Will Smith வெற்றியின் ரகசியம்


ஹாலிவூட்     பிரபலங்களில்       மற்ற நடிகர்களைவிட      அதிகமான வெற்றிப்படங்களைக்       கொடுத்தவர்     Will Smith .








கடின     உழைப்பிற்கு     பேர்போனவர். சினிமா     துறையில்       பல்வேறுபட்ட சவால்களை        எதிர்கொண்டு வெற்றிகண்டவர்.     மேலும்      தலை    சிறந்த தன்னம்பிக்கைப்       பேச்சாளர்.
இங்கு      நாம்,      வாழ்வின்       வெற்றிக்கு Will Smith     கூறிய      கருத்துக்களில்      மிக முக்கியமான     8       கருத்துக்களைப் பார்க்கலாம்.








1.    வெற்றியின்     முதல்படி      உங்களால் முடியும்     என்பதை      மனமாற    நம்புவது.







2.     மகத்துவம்     என்பது     ஒரு      சிலரால் மட்டுமே      பெறக்கூடியதோ        அல்லது அதிசயமான       ஒன்றோ     அல்ல,     மாறாக அது     நம்         அனைவரினுள்ளும் புதைந்துள்ளது.        நாம்     தான்      அதனை உணர்வதில்லை.







3.      தினமும்       காலை        எழும்போது இன்றையதினம்       நேற்றைய   தினத்தைவிட      சிறப்பானதாக      அமையும் என்பதை       நான்     உறுதியாக     என்னுள் சொல்லிக்கொள்வேன்.      அதுபோலவே அந்த    நாள்       அமையும் .








4.      பணமும்       வெற்றியும்        யாரையும் மாற்றப்போவதில்லை.       மாறாக      அவை ஒருவரினுள்      மறைந்திருக்கும் இயல்புகளை       விஸ்தரித்துக்       காட்டும்.







5.     எப்போதும்        யதார்த்தமாகச் சிந்திப்பவன்      நடுநிலையான வாழ்க்கையையே       பெறுவான்.     யாரிற்கும்        கிடைக்காத        வெற்றி வேண்டுமெனில்         யாரும் சிந்திக்காததுபோல.        சிந்தியுங்கள்.








6.      உங்களுக்குத்       தேவையானதைப் பெற      போராடவில்லை     எனில்,    அவை கிடைக்காதபோது        வருத்தமடையாதீர்கள்.








7.      நீங்கள்     bஎன்னுடைய      கஷ்ட்ட காலத்தில்       என்னுடன்       இல்லையெனில், என்றும்       எனது      வெற்றியில்    பங்கெடுக்க         நினைக்காதீர்கள்.






8.     நீங்கள்       வாழ்வதால்     இன்னொருவரது        வாழ்க்கை சிறப்படையவில்லை       எனில்,     உங்களது  வாழ்க்கையை        வீணடிக்கின்றீ ர்கள்    என்று       பொருள்.








தனது    எல்லையில்லா        வெற்றிக்கு       Will Smith கூறும்        5     காரணங்கள்...










1.     சிறுமையானவர்களைப் புறக்கணியுங்கள்.
உங்களால்         எது       முடியும்,       முடியாது என்பதை       இன்னொருவர்      தீர்மானிப்பதை           அனுமதிக்காதீர்கள். உங்கள்      முயற்சியை        புரிந்துகொள்ள முடியாத     ஒருவரால்        அந்த       முயற்சியை        ஏற்றுக்கொள்ள      முடியாது. எனவே        உங்கள்       முயற்சி      தவறானது என        அவர்களுக்குத்        தோன்றலாம். இவ்வாறானவர்களின்           கருத்துக்களை நீங்கள்           செவிமடுக்கவேண்டிய அவசியமில்லை.        உங்கள்     வாழ்க்கையின்          பொறுப்பை       நீங்களே ஏற்றுக்கொள்ளுங்கள்.       அதை        உங்கள் மனம்           விரும்பும்படி அமைத்துக்கொள்ளுங்கள்.








2.      காலம்           மாறக்கூடியது.
உங்களது         தற்போதைய      நிலைமை தொடர்ந்து       நீடிக்கப்        போவதில்லை, உங்கள்        கஷ்டங்கள்        மறைந்துவிடக் கூடியவை.         நீங்கள்        இன்று      இருக்கும்         இடம்         தற்காலிகமானதே. முயற்சிசெய்தால்        எந்த      இடத்தையும் அடைந்துகொள்ளமுடியும்           என்பதை நம்புங்கள்.








3.      வாழ்வில்        ஒரு          நோக்கத்தை வைத்திருங்கள்.
நீங்கள்       யாராக      இருந்தாலும்,     என்ன செய்துகொண்டிருந்தாலும்       வாழ்வில்    ஒரு       நோக்கம்        இருந்தால்       மட்டுமே வெற்றி       கிடைக்கும்.      எனவே உங்களுக்கு        என்ன    தேவை?     


வாழ்வில்       நீங்கள்           எங்கு செல்லவேண்டும்       என்பதை         இன்றே தீர்மானித்துக்             கொள்ளுங்கள்.








4.        உயர்வாக.        வாழுங்கள்.
நம்       அனைவரினுள்ளும்      பல சிறப்புக்கள்      புதைந்துள்ளன.      அந்த சிறப்புக்களை       முன்னிறுத்தி      உங்கள் வாழ்க்கையை       வாழுங்கள்.      என்ன தடைகள்       வந்தாலும்      இந்த      இலக்கை அடைந்துதான்        தீருவேன்      என்ற      வெறி       எந்த       விடயத்தில்      உங்களிற்குத்       தோன்றுகின்றதோ    அதனை        நோக்கிப்       பயணிக்க ஆரம்பியுங்கள்.        அந்த       விடயத்திலேயே உங்கள்        தனித்திறமை         வெளிப்படும்.









5.       பயம்         பயத்தினை      உங்கள் வெற்றிக்கான          சக்தியாகப் பயன்படுத்துங்கள்.       எதைச்      செய்யப் பயம்       கொள்கின்றீர்களோ        அதை தைரியமாக        செய்ய         ஆரம்பியுங்கள். அவ்வாறு          ஒரு           வேலையை செய்துமுடித்த     பின்       அந்தப்       பயம் தன்னம்பிக்கையாக      மாறிவிடும்.       நீங்கள்       பயத்தைவிட்டு வெளியேறாதவரை        வெற்றியின் சாயலைக்கூட         கண்டுகொள்ளமாட்டீர்கள் என்கின்றார்        Will Smith.







மிண்டும்    அடுத்த     பதிவில்    சந்திப்போம். ...

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்