Lionel Messi வாழ்க்கை பயணம்
உங்களுக்கு உதைப்பந்தாட்டத்தில் பெரியளவில் ஈடுபாடு இல்லாவிட்டாலும் Messi இனை அறிந்திருப்பீர்கள். அந்த அளவிற்கு பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யமானவர். தனது சக போட்டியாளர்களைவிட மிகவும் குறுகியவராக இருந்தாலும் தனது திறமையால் அனைவரையும் மிஞ்சிய சாதனையாளராக வலம் வருபவர்.
ஆரம்ப காலகட்டம்
Messi குழந்தையாக இருக்கும்போதே உதைப்பந்தாட்டத்தில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். மிகவும் நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்த இவர் வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது வளர்ச்சி மிகவும் குறைவாக இருந்ததால் சிறுவயது முதலே அனைவராலும் ஒரு கேலிப் பொருளாகவே பார்க்கப்பட்டு வந்தார்.
தனது நாட்டின் தேசிய அணிக்காக விளையாடவேண்டும் என்பது Messi இன் சிறுவயதுக் கனவு. இதனால் தனது பாடசாலை உதைப்பந்தாட்டக் குழுக்களில் இணைந்து விளையாடினார். தினமும் மிகக் கடுமையாகப் பயிற்சி செய்வார். மிகச் சிறந்த வீரராக இருந்தாலும் இவரின் குள்ளத் தோற்றத்தால் இவரது திறமைகளிற்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
பல தடைகளிலும் இவரிற்கு மிகப் பெரும் துணையாக இருந்தவர் இவரது பாட்டி. இவரது அனைத்துப் போட்டிகளிற்கும் செல்வார். தொடர்ந்து தன்னம்பிக்கையூட்டுவார். தனது பாட்டியே இந்த மிகப் பெரும் வெற்றிக்கு காரணம் என Messi அடிக்கடி குறிப்பிடுவார்.
வளர்ச்சியற்ற குழந்தை
இவரது 10 ஆவது வயதில் பாட்டி இறந்துவிடவே மனமுடைந்துபோனார். பல வாரங்கள் உதைப்பந்தை தொடவேயில்லை. இதனை அவதானித்த இவரது தந்தை ஊக்கமூட்டி மீண்டு உதைப்பந்து விளையாட அனுப்பிவைத்தார்.
ஆரம்பத்தில் இவர் குள்ளமாக. இருப்பதை பெற்றோர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் வயது செல்லச் செல்ல உயரம் அதிகரிக்காமல் இருப்பதை அவதானித்தவர்கள் Messi இனைப் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போதே இவர் ஹார்மோன் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
Messi இனைக் குணப்படுத்த பல ஆயிரம் டாலர்கள் தேவைப்பட்டது. அவ்வளவு அதிக பணம் அவரது பெற்றோர்களிடம் இருக்கவில்லை. எனவே Messi விளையாடிய உதைப்பந்தாட்டக் கழகங்களின் உதவியை நாடினார்கள். அனைவரும் கைவிரித்தனர். தனது குழந்தையின் வாழ்க்கை அழியப்போகின்றது என்ற முடிவிற்கே வந்துவிட்டார்கள் Messi இன் பெற்றோர்கள்.
இறுதியில் ஒரு வெளிச்சம்
Messi பற்றிய தகவல்கள் ஸ்பெயின் நாட்டின் FC Barcelona உதைப்பந்தாட்ட கிளப்பின் நிர்வாகியைச் சென்றடைந்தது. இந்தக் குழந்தை தங்கள் அணிக்காக விளையாடவேண்டும் என்று விரும்பினார் அவர்.
உடனே Messi இடம் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தார்கள். Messi தனது வாழ்நாள் முழுவதும் FC Barcelona கிளப்பிற்காக விளையாட சம்மதித்தால் அவரின் மருத்துவ செலவுகளை தாங்களே ஏற்றுக்கொள்வதாக Messi இன் பெற்றோர்களிடம் கூறினார்கள் கிளப் நிர்வாகிகள். அப்போது Messi இன் வயது 13.
அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட Messi குடும்பம் அர்ஜென்டீனாவை விட்டு வெளியேறி ஸ்பெயின் நாட்டில் குடியேறினார்கள். Messi இன் சிகிச்சையும் ஆரம்பமாகியது. அந்த சிகிச்சைகள் மிகவும் வேதனை தரக்கூடியதாக இருந்தன.
அந்த சிகிச்சைகள் 3 வருடங்கள் நடைபெற்றன. என்ன நடந்தாலும் தனது கனவை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி Messi இடம் குறையவில்லை. கிடைக்கும் நேரமெல்லா பயிற்சி செய்வார். தனது குள்ள உருவத்தை மறைத்துவிடுமளவிற்கு மிகச் சிறந்த திறமைகளை வளர்த்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டினார் Messi.
சிகிச்சைகள் முடிந்ததும் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தார். அவரின் திறமைகளும் வளர ஆரம்பித்தன. தொடர்ந்து உழைத்தர். பல வருடங்கள் கடந்தன. 17 வருடங்கள் 114 நாட்களின் பின்னர் தனது கனவை அடைந்தார் Messi. FC Barcelona அணிக்கான இவரது முதலாவது சர்வதேச விளையாட்டில் கலந்துகொண்டார். அன்றே ஆரம்பித்தது இவரது வெற்றி.
Messi இன் புகழ் சிறிது சிறிதாக. பரவ ஆரம்பித்து உச்சத்தை அடைந்தது. தனது தாய் நாடான அர்ஜென்டீனா உதைப்பந்தாட்டக் குழுவில் இணைந்தார். பல்வேறு விருதுகளை வென்றார். இன்று அனைவராலும் விரும்பப்படும் உதைப்பந்தாட்ட வீரராக வலம் வருகின்றார்.
மிண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் .....
கருத்துகள்