிற   காதலுக்காக  போர்டன்   கிட்ட      வந்து   வேலை    கேட்கிறாள்.     எப்படியும்        போர்டன்    தன்னை     நம்பமாட்டான்        என்கிறதால   போர்டன்கிட்ட   ஒலிவியா            உன்னோட   ட்ரிக்கை       திருடுறதுக்காக          தான்  ஆஞ்ஜியர்     என்னை    உங்கிட்ட          வேலைக்கு     அனுப்பியதாக    சொல்லுறாள் .
அது  மட்டும்    இல்லாமல்   ஆஞ்ஜியர்   கிட்ட    இருக்கிற.   ட்ரிக்கல  மாஜிக்    ஷோவில            வளர   முடியாது    அதனால்    தான்            இனி  மேல்   உன்  கூட    வேலை          செய்கிறேன்    என்று     சொன்னதால.












போர்டன்    ஒலிவியாவை   நம்பி   வேலைக்கு வைக்கிறான்.     மக்கள்    மத்தியில்
த  கிரேட்   டான்டன்   ஷோவ்    என்று          ஆஞ்ஜியர்    பயங்கரமா    பிரபலம்      ஆகுறான் .   ஆஞ்ஜியர்   ஷோவ்                  எல்லாம்    நல்ல     போய்கொண்டிருக்கிற சமயத்தில    போர்டெனும்   ஆஞ்ஜியர்    ஷோவ்    நடக்கிற    இடத்துக்கு பக்கத்திலையே   ஷோவ்      பண்ணுறான்.      அதனால்   பிரச்சனை    என்னென்றால்.            Root    எனக்கு    அதிகமா   பணம்            தந்தால்   தான்     உங்க    ஷோவில          நடிப்பேன்   என்று      மிரட்டுகிறான்.              ஆஞ்ஜியருக்கு  வேறு   வழியில்லை            என்று   அவன்     கேட்கிற   பணத்தை          கொடுத்து    கூடவே    அவனை          வைச்சிருக்கிறான்.      ஆனா   Root
வாங்கிற   பணத்தை   எல்லாம்    குடிச்சே        அழிக்கிறான்.       










அப்படி   Root   ஒரு   பார்ல  குடிசிச்சுகிட்டு      இருக்கும்   போது    தான்    அவனை        போர்டன்   வந்து   சந்திக்கிறான்.
போர்டன்    Root டை    வேணும்    என்று    ஆஞ்ஜியர்  பற்றி  தப்பா  சொல்லி   அவன்        மனசை   குழப்புறான் .       உன்னாலதான்      ஆஞ்ஜியாருக்கு  புகழ்   வருது.     அதனால்
நீ  எப்பவும்   ஆஞ்ஜியாரை   உன்      கட்டுப்பாட்டில்   வை   என்று    சொல்லுறான்.










அத   கேட்டு  Root டும்  ஷோவ்     நடக்கும்          போது   ஆஞ்ஜியர்   பேச்சை   கேட்காம   சில சொதப்பலை     பண்ணுறான்.   
இப்படியே   நாட்கள்  போக  ஒரு   நாள்  ஆஞ்ஜியர்   ஷோவில     மிகப்பெரிய            சொதப்பல்   நடக்குது.    ஆஞ்ஜியர்          வழக்கம்  போல   ட்ரிக்   பண்ணுறதுக்கு            தொப்பியை   தூக்கி    போட்டுட்டு            மேடைக்கு    கீழே    குதிக்க .      அங்கெ          அவன்    குதிக்கிறதுக்கு    என்று     வைத்த மெத்தை   இல்லாமல்  போக.   
ஆஞ்ஜியர்   கால்   உடைத்து    போகுது            அது    மட்டும்   இல்லாமல்     மறு            கதவுக்கு   போக   இருந்த    லிப்டிலா          போர்டன்   இருக்கான்.      அவ்வளவுதான்          போர்டன்   தான்    இந்த    ஷோ
நாசமாகிறதுக்கு    காரணம்   என்று      ஆஞ்ஜியாருக்கு    தெறிச்சு    போச்சு.
போர்டன்  மேடைக்கு   வந்து   Root ஆஞ்ஜியாருடைய   ஒரு  போலி அப்டிங்கிறதை   மக்கள்     முன்னாடி              காட்டிக்கொடுக்கிறான்.
அது   மட்டும்   இல்லாமல்  அவன்    ஷோவ்
பத்தி  மக்களுக்கு   அறிமுகம்     பண்ணிட்டு  அங்கிருந்து      போயிடுறான் ..










ஆஞ்ஜியாருடைய   ஷோவ்     நாசமாகிடிச்சு    இதுக்கு   காரணம்       ஒலிவியாதான் .              அவா  தான்  ஆஞ்ஜியர்   ட்ரிக்கை      போடென்கிட்ட    சொல்லி    இருப்பாள்      அப்படின்னு    ஆஞ்ஜியர்    ஒலிவியா    மேல கோவப்படுறான்.            ஆனா   ஒலிவியா
ஆஞ்ஜியாருக்காக   தான்    போடென்கிட்ட    வேலை     செய்யிறன்  என்று  சொல்லுறாள் . அப்புறம்   ஏன்      போர்டானுடைய          ட்ரிக்கை   இன்னும்   கண்டு  பிடிக்கலை            என்று    ஆஞ்ஜியர்    கேட்கிறான்,












ஒலிவியா   நான்   கண்டுபிடிச்சிட்டன்  கட்டர்    சொன்ன  மாதிரி   அவன்    அவனை          மாதிரி    இன்னொரு   ஆளை  வைச்சுத்தான் அந்த   ட்ரிக்கை   பண்ணுறான்   என்று சொல்லுறாள் .








ஆனா    ஆஞ்ஜியர்     அதை     நம்பல . ஷோவ்க்கு    பயன்படுத்துற    உடைகள் கண்ணாடி    விக்   எல்லாமே    இரண்டு            இரண்டா    போர்டன்     மறைவா     பதுக்கி        வைக்கிறதை    நான்    பார்த்தேன்.
அதை    வைச்சு    பார்க்கும்      போது            போர்டன்    போலியா    வேற    ஒரு   ஆளை வைச்சு   தான்   இந்த   ட்ரிக்கை பண்ணுறான்     என்று    சொல்லுறாள். ஆனா    அந்த     ரெட்டை    பொருட்கள் எல்லாமே     போர்டன்.      ஒலிவியாவை திசை    திருப்ப   வைச்ச   விஷயங்கள்              உண்மையான     ட்ரிக்கை     அவன்          ரொம்ப     ரகசியமாக    வைச்சிருக்கான்    என்று    ஆஞ்ஜியர்     சொல்லுறான்.












ஒலிவியா    தன்னை   இன்னும்    ஆஞ்ஜியர்    சந்தேகப்படுறான்.      என்கிறதால    அவனை நம்ப   வைக்க      போர்டேனுடைய    டைரியை  ஆஞ்ஜியர்கிட்ட       கொடுக்கிறாள் ..          அந்த    டைரிக்குள்ள   போர்டன்    எல்லா ட்ரிக்கையும்   எழுதி      வைச்சிருக்கிறான்      என்று    தெரிது    ஆனா   அதில   உள்ள    வார்த்தைகள்     புரியாமல்      இருக்கு.          ஏன்னா    அதெல்லாம்    போர்டன்     சைபர் என்று    சொல்லப்படுற    ரகசிய    எழுத்தில  எழுதி   வைச்சிருக்கான்.     அந்த    சைபர்          வார்த்தைகளை     தெரிச்சுக்கணும்        என்றால்   அதுக்கு     சரியான.
கீ வேர்ட்ஸ்    வேணும்    அப்படின்னு                ஆஞ்ஜியர்     சொல்லுறான்..



Fallon






அந்த    டைரியை    சீக்கிரம்    ஆராய்த்திட்டடு  இன்றைக்குள்ள     போடெனுக்கு                கொடுக்கணும்    என்று    ஒலிவியா          சொல்லுறாள்.
ஆனா   ஆஞ்ஜியர்    அந்த    டைரியை                ஆராய்ந்து     முடிக்கிற   வரை     திரும்பி            தர   மாட்டேன்    என்று     சொல்லுறான் ..










ஆஞ்ஜியர்    அந்த    ட்ரிக்    மேல வைச்சிருக்கிற.       வெறித்தனத்தை
கண்டு     ஒலிவியா     பயப்படுறாள் . கடைசியா    ஆஞ்ஜியர்    கிட்ட    தான் போர்டேணை   காதலிக்கிறதாக  சொல்லுற..  ஆனா   ஆஞ்ஜியாருக்கு    அதை    பத்தி கவலை    இல்லை   கீ வேர்ட்ஸ்    இல்லாமல்    போர்டேனுடைய   டைரி    ரகசியத்தை            தெரிச்சுக்க     முடியாது.       அதனால.          ஆஞ்ஜியர்   போர்டேனுடைய
வாயில     இருந்து     தான்    அந்த
கீ வேர்ட்ஸ்   தெரிச்சுக்கணும்.
அதுக்காக    போர்டேனுடைய   உதவியாளன்  Fallon  கடத்துறான்.
அதுக்கு     கட்டரும்       உடன்தை .
Fallon  னை     கேட்டு    ஆஞ்ஜியர்    கிட்ட       வாரன்      போர்டன்.     










அதுக்கு    ஆஞ்ஜியர்     போர்டனுடைய      TRANSPOTED  MAN   ட்ரிக்கை    சொல்ல    சொல்லுறான்.
ஆனா    போர்டன்   அவனுடைய    டைரிக்கு      கீ   வேர்ட்ஸ்    என்னங்கிறதை    மட்டும்              ஆஞ்ஜியாருக்கு    எழுதி    கொடுக்கிறான் .      எனக்கு    கீ வேர்ட்ஸ்     முக்கியமில்லை            அந்த   ட்ரிக்கோட   முழு       விளக்கத்தை            சொல்லு    அப்படின்னு      சொல்லுறான் ..
போர்டன்    அவன்    எழுதி    கொடுத்த.
கீ   வேர்ட்ஸ்    தான்   ட்ரிக்கோட   விளக்கம்      என்று    சொல்லுறான் .







ஆஞ்ஜியர்    போர்டன்   எழுதி      கொடுத்த      கீ   வேர்ட்ஸ்   என்ன     என்று     பார்க்கிறான்  அதில   டெஸ்லா    என்று   எழுதி   இருக்கு......   







கதைக்கு     போறதுக்கு    முன்னாடி      டெஸ்லா    பற்றி   கொச்சம்     பார்ப்போம் .        பார்த்திட்டு    கதைக்கு       வருவேம் ..              நிகோலா   டெஸ்லா     என்கிறவரு 
ஒரு   அமெரிக்கா      கண்டுபிடிப்பாளர்            இன்னைக்கு       உலகத்தில     பல        திருப்பங்களை     கொண்டு                வந்திருக்கிறார் .   
ஆல்டனட்     கரண்டை   கண்டு    பிடித்தவர்.      என்னதான்    இவரை    உலகமே        புகழ்த்தலும்     ஆரம்ப   கால    கட்டத்தில்          மக்கள்    இவரோட    கண்டு        பிடிப்புக்களை      மதிக்களை   ஆரம்ப      காலத்தில   டெஸ்லா   கண்டு    பிடிப்புக்கள் எல்லாம்    மடத்தனம்   என்று    தான்    சொல்லுவாங்கலாம் .
அவர்      அன்றைக்கு    ஆல்டன்ட்    கரண்டை கண்டுபிடிக்கலை   என்றால்   நாம இன்றைக்கு   பல    விஷயங்களை இழந்திருப்போம் .     அப்படிப்பட்ட   ஒரு
நல்ல   கண்டு     பிடிப்பாளனை பெருமைப்படுத்திரா   விதமாக     இந்த படத்தில்    ஒரு   கற்பனை    கதாபாத்திரமாக காட்டியிருப்பாங்க     அதுக்கு    ஒரு              காரணமும்     இருக்கு       





அத    அடுத்த  பதிவில    பார்ப்போம்....










கருத்துகள்

பிரபலமான இடுகைகள்