சைஃப் அலி கான் வாழ்கை வரலாறு

       சைஃப் அலி கான்  வாழ்கை வரலாறு



சைஃப் அலி கான் ( இந்தி :
வங்காள :  உருது : இந்தியாவில்
புது டெல்லியில் 16 ஆகஸ்ட் 1970 அன்று பிறந்தார்) பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் இந்திய நடிகர் ஆவார். இவர் பட்டாடி நவாப்பான மன்சூர் அலிகான் பட்டாடி மற்றும் நடிகை சர்மிளா தாகூரின் மகனாவார். இவருக்கு நடிகை சாபா அலிகான் மற்றும் சோஹா அலிகான் ஆகிய இரண்டு சகோதரிகள் உள்ளனர். போபால் மற்றும் பட்டாடியின் இரு அரச குடியிருப்புகளின் தலைவர்களுக்கு இவர் வெளிப்படையான வாரிசாவார்.





1992 ஆம் ஆண்டில் பரம்பரா வில் கான் தனது அறிமுகத்தைத் தந்தார். 1994 ஆம் ஆண்டுத் திரைப்படங்கள் மெய்ன் கிலாடி தூ அனாரி மற்றும் யேஹ் தில்லகி யுடன் அவர் தனது முதல் பெரிய வெற்றிகளைக் கண்டார். 1990களில் பல ஆண்டுகள் சரிவுற்றிருந்த பிறகு தில் சாத்தா ஹை (2001) திரைப்படத்தில் அவரது நடிப்பானது தனிச்சிறப்புடன் முன்னேற்றம் அடைந்தது. இது அவரது தொழில் வாழ்க்கைக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது.




நிக்கில் அத்வானியின் கல் ஹோ நா ஹோ (2003) திரைப்படத்தில் அவரது நடிப்பிற்காக ஃபிலிம்பேரின் சிறந்த துணைநடிகர் விருதை வென்றார். மேலும் ஹம் தும் (2004) திரைப்படத்தில் அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசியத் திரைப்பட விருதை வென்றார். பிறகு அவர் சலாம் நமஸ்தே (2005), ரேஸ் (2008) மற்றும் லவ் ஆஜ் கல் (2009) போன்ற திரைப்படங்களில் வணிகரீதியான வெற்றியைப் பெற்றார்.





பரீநீட்டா (2005) மற்றும் ஓம்காரா (2006) போன்ற அவர் நடித்த திரைப்படங்கள் விமர்சனரீதியாகப் பாராட்டப்பட்டன. இந்த வெற்றிகள் மூலம் அவர் இத்துறையில் பெருமளவில் வெற்றிபெற்ற நடிகர்களில் பலருள் ஒருவராக மாறினார்.  2009 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படத் தயாரிப்புப் பணியிலும் கான் கவனத்தைச் செலுத்தினார். மேலும் அவரது தயாரிப்பு நிறுவனமான இல்லுமினாட்டி பிலிம்ஸின் நிறுவனர்-உரிமையாளராக உள்ளார்.



ஆரம்பகால வாழ்க்கை



சைஃப் அலிகான், பட்டாடி நவாப் மற்றும் பெங்காலின் பெங்காலி தாகூர் குடும்பமுமான இஸ்லாம் பதன் கலப்பு குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தைவழித் தாத்தாவான இஃப்டிகர் அலிகான் பட்டாடி ஒரு பட்டாடி நவாப் ஆவார். அதே போல் இவர் இங்கிலாந்திற்காகவும் பிறகு
இந்தியாவிற்காவும் அணித் தலைவராக விளையாடிய திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரரும் ஆவார்.





அவரது தந்தைவழிப் பாட்டி சாஜுதா சுல்தான் போபாலின் இஸ்லாமிய அரசியாவார் மற்றும் அவரது மாமா பாகிஸ்தானிய ஜெனரல் நவாப்ஜடா ஷேர் அலிக்கான் பட்டாடி ஆவார். அவரது தந்தையான மன்சூர் அலிகான் பட்டாடி எட்டாவது பட்டாடி நவாப் ஆவார். மேலும் இந்தியக் கிரிகெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் ஆவார். கானுக்கு, சாபா அலிகான் மற்றும் சோஹா அலிகான் என்று இரு சகோதரிகள் உள்ளனர். கானின் தாயாரான சர்மிளாத் தாகூர் ஒரு பெங்காலி இந்தியத் திரைப்பட நடிகையும், பெங்காலின் தாகூர் குடும்ப உறுப்பினரும் ஆவார்.






இவர் இந்தியத் திரைப்பட தணிக்கைக்குழு தலைவரும் ஆவார். மேலும் நோபல் அரசவைக்கவி ரபீந்தரநாத் தாகூரின் உறவினரும் ஆவார்.   கானின் தந்தையை சர்மிளாத் தாகூர் திருமணம் செய்த பிறகு இந்து சமயத்தில் இருந்து இஸ்லாமிற்கு மதம் மாறி தனது பெயரை பேகம் ஆயிஷா சுல்தானா என மாற்றிக்கொண்டார். கான் அவரது சமயக்கல்வியின் மையமாக இருக்கும் அவரது பாட்டியுடன் குரான் ஓதிக்கொண்டு தனது சிறுவயதை இஸ்லாமிய சூழ்நிலையில் கழித்தார். கான் கூறுகையில் "என்னுடைய வளர்ப்பு முறையில் ஒரு பெரிய பங்கை சமயம் எடுத்துக்கொண்டது" என்றார்.






துவக்கத்தில் கான், லாரன்ஸ் ஸ்கூல் சனாவாரில்  கல்வி பயின்றார். ஆனால் பிறகு லாக்கர்ஸ் பார்க் பிரெப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் அவரது தந்தையின் வழியைப் பின் தொடர்ந்து வின்செஸ்டர் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இது ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள ஆண்களுக்கான சார்பற்ற பள்ளி ஆகும். கான் அவரது பிறப்பு மொழிகளான இந்தி மற்றும்  பெங்காலி ஆகியவற்றை சரளமாகப் பேசுவார். அதே போல் ஆங்கிலத்தையும் பேசுவார்.



தொழில் வாழ்க்கை


ஒரு நடிகராக

1993 ஆம் ஆண்டில் ஆஷிக் அவாரா திரைப்படத்திற்காக ஃபிலிம்பேர் சிறந்த அறிமுக ஆண் விருதை வென்றார். அவரது திருப்புமுனைப் பாத்திரம் 1994 ஆம் ஆண்டில் யேஹ் தில்லகி யின் மூலம் கிடைத்தது. அதில் கஜோல் மற்றும் அக்சய் குமாருடன் இணைந்து நடித்திருந்தார். அது அவருக்கு முதல் பெரிய வெற்றியாகும்.   பல திரைப்படங்களில் கான் நடித்திருந்தாலும் அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியைத் தழுவின.




மெய்ன் கிலாடி தூ அனாரி (1994),
இம்திஹான் (1995), [10] கச்சி தாகி (1999) மற்றும் ஹம் சாத்-சாத் ஹைன் : வீ ஸ்டாண்ட் யுனைடெட் (1999) போன்ற பல நாயகர்கள் இருக்கும் திரைப்படங்களில் மட்டுமே இவருக்கு வெற்றி கிடைத்தது.  சில பாக்ஸ் ஆபிஸ் தோல்விகளுக்குப் பிறகு
கியா கெஹ்னா (2000) திரைப்படத்தில் அவருக்கு வெற்றி கிடைத்தது.





அவரது நடிப்புத் தொழில் தோராயமாக 2001 ஆம் ஆண்டு வரை தோல்விப்பாதையிலேயே இருந்தது. பர்ஹான் அக்தரின் சமகாலத்திய நாடகவகைத் திரைப்படம் தில் சாத்தா ஹை யில் நடிக்கும் வரை அவருக்கு இந்நிலை தொடர்ந்தது.  இது அவரது தொழில் வாழ்க்கையின் சிறந்த நடிப்பு என தரன் ஆதர்ஷால் விமர்சனம் செய்யப்பட்டதுடன் அத்திரைப்படத்தில் சமீர் என்ற அவரது பாத்திரத்திற்காக பெருமளவு பாராட்டுக்களை கான் பெற்றார்.






அத்திரைப்படத்தின் வெற்றியானது இத்துறையின் முக்கிய நடிகர்களில் ஒருவராக சைஃப் உறுதியாக நிலைநாட்டப்பெற்றார். நிக்கில் அத்வானியின் நாடகவகைத் திரைப்படம் கல் ஹோ நா ஹோ வில் (2003),
ஷாருக்கான் மற்றும் பிரீத்தி ஜிந்தாவுடன் இணைந்து துணைப்பாத்திரத்தில் நடித்ததுடன் பல பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளை அவர் பெற்றார். அத்திரைப்படம் நியூயார்க்கில் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருந்தது. ஜிந்தாவின் நெருங்கிய நண்பரான ரோகித் என்ற பாத்திரத்தில் சைஃப் நடித்தார். அதில் பின்னர் ஜிந்தாவின் மேலுள்ள காதலை வெளிப்படுத்துவதாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது.







அந்தத் திரைப்படம் அந்த ஆண்டின் இரண்டாவது அதிக வருவாயைப் பெற்றத் திரைப்படமாக பெயர் வாங்கியது. மேலும் அதில் கானின் நடிப்பு விமர்சகர்கள் மூலம் பாராட்டப்பட்டது. அவர் ஃபிலிம்பேரின் சிறந்த துணைநடிகர் விருதை வென்றார். அதே போல் பிற விருது விழாக்களில் இதே பிரிவில் பிற விருதுகளையும் பெற்றார். அதைத் தொடர்ந்து குணால் கோஹ்லியின் ரொமாண்டிக் நகைச்சுவைத் திரைப்படம்
ஹம் தும் மில் (2004) முக்கியப் பாத்திரத்தில் கான் நடித்தார். இது யாஷ் ராஜ் பிலிம்ஸுடன் அவரது முதல் இணைவாகும். இரண்டு முக்கிய பாத்திரங்களின் எதிர்பாராத சண்டைகளை இத்திரைப்படம் கொண்டிருந்தது.





பல்வேறு ஆண்டுகள் மற்றும் பல்வேறு சந்திப்புகளுக்குப் பிறகு இருவரும் நண்பர்களாகி காதலில் விழும் வரை இந்த சண்டை தொடர்கிறது. இதில் கரண் கபூர் என்ற பாத்திரத்தில் கான் நடித்தார். இது ரேஹா பிரகாஷ் என்ற பாத்திரத்தில் நடித்த ரானி முகர்ஜியுடன் நட்பு வைத்திருக்கும் ஒரு இளவயது கேலிச் சித்திர ஓவியர் மற்றும் பெண்களை மயக்கும் பாத்திரம் ஆகும். பின்னர் அவர் பெண் மற்றும் வாழ்க்கையை உணர்ந்து அவரது பண்புகளை மாற்றிக்கொள்வது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது.






 அதில் கானின் நடிப்பானது விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் கைதட்டுகளுடன் பாராட்டுக்களைப் பெற்றது. அதற்காக ஃபிலிம்பேரில் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை கான் வென்றார். மேலும் 2005 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  கானின் அடுத்தத் திரைப்படம் யாஷ் ராஜ் பிலிம்ஸ் புரொடக்சனின் சலாம் நமஷ்தே (2005) ஆகும். இது வெளிநாட்டுச் சந்தையில் இந்தியாவின் சிறந்த வருவாய் பெறும் திரைப்படமாகப் பெயர் பெற்றது. இத்திரைப்படம் ஆஸ்திரேலியாவில் முழுமையாக படம்பிடிக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமாகும். தற்கால திருமணம் ஆகாமல் கூடிவாழும் ஜோடியாக கான் மற்றும் பிரீத்தி ஜிந்தா இதில் நடித்திருந்தனர்.






 ராம் கோபால் வர்மாவின் ஏக் ஹசினா தி (2004) திரைப்படத்திலும், பிரதீப் சர்காரின்
பரீநீட்டா வில் (2005) ஷேகர் ராய் என்ற பாத்திரத்திலும் எதிர்மறையான பாத்திரத்திற்காக கான் குறிப்பிடப்பட்டார். சரத் சந்திரா சட்டோபதியாய் எழுதிய பரிநீட்டா என்ற 1914 பெங்காலி சிறு கற்பனைக்கதையைத் தழுவி இத்திரைப்படம் உருவானது.





2006 ஆம் ஆண்டில் பீயிங் சைரஸ் என்ற ஆங்கில-மொழி கலைத் திரைப்படத்தில் முதன்மை மாந்தராக கான் நடித்தார். சைரஸ்ஸாக அவரது பாத்திரம் நேர்மறையான திறனாய்வுகளைப் பெற்றது. அதே ஆண்டில் சேக்ஸ்பியரின் ஓதெல்லோவின் இந்தியத் தழுவல் திரைப்படமான ஓம்காரா வில் லகோ என்ற அவரது பாத்திரத்திற்காக பெருமளவில் பாராட்டுகளைக் கான் பெற்றார். Rediff.com கூறுகையில், "ஓம்காராவில் சைஃப்பின் வெளிப்பாடானது, அவரது நடிப்புகளில் மிகவும் முன்னணி வகிக்கிறது. மேலும் நாம் அதை மகிழ்ச்சியோடு பாராட்ட வேண்டும்" எனக் கூறியிருந்தது.






பல்வகைத் திரைப்பட விமர்சகர் டெரிக் எல்லி, இத்திரைப்படத்தில் கானின் நடிப்பை "பவர்ஹவுஸ்" என அழைத்தார். மேற்கொண்டு அவர் எழுதுகையில், "இது முழுமையாக கானின் திரைப்படமாகும். ஒரு விரும்பத்தக்க நெருங்கிய நண்பராக அவரது முந்தைய வெறுப்பான திரை நடிப்புகளை மாற்றத்தக்க வகையில் இதில் அவரது கடினமான நடிப்பு உள்ளது. அதே போல் 'பீயிங் சைரஸ்'ஸில் கையாளப்பட்ட வெளிநபர் போல அவரது உள்ளடக்கம் இருந்தது. இது அருமையாக உணரப்பட்ட சிறந்த நடிப்பாகும்" என எழுதினார். அவரது நடிப்பிற்காக ஸ்டார் ஸ்கிரீன், ஃபிலிம்பேர், ஜீ சினி மற்றும் IIFA விருதுகளில் எதிர்மறையான பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான விருதுகளைக் கான் பெற்றார்.





கான் அடுத்து எக்லாவ்யா: த ராயல் கார்ட் (2007) இல் நடித்தார். அதில் ஆஷிக் அவாரா விற்குப் (1993) பிறகு இரண்டாவது முறையாக அவரது தாயருடன் இணைந்து நடித்தார். இத்திரைப்படம் ஆஸ்கார்களுக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவைத் தந்தது. மேலும் இதில் அர்ஷவர்தனாக கானின் நடிப்பானது விமர்சகர்களால் ஊக்குவிக்கப்பட்டது. தரன் ஆதர்ஷ் கருத்து கூறுகையில், "வியப்பான துல்லியமான அவரது உணர்ச்சிபூர்வமான நடிப்பைப் பார்க்கையில், ஒரு நடிகராக கான் மிகப்பெரிய அடிகளை எடுத்துவைத்திருப்பதை உங்களால் உணர முடியும்" எனத் தெரிவித்தார்.  கான் அடுத்து ராணி முகர்ஜியுடன் இணைந்து குடும்ப நாடகவகைத் திரைப்படமான டா ரா ரம் பம் மில் (2007) நடித்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கிய இத்திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றியைப் பெற்றது.





2008 ஆம் ஆண்டில் முதலில் அப்பாஸ்-முஸ்டன் திரில்லர் ரேஸில் கான் நடித்தார் பாக்ஸ் ஆபிஸில் இத்திரைப்படம் சிறப்பாக வெற்றி பெற்றது.  யாஷ் ராஜ் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கப்பட்ட தஷான் மற்றும்
தோடா பியார் தோடா மேஜிக் என்ற இரு திரைப்படங்களைத் தொடர்ந்து இது வெளிவந்தது. அந்த இரண்டுமே வெற்றியடையவில்லை.




2009 ஆம் ஆண்டில் கான் லவ் ஆஜ் கல் என்ற திரைப்படத்தைத் தயாரித்து நடித்தார். இம்தியாஸ் அலியால் இயக்கப்பட்ட இத்திரைப்படம் விமர்சன மற்றும் வணிகரீதியான வெற்றியைப் பெற்றது. மேலும் இவர் திரில்லரான குர்பானில் நடித்தார். இதில் அவரது உண்மையான கேர்ல் பிரண்ட் கரீனா கபூருடன் இணைந்து ஒரு தீவிரவாதியாக நடித்தார்.



தயாரிப்பாளராக



2009 ஆம் ஆண்டில் கான் அவரது தயாரிப்பு நிறுவனமான இல்லுமினட்டி பிலிம்ஸை நிறுவி ஒரு தயாரிப்பாளராகவும் மாறினார். தயாரிப்பாளராக கானின் முதல் திரைப்படம் லவ் ஆஜ் கல் ஆகும். இதில் ஒரு முன்னணிப் பெண்ணாக தீபிகா படுக்கோன் அவருக்கு ஜோடியாக நடித்தார். இம்தியாஸ் அலி இயக்கிய இத்திரைப்படம் வணிகரீதியாகவும் விமர்சனரீதியாகவும் வெற்றிபெற்றது. சைஃப்பின் இரண்டாவது திரைப்படம்,
ஏஜெண்ட் வினோத் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது, இத்திரைப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்குவார். சைஃப்பின் தயாரிப்பு நிறுவனம் மூலமாக இந்த இரண்டு திரைப்படங்களும் தயாரிக்கப்படும். மேலும் லண்டனைச் சார்ந்த ஈரோஸ் இண்டெர்நேசனல் மூலம் இதன் ஐக்கிய இராஜ்ஜிய வெளியீடு கையாளப்படும்.



சொந்த வாழ்க்கை



53வது ஆண்டு ஃபிலிம்பேர் விருதுகளில் (2008) கரினா கபூருடன் கான்.
1991 ஆம் ஆண்டு அக்டோபரில் நடிகை அம்ரிதா சிங்கைக் கான் திருமணம் செய்தார். திருமணம் ஆகி பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் போது 2004 ஆம் ஆண்டு இந்தத் தம்பதியினர் விவாகரத்து செய்து கொண்டனர். அவரது குழந்தைகள் அவர்களது தாயாருடன் வாழ்கின்றனர். தற்போது நடிகை கரீனா கபூருடன் கான் டேட்டிங் வைத்திருக்கிறார்.





1998 ஆம் ஆண்டில் சல்மான் கான் , தபூ,
சோனாலி பிந்த்ரே மற்றும் நீலம் போன்ற இணை-நட்சத்திரங்களுடன் கான் நடித்த
ஹம் சாத் சாத் ஹெய்ன் படப்பிடிப்பின் போது கன்கனியில் இரண்டு பிளாக்பக் வகை மான்களை வேட்டையாடியதற்காக கான் குற்றஞ்சாட்டப்பட்டார். கான் குற்றமற்றவர் என முடிவான பிறகு விரைவிலேயே அந்த குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டார்.




18 பிப்ரவரி 2007 அன்று அன்றைய இரவில் நடக்கவிருக்கும் ஸ்டார்டஸ்ட் விருதுகளில் பங்கேற்பதற்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கையில் கானுக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டதன் காரணமாக லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  மருத்துவமனையில் இருந்து மீண்டு வந்த பிறகு புகைப்பதை நிறுத்த வேண்டுமென அவர் கூறினார்.




2009ஆம் ஆண்டு அக்டோபரின் பிற்பகுதியில் கரினாவுடன் அவருக்கு இருக்கும் நட்பைப் பற்றியும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இருப்பதையும் சைஃப் பேசினார். அதைப் பற்றிக் கூறும் போது ஒருவருடைய தொழில் வாழ்க்கையை அவரது திருமணம் பாதிக்காது. உண்மையில் அப்படி நடந்தாலும் இன்றைக்கு திருமணத்தில் வரையறை மாறியுள்ளது என அவரது அபிப்ராயத்தைத் தெரிவித்தார். அவரும் கரீனாவும் நல்ல நட்புடன் இருப்பதாகக் கான் கூறினார். அதனால் சமுதாயத்திற்கான ஒரு அங்கீகார முத்திரைக்காக மட்டுமே திருமணம் முடிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.


கடந்த 2012ம் ஆண்டு கரீனா கபூர் நடிகர் சைஃப் அலி கானை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படத்தில் நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவர் கர்ப்பமானதைத் தொடர்ந்து படத்தில் நடிப்பதை நிருத்தினார்.
நிறை மாத கர்ப்பமாக இருந்த அவரை பிரசவத்துக்காக மும்பை பிரீச் கேன்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு ‘தைமர் அலி கான்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.



பொறுப்புகள்


2005 ஆம் ஆண்டில் கான் பிற பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து HELP! டெலிதோன் நிகழ்ச்சியில் 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரட்டி உதவியளிப்பதற்காகப் பங்கேற்றார்.

இரண்டு பெரிய உலகச் சுற்றுலாக்களிலும் கான் பங்கேற்றார்.
டெம்ப்டேசன் 2004 உலகச் சுற்றுலாவிற்கு சென்ற, ஷாருக்கான் , ராணி முகர்ஜி , பிரீத்தி ஜிந்தா, அர்ஜூன் ராம்பால் மற்றும்
பிரியங்கா சோப்ரா ஆகியோரை உள்ளடக்கிய நடிகர் குழுவில் கானும் பங்கேற்றார்.




2006 ஆம் ஆண்டில் அக்சய் குமார் , பிரீத்தி ஜிந்தா, சுஷ்மிதா சென் மற்றும் செலினா ஜெட்லி ஆகியோருடன் இணைந்து உலகளவில் நடந்த ஹீட் 2006 இசை நிகழ்ச்சி சுற்றுலாவில் கான் மீண்டும் பங்கேற்றார்.
2006 ஆம் ஆண்டில் மெல்போனில் நடந்த 2006 காமன்வெல்த் விளையாட்டுகள் முடிவு விழாவில் பல்வேறு பிற பாலிவுட் நடிகர்களுடன் கானும் தோன்றினார்.




டெல்லியில் நடக்கவிருக்கும் 2010 காமன்வெல்த் விளையாட்டுகளின் பொருட்டு இந்தியக் கலாச்சாரத்தை காட்சியளிக்கும் வகையில் ராணி முகர்ஜி மற்றும் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து கானும் பங்கேற்றார்.





மிண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் .....




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்