Cristiano Ronaldo கூறும் வெற்றிக்கான விதிகள்
இவர் European Golden Shoe Award இனை நான்கு முறை வென்றவர், உலகிலே அதிகம் பெறுமதி வாய்ந்த கால்பந்து வீரர். Cristiano Ronaldo கூறும் வெற்றிக்கான 10 விதிகளை இங்கு பார்க்கலாம்.
1. Just Play - எப்போதும் மகிழ்ச்சியாக விளையாடுங்கள்
உங்கள் வாழ்வின் எந்த தருணமாக இருந்தாலும் அதை மகிழ்ச்சியாக எதிர்கொள்ளுங்கள்.
எதையும் பற்றி அதிகமாக கவலை கொள்வதோ அல்லது சிந்திக்கவோ தேவையில்லை. ஆனால் முயற்சியை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள் என்கிறார் Ronaldo.
2. போட்டியை தைரியமாக ஏற்றுக்கொள்ளுங்கள்
உங்களிற்கு ஒருவரிடமோ (அல்லது ஒரு வணிகத்திடமோ) போட்டிபோடும் நிலைமை ஏற்பட்டால் அதை தைரியமாக ஏற்கவேண்டும் என்கிறார் Ronaldo.
ஆனால் வணிகத்தைப் பொறுத்தவரை முடிந்தவரை போட்டி சூழலை தவிர்க்கவேண்டும் என்பது அதிகமான வல்லுனர்கள் கூறும் அறிவுரை
3. எப்போதும் புதுப்புது சவால்களை எடுத்துக்கொள்ளுங்கள்
என்றும் சவால்கள் மட்டுமே நம்மை ஒரு படி மேலே கொண்டுசெல்லக்கூடியவை, மேலும் சவால்களே வளர்ச்சியின் அடையாளம் என்கிறார் Ronaldo.
4. உங்களுக்கு எது முக்கியமானதோ அதில் கவனம் செலுத்துங்கள்
உங்கள் முன் இரண்டு தெரிவுகள் வைக்கப்பட்டால் அதில் உங்களுக்கு மிக முக்கியமானதை மட்டுமே தேர்ந்தெடுங்கள்.
மற்றையது உங்கள் கையை விட்டுப் போவதைப்பற்றி என்றும் கவலை கொள்ளவேண்டாம்.
5. மக்கள் எப்போதும் உங்களை விமர்சித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.
நீங்கள் எவ்வளவு சிறப்பாக ஒரு விடயத்தை செய்தாலும் மக்கள் எப்போதும் உங்களை விமர்சித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.
நீங்கள் வெற்றிபெற வேண்டுமாயில் மக்களின் புலம்பலை புறம்தள்ளிவிட்டு உங்களது இலக்கில் கவனம் செலுத்தவேண்டும். உங்களது இலக்கினை அடைய ஒரு விடயத்தை செய்யவேண்டும் என்றால் உலகமே எதிர்த்தாலும் அதனை செய்துமுடியுங்கள் என்கிறார் Ronaldo.
6. கடின உழைப்பு மட்டுமே வெற்றியைப் பெற்றுத்தரும்
கடினமாக உழையுங்கள். எப்போதும் மனம் தளரவோ, சோம்பேறித்தனம் கொள்ளவோ வேண்டாம். அதுவே வெற்றிக்கான வழி.
7. நீங்கள் சிறப்பானவர் என்பதை முதலில் நம்புங்கள்.
உங்கள் துறையில் நீங்கள் சிறப்பானவர் என்பதை நம்புங்கள். ஒருவேளை நீங்கள் சிறப்பானவராக இல்லாமலும் இருக்கலாம் ஆனால் நீங்கள் சிறப்பானவர் என்பதையே நம்புங்கள். தொடர்ந்து உங்கள் திறமைய வளர்க்க பயிற்சி செய்யுங்கள்.
8. உங்கள் குழுவிற்காக செயற்படுங்கள்
நீங்கள் குழுவாக ஒரு விடயத்தை செய்யும்போது (வணிகமோ வேறு எதுவோ) அந்த இடத்தில் உங்களது குழுவைப் பற்றியே சிந்திக்கவேண்டும். உங்கள் குழுவை வெற்றியடைய செய்ய நீங்கள் முயற்சி செய்யவேண்டும்.
9. ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள்
சிறு சிறு சந்தோஷங்களே உங்கள் வாழ்க்கையை நிரப்புகின்றன. எனவே வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழுங்கள்
10. மனிதநேயமே மிகப்பெரியது
எப்போதும் மற்ற மனிதர்களை நேசியுங்கள், எந்த காரியமாக இருந்தாலும் அதை மனிதநேயத்துடன் செய்யுங்கள். மனிதநேயமே உங்கள் வாழ்வினுள் ஒளியைக் கொண்டுவரும்
மிண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் ......
கருத்துகள்