கிறிஸ்டியானோ ரொனால்டோ வாழ்கை பயணம்

        கிறிஸ்டியானோ ரொனால்டோ




போர்ச்சுக்கல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 32 வயதாகும் இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் 5-வது முறையாக தங்கப்பந்து (பலோன் டி'ஆர்) விருதை பெற்று மெஸ்சியின் சாதனையை சமன் செய்துள்ளார்.






தற்போதைய தலைமுறையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி, நெய்மர் ஆகியோர் தலைசிறந்த வீரர்களாக கருதப்படுகிறார்கள். இந்நிலையில் கால்பந்து வரலாற்றில் தான் சிறந்த வீரர் என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார். இதற்கு ஆதராவான கருத்துக்களும், எதிர்ப்பு கருத்துக்களும் வருகின்றன.




இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில் ‘‘வேறு எந்த வீரரும் என்னைப் பொன்ற தனிப்பட்ட விருதுகளை அதிக அளவில் பெற்றது கிடையாது. நான் இந்த பலோன் டி'ஆர் விருதை மட்டும் பற்றி பேசவில்லை. எல்லோருடைய முக்கியத்துவத்திற்கும் நான் மதிப்பு அளிக்கிறேன். ஆனால், என்னை விட சிறந்த வீரராக யாரையும் நான் பார்க்கவில்லை.’’ என்றார்.






 இன்று போர்ச்சுகல் தேசமே ஒருவரை நெஞ்சில் வைத்துச் சுமந்து  கொண்டிருக்கிறது.
ஆம்...கிறிஸ்டியானோ ரொனால்டோ என்னும் பெயரைத்தான் இன்னும் சில வாரங்கள் அவர்கள் சுவாசிக்கப் போகிறார்கள். இனி மூன்று வேலை உணவும் இனி அவர்களுக்கு அந்தப் பெயர்தான். கால்பந்து வெறியர்களின் வாட்ஸ் அப் டி.பி முதல் அவர்கள் அணியும் டீ-ஷர்ட் வரை இன்னும் சில மாதங்கள் எங்கும் ரொனால்டோ.. எதிலும் ரொனால்டோ தான்!
கால்பந்தைத் தவிர்த்து வேறு எந்த விளையாட்டிலும் பிரசித்தி பெறாத தேசம் போர்ச்சுக்கல், கால்பந்திலும் கோப்பை ஏதும் வெல்லாமல் இதுநாள் வரை சபிக்கப்பட்டிருந்தது.








நம் அணி ஒருமுறையேனும் ஏதாவது ஒரு கோப்பையை வெல்லாதா என்று மொத்த தேசமும் ஏங்கிக் கிடந்தது. அந்த மொத்த தேசத்தின் ஏக்கத்தையும் இத்தனை ஆண்டுகளாக தனி ஒருவனாய் தனது தோளில் சுமந்து வந்த ரொனால்டோவின் பாரம் இறக்கப்பட்டு விட்டது.





பிரான்சில் நடந்த யூரோ 2016 கோப்பையின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை 1-0 என வென்று, தங்கள் ஏக்கத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது போர்ச்சுகல் அணி. உலகமே எதிர்பார்த்த இந்த அதிசய சூரன் தன் முழு பலத்தையும் காட்டவில்லைதான்; ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து உலகின் ஜாம்பவானாய், கோடிக்கணக்கான ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாய் விளங்கிய அவரைத் தேடி அந்தக் கோப்பை தானாகவே வந்துள்ளது.







ரொனால்டோ, உசேன் போல்டும், மைக்கேல் ஜோர்டானும் கலந்த கலவை. எந்தவொரு தடுப்பாட்டக்காரரையும் மெர்சலாக்கிவிட்டு புயலாகப் பாயும் ரொனால்டோ, பந்தை தலையால் முட்ட 44 செ.மீ வரை காற்றில் பறப்பாராம். ஒரு சராசரி கூடைப்பந்தாட்ட வீரரால்கூட அவ்வளவு தூரம் குதிக்க முடியாது என்கின்றனர், மாடர்ன் டே ஐன்ஸ்டீன்கள்.





இடது பக்க விங்கரான ரொனால்டோ, இன்று கால்பந்தை உதைத்துக் கொண்டிருக்கும் பல கோடி கால்களின் ரோல் மாடல். இவரும் மெஸ்ஸியும்தான் கால்பந்தின் தல–தளபதி. ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிவரும் 31 வயதான ரொனால்டோ, இதுவரை 548 கோல்கள் அடித்து அமர்க்களப்படுத்தி உள்ளார்.





தனது ஸ்டைலான ஆட்டத்தால் மட்டுமின்றி, ஹேர் ஸ்டைல், சிக்ஸ் பேக் என்று ஒவ்வொரு தனித்திறமைக்கும் தனித்தனியாக ரசிகர்களைக் கொண்டிருக்கும் ரொனால்டோ, ஒவ்வொரு தடுப்பாட்டக்காரரும் வெறுக்கும் ஒரு கோல் மெஷின். தொடர்ந்து 6 சீசன்களில் 50க்கும் மேற்பட்ட கோல்கள் அடித்தவர் என்ற அசாத்திய சாதனையின் சொந்தக்காரனை எந்த எதிரணி வீரன்தான் விரும்புவான்!







ரொனால்டோவின் கால்களில் பந்து சிக்கினால், அதற்கே தலைசுற்றல் ஏற்பட்டுவிடும். அந்த அளவிற்கு சுழன்று, சுழற்றி ஆட்டம் காட்டுவார் ரொனால்டோ. பெனால்டி, ஃப்ரீ கிக், ஹெடிங், டிரிபிளிங் என கால்பந்தின் அனைத்து டிபார்ட்மென்டிலும் டிஸ்ட்ங்ஷன் அடித்தவர் சி.ஆர்.7. இவரது ஃப்ரீ கிக்குகள் எல்லாம் 130 கி.மீ வேகத்தில் பாய்ந்து கோல் கீப்பருக்கு அல்லு கிளப்பிவிடும்! கால்பந்து ஆட்டத்தின் 90 நிமிடங்களில் ஒவ்வொரு நிமிடத்திலும் கோல் அடித்த ஒரேயொரு வீரர் ரொனால்டோ தான்.






வாழ்கை


கிறிஸ்டியானோ ரொனால்டோ ( Cristiano Ronaldo , பிறப்பு: பெப்ரவரி 5, 1985)
போர்ச்சுகலின் மதீரா நகரில் பிறந்த ரொனால்டோ தனது 15 வயதிலேயே சீரற்ற இதயத்துடிப்பால் பாதிக்கப்பட்டவர். எப்படிப்பட்ட விளையாட்டு வீரனையும் காலி செய்துவிடும் இப்பிரச்சனையை ரொனால்டோ வெல்லக் காரணம், அந்த இதயம் முழுவதையும் அவர் கால்பந்தால் நிரப்பியிருந்தார்.







போர்த்துகீச கால்பந்து அணியின் தலைவராக 2010 உலக கால் பந்தாட்ட விளையாட்டுக்கு களம் இறங்கி உள்ளார். இவர் ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் ஆடி வருகின்றார்.
இப்பொழுது விளையாடிவரும் கால்பந்து வீரர்களிலேயே ஒரு கழகத்திற்காக அதிகம் விலைகொடுத்து வாங்கப்பட்ட ஒரே வீரர் இவராவார். இவர் மான்செஸ்ரர் யுனைரட் கழகத்திலிருந்து ரியல் மட்றிட்காக மாறிவந்த பொழுது இவருக்காக ஏலம் விட்ட தொகை சுமார் 132 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். அது மட்டுமன்றி இவர் ரியல் மட்றிட்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ள 6 வருடங்களுக்கும் ஒவ்வொரு வருடத்திற்கும் தலா 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும்.







தனது ஆரம்ப காலங்களில் அன்டோரின்கா என்ற கழகத்திற்காக விளையாடிய ரொனால்டோ 1997ல் நிசியோனல் என்ற கழகத்திற்கு மாறினார். அதன் பின் ஸ்போர்ரின் சிபி என்ற கழகத்தில் விளையாடும் பொழுது மன்செஸ்ரர் அணியின் நிர்வாகியான அலெகடஸ் பெர்கஸன் என்பவரால் இனங்காணப்பட்டு 18 வயதே நிரம்பிய இவரை 12.24 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களுக்கு மன்செஸ்ரறில் விளையாடுவதற்காக ஒப்பந்தமிடப்பட்டார். பின்பு யூரோ 2004ல் முதன் முதலாக போர்த்துகீச அணிக்காக விளையாடுவதற்குக் களமிறக்கப்பட்டார்.








ஆனால் இடைப்பட்ட அந்தக்காலம் அவருக்கு மகிழ்ச்சி மட்டும் நிரம்பியதாக இல்லை. ஏகப்பட்ட சவால்கள் எத்தனையோ தூற்றல்கள், எண்ணற்ற பிரச்சனைகள். ஆனால் அனைத்தையும் தாண்டி தன்னை பலப்படுத்திக்கொண்டே இருந்தார் ரொனால்டோ. ஒவ்வொருவரின் வெற்றிக்கும் தூண்டுகோலாக பலரின் ஊக்கம் இருக்கும். ஆனால் ரொனால்டோவின் வெற்றிகள் தூற்றல்களால் தூண்டப்பட்டவை.






2006 உலகக்கோப்பை போட்டியின்போது தன்னோடு மான்செஸ்டர் யுனைடட் அணியில் விளையாடும் வெய்ன் ரூனியின் மீது குற்றம் சுமத்தி சிவப்பு அட்டை பெற்றுத் தந்தார் ரொனால்டோ. அதனால் அந்த ஆண்டு பிரீமியர் லீக் தொடர் முழுவதும் சொந்த அணி வீரர்களே ரொனால்டோவை வசைபாடினார்கள். அதுவரை ஒரு நல்ல விங்கராக மட்டுமே இருந்த ரொனால்டோ, அதன்பின்னர்தான் ஒரு கோல் மெஷினாக மாறினார். தன்னை இழிவுபடுத்தும் ரசிகர்களுக்குத் தன் கால்களால் பதில் சொல்ல நினைத்தார்.







செல்ஃபிஷ் பிளேயர் என அனைவராலும் கருதப்பட்ட ரொனால்டோ, தனது பயிற்சியாளருடன் ‘ஒன்-டூ-ஒன்’ பயிற்சியை இரவும் பகலும் நேரமும் வலியும் பாராமல் மேற்கொண்டார். விளைவு அந்த சீசனில் ரொனால்டோ தான் டாப் ஸ்கோரர்.
ஒரு போட்டியில் அவரை எதிர்த்து விளையாடிய பிளாக்பர்ன் ரோவர்ஸ் அணி ரசிகர்களே ரொனால்டோவிற்கு ஸ்டேண்டிங் ஒவேஷன் கொடுத்தார்கள்.






அதுதான் சி.ஆர்.7. பின்னர் மாட்ரிட் அணியில் இணைந்து ரொனால்டோ செய்த சாதனைகளை வரலாறு பேசும்!
அன்று முதல் இன்றுவரை தனது திறமையின் மீது சந்தேகம் கொண்டவர்களுக்கு உடனடியாக தனது ஆட்டத்தால் பதிலளித்து வருகிறார் ரொனால்டோ. தனது கிளப் அணிகளுக்காக பல கோப்பைகளை வென்று தந்தாலும் “ரொனால்டோவால் தங்கள் தேசிய அணிக்கு கோப்பையை வென்றுத் தர முடியாது” என்று பலரும் ஆருடம் கூறினார்கள்.






சில வாரங்கள் முன்பு தோல்வியின் விரக்தியால் மெஸ்ஸி ஓய்வுபெற, “இந்த மாதம் ரொனால்டோவும் ஓவர்” என்று எதிர்பார்த்தார்கள் பலரும்.
இந்த யூரோ தொடரின் தொடக்கத்தில் சுமாரான ஆட்டத்தையே அவர் வெளிப்படுத்த, அவரைப் பற்றித் தவறாய் பேசியவர்களுக்கெல்லாம் அது டானிக்காக அமைந்தது. ஆனால் அதற்கெல்லாம் சோடை போய்விடுவாரா ரொனால்டோ. ஆசிரியை ஒருவர் அவமதித்ததற்காக 14 வயதிலேயே பள்ளியைவிட்டு நின்றவர் அவர். உயிருக்கும் மேலான தனது கால்பந்து திறமையைச் சந்தேகித்தால்?.... அமைதியாய் இருந்த எரிமலை சீரியது. ஹங்கேரிக்கு எதிரான கடைசிப் போட்டியில் தோல்வியை நோக்கி போர்ச்சுகல் சென்றுகொண்டிருக்க, அடுத்தடுத்த 2 கோல்கள் அடித்து அடுத்த சுற்றுக்கு அழைத்துச் சென்றார் ரொனால்டோ.







அரையிறுதியில் சக வேல்ஸ் நாட்டவரான மாட்ரிட் வீரர் பேலேவிடம் ரொனால்டோ சரண்டர் ஆகிவிடுவார் என்று நினைத்தார்கள். ஆனால் அப்பொழுதுதான் சிங்கம் முழு சீற்றத்துடன் கிளம்பியது. அணியின் 2 கோல்களிலும் பங்காற்றி இத்தொடரில் 90 நிமிட அவகாசத்தில் போர்ச்சுகல் பெற்ற ஒரே வெற்றியின் ஒரே காரணமாக விளங்கினார் ரொனால்டோ.





 3 பாலன் டி ஓர் விருதுகள், 3 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள், 4 ஐரோப்பிய கோல்டன் ஷூ விருதுகள் என எண்ணற்ற விருதுகள் வாங்கிய மகத்தான அந்த வீரனின் கண்கள் யூரோ கோப்பையை ஏந்தியபோது முதன்முறையாக கலங்கின.






தனது நாட்டு மக்களுக்காக சாதிக்க வேண்டும் என்று இத்தனையாண்டு கால தனது போராட்டத்தின் இறுதியாட்டத்தில் காயத்தால் அவர் பாதியிலேயே கண்கலங்கி வெளியேறியபோது மெஸ்ஸியின் ரசிகன் கூட கண்கலங்கியிருப்பான்.
கால்பந்து மட்டுமல்ல, தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரொனால்டோ தூற்றல்களை சந்திக்காமல் இல்லை. தலைக்கனம் பிடித்தவர், ஆக்ரோஷக்காரர், கூத்தாடி என்றெல்லாம் கூட இவ்வுலகம் அவரைப் பழித்துள்ளது.








 ஆனால் ரொனால்டோவின் இதயத்திற்குள் இருக்கும் ஈரம் இவ்வுலகம் முழுமையாக அறியாது. தன் தந்தை குடியால் இறந்தவர் என்பதால் இதுநாள் வரை மதுவைத் தொடாதவர் ரொனால்டோ. ஒவ்வொரு விளையாட்டு வீரனும் உடலெல்லாம் பச்சை குத்திக்கொள்ள, ‘பச்சை குத்தினால் சில மாதங்கள் ரத்த தானம் செய்ய முடியாது’ என்பதற்காகவே பச்சை குத்திக்கொள்ளாத ஒரு மகத்தான மனிதன் ரொனால்டோ.






தன் சொந்த ஊரில் புற்றுநோய் மருத்துவமனை, குழந்தைகளின் கல்விக்கு உதவுவது என்று சத்தமில்லாமல் இவர் செய்துவருவது எல்லாம் விளையாட்டையும் தாண்டி ஒரு மனிதநேயம் மிக்கவராய் அவரை நிலைநிறுத்தியுள்ளது.






போர்ச்சுகல் ரசிகர்களின் ஆசை மட்டுமல்ல, 10வது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல வேண்டுமென்ற ரியல் மாட்ரிட் ரசிகர்களின் 12 ஆண்டு காலக் கனவை, 2014 ல் நனவாக்கியதும் ரொனால்டோதான். யாரும் செய்திடாத சாதனையான ஒரே தொடரில் 17 கோல்கள் அடித்து தன் அணியின் வெற்றிக்கு ஆணி வேராய் விளங்கினார் ரொனால்டோ.







அத்தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டாமென டாக்டர்கள் அறிவுறுத்தியும் “சில வெற்றிகளுக்காக சில தியாகங்கள் செய்துகொள்ள வேண்டும். சில வலிகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்று அணிக்காக ரிஸ்க் எடுத்தவர் ரொனால்டோ. எந்தத் தருணத்திலும் தன்னை நம்புபவர்களுக்காக எதையும் செய்ய வேண்டுமென நினைப்பவர்.







யூரோவின் இறுதிப் போட்டியில் முழங்கால் காயத்தால் வெளியேறியபோது, அவரது கண்ணீரில் “நம் நாட்டு மக்களின் கனவை நனவாக்க முடியவில்லையே” என்ற ஏக்கம் நிரம்பியிருந்தது. ஆனால் கோப்பையை வென்ற பிறகு, அதைத் தனது தலைக்கு மேலாக ரொனால்டோ தூக்கியபோது, அவர் கண்களில் வழிந்த கண்ணீர் நமக்குக் காட்டியதெல்லாம் போர்ச்சுகல் என்னும் ஒரு தேசத்தின் மகிழ்ச்சி.








 ரொனால்டோ பரிதாபம்: 




சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (‘பிபா’) சிறந்த வீரர் விருதை 2008, 2013, 2014 என, 3 முறை வென்ற போதும், முக்கிய தொடரில் பிரகாசிப்பது குறைவு தான். கிளப் போட்டிகளில் 500 கோலுக்கு மேல் அடித்த இவர், தற்போதைய யூரோ கோப்பை தொடரில் தட்டுத் தடுமாறி, அணியை அடுத்து சுற்றுக்கு கொண்டு சேர்த்தார். யூரோ கோப்பை வரலாற்றில் 2004ல் 2, 2008ல் 1, 2012ல் 3 மற்றும் 2016ல் 3 என, தொடர்ந்து நான்கு தொடரில் கோல் அடித்த முதல் வீரர் என வரலாறு படைத்தார்.






 பைனல் சோகம்: 




அந்த நாளும் வந்திடாதோ...’ என்ற வரிக்கு ஏற்ப, ரொனால்டோ கடவுளிடம் வேண்டிக் கொண்ட அந்த நாள் வந்தது. யூரோ பைனலில் பிரான்சை எதிர்கொண்டது போர்ச்சுகல். ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் பிரான்சின் பாயட், இவரது இடது முழங்காலில் இடியாக மோதினார். அப்படியே வலியால் துடித்த அவர், எங்கே தொடர்ந்து விளையாட முடியாதோ என கண் கலங்கினார்.                    சிகிச்சைக்குப் பின் மீண்டும் வந்ததும், போர்ச்சுகல் ரசிகர்கள் மட்டுமல்ல, சக வீரர்களிடமும் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. அந்தோ பரிதாபம், இது சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை.                    கண்ணீர் மல்க...: 24 வது நிமிடம் மீண்டும் வலி ஏற்பட, நடக்கக் கூட முடியாமல் ‘ஸ்ட்ரெச்சரில்’ வைத்துக் கொண்டு செல்லப்பட்டார்.







 கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடுமோ என்ற விரக்தியில், கேப்டனுக்குரிய ‘பாண்ட்டை’ நானியிடம் கொடுத்து விட்டு கண்ணீர் மல்க, மைதானத்தை விட்டு கிளம்பினார்.                    மீண்டும் வருகை: போன வேகத்தில் காலில் கட்டுப் போட்டுக் கொண்டு மைதானத்துக்கு வந்தார். காலரியில் அமர்ந்து சக வீரர்களை ஊக்கப்படுத்தினார். உற்சாகப்படுத்தினார். இவரது வேகத்தை பார்த்த சக வீரர்கள், இவருக்காக கோப்பை வென்றாக வேண்டும் என, விளையாடினர். கடைசியில் 109 வது நிமிடம் எடர் கோல் அடித்ததும், சமன் செய்ய பிரான்ஸ் வீரர்கள் வேகம் காட்டினர்.  தலையில் மகுடம்: இதைப் பார்த்த ரொனால்டோ, கை கடிகாரத்தை காட்டி, வீரர்களை எச்சரித்தார். ‘ரெப்ரி’ கடைசி ‘விசில்’ ஊத, ரொனால்டோவின் தலையில் மகுடமாக ஏறியது யூரோ கோப்பை. கால்பந்து வீரராக போர்ச்சுகல் மண்ணில் எடுத்த அவதாரத்தின் நோக்கத்தை, தேசத்துக்காக நிறைவேற்றி விட்டோம் என்ற ஒரு பூரிப்பு அவரது முகத்தில் மலர்ந்தது. மெஸ்சிக்கு எட்டாத பெருமை, தனக்கு கிட்டி விட்டதே என்று மறக்காமல் கடவுளுக்கு நன்றி சொன்னார். கடவுளுக்கு நன்றி                                                       போர்ச்சுகல் அணி கேப்டன் ரொனால்டோ கூறியது:



                                                            கடந்த 2004 

பைனலில் தோற்ற பிறகு, மீண்டும் ஒரு வாய்ப்பு தருமாறு கடவுளிடம் வேண்டினேன். போர்ச்சுகல் அணிக்காக கோப்பை வென்று, வரலாறு படைக்க விரும்பினேன். துரதிருஷ்டவசமாக பைனலில் ஏற்பட்ட காயம், மோசமாக அமைந்து விட்டது. இருப்பினும், சக வீரர்கள் மீது முழு நம்பிக்கை இருந்தது. கோப்பை வெல்லும் தகுதி, திறமை இருப்பதாக நினைத்தேன். அனைத்தையும் விட பயிற்சியாளர் சாண்டோசின் திட்டம் வெற்றி தரும் என எண்ணினேன்.




 கடைசியில் பிரான்சை வீழ்த்தி கோப்பை வென்றது, எனது கால்பந்து வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான நாளாகி விட்டது. இதை சரியாக அமைத்து கொடுத்த கடவுளுக்கு நன்றி.    




 இவ்வாறு ரொனால்டோ கூறினார்.


     
இதெப்படி இருக்கு பைனலில் காயம் காரணமாக திரும்பிய ரொனால்டோ, களத்துக்கு வெளியே மாற்று வீரர்களுடன் அமர்ந்து, அணியினரை உற்சாகப்படுத்தினார். அப்போது தனது அணியினர் தவறு செய்ததை பார்த்து ஆவேசப்பட்ட ரொனால்டோ, தனது தொடை என நினைத்து அருகில் இருந்த சக வீரரின் தொடையில் ஓங்கி குத்தினார். அவர் வலியால் துடிக்க, ரொனால்டோ ‘சாரி’ கேட்க, ஒரே நகைச்சுவையாக இருந்தது.




                                     நீ போய் வாங்கு ‘தல’


 பைனலில் 25வது நிமிடத்தில் ரொனால்டோ வெளியேற, கேப்டன் பொறுப்பேற்றார் நானி. கடைசியில் போட்டியில் வென்றதும், கையில் அணியும் கேப்டனுக்குரிய ‘பாண்ட்டை’ கழற்றி, ரொனால்டோ கையில் மாட்டினார்.       இதைப் பார்க்கும் போது,‘இந்த கோப்பையை நீங்கள் வாங்குவது தான் சரியாக இருக்கும். போய் வாங்கு தல...,’ என, கூறுவது போல இருந்தது.







வேண்டுமென்று செய்யவில்லை பிரான்சின் பாயட் கூறுகையில்,‘‘ ரொனால்டோ மீது வேண்டுமென்றே மோதவில்லை. அது எனது பழக்கமும் அல்ல. இதுகுறித்து வேறு எதுவும் கூறவிரும்பவில்லை,’’ என்றார். மெஸ்சிக்கு கிடைக்கல   பார்சிலோனா கிளப் அணிக்காக துாள் கிளப்புவார் அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சி. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (‘பிபா’) சிறந்த வீரர் விருதை மெஸ்சி (2009–12, 2015) 5 முறை வென்றவர்.




                                          2014 உலக கோப்பை, 


2015, 2016 கோபா அமெரிக்க கால்பந்து தொடர்களில், அர்ஜென்டினா அணியை பைனலுக்கு கொண்டு சென்ற போதும், கோப்பை வெல்லவில்லை. இந்த விரக்தியில் அர்ஜென்டினா அணியில் இருந்து ஓய்வையே அறிவித்து விட்டார். இதுபோல இல்லாமல் யூரோ கோப்பை தொடரில் சாதித்து வரலாறு படைத்து விட்டார் ரொனால்டோ.                         ‘பிரபலம் என்றாலே...’                   பொதுவாக கால்பந்து போட்டிகளில் பிரபலமாக இருப்பது என்றாலே பிரச்னை தான். முக்கிய தொடர் என்று வரும் போது, ’பிரபலத்தை’ கட்டம் கட்ட எதிரணி வீரர்கள் சரியான திட்டம் வகுப்பர். சில நேரங்களில் இது அபாயகரமாக இருக்கும். 2014 உலக கோப்பை தொடர் காலிறுதியில் பிரேசிலின் நெய்மர், முகுதுப் பகுதியை தாக்கி, அவரை செயலிழக்க வைத்தனர். கடைசியில் அந்த அணி தோற்றது.                 இதுபோல, யூரோ பைனலில் ரொனால்டோவை மடக்கி, முடக்கினர். இருப்பினும், அவரது வீரர்கள் மனம் தளராமல் போராடி, தலைவனுக்காக கோப்பை வென்று சமர்ப்பித்தனர்.






ரியல்மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் நாட்டில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சாதாரண சமையல்காரர். இவரது தாய் நகராட்சி ஒன்றில் பூங்காக்களை பராமரிக்கும் வேலையில் இருந்தார். ஏழை குடும்பத்தில் பிறந்தாலும், தனது கால்பந்து திறமையால் உலகிலேயே கால்பந்து மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரராக உருவெடுத்துள்ளார். இவரது ஆண்டு வருமானம் சுமார் 600 கோடிக்கும் மேல்.ஏழ்மை நிலையில் இருந்து உன்னத நிலைக்கு உயர்ந்துள்ள ரொனால்டோவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, டாக்குமென்ட்ரி படம் எடுக்கப்படவுள்ளது. டாக்குமென்ட்ரி படம் எடுப்பதில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் அகாடமி விருது வென்ற பிரைட்டன் அண்டோனி வோன்க் இயக்கத்தில், இந்த படம் உருவாகிறது. ரொனால்டோவே இந்த படத்தை தயாரிக்கிறார்.






ரொனால்டோவின் குழந்தை பருவத்தில் இருந்து அவர் சந்தித்த சோகங்கள், 11 வயதாக இருக்கும் போது தந்தையின் இழப்பு, ரொனால்டோவின் தாயார் குழந்தைகளை வளர்க்க பட்ட கஷ்டங்கள், கால்பந்து வீரராக உருவானவிதம், மான்செஸ்டர் யுனைடெட்டில் ரொனால்டோ சந்தித்த சவால்கள், ரியல்மாட்ரிட்டில் இணைந்த விதம், மெஸ்சியின் புகழால் ரொனால்டோ இருட்டடிப்பு செய்யப்பட்டது வரை படமாக காட்சிப்படுத்தப்படவுள்ளது.ரொனால்டோவின் காதலி இரினா ஷயாக்குடன் ஏற்பட்ட பிரிவு, மகன் ஜுனியர் ரொனால்டோ பற்றியெல்லாம் அந்த டாக்குமென்ட்டிரியில் சொல்லப்படுமா? என்று தெரியவில்லை. எனினும் தனது ரசிகர்களுக்கு இந்த படம் வரப்பிரசாதம் என்று ரொனால்டோ கூறுகிறார்.   நான் பார்த்திட்டன் சூப்பரா இருக்கு நீங்களும் பாருங்க ரொம்ப பிடிக்கும்.









மிண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் ........




கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
I love ronaldo ,he is very honest men

பிரபலமான இடுகைகள்