Robert Downey வாழ்கை பயணம்



சிறையில்     பீட்ஸா      தட்டுக்கள்    கழுவியவர்      இன்று      ஹாலிவுட்டின் சூப்பர்       ஹீரோ...








Robert Downey,    Jr     இவரை      Iron Man எனத்      தெரிந்தவர்களே       மிக     அதிகம். ஹாலிவுட்      நடிகர்களிலேயே       அதிக மரியாதைக்குரியவராகப்    பார்க்கப்படுபவர்.
தற்போது      உலகப்     புகழ்பெற்ற    நடிகராக இருந்தாலும்       இவரது      ஆரம்ப    காலகட்டம்       மிகவும்     வலிநிறைந்ததாகவே         இருந்துள்ளது.








 அதிகமான       போதைப்      பழக்கத்தால்    பல      முறை       சிறை         சென்றுள்ளார். பல்வேறுபட்ட       விமர்சனங்களிற்கு    ஆளான      நடிகர்.       இவரின்       வாழ்க்கைக் குறிப்புக்களையே      நாம்         இன்று பார்க்கவிருக்கின்றோம் .






1.     ஆரம்ப    காலகட்டம்



இவர்      1965      இல்      அமெரிக்காவில் பிறந்தார்.       ஒரு       திரைப்பட  இயக்குனரின்      மகன்.     தாய்     ஒரு  நடிகை       இதனால்        சிறுவயதிலேயே நடிக்க      ஆரம்பித்துவிட்டார்.        இவரின் தந்தை       ஒரு      போதை        அடிமை.     தனது        தந்தையின்      மூலமே      இவரும் போதைப்        பழக்கத்திற்கு அடிமையாக்கப்பட்டார்.       அப்போது    இவரின்         வயது     6.       அன்றிலிருந்து தொடர்ச்சியாக      போதைப்      பொருட்களைப்         பாவித்தவண்ணமே இருந்தார்.







இவரது     13     வயதில்      தாயும்     தந்தையும் விவாகரத்துப்      பெற்றனர்.       இவர் தந்தையுடன்       California      விற்குச் சென்றுவிட்டார்.       தனது       பாடசாலைக் கல்வியையும்       இடையிலேயே விட்டுவிட்டார்.







இவர்      சிறுவயதிலிருந்தே       பல்வேறு படங்களில்       நடித்திருந்தாலும்       அதில் எதுவும்       பெரிய         அளவில் வெற்றிபெறவில்லை.      இவர்      ஒரு கண்டுகொள்ளப்படாத        நடிகராகவே ஹாலிவுட்டில்           இருந்தார்.







2.     போதைப்   பழக்கம்



6    வயதில்      ஆரம்பித்த        போதைப் பாவனை       நாட்கள்      செல்லச்        செல்ல அதிகரித்த       வண்ணமே         இருந்தது. போதைப்       பாவனையின்      உச்ச கட்டத்தால்       இவரின்         காதலி இவரைவிட்டுப்       பிரிந்து       சென்றார். குடும்பத்தினர்      புறக்கணித்துவிட்டார்கள். அதன்பின்     1992 இல்       Deborah Falconer என்ற      பெண்ணைத்      திருமணம் செய்தார்.







1996    இல்       தடை      செய்யப்பட்ட      போதை      மருந்துகள்        பாவனைக்காக கைது       செய்யப்பட்டு      சிறை      சென்றார். சிறை       வாழ்க்கை       இவரிற்கு       மிகப் பெரும்       வேதனையைக்       கொடுத்தது.   சக        சிறைக்கைதிகளால்         தொடர்ந்து தாக்கப்படுவார்.      சுய     நினைவு      இழந்து மயங்கிவிழும்வரைத்          தாக்குவார்கள்.






"தினமும்       நான்      இரத்த வெள்ளத்திலேயே      கண்        திறப்பேன்" தனது      சிறை          வாழ்க்கையை விவரிக்கின்றார்            இவர்.






சிறையை         விட்டு        வெளியில் சென்றால்      தனக்கு       எந்த      வருமானமும்        இருக்கப்போவதில்லை என்பதை         உணர்ந்தவர்,          தனக்குத் தேவையான        பணத்தினை        சம்பாதிக்க சிறையில்       பீட்ஸா      தட்டுக்களை     கழுவும்         வேலையைச்        செய்யத் தொடங்கினார்.        அதற்காக மணித்தியாலத்திற்கு     8  சதம்     கூலியாகப் பெற்றார்.







3.      சிறை     வாழ்வின்    பின்னர்




இவர்      சிறையிலிருந்து      திரும்பிய     ஒரு சில        வருடங்களிலேயே         இவரது திருமணம்        பிரிந்தது.      மீண்டும்      தனது முந்தைய      காதலியைச்      சந்தித்தார்.



 "நீ     போதைப்     பழக்கத்தை      கைவிட்டால் மாட்டுமே       உன்னைத்           திருமணம் செய்துகொள்வேன்"            என       அவர் கண்டிப்பாகச்          சொல்லிவிட்டார்.








இரண்டு       வருடங்கள்        கடினமாக    முயற்சி       செய்து       தனது       காதலுக்காக போதைப்       பழக்கத்தை      அடியோடு விட்டார்,      தனது          காதலியைக் கைப்பிடித்தார்.      அதன்      பின்னரே இவரின்          வாழ்வில்          வசந்தகாலம் ஆரம்பமானது.        திருமணமாகி       ஒரே வருடத்தில்       Iron Man         திரைப்படத்தில் நடிக்க        வாய்ப்புக்          கிடைத்தது.







சிறுவயதிலிருந்தே        பல்வேறு திரைப்படங்களில்         நடித்திருந்தாலும் இவரை       நட்சத்திர         நாகனாக்கிய திரைப்படம்       என்றால்       அது      Iron Man தான்.       இந்தப்      படம்      வெளியாகி     மிகப்        பெரும்       வரவேற்பைப்     பெற்றது.       Robert      இன்       புகழ் உலகமெங்கும்        பரவியது.










அதன்     பின்      Iron Man.      திரைப்படத்தின் 2   மற்றும்    3   ஆம்       பாகங்களில்    நடித்தார்.       The Avengers       திரைப்படத்தில் மிக        முக்கியமான        கதாப்பாத்திரத்தில் நடித்தார்.        தான்        கற்பனை        செய்து பார்க்காத      அளவிற்கு          பேரையும், புகழையும்,         பணத்தையும்      சம்பாதித்தார்.







சில       வருடங்களிற்கு        முன்பு குடும்பத்தினால்        ஒதுக்கப்பட்டு     சிறையில்       இருந்த      அதே     Robert    தான்       இன்று        ஹாலிவுட்டின்     மிக    மிக      அதிக      ரசிகர்கள்         கொண்ட நாயகனாக        இருக்கின்றார்.         உங்கள் வெற்றிக்கு       காரணம்        என்ன       எனக் கேட்டால்       என்      காதலிதான்     வேறு   யார்?       என      சிரித்துக்       கொண்டே கூறுவாராம்       நம்ம        Iron Man.






மிண்டும்    அடுத்த    பதிவில்    சந்திப்போம் ....




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்