Nick Vujicic வாழ்கை பயணம்

உலகப்     புகழ்பெற்ற       தன்நம்பிக்கைப் பேச்சாளர்     Nick Vujicic   இன்    வலி நிறைந்த     வாழ்க்கை       வரலாறு.






உலகில்      பலநூறு         தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள்       இருந்தாலும்      அவர்களில் Nick Vujicic     தனித்துவமானவர்.     பல உலகத்      தலைவர்களிற்கும்    தன்னம்பிக்கை         சொல்லிக்கொடுப்பவர். பல்லாயிரம்     மனிதர்களின் வாழ்க்கையையே         மாற்றியமைத்தவர்.








இந்திய      உட்பட     உலகின் முக்கால்வாசிக்கும்      அதிகமான   நாடுகளில்         உரையாற்றியுள்ளார்.
இவ்வாறு      பல்வேறு       புகழிற்குச் சொந்தமான     Nick     இன்      இறந்தகால வாழ்க்கை     மிக      வேதனை    மிகுந்ததாகவே        அமைந்தது.     தங்கள் வாழ்க்கையைக்       குறை கூறிக்கொண்டிருப்பவர்கள்         இவரின் வாழ்க்கை       பற்றி        அறிந்துகொண்டால் தாங்கள்      எவ்வளவு        பாக்கியசாலிகள் என          உணர்ந்துகொள்வார்கள்.









1982   இல்     ஆஸ்ட்ரேலியாவின்     மெல்பன் நகரில்       நடுத்தர      குடும்பத்தைச்     சேர்ந்த தம்பதிக்கு       ஒரு        குழந்தை      பிறந்தது. அந்தக்        குழந்தையைப்        பார்த்தவுடன் அதன்       தந்தை      வாந்தியெடுத்துவிட்டார். தாய் "     இது      என்      குழந்தையே    அல்ல.." எனக்      கத்த       ஆரம்பித்துவிட்டார். இதற்கெல்லாம்      காரணம்      அக்குழந்தை பிறக்கும்போதே       இரண்டு      கைகளும், இரண்டு       கால்களும்     அற்ற     நிலையில் வெறும்        தலையும்,       உடலும்      கொண்ட உருவமாகப்       பிறந்தது.








சில       மணி         நேரங்களில்      மனதை அமைதிப்படுத்திக்கொண்ட       அத் தம்பதியினர்       கடவுள்       தங்களுக்களித்த அக்குழந்தையை       மனமாற ஏற்றுக்கொண்டனர்.       மற்ற      குழந்தைகள் போலவே        இவனையும்    வளர்க்கவேண்டும்      என      முடிவு செய்தனர்.      Nicholas James Vujicic    என பெயர்      சூட்டி       அன்புடன்        வளர்க்க ஆரம்பித்தனர்.
பிற்காலத்தில்      அந்தப் பெயர்      சுருக்கமாக Nick Vujicic    என        மாறிவிட்டது.









அக்காலத்தில்      Nick      போன்ற    குறையுள்ள      குழந்தைகள்       சாதாரண பாடசாலைகளில்      கல்வி      கற்பது     தடை     செய்யப்பட்டிருந்தது.       குறைபாடு     உள்ள குழந்தைகளுக்கென        தனியான பாடசாலைகள்       bஇயங்கிவந்தன. இருப்பினும்       Nick       பள்ளிப்பருவத்தை அடைந்தபோது       இந்த      சட்டம் மாற்றப்பட்டு       அனைத்து      குழந்தைகளும் ஒன்றாக      கல்விகற்கமுடியும்      என்ற    சட்டம்          கொண்டுவரப்பட்டது.








Nick      தனது      குறையை      உணரக்கூடாது என     விரும்பிய      அவரது      பெற்றோர்கள் சாதாரண    மாணவர்கள்         கல்விகற்கும் பாடசாலையிலேயே     Nick    ஐயும் சேர்த்தனர்.      அந்த       மாநிலத்திலேயே சாதாரண      பள்ளியில்       சேர்ந்த குறைபாடுள்ள      முதல்      மாணவர்     Nick தான்.









ஆனால்      நடந்தது      மிக்க கொடுமையானது.      Nick        இனை பள்ளியிலுள்ள      சக     மாணவர்களால் ஏற்கமுடியவில்லை.       அவரை       ஒரு தீண்டத்தகாத      பொருளாக      அனைவரும் நடத்த     ஆரம்பித்துவிட்டனர்.       அவருடன் யாரும்      பேசமாட்டார்கள்.        எதிலும் சேர்த்துக்கொள்ள      மாட்டார்கள்.     தொடர்ந்து      பகிடிவதை      செய்வார்கள். ஏன்     அடிக்கவும்       செய்தார்கள்.     இது   Nick.    இன்   6    வயதிலேயே     நடந்துவிட்டது.       இதனால்    சிறுவயதிலேயே      மிகுந்த       மன அழுத்தத்திற்கு        ஆளானார்.










தனது     8   வயதில்       வீட்டிற்குச்     சென்று தற்கொலை         செய்துகொள்ளும் எண்ணத்துடன்     பாடசாலையில் அமர்ந்திருந்தார்      Nick.      சக    மாணவி ஒருவர்        சோகத்தில்        அமர்ந்திருந்த அவரிடம்      வந்து      "Nick     நீயும் அழகானவன்தான்      ஆனால்      உன் அழகை       மற்றவர்களால்      உணர முடியாது,        ஆனால்       அதை       நான் உணர்கின்றேன்"        எனக்      கூறிவிட்டுச் சென்றார்.       அந்தக்      கணம்      இவனினுள் தன்னம்பிக்கை       பிறந்தது.       தற்கொலை எண்ணத்தைக்       கைவிட்டுவிட்டு     பாடல்கள்,        விளையாட்டுக்கள் போன்றவற்றில்        கவனம்          செலுத்த ஆரம்பித்தார்.









காலங்கள்      கடந்தன.      இருப்பினும் தன்னைச்      சுற்றியுள்ளவர்களின்     நச்சு வார்த்தைகளால்      மனமுடைந்துபோனார் Nick.    தனது     10 வயதில்      தற்கொலை முயற்சி      செய்தார்.      ஆனால்      எப்படியோ பெற்றோர்கள்       இவரைக்       காப்பாற்றி மருத்துவமனையில்       அனுமதித்தனர். உயிர்       தப்பித்தாலும்     2    வாரங்கள் கோமா      நிலையில்      இருந்தார்.     கண் திறந்தவர்      தன்      செயலால்     தனது    தாய்        படும்       வேதனையைக்       கண்டு மனமுடைந்துபோனார்.       இனி வாழ்க்கையில்       தற்கொலை        பற்றி எண்ணப்போவதில்லை       என முடிவெடுத்தார்.        சாதாரண     ஒரு    மனிதன்        எவ்வாறு         வாழ்வானோ அதேபோலவே       தானும்       வாழவேண்டும் என     வைராக்கியம்         கொண்டார்.









இரு     கைகள்,     இரு     கால்கள்    இல்லாமல் நீச்சல்      கற்றுக்கொண்டார்,      உதைப்   பந்து     விளையாடினார்,        கோல்ப் விளையாடினார்,      இசைக்       கருவிகள் வாசிக்கக்      கற்றுக்கொண்டார்,    நீர்ச்சறுக்கு       விளையாட்டைக் கற்றுக்கொண்டார்     ஏன்     கணனியில்    மிக வேகமாக    type    செய்யவும் கற்றுக்கொண்டார்.     இவை     அனைத்தையும்       தனது      கால் இருக்கவேண்டிய      இடத்தில்     இருந்த    சிறு    பாதத்     துண்டை     வைத்து     செய்தார்.










Nick     அதிகம்      கடவுள்       நம்பிக்கை கொண்டவர்.     தனது        இளமைப் பருவம்வரை      தனக்கு       எப்படியாவது கைகளும்         கால்களும் முளைத்துவிடவேண்டும்     என     கடவுளிடம் வேண்டிக்கொண்டே       இருந்தார்.    ஒரு  நாள்      பத்திரிக்கையில்     மிகக் கடுமையான     நோயினால்     பாதிக்கப்பட்ட ஒருவரைப்      பற்றிய      செய்தியை     இவர் படிக்க    நேரிட்டது.      அப்போதே    தன்னைவிட       மோசமான      வாழ்க்கை கொண்ட     பலர்      இருப்பதை       அறிந்தார். இவ்வாறான     மனிதர்களிற்கு      உதவி செய்வதே     தான்      படைக்கப்பட்ட    நோக்கம்      என      உணர்ந்தார்    Nick. இதுவே     Nick    இனை     ஒரு தன்னம்பிக்கைப்     பேச்சாளராக    மாற்றியது.










பல     மேடைகளில்     பேசினார்,     இரு கைகளும்,      கால்களும்      இல்லாத    ஒருவர்          தன்னம்பிக்கையையும் வாழ்க்கையையும்     பற்றிப்      பேசுவது அனைவரையும்      வியப்பில்      ஆழ்த்தியது. Nick  இன்     புகழ்     கொஞ்சம்    கொஞ்சமாகப்      பரவ      ஆரம்பித்து     இன்று      உலகெங்கும்      பரவி    விட்டது. 2012    இல்    Kanae Miyahara     என்ற பெண்ணைக்      காதலித்துத்       திருமணம் செய்துகொண்டார்.       இவர்களிற்கு   4 குழந்தைகள்         பிறந்தனர்.








இன்று      உலகெங்கும்       பலரால் விரும்பப்படும்      தன்னம்பிக்கைப்  பேச்சாளர்      என்றால்     அது    Nick   தான். ஆனால்     தனது      இன்றைய    வெற்றிக்கு அடிப்படையாக        அமைந்தது     8   வயதில் சக    மாணவி      கூறிய     " நீயும் அழகானவன்தான்      Nick"      என்ற வார்த்தைகள்தான்      என    இவர்     அடிக்கடி குறிப்பிடுவார்.









வாழ்வின்     வெற்றிக்கு     Nick Vujicic    கூறும்    டாப்   8   அறிவுரைகளை     இங்கு பார்க்கலாம்.





1.     உங்கள்       வாழ்வில்      எந்த    அதிசயமும்     நடக்கவில்லை     எனில், இன்னொருவரது      வாழ்வின்     அதிசயமாக நீங்கள்      மாறுங்கள்.






2.     "நீங்கள்      எவ்விதத்திலும் சிறந்தவரல்ல,     உங்களால்      எதுவும் முடியாது"     இவை     இரண்டுமே     உங்கள் வாழ்வில்      நீங்கள்       கேட்கும்
மிகப்பெரும்         பொய்கள்.






3.      இறந்தகால     வலிகளில்     உங்கள்  வாழ்க்கையைச்      சிக்கவைக்காதீர்கள்.   அது       உங்கள்       நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும்     இல்லாமல் செய்துவிடும்.







4.     முயற்சிசெய்யுங்கள்.     முயற்சி  வாழ்வின்     ஒரு     பகுதியல்ல.     முயற்சியே வாழ்க்கை.     பயத்திற்கும்       கனவிற்கு இடையிலேயே     உங்கள்       வாழ்க்கை இருக்கின்றது.






5.   பயமே     ஒருவனின்     மிகப்பெரிய இயலாமை.     அது       பக்கவாதத்தைவிட மோசமாக    அவனை      முடக்கிவிடும்.






6.     மாற்றங்கள்     மிக    முக்கியமானவை. ஏனெனில்     வாழ்க்கை     எப்போதும்    நாம் விரும்பும்படி     அமையாது.     சிலவேளை நம்மை      மாற்றிக்கொள்ளத்தான்  வேண்டும்.






7.    உங்கள்     குறைகளைப்     பயன்படுத்தி வாழாதீர்கள்.     மாறாக      திறமைகளைப் பயன்படுத்தி       வாழுங்கள்.





8.   எனது     நம்பிக்கையை    இழக்காதவரை நான்    ஊனமுற்றவனாகமாட்டேன்.




மிண்டும்   அடுத்த   பதிவில்    சந்திப்போம். ......






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்