வால்ட் டிஸ்னியின் வரலாறு - Walt Disney
Hollywood இன் ஜாம்பவானாக விளங்கும். மார்வல் ஸ்டூடியோவிலிருந்து, டிஸ்னி தீம் பார்க், ESPN Sports வரை இன்று உலகில் பிரபல்யமான பொழுதுபோக்கு அம்சங்களில் மிகப்பெரும் பகுதி டிஸ்னி நிறுவனத்திடமே உள்ளன. டிஸ்னி நிறுவனத்தைத் தொடங்கிவைத்த Walt Disney. இன் வரலாறையே நாம் இந்தப் பதிவில் பார்க்கப்போகின்றோம்...
Walt Disney, 1901 இல் சிகாகோ நகரில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே உருவங்கள் வரைவதில் மிகவும் ஆர்வமாக இருந்த இவர் எப்போதும் பென்சிலும் கையுமாகவே இருப்பார். தான் வளர்ந்தவுடன் எப்படியாவது மிகப்பெரிய கலைஞ்சன் ஆகவேண்டும் . என்பதே டிஸ்னியின் சிறுவயது கனவு. இருப்பினும் அவரின் கனவை சுற்றியிருந்த எவரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
எனினும் மனம் தளராதவர் தனது 20 ஆவது வயதில் தன்னிடமிருந்த அனைத்து சேமிப்புக்களையும் வைத்து.
ஒரு Cartoon படத்தினை தயாரித்தார். படம் பாதியைத் தாண்டுவதற்கு முன்னரே அவரிடமுள்ள முழு பணமும் தீர்ந்துவிட, படத்தினை தொடர்ந்து உருவாக்கமுடியாமல். அது பாதியிலேயே நின்றுவிடுகின்றது.
அதன் பின்னர் ஒரு அனிமேஷன் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றார். அதே காலகட்டத்திலேயே Basic Cartoon. களுக்கான தொழில்நுட்பம் அறிமுகமானது. அதை கவனித்த இவர் தனது முதலாளியிடம் Cartoon உருவாக்குதல் பற்றிய தனது திட்டத்தை கூறினார். இருந்தும், முதலாளி அவரின் திட்டத்தை ஏற்காமல் போனதும் தனது நண்பனுடன் சேர்ந்து Oswald என்ற Cartoon இற்கான ஸ்கிரிப்டை உருவாக்கி முடித்தார்.
குறித்த Cartoon இனைத் தயாரிக்க தன்னிடம் பணம் இல்லாததால் Hollywood லுள்ள தயாரிப்பு நிறுவனங்களின் கதவுகளை தட்டினார் டிஸ்னி. பல நிறுவனங்கள் இவரது Cartoon இனை ஏற்க மறுத்தன. இறுதியாக Universal Studio நிறுவனம் இவரின் Cartoon இனைத் தயாரிக்க முன்வந்தது.
இவர்களின் தயாரிப்பில் வெளிவந்த Oswald Cartoon மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற, Universal Studio நிறுவனம் அதனைத் தொடர்ந்து தயாரிக்க முடிவுசெய்தது. ஆனால் டிஸ்னியை வெளியேற்றிவிட்டு அதனை இயக்கும் பெறுப்பை வேறு ஒரு நபரிடம் கொடுத்துவிட்டது. மீண்டும் டிஸ்னி நாடு வீதிக்கு வந்தார்.
மிகுந்த மன வருத்தத்தில் வாடிக்கொண்டிருந்த டிஸ்னியின் கண்ணில் தென்பட்டது ஒரு எலி, அந்த நொடி பிறந்ததே உலகப் புகழ்பெற்ற Mickey Mouse. தனது சகோதரனின் பண உதவியுடன் Mickey Mouse ற்கான Cartoon இனைத் தயாரித்தார் டிஸ்னி. தனது Mickey Mouse கதாப்பாத்திரம் மக்களை அதிகமாகக் கவரவேண்டும் என்பதில் மிக்க உறுதியுடன் இருந்தார் டிஸ்னி.
அந்த காலத்தில் வெளியான படங்கள் அனைத்தும் சத்தம் இல்லாத ஊமைப் படங்களாகவே இருந்தன, எனவே தனது Mickey Mouse இவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக Video உடன் Audio உம் சேர்ந்ததாகவே உருவாகவேண்டும் என்பதே இவரது திட்டம். டிஸ்னியே உலகின் முதல் ஆடியோவுடன் கூடிய' படத்தைத் தயாரித்தவர்.
வெளியானவுடனே. Mickey Mouse அனைவரிடத்திலும் மிகவும் வரவேபைப் பெற்றது, பல விருதுகளை வென்றது. ஒரே நாளில் டிஸ்னி உச்சத்தை அடைந்துவிடுகின்றார்.
இருந்தும் டிஸ்னிக்கு இவை போதவில்லை, தான் மொத்த பொழுதுபோக்கு துறையிலும் காலடி பதிக்கவேண்டும் என்ற வைராக்கியத்தை எடுத்துக் கொள்கின்றார். இதன் விளைவாகவே டிஸ்னி தீம் பார்க் உருவானது. வழமையான தீம் பார்க்குகளைவிட டிஸ்னி தீம் பார்க் அதிக வசதிகளைக் கொண்டிருந்ததால் . மக்களிடையே அதுவும் அமோக வரவேற்பைப் பெற்றது. இவ்வாறு தனது சாம்ராஜ்யத்தை வளர்த்துக்கொண்டு சென்ற டிஸ்னி 1966 இல் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
ஆனால் இன்றும் டிஸ்னி நிறுவனமானது உலகிலுள்ள பொழுதுபோக்கு அம்சங்களில் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் தன்னிகரில்லா நிறுவனமாக வளர்ந்துகொண்டே செல்கின்றது..
விடாமுயற்சி, தொடர்ந்து புதுப்புது விடயங்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருப்பது என்பன டிஸ்னியின் அபார வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றன.
அடுத்த பதிவில சந்திப்போம் ......
கருத்துகள்