சாய் பல்லவி வாழ்கை பயணம்

                சாய் பல்லவி வாழ்கை பயணம் 



இந்திய திரைப்பட துறையில் இருக்கும் மிக குறைவான தமிழ் நடிகைகளில் ஒருவர்,  தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்றாலும்,கதாநாயகியாக அறிமுகமானது மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த “பிரேமம்”திரைப்படத்தில்.
மலர் டீச்சர் என ரசிகர்களிடத்தில் பெரும் கவனிப்பை ஈர்த்தவர் .






தொடக்கக்கால வாழ்க்கை



தமிழ் நாட்டிலுள்ள கோத்தகிரியில்  செந்தாமரை கண்ணன் மற்றும் ராதா கண்ணன் ஆகியோருக்கு மகளாக சாய் பல்லவி பிறந்தார். இவருடைய இளைய சகோதரி பூசா கண்ணன் ஆவார். இவரும் ஒரு திரைப்பட நடிகையாவார்  . சாயி பல்லவி வளர்ந்தது கல்வி கற்றது அனைத்தும் கோயம்புத்தூர் ஆகும். சாய் பல்லவி 2016 இல் சியார்ச்சியா நாட்டில் டிபிலிசு மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தார் .





வாழ்க்கைப் பணி



நான் ஒரு பயிற்சி பெற்ற நடனக் கலைஞர் இல்லையென்றாலும், என்னுடைய தாயாரைப் போல நான் எப்போதும் நடனமாடுவதையே விரும்புகிறேன் என்று சாய் பல்லவி ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.





சாய் பல்லவிக்கு நடனத்தின் மீது இருந்த தீராத ஆசை காரணமாக இவர் 2008 ஆம் ஆண்டு விஐய்  தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்நேர நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
2009 இல் இ.டி.வி. தெலுங்கு நிகழ்ச்சியான தி அல்டிமேட்டு டான்ஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்  .




திரைப்பட வாழ்க்கை



தொடக்கத்தில் சாய்  கஸ்த்தூரி மான் போன்ற சில திரைப்படங்களில் தோன்றினார் . 2008-ஆம் ஆண்டு தாம் தூம் திரைப்படத்தில் கங்கனாவின் தோழியாக ஒரு சீனில் தோன்றுவார்.





2014 ஆம் ஆண்டில் சியார்ச்சியாவிலுள்ள டிப்லிசியில் சாய் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தபோது இயக்குநர் அல்போன்சு புத்தாரென் தன்னுடைய பிரேமம் படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். கல்லூரியின் விடுமுறை நாட்களில் மட்டும் சாய் படத்தில் நடித்துக் கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்ததும் சாய் மீண்டும் கல்லூரிக்குத்  திரும்பிவிடுவார் . அந்த ஆண்டில் சாய் பிலிம்பேரின் சிறந்த அறிமுக பெண் நடிகை உள்ளிட்ட பல விருதுகளை வென்றார்.






2015 ஆம் ஆண்டில் சாய் பல்லவி தன்னுடைய இரண்டாவது திரைப்படமான காளியில் முழுமூச்சாக நடித்தார். இப்படம் 2016 இல் வெளியிடப்பட்டது .  ஒரு கணவனின் பொல்லாத கோபத்திற்கு ஆளாகும் அஞ்சலி என்ற இளம் மனைவியாக சாய் இப்படத்தில் நடித்தார், மலையாளத்தில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதிற்காக இவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது .







2017 ஆம் ஆண்டு தெலுங்கில் சேகர் கம்முலாவின் பிடே என்ற திரைப்படத்தில் தெலுங்காணாவிலிருந்து வரும் பானுமதி என்ற சுதந்திரமான கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் .






இயக்குநர் ஏ.எல். விஜயின் கரு என்ற திரப்படம் இவருக்கு அடுத்த படமாக அமைந்தது  . தெலுங்கு தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் இத்திரப்படம் தயாரானது.






சமீபத்தில் சாய் பல்லவியின் நடத்தையைப் பற்றி சில வதந்திகள் கூறப்பட்டன. படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவதாகவும் தளத்தில் அநாகரிமாக நடந்து கொள்ளுவதாகவும் அண்மையில் ஒரு நேர்காணலில் சாய் பல்லவியுடன் இணைந்து நடிக்கும் நாகசூரியா தெரிவித்துள்ளார். இப்பேட்டி சாய் பல்லவியின் திரை வாழ்க்கைக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது .






நாகசூரியாவின் கருத்துக்களை தான் பெரிதும் மதிப்பதாகவும் ஆனால் அந்த வதந்திகள் எங்கிருந்து வந்தன என்பது தெரியாது என்றும் பல்லவி தெரிவித்துள்ளார் . சர்வானந்த் உடன் படிபடி லெச்ச மனசு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க 2018 பிப்ரவரியில் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.






மிண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். ....








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்