Arnold Schwarzenegger வாழ்கை பயணம்

    Arnold Schwarzenegger வாழ்கை பயணம் 





என்னோட   பதினைந்தாவது   வயசுல   நான்  அமெரிக்கால   குடியேற    போறதா      சொன்னேன்   எல்லோரும்    சிரிச்சாங்க …






ஆனா   நான்  அமெரிக்கால  குடியேறினேன்.!






என்னோட   18 வது    வயதுல    நான்
உலக    ஆணழகன்    ஆகப்போறதா      சொன்னேன்.   எல்லோரும்     சிரிச்சாங்க …






நான்   பல  முறை   அந்த    டைட்டிலை வென்றேன்.!






அதன்   பிறகு   நான்    சினிமால   பெரிய    ஹீரோவா   ஆகப்போறேனு    சொன்னேன்      எல்லாரும்     சிரிச்சாங்க …





நான்   ஹாலிவுட்ல    ஹீரோவா    ஆனேன்.!





சினிமாவில   பெரிய    வீழ்ச்சி    வந்தபோது    இவன்   இனி    அவ்வளவுதான்    அப்டினு          சொல்லி   சிரிச்சாங்க …





நான்   மீண்டும்   மீண்டு    வந்தேன்.!





என்னோட    50  வயசுல   நான் கலிபோர்னியா    கவர்னர்    ஆகப்போறதா      சொன்னேன்   எல்லோரும்       என்னைப்
பார்த்து      சிரிச்சாங்க …





நான்   கவர்னர்     ஆனேன்.!







இப்ப   என்னைப்   பார்த்து   சிரிச்சவங்களை    நான்   திரும்பி    பார்த்து    சிரிக்கிறேன் … அவர்கள்    எல்லாம்    அதே    இடத்துல
தான்  இருக்காங்க …        தன்னம்பிக்கையாலும்       என்னோட
கடின    உழைப்பாலயும் ,
நான்     நினைச்சதெல்லாம்    சாதிக்க முடிந்தது..







எதையுமே    சாதிக்கனும்னு நினைக்கிறவங்க
சுத்தி      இருக்கிறவங்க    கேலியை பொருட்படுத்த     கூடாது.!







அது     அவர்களின்    வியாதி    நம்மை      பற்றியும்    தன்னபிக்கையின்    ஆற்றலை      பற்றியும்   அவர்களுக்கு   எதுவும்        தெரியாது.!






- கேலிகளை     கேலி    செய்த    நிஜ   ஹீரோ    அர்னால்டு.   அவரைப்பற்றி    தான்    இந்த    பதிவில     பார்க்கபோறம். ....







“I’M  GOING     TO   BE   THE    NUMBER   ONE BOX    OFFICE    STAR   IN   ALL   OF HOLLYWOOD.”




"பாவனையே     இல்ல,      கட்டைப்      போல நடிக்கிறான்"      என்று     சொல்லும்    அளவுக்கு       இறுக்கமான     முகம், ஆங்கிலம்       சரிவர      உச்சரிக்க,                பேச      தெரியாத       நிலை,    ஹீரோவாகக்கூட      ஆக        முடியாமல் பொம்மை       போல       திரையில் வந்துப்போன       அதுவும்         அமெரிக்க குடிமகனாக        இல்லாத       ஒரு     நடிகன்,  1976     ஆண்டு      ஒரு       பத்திரிக்கையின் பேட்டியில்       கூறியபோது       பத்திரிக்கையாளர்       உட்பட    படித்தவர்களும்              அநேகமாக சிரித்திருக்கக்கூடும்.










குருட்டு      நம்பிக்கை       என்றிருப்பர், இன்னும்      சில      கூட்டமோ      முன்     விட்டு பின்னால்       கேளி        செய்திருக்கும். சரியாக    15     வருடங்கள்       கழித்து     1991 ஆம்     ஆண்டு      அதே       அமெரிக்காவின் பல      பிரபல      தொலைக்காட்சிகள்    "அந்த” நடிகனின்         படமொன்றை   "உலகத்திலேயே         அதிகமாக     வசூலான திரைப்படமாகவும்"         உலகத்திலேயே அதிகமாக       சம்பளம்          வாங்கும் நடிகனாகவும்"        புகழாரம் சூடிக்கொண்ருந்ததை        பார்த்த       பலரும் வாயடைத்து        போயிருக்கக்கூடும்.    அவனா        இவரென்று...!!







பல     எல்லைகளை       கடந்து போராட்டங்களுக்கு      பிறகு 
உலகமெங்கும்       தனக்கான       ரசிகர்கள் கூட்டத்தை        வசீகரித்துக்கொண்ட    அந்த பெயர்      Arnold Schwarzenegger/   அர்னால்ட் ஸ்வார்சுநேகர்..         





அநேகமாக       அமெரிக்க         வரலாற்றில் இந்தளவுக்கு       உச்சரிக்க        கடினமான பெயரில்      சூப்பர்      ஸ்டார்      உருவாகிருக்க வாய்ப்பில்லை.        பாடி      பில்டராக தன்னுடைய     வாழ்வை      தொடங்கி     உச்ச சினிமா         நட்சத்திரமாக      உயர்ந்தது  ஆச்சரியப்படுத்துவதாக        இருந்தாலும் அதற்காக     அவருடைய         தியாகமும் உழைப்பும்            அசாதாரணமானது.










சமீபத்தில்       Arnold Schwarzenegger Biography.     என்ற     டிவி     சேனலின் நிகழ்ச்சியை       இணையத்தில்       பார்க்க கிடைத்தது.        அமெரிக்கா       போக வேண்டும்:      மிக        பெரிய     ஹாலிவுட் ஸ்டாராக       ஆக        வேண்டும்:       பிறகு கென்னடி        குடும்பத்தை        சேர்ந்த பெண்ணை          திருமணம்         செய்ய வேண்டும்         என்ற       இவரது      சிறு    வயது        கனவுகள்...           நனைவாக மாறுவதற்கு        பின்னால்        இருந்த     மிக நீண்ட         வரலாற்றை,       வாழ்வில்      கடந்து       வந்த         பாதையை         காட்சி ஊடாக       காண     கிடைத்தது.












ஆஸ்டிரியாவின்          கிராமத்தில்        பிறந்த ஒரு        சாமான்யன்       பிறகு      மிக      பெரிய         ஸ்டாராக        உருவெடுத்து      ஒரு மகாணத்தின்        கவர்னராக        மாறிய வரலாறு       மிகவும்       நீண்ட,        வலிகள் மிகுந்த            கதை..










"வெற்றி       அடைய         நினைப்பவர்களுக்கு ஓர்         அறிவுரை..         முதலில் தோல்விகளை         அடையுங்கள், கஷ்டங்களை         அனுபவியுங்கள்.  உங்களை          ராஜாவாக     உருவாக்க போவது         ரோஜாக்கள்         நிறைந்த பாதையில்லை.       அவை       கரடு      முரடான     காட்டு     முட்கள்   நிறைந்தவை..     








காடுகளை        அழியுங்கள்..        மலைகளை முட்டுங்கள்.       பிறகுதான்        வெற்றி கதவு..  திறக்க       உதவ         போவது    சாவியல்ல..    உங்கள்          சாதனை"      வாழ்க்கையில் நான்          தோல்விகள்        சந்திக்கும்போது எனக்கு        நானே         எழுதிக்கொள்ளும் சொல்லிக்கொள்ளும்       வாசகம்       இது.






"THERE      IS    NO   OVERNIGHT     SUCCESS   OR OVERNIGHT.       SUPERSTAR."





என்று        சொல்வார்கள்..         ரஜினி,    அஜித்          ஜாக்கிச்சான்,        ஆர்னல்டு        போன்ற        நடிகர்களை        பார்க்கும்      போது         அடிக்கடி        இந்த       வாசகம் நினைவுக்கு        வரும்.      ஒரே       நாளில் உயரத்தை            தொட்டவர்    எவருமில்லை.. 






அதேபோல்        ஒரே        திரைப்படத்தின் மூலம்        சூப்பர்    ஸ்டாராக.        உயர்ந்த நடிகரும்        கிடையாது.        அதற்கு பின்னால்           இருக்கும்      அவமானங்களும்              உழைப்பும் எழுத்துக்களால்           சித்தரிப்பது      கடினம்.. 









வந்தோம்       நடிச்சோம்..      காசு    கிடைத்தது.       செட்டல்    ஆனோம்.     இனி என்ன?        என்று         நினைப்பவர்களுக்கும் இவர்களுக்கும்          உள்ள        வித்தியாசம் ஏராளம்.        ஒரு          வெற்றியை    தொடர்ந்து        அந்த        வெற்றியை      தக்க வைக்க        போராடும்        குணமும்    இவர்கள்         செய்யும்       புதிய முயற்சிகளும்         தலைமுறை        கடந்த ரசிகர்களை               இவர்களுக்கு சொந்தமாக்குகிறது.








இவர்களது       வாழ்க்கை         பின்னனியை உற்றுப்     பார்த்தால்         கொஞ்சம் புரியும்.  சினிமாவில்         மட்டுமல்ல      எந்த துறையாக        இருந்தாலும்       மக்கள் மனதை        ஆட்கொண்ட         எவருமே எளிமையான      வழியில்      வாய்ப்பு கிடைத்து        வந்தவர்களோ,       சிம்பிளாக வெற்றிக்         கண்டவர்களாகவோ இருக்கவே         மாட்டார்கள்.         கடின உழைப்பும்,            விடாமுயற்சியும்,       பெரிய கனவுகளும்,           முற்போக்கான சிந்தனைகளும்,          திறமைகளும்    மக்களை       தன்      வசம்       ஈர்க்கக்கூடிய ஆற்றல்           கொண்டவர்களாவே இருப்பார்கள்.












நல்ல        கதைகளை      தேர்ந்தெடுக்கும் போது       ஒரு         நடிகன், ஸ்டாராகலாம்.    நல்ல         கதைககள்,         உயர்ந்த இலட்சியங்கள்          இணையும்     பொழுது ஒரு          சாதாரண          ஸ்டார்    கூட      சூப்பர்    ஸ்டாராக        உருவாகலாம்.         அந்த         சக்தி           அதற்கு       உண்டு.      டெர்மினெட்டெர்         என்ற        கதையும் உயர்ந்த          கனவும்தான்       இன்று     ஜேம்ஸ்    கேமரனை         அவதார்       வரை கொண்டு          சென்றுள்ளது.        சிறந்த கதைகளும்          கனவுகளும்-       தான் இந்தியாவின்         கல்கத்தாவில்       பிறந்த சத்யரஜித் ரே          என்ற      ஒரு      சாதாரண ஓவியனை,        மிக        சிறந்த     இயக்குனராக        உலக      சினிமா      உயர்ந்து         பார்க்கிறது.









ஹெர்க்குலஸ்      இன்      நியூ      யோர்க் படத்தின்        மூலம்          அறிமுகம் கிடைத்திருந்தாலும்,       முதல்        வெற்றியை           அடைய       ஆர்னல்டு,    சுமார்       12      ஆண்டுகள்        காத்திருக்க வேண்டிருந்தது.         கானன்    தி    பார்பரியன்       ரசிகர்களை      கவர்ந்திட, டெர்மினெட்டர்       மக்கள்       மனதில் ஆர்னல்டை      இடம் பெறச்செய்தது.      தொடர்ந்து           வந்த           கமாண்டவும், பிரேடேட்டரும்         சாதாரண        நடிகனாக இருந்தவரை        ஸ்டாராக         மாற்றியது.









40  வயது       ஆகிவிட்டது..        வாழ்க்கை முடிஞ்சு        போச்சுனு         என்பவர்கள் இருக்கும்          உலகில்,    LIFE BEGIN AT 40 என்பதற்க்கு         ஆதாரமாய்        ஆர்னல்டின் அனைத்து         வெற்றிகளும்        40 வயதை கடந்த            நிலையில்தான்        வந்து சேர்ந்தது...         ஒரு            நடிகராக மட்டுமின்றி           தயாரிப்பாளராக, இயக்குனராக,            எழுத்தாளராக,       சிறந்த.        பேச்சாளராக       தன்னை வளர்த்துக்கொண்டதோடு        நில்லாது அமெரிக்காவின்         கலிஃபோர்னியா மகாணத்தின்          கவர்னராக வெற்றிக்கண்டதை              எண்ணும்போது அதிசயக்கவைக்கிறது.





"மனம்       உண்டானால்       மார்க்கம் உண்டு"..



"ஒரு       கனவு         கண்டால்       அதை     தினம்          முயன்றால்         ஒரு      நாளில் நிஜமாகும்"         என்ற         பாடல்களும் பழமொழிகளும்தான்      ஞாபகம்       வருது.








Arnold Alois Schwarzenegger



July 30, 1947 (age 69




அர்னால்ட்       ஸ்வார்சுநேகர்        ஒரு ஆஸ்திரிய-        அமெரிக்கர்       ஆவார். மேலும்        இவர்       ஒரு        முன்னாள் தொழில்முறை        உடற்கட்டு      கலைஞரும் ஆவார்.         அதுதவிர         இவர்       விளம்பர மாடல்,        நடிகர்,         திரைப்பட      இயக்குனர்,







மேலும்          தொழிலதிபர்,       அரசியல்வாதி என       பல              பரிணாமங்களுக்கு சொந்தக்காரரும்         ஆவார். 
மேலும்         இவர்         அமெரிக்காவின் கலிபோர்னியா             மாகாணத்தின்             38    ஆவது          ஆளுநராக      உள்ளார். அர்னால்ட்          தனது          உடற்கலை பயிற்சியினை          தனது        15ஆவது வயதிலிருந்தே         செய்து         வந்தார்.








இவர்           முதல்         முறையாக        உலக ஆணழகன்       படத்தினை           தனது            20  ஆவது          வயதில்          வென்றார். மேலும்        திரு.    ஒலிம்பியா            ஆணழகன்        பட்டதை      ஏழு      முறை வென்றவரும்         ஆவார்.             இவர் உடற்கட்டு            கலையை              பற்றி நிறைய           நூல்களை        எழுதியுள்ளார்.






இவர்          ஹாலிவுட்      திரைப்படங்களில் நடிக்க       ஆரம்பித்த        பிறகு     புகளின் உச்சிக்கே       சென்றார்.         இவரை "ஆஸ்ட்ரியன் ஓக்"      என        அழைத்தனர்.






ரிபப்ளிக்        கட்சியின்          சார்பில்
தேர்தலி          போட்டியிட்ட         அர்னால்ட் அக்டோபர்   7,2003    ஆம்       ஆண்டு     முதல் முறையாக          ஆளுநராக       வெற்றி பெற்றார்.





அர்னால்டும்         அவரது          மனைவி மரியா ஸ்ரிவரும்            25     ஆண்டுகளாக இணை        பிரியாத       மணவாழ்க்கையில் உள்ளார்கள்.             இவர்களுக்கு      நான்கு குழந்தைகள்          உள்ளனர்.




ஆரம்பகால வாழ்க்கை





ஸ்வார்சுநேகர்          ஆஸ்திரியாவில்      உள்ள தாள்        என்கிற          சிறிய       ஊரில் பிறந்தவர்.            ஸ்வார்சுநேகர்      ஆஸ்திரிய ராணுவத்தில்          பணியாற்றி       ஒரு வருடம்         பணி         நிறைவு      செய்தவர். இவர்        ராணுவத்தில்       பணியாற்றிய பொழுது         ஜூனியர்.       திரு.ஐரோப்பா என்கிற      ஆணழகன்           பட்டதை வென்றவரும்        ஆவார்.







அர்னால்ட்        உலக       ஆணழகன் போட்டியில்         கலந்து        கொள்வதற்காக முதல்       முறையாக           1966 இல்
லண்டன்         நகருக்கு         சென்றார். அப்பொழுது      அவர்                 இரண்டாம் இடம்      மட்டுமே       பெற       முடிந்தது.






அந்த        போட்டியில்               நடுவராக இருந்த          சார்லஸ் பென்னெட்          என்பவர்         அர்னால்டின்       திறமைகளை கண்டு         வியந்து           அவராகவே அர்னால்டிற்கு        பயிற்சி       அளிக்க முன்வந்தார்.           அதன்        பின்னர் அர்னால்டின்           வெற்றிகளின்      வாயிலாக       படி        படியாக       முன்னேறி உச்சத்தினை           அடைந்தார்.





1986ல்          ஆர்னால்ட்டுக்கும் மரியா(Maria)வுக்கும்            திருமணம் நடந்தது.
மரியா         மூன்று         ஆண்டுகளாக குழந்தைகளே        உருவாகாமலிருந்த்தால் சந்தேகமடைந்தார்           அவரது      தாய் ஷ்ரிவர்.
அதிக        அளவு           கடுமையாக உடற்பயிற்சி        செய்யும்        வீரர்கள் ஸ்டீராய்டுகளை    (Steroids)         அதிக அளவில்                   உட்கொள்வதால் அவர்களது         விந்தணுக்கள்       ரொம்ப வீக்காகி        கர்ப்பம்              தரிப்பது முடியாமல்          போகும்.


Arnold -  wife 






ஆர்னால்டோ        மூன்று            முறை
 உலக           ஆணழகன்           பட்டம் வென்றவர்.                    ஆணழகன் போட்டிகளில்             கலந்துகொள்பவர்கள் ஸ்டீராய்டுகளை               உபயோகிப்பது சகஜம்.
மரியாவின்         அம்மா            ஷ்ரிவர்
ஜான் எப்.           கென்னடியின்        தங்கை ஆவார்.            அவர்           தனக்குத்     தெரிந்த மிகச்        சிறந்த            டாக்டர்களை      அணுகி           ஆர்னால்ட்         குழந்தை பெற்றுக்கொள்ள          முடியுமா.
என்று          சோதித்துத்          தருமாறு கேட்டுக்கொள்ள           அதன்படி        அவர்கள் ரகசியமாய்                ஆர்னால்ட்டுக்குத் தெரியாமல்              ஆர்னால்டை        வேறு சோதனைகளுக்கு             வரும்போது ஆண்மைச்          சோதனையும்       செய்து ரிப்போர்ட்              அளித்துள்ளனர்.








இதை         அவர்         தனது          மகளிடம் அளித்துள்ளார்.              தற்செயலாக     தன் மனைவியின்           அறையில்        இருந்த டேபிளில்          இந்த          ரிப்போர்ட்டைக் கண்டு          படித்த            ஆர்னால்ட் கோபப்படுவதற்குப்          பதில்       விழுந்து விழுந்து            சிரித்தாராம்.
அதற்குப்          பிறகு         ஆர்னால்ட் – மரியா தம்பதியினருக்கு           நான்கு     குழந்தைகள் பிறந்தார்கள்.




Arnold - children 





தற்போது           கலிபோர்னியா       மாநில கவர்னராக          இருந்து      ரிட்டையர்டாகிவிட்ட.        ஆர்னால்ட்      தன் வாழ்க்கை           சரிதத்தை      ‘டோட்டல் ரீகால்:           என்னுடைய          நம்பமுடியாத நிஜ       வாழ்க்கைக்         கதை       ’(Total Recall: My Unbelievably True Life Story)       என்கிற அவரது             புகழ்பெற்ற         படத்தின் பெயரிலேயே              எழுதியிருக்கிறார். அதில்          மேற்கண்ட           நிகழ்வை நினைவு         கூர்ந்து          குறிப்பிட்டுள்ளார்.
அதில்         மேலும்          தனது       அந்தரங்க வாழ்வில்         நடந்த          துன்பமான விஷயங்களை           வெளிப்படையாக எழுதியுள்ளார்.






ஆர்னால்ட்               கலிபோர்னியா கவர்னராக        இருந்து        பதவிக்காலம் முடிந்த        அடுத்த           நாள்,
அவரது      65வது         வயதில்      அவரது மனைவி          மரியா
அவரிடமிருந்து            விவாகரத்துப்    பெற்றார்.           25     வருட       திருமண வாழ்வை          முறித்துக்       கொண்டார்.









அதற்கான           காரணம்       ஆர்னால்ட்டிற்கும்        அவரது       வீட்டையும் குழந்தைகளையும்         நீண்ட        நாட்கள் கவனித்துக்            கொண்டிருந்த      வீட்டு வேலைக்காரப்             பெண்       மில்ட்ரட் பேனா  (Mildred Baena) வுடன் ஆர்னால்ட்டுக்கு         தொடர்பு     ஏற்பட்டுள்ளது.          அதில்        அவர்களுக்கு 1997ல்      ஜோசப்        என்கிற         மகனும் பிறந்துள்ளார்.




Joseph





ஆரம்பத்தில்            சந்தேகமுற்ற      மனைவி மரியாவிடம்            தனக்கும் மில்ட்ரட்டுக்குமிடையே           எந்த்த் தொடர்புமில்லை        என்று        ஆர்னால்ட் மறுத்ததோடு           மில்ட்ரட்டின் கணவருக்கும்,        மில்ட்ரட்டுக்கும்     பிறந்த குழந்தைதான்         ஜோசப்         என்று உறுதியாக         அவரிடம்            சத்தியம் செய்து          கூறியுள்ளார்.









தற்போது         பதினைந்து         வயதாகும் ஜோசப்          தோற்றத்தில்         ஆர்னால்டைப் போலவே          இருப்பது         மரியாவின் சந்தேகத்தை            மேலும்          உறுதிப் படுத்தவே           அவர்          விவாகரத்து அலுவலர்          முன்னிலையில்      இது உண்மையா        என்று              கேட்க ஆர்னால்ட்           தயங்கி         உண்மையை ஒப்புக்        கொண்டார்.








அதற்குப்       பின்            ஆர்னால்ட் எவ்வளவோ           மன்றாடியும்      கேளாமல் மரியா           விவாகரத்து            பெற்று அவரை           விட்டு          பிரிந்து சென்றுவிட்டார்.
இவ்வாறு        தன்          வாழ்வின்        பல இன்ப       துன்ப         நிகழ்வுகளை வெளிப்படையாக         அசை      போட்டுள்ளார்       ஆர்னால்ட் ஸ்வார்செனக்கர்.






மிண்டும்        அடுத்த     பதிவில      சந்திப்போம் ....






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்