Jack Ma வின் வாழ்கை பயணம்



கூலி   வேலைக்கே   தகுதியில்லாத   முட்டாள், இன்று    251,200   கோடிகளின்   அதிபதி..



வாழ்வில்    முன்னேறத்    துடிக்கும் அனைவரிற்கும்    ஒருவரின்    வாழ்க்கையே பாடமாக     அமையுமானால்     அது    Alibaba நிறுவனத்தை     ஆரம்பித்த    Jack Ma வின் வாழ்க்கையாகவே     இருக்கமுடியும்.








மிக   மிக    ஏழ்மையில்    பிறந்து,   சரியான கல்வியில்லாமல்,    கையில்    பணமில்லாமல்,     உதவிக்கு  யாருமில்லாமல்     அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு    ஒரு   முட்டாளாக   30 வயதுவரை   வாழ்ந்தவர்,    தனது நாற்பதாவது    வயதில்     சீனாவில்    அதிகம் பணம்    படைத்த    கோடீஸ்வரராக    மாறிய வெற்றி     வரலாறையே    நாம்   இங்கு பார்க்கவிருக்கின்றோம்.





ஆரம்ப காலகட்டம்



Jack Ma,   1964 இல்    சீனாவில்    Hangzhou பகுதியில்    பிறந்தவர்.    இவரது    இயற்பெயர்   Ma Yun.    மிக   மிக வறுமையான   குடும்பத்தில்    பிறந்த   இவர், தனது   இளைமைக்   காலம்     முழுக்க ஏழ்மையால்    மிகவும்     கஷ்ட்டப்பட்டார்.




Ma    எப்போதும்     எதையாவது கற்றுக்கொள்ளும்      ஆர்வத்துடனேயே இருப்பார்.     சிறுவயதிலேயே      ஆங்கிலம் கற்றுக்கொள்ள   விரும்பியவர்    சுற்றுலாப் பயணிகளிற்கு     வழிகாட்டியாகச்    சேர்ந்தார்.     அவ்வாறு     இவர்     சந்தித்த  ஒரு     பயணியே     இவரிற்கு    Jack Ma   எனப் பெயர்    சூட்டினார்.    அன்றிலிருந்து    அதுவே    இவரின்    பெயராகவும் மாறிவிட்டது.





தோல்விகள்




Jack Ma  தோல்விகளிற்குப்   பெயர்  போனவர்.    தனது    வறுமையைப்   போக்க கிடைக்கும்     வேலைகளையெல்லாம் செய்யவேண்டும்     என      முடிவெடுத்தார். ஆனால்    இவர்    மிகவும்      மெலிந்த தோற்றமுடையவராக    இருப்பதால் கூலிவேலை     கூட        இவரிற்கு கிடைக்கவில்லை.





போலீஸில்    இணையச்    சென்றார், இவருடன்    சென்ற    மற்ற     அனைவரையும் சேர்த்துக்கொண்டு     இவரை    மட்டும்  விரட்டி     விட்டனர்.    சீனாவிற்கு     KFC வந்தபோது    அங்கே வேலைகேட்டுச் சென்றார்.    "நீ பார்ப்பதற்கு      மிகவும் அசிங்கமாக     உள்ளாய்,      எங்கள் வாடிக்கையாளர்கள்        உன்னை விரும்பமாட்டார்கள்"     எனக்     கூறித் துரத்திவிட்டார்கள்..






Harvard    பல்கலைக்கழகத்தில்    கல்வி கற்கவேண்டும்    என்பது    இவரது    பெரும் ஆசையாக    இருந்தது.    10  தடவைகள் நேர்முகப்    பரீட்சைக்கு     விண்ணப்பித்தார். இவரை     பரீட்சைக்கு     அனுமதிக்கக்   கூட Harvard     நிர்வாகிகள்       விரும்பவில்லை. எதிலும்     மனம்    உடைந்துபோகாத     Jack "என்றாவது     ஒருநாள்     Harvard   இல்   நான்   பாடம்    நடத்துவேன்"   என    தன்னுள் சபதம்      எடுத்துக்கொண்டார்.







இந்த    சம்பவத்தை    2017 இல்,    Harvard. இல்    நடைபெற்ற     ஒன்றுகூடலில் நகைச்சுவையாகக்    கூறினார்    Jack.
என்    வாழ்வில்    இவ்வாறு    30 தடவைகளுக்குமேல்     தோற்று    அவமானம் அடைந்துள்ளேன்.     ஆனால்      அந்த அவமானங்களே    எனக்குள் சாதிக்கவேண்டும்    என்ற     வெறியினை உருவாக்கியது    என்கிறார்   Jack.





Alibaba விற்கு முன்



முதல்    முதலாக     இணையம்    பற்றித் தெரிந்துகொண்டபோது    அது    இவரை மிகவும்     கவர்ந்துவிட்டது.     எனவே    ஒரு தொழில்நுட்ப     நிறுவனத்தை ஆரம்பித்துவிட      வேண்டும்     என முடிவெடுத்தார்    Jack.     அது    1995 ஆம் வருடம்.    அதன்பின்     இவர்     ஆரம்பித்த இரண்டு     நிறுவனங்கள்    மிகப்   பெரும் நஷ்ட்டமடைந்தன.






பின்னர்     அரசாங்கத்துடன்    இணைந்து சீனாவில்     தொழில்நுட்பத்தை    மேம்படுத்த நினைத்தார்      அதுவும்      தோல்வியிலேயே முடிவடைந்தது.





Alibaba நிறுவனத்தின் ஆரம்பம்




1999 இல்    தன்னைப்போல புறக்கணிக்கப்பட்ட     17    பேரை     தன்னுடன் இணைத்துக்கொண்டு,     தங்கள் சேமிப்புக்களை     மட்டுமே     வைத்து   Alibaba நிறுவனத்தை     ஆரம்பித்தார்.    3.  வருடங்கள்    அந்த     நிறுவனத்திற்கு    ஒரு ரூபாய்    கூட இலாபம்    கிடைக்கவில்லை.






அனைவரும்    இது     ஒரு     முட்டாள்தனமான முயற்சி    என   கேலி      செய்தார்கள். இருப்பினும்    Jack     தனது      முயற்சியில் பின்வாங்கவில்லை.     வங்கிகளிடம்   கடன் கேட்டுச்     சென்றார்.     ஒரு    வங்கி   கூட அதற்கு      முன்வரவில்லை.
தொடர்     தோல்விகளில்    தவித்துக் கொண்டிருந்த   Jack  இன்   வாழ்வில் திடீரென   வசந்தம்   வீச    ஆரம்பித்தது.








Goldman   என்ற   நிறுவனத்திடமிருந்து Alibaba    நிறுவனத்திற்கு    5  மில்லியன் அமெரிக்க    டாலர்கள்    முதலீடு   கிடைத்தது. அதை    வைத்து    தனது    நிறுவனத்தை அசுர   வேகத்தில்    முன்னேற்றினார்.   பணம் கொட்ட   ஆரம்பித்தது.    மேலும்    பல நிறுவனங்களை       ஆரம்பித்தார்.






பல     நிறுவனங்களை     வாங்கினார். Alibaba   வுடன்    போட்டிபோட   முடியாமல் eBay   சீனாவைவிட்டே    வெளியேறியது. போட்டி    நிறுவனங்கள்    அனைவரும் ஒதுங்கி   Jack ற்கு    வழி    விட்டனர்.    இன்று சீனாவை     ஆண்டுகொண்டிருக்கும் நிறுவனமாக    Alibaba    மாறியது.    சீனாவில்     அதிகம்    பணம்    படைத்தவராக Jack Ma     மாறினார்..







தன்    வெற்றிக்கு    முக்கியகாரணமாக   Jack Ma   சொன்ன   8  விடயங்களைப்    பற்றிப் பார்க்கலாம்...




1.    புறக்கணிப்புக்களைப்     பயன்படுத்திக்  கொள்ளுங்கள்
உங்களையோ    அல்லது     உங்கள் முயற்சியையோ    ஒருவர்    புறக்கணிப்பது என்பது    மிகவும்    சாதாரண    விடயம். உலகிலுள்ள     அனைத்து     மக்களும் ஒருபோதும்     ஒருவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.    எனவே  நீங்கள்     புறக்கணிக்கப்படும்போது    மனம் தளராது    உங்கள்     தன்னம்பிக்கை    மற்றும் கடின    உழைப்பை      மென்மேலும் அதிகரிக்கவேண்டும்    என்பதே    Jack Ma மிகவும்     வலியுறுத்தும்     விடயம்..







2.    உங்கள்    கனவுகளை     எப்போதும் நினைவில்      வைத்துக்கொள்ளுங்கள்
உங்கள்     வணிகத்தை     முதல்    நாள் ஆரம்பிக்கும்போது    அதை     எந்த நிலைமைக்கு     கொண்டுபோக    வேண்டும் என்று    கனவு    கண்டீர்களோ,    அதே கனவை    ஒவ்வொரு     நாளும்    உங்கள் மனதில்     நிறுத்திவைத்து     உங்கள் வணிகத்தை     நடத்தவேண்டும்   என்கின்றார்    Jack Ma.







3.    உங்கள்     நிறுவனத்தின்    கலாச்சாரத்தில்     எப்போதும்     கவனமாக இருங்கள்     எப்போதும்     ஒரு     வணிகம் ஆரம்பிக்கும்போது    அது     மக்களுக்கு   அதிகம்    பயனுடைய    சேவைகளை வழங்குவதிலேயே     குறியாக      இருக்கும், இருபினும்     காலம்     செல்லச்செல்ல   அதிக பணமீட்டவேண்டும்     என்ற     எண்ணத்தில் வாடிக்கையாளர்களுக்கு    தரமான சேவையை    வழங்க     அவ்வணிகம் தவறிவிடுகின்றது.     இவ்வாறு செயலாற்றும்     வியாபாரங்களால் எப்போதும்    சந்தையில்      நிலைத்துநிற்க முடியாது   என்கிறார்   Jack Ma









4.    சிறுமையானவர்களைப் புறக்கணியுங்கள்    நீங்கள்    ஒரு    விடயத்தை    ஆரம்பிக்கும்போது    உங்களைச்    சுற்றியுள்ள   பலர்   இது உன்னால்    முடியாது,     இது    சாத்தியமற்றது,     இது    உனது    தகுதிக்கு மிகவும்      அதிகமானது    என    பல்வேறு குறைபாடுகளைக்     கூறிக்கொண்டே இருப்பார்கள்.    எனினும்     நீங்கள் ஆரம்பிக்கும்     விடயம்     உண்மையிலே உங்களுக்கும்      உங்கள்  வாடிக்கையாளர்களுக்கும் பிரயோசனமானதாக      இருக்கும்     என நீங்கள்    கருதினால்    குறை கூறுபவர்களைப்     புறக்கணித்துவிட்டு அதனை       ஆரம்பியுங்கள்.








5. உங்களைச்     சுற்றியுள்ளவற்றில்    இருந்து ஊக்கம்     அடைபவராக    இருங்கள்
திரைப்படங்களில்     இருந்தே     தனக்குத் தேவையான    ஊக்கத்தை எடுத்துக்கொள்வதாக    சொல்கின்றார்  Jack Ma   தனக்குப்    பெருமளவு    துன்பங்கள் ஏற்படும்    சந்தர்ப்பத்தில்     Forrest Gump திரைப்படத்தைப்     பார்ப்பதாகவும், Bodyguard    என்ற    திரைப்படத்திலிருந்தே மக்களிடம்     பேசும்     முறையைக் கற்றுக்கொண்டதாகவும்    கூறுகின்றார் இந்த      கோடீஸ்வரர்.








6. வாடிக்கையாளர்களுக்கே    எப்போதும் முதலிடம்     உங்கள்     வணிகத்தின் வாடிக்கையாளர்களே      உங்களுக்கு பணத்தைக்     கொண்டுவருபவர்கள்.   எனவே     உங்கள்     நிறுவனம்    எப்போதும் உங்கள்    வாடிக்கையாளர்களின்    தேவையை     அறிந்து     அவற்றைப்    பூர்த்தி செய்வதாக   இருத்தல்   வேண்டும் என்கின்றார்    Jack Ma








7. குறை    கூறாதீர்கள்,   குறைகளில் இருக்கும்      வாய்ப்புக்களைக் கண்டுகொள்ளுங்கள்
எதற்கெடுத்தாலும்     குறை    கூறிக்கொண்டு திரியாதீர்கள்,    மக்கள்    அதிகமாக    எந்த விடயத்தில்    குறை    கூறுகின்றார்களோ அந்த    விடயத்தை     கண்டுபிடித்து   அந்த குறைகளை     நிவர்த்தி    செய்யும் வியாபாரத்தை       ஆரம்பியுங்கள்.







8. உங்கள்     வணிகத்தில்     அதீத    ஆர்வம் கொண்டவராக      இருங்கள்
இவ்வாறு     அதீத    ஆர்வம்     இருந்தால் மட்டுமே     உங்கள்     வியாபாரத்தில் எவ்வளவு     பெரிய    தடைகள்     ஏற்பட்டாலும் அவற்றை     உடைத்தெறிந்து     வேகமாக முன்னேறிச்செல்ல     முடியும்    என்கின்றார் Jack Ma.





மிண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். .....







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்