Vin Diesel வாழ்கை பயணம்
வின் டீசல் (இயற்பெயர் மார்க் சின்க்ளேர் வின்சென்ட் ; July 18, 1967) ஒரு அமெரிக்க நடிகர், எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அவர் 2000 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் பல வெற்றி பெற்ற ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் , தெ குரோனிக்கல்ஸ் ஆஃப் ரிட்டிக், xXx, ரிட்டிக் , தெ பாசிஃபயர் போன்ற மிகப் பிரபலமான படங்களில் நடித்துள்ளார். அவரை பற்றி தான் பார்க்கபோறம் .......
முன்னாள் கிளப் பாதுகாவலர், இன்று 1500 கோடிகளின் அதிபதி - Vin Diesel வாழ்க்கை வரலாறு
ஹாலிவுட்டின் பிரபல ஆக்சன் நாயகர்கள் பட்டியலில் மிக முக்கியமானவர். Fast and the Furious, Riddick போன்ற படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகனாக மாறியவர். சிறுவயதிலிருந்தே கடுமையான பல சோதனைகளைக் கடந்துவந்தவர். ..
ஆரம்ப காலகட்டம்
இவர் பிறப்பதற்கு முன்னரே தந்தையால் கைவிடப்பட்டவர், தாய் இன்னொருவரைத் திருமணம் செய்து கொள்ளவே வளர்ப்புத் தந்தையின் கண்காணிப்பிலேயே இவரும், இவருடன் பிறந்த சகோதரரும் வளர்ந்தனர். பல்வேறு இழப்புக்களைச் சந்தித்து வளர்ந்ததால், சிறுவயதிலேயே ஒரு நடிகனாக வரவேண்டும் என்ற எண்ணம் இவரின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
7 வயதில் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அது அவரின் இளமைக் காலம்வரைத் தொடர்ந்தது.
இளமைப் பருவத்தை அடைந்ததும் வாழ்க்கைச் செலவிற்குப் போதிய பணமில்லாமல் போகவே ஒரு Club இல் பாதுகாவலராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கே அவர் கற்றுக்கொண்ட முரட்டுத்தனமே பின்னாளில் பலவேறு படங்களில் ஒரு மிரட்டும் ஹீரோவாக மாற இவரிற்குப் பெரிதும் உதவியது.
இது குறித்து ஒரு பேட்டியில் " நான் வேலையில் இருந்தபோது குறைந்தது 500 சண்டைகளிலாவது ஈடுபட்டிருப்பேன், 10 வருடங்கள் கிளப் பாதுகாவலராக வேலைசெய்திருப்பேன் அதில் ஒவ்வொரு இரவும் சண்டை வரும்" எனக் கூறினார்.
மேலும் இந்த பாதுகாவலர் வேலை இரவிலேயே இருப்பதால், பகல் நேரத்தில் சினிமா வாய்ப்புக்கேட்டு நிறுவனங்களில் ஏறி இறங்கினார் அத்துடன் ஒரு கல்லூரியில் ஆங்கிலம் கற்க சேர்ந்தார்.
ஆனால் வருடங்கள் பல கடந்தும் யாரும் இவரிற்கு வாய்ப்புக்கொடுக்க முன்வரவில்லை. எனவே தானே ஒரு படத்தினைத் தயாரித்துவிடவேண்டும் என எண்ணினார். ஆனால் அதற்கு இவரிடம் போதிய பணம் இருக்கவில்லை. பணத்தை சேமிக்க ஆரம்பித்தார்.
தனது இருப்பிடத்திற்கே மாத வருமானத்தில் அதிகம் செலவாவதை உணர்ந்தவர், வாடகை அறையைவிட்டு விலகி தன் நண்பனின் அறையில் இலவசமாகத் தங்கினார். அங்கே இவரிற்குக் கட்டில் இருக்கவில்லை எனவே சோபாவில் படுத்து உறங்குவார்.
ஒரு குறும்படத்தினைத் தயாரிக்கப் பணம் சேரவே தனது படிப்பைக் கைவிட்டுவிட்டு, முழுமையாக குறும்படத் தயாரிப்பில் இறங்கினார்.
இவரின் முதல் படத்தின் பெயர் Multi-Facial. இந்தப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து, அதில் நடிக்கவும் செய்தார். இந்தப்படம் Cannes Film Festival இல் 1995 இல் காட்சிப்படுத்தப்பட்டது. அதன்பின் Strays என்ற ஒரு முழுநீள படத்தைத் தயாரித்தார். இந்தப் படங்களிலிருந்து இவரால் எந்த இலாபத்தையும் சம்பாதிக்க முடியவில்லை ஆனால் ஹாலிவுட்டின் புகழ்பெற இயக்குனர் Steven Spielberg இன் பார்வையில் இவரின் நடிப்புத்திறன் அகப்பட்டது.
அதில் கவரப்பட்ட இயக்குனர் அவரின் அடுத்த படமான Saving Private Ryan இல் இவரிற்கு ஒரு கதாப்பாத்திரத்தைக் கொடுத்தார். படம் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதன் பின்னர் பல்வேறு பட வாய்ப்புக்கள் Vin Diesel ஐ நாடி வந்தன. Pitch Black என்ற படத்தில் இவரது நடிப்புத்திறன் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
அதில் இவரது கதாப்பாத்திரமான Riddick இனை மையமாக வைத்து The Chronicles of Riddick (Riddick 1) திரைப்படம் வெளியாகி மிகப் பெரும் வரவேற்பைப்பெறவே, Vin Diesel ஹாலிவுட்டின் தவிர்க்கமுடியாத ஹீரோக்கள் பட்டியலில் சேர்ந்தார். ஆனால் அவரின் புகழை உச்சம் தொடவைத்தது Fast and the Furious வரிசைப் படங்களே..
Fast and the Furious
Fast and the Furious திரைப்படத்திற்கு முன்னரே Diesel ஹாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்தாலும் இவரிற்கு உலகமெங்கும் ரசிகர்களை உருவாக்கிய திரைப்படம் இதுவே. கார்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் இதுவரை 8 பாகங்களில் வெளியாகியுள்ளது, 2020 ஆம் வருடத்தில் இதன் ஒன்பதாவது பாகமும் வெளிவர இருக்கின்றது.
இதுவரை வெளியான அனைத்துப் பாகங்களும் வசூலில் சக்கைப்போடு போட்டன. Diesel இன் புகழ் இமயம் தொட்டது. ஹாலிவுட்டின் டாப் ஹீரோக்களுள் ஒருவரானார்.
இவரை எப்படியாவது தங்கள் படத்தில் இணைத்துவிடவேண்டும் என பல்வேறு பிரபல இயக்குனர்கள் வரிசையில் நிற்கின்றார்கள். ஆனால் இதே Vin Diesel தான் 1990 களில் உறங்குவதற்கு இடம் இல்லாமல் நண்பனின் வீட்டில் தங்கி வாழ்ந்தவர். இன்று நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்பது முக்கியமல்ல, நாளை எவ்வாறு மாறப்போகின்றீர்கள் என்பதே உண்மையான வெற்றி...
அடுத்த பதிவில் சந்திப்போம் ..........
கருத்துகள்