நல்லூர் முருகன் வரலாறு

             நல்லூர் கந்தசுவாமி கோவில்





நாளைக்கு    நல்லூர்   தேர்   என்கிறதால    
இந்த   பதிவில    நல்லூரை     
பற்றி    பார்ப்போம்...





அழகுத்    தெய்வம்    முருகனுக்கு     
கிராமங்கள்    தோறும்,    நகரங்கள்    
தோறும்    எண்ணுக்கணக்கான    
ஆலயங்கள்    உள்ளன.
இலங்கையில்    பல    பிரசித்தி    
பெற்ற    முருகன்    தலங்கள்    உள்ளன.    
அவற்றுள்    ஒன்று    தான்    யாழ்ப்பாண    
நல்லூர்   கோயில் .









நல்லூர்    12ம்    நூற்றாண்டு     
தொடக்கம்   17ம்    நூற்றாண்டின்    
முற்பகுதிவரை     
இருந்த    யாழ்ப்பாண     இராச்சியத்தின்     
தலைநகரமாக      இருந்தது.      
இக்கோயிலின்    தோற்றம்     பற்றிச்    
சரியான    தெளிவு     
இல்லையெனினும்,     
யாழ்ப்பாண    அரசு    காலத்தில்    
மிகவும்    முக்கியமான     
ஒரு    கோயிலாக     இருந்ததாக     
அறியப்படுகிறது.







17   ஆம்    நூற்றாண்டில்     
எழுதப்பட்டதாகக்    கருதப்படும்    
கைலாய    மாலை    என்னும்    நூலின்     
இறுதியில்     காணப்படுகின்றது.







“  இலக்கிய    சகாத்தமெண்ணூற் றெழுபதாமாண்டதெல்லை
யலர்பொலி மாலை    மார்பனாம்   புவனேகபாகு
நலமிகுந்திடு   யாழ்ப்பாண    நகரிகட்டுவித்து நல்லைக்
குலவிய    கந்தவேட்குக்    கோயிலும் புரிவித்தானே ”







ஆனால்    இது   15  ஆம்    
நூற்றாண்டில்    யாழ்ப்பாணத்தைக்     
கைப்பற்றி    17   ஆண்டுகள்   ஆண்ட    
கோட்டே    சிங்கள    அரசின்     
பிரதிநிதியான,     
பிற்காலத்தில்    சிறீசங்கபோதி    
எனும்    
பட்டத்தைக்கொண்ட
புவனேகபாகு    அல்லது     
புவனேகபாகு    எனப்பெயர்    கொண்டு    
கோட்டே     அரசனான,
செண்பகப்    பெருமாள்     
என்பவனால்    கட்டப்பட்டதென    
வேறு    சிலர்    கூறுகிறார்கள்.








இதற்கு    ஆதாரமாக     நல்லூர்க்    
கந்தசுவாமி    கோயிலில்     
இன்றும்    கூறப்பட்டுவரும்    
கட்டியத்தை     இவர்கள்     
காட்டுகிறார்கள்.    
சமஸ்கிருதத்தில்    உள்ள     
இக்  கட்டியத்தின்   பகுதி    பின்வருமாறு    
உள்ளது:






“ சிறீமான்   மஹாராஜாதி   ராஜாய   அகண்ட பூமண்டலப்ரதியதி   கந்தர   விஸ்வாந்த   கீர்த்தி சிறீ   கஜவல்லி   மஹாவல்லி   சமேத சுப்ரமண்ய   பாதாரவிந்த   ஜனாதிரூட    சோடச மஹாதான    சிவகோத்திரோற்பவ இரகுநாதமாப்பாணர்    சமுக” ”



திருவருள் பொருந்திய
தெய்வயானையுடனும் ,
வள்ளியம்மனுடனும் சேர்ந்திருக்கின்ற
சுப்பிரமணியரின் திருவடிகளை வணங்குபவனும், மன்னர்களுக்கு மன்னனும், மிகுந்த செல்வங்களுடையவனும், இப் பரந்த பூமண்டலத்தில் எல்லாத்திசைகளிலும் புகழப்படுபவனும், மக்கள் தலைவனும், பதினாறு பெருந்தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்தில் உதித்தவனுமாகிய சிறீசங்கபோதி புவனேகவாகு... என்பது இதன் பொருள்.







முன்னரே சிறியதாக இருந்த
கோயிலைத் தனது ஆட்சிக்காலத்தில் புவனேகவாகு பெருப்பித்துக் கட்டியிருக்கக் கூடும் என்பதே பொருத்தம் என்பது வேறு சிலர் கருத்து.








உண்மையில் நல்லூர் இப்போது உள்ள அமைப்பானது முன்றாவது கோயில் கட்டுமானம் ஆகும். இந்த 3 வது கோயிலின் அமைப்பில் அது வரை இருந்த பழைய ஆலயத்தின் எந்த கட்டுமானங்களும் சமந்தப்படாத புதிய கட்டுமானம் தான் இப்போதுள்ள நல்லூர்கந்தன் ஆலயம் அகும்.








யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரிலிருந்த மிகப்பெரிய கோவில் இதுவேயென்பது போத்துக்கீசருடைய குறிப்புக்களிலிருந்து தெரியவருகிறது.







யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான
பிலிப்பே டி ஒலிவேரா, 1620ல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான். இதிலிருந்து பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் புதிய கோட்டை கட்டுவதில் பயன்பட்டதாகத் தெரிகின்றது.  இது இருந்த இடத்தில் போத்துக்கீசர் சிறிய கத்தோலிக்க தேவாலயமொன்றை  அமைத்ததாகத் தெரிகிறது.







பின்னர்  ஒல்லாந்தர் இதனைத் தாங்கள் சார்ந்த  புரட்டஸ்தாந்த கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினார்கள். இன்றும் இவ்விடத்தில் பிற்காலத்தில் பெரிதாகத் திருத்தியமைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயமே காணப்படுகின்றது.







ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் (1658–1798) இறுதி ஆண்டுகளில் இந்துக் கோயில்கள் அமைப்பது தொடர்பாக ஆட்சியாளர்களின் இறுக்கம் ஓரளவு தளர்ந்தபோது, நல்லூர் கந்தசுவாமி கோயில் மீள அமைக்கப்பட்டது.






முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தார்கள்.






மடாலயம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த இவ்வாலயத்தை, ஆகமம் சார்ந்த கிரியை முறைக்கும், சிற்ப சாத்திர விதிக்கமைந்த கட்டட முறைக்கும் மாற்றியமைத்து,  இன்றைய நிலைக்குக் கொண்டுவர வித்திட்டவர் ஆறுமுக நாவலர் ஆவார். அவரைத் தொடர்ந்து, அவரது மாணவர்கள் இவ்வாலய வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள்.








ஆலய அமைப்பு





இவ்வாலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் சிலாவிக்கிருகத்திற்குப் பதிலாக வேல் அமைக்கப்பட்டுள்ளது.  இதனைச் சுற்றி
பிள்ளையார் முதலான பரிவாரத் தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாலயம் கிழக்கிலும், தெற்கிலும் வாசல்களைக் கொண்டுள்ளது.  இவற்றின் மேல் பெருங்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.






ஆலயத்தின் தெற்குப் புறத்தில் உள்ள தீர்த்தக்கேணி நன்கு திட்டமிடப்பட்டு, படிக்கட்டுகளும் மண்டபங்களும் கொண்டதாய் அமைக்கப்பட்டுள்ளது.






முருகனின் மூர்த்தங்களில் ஒன்றான தண்டாயுதபாணிக்கு அங்கு சிறு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் மடாலயங்கள் உள்ளன.






           பூசைகளும் மகோற்சவமும்





இவ்வாலயத்தில் நித்திய, நைமித்திய பூசைகள் காலந் தவறாது நடைபெறுகின்றன.



தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பூஜை இடம்பெறுகின்றமையும், மாலையில் பள்ளியறைப் பூஜை இடம்பெறுகின்றமையும் இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். திருவிழா காலங்களில் மட்டுமல்லாமல் தினமும் மாலையில் முருகப் பெருமானை ஊஞ்சற் பாட்டுப்பாடி, அழகிய சிறு மஞ்சத்தில் ஏற்றி பள்ளியறையில் துயில்கொள்ளச் செய்வதும், மறு நாள் அதிகாலையில் திருநல்லூர்த் திருப்பள்ளியெழுச்சி பாடி, முருகனைத் துயிலெழுப்பி அதே சிறு மஞ்சத்தில் அழைத்து வந்து மூலஸ்தானத்தில் அமர்த்துவதும் சிறப்பான மரபாகும்.






இங்கு, ஆவணி அமாவாசையைத் தீர்த்தமாகக் கொண்டு இருபத்தைந்து நாட்களுக்கு மகோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது.  இந்தத் திருவிழா யாழ்ப்பாணத்து மக்களுக்கு மட்டுமன்றி வேறு பிரதேச மக்களுக்கும் முக்கியமான திருவிழாவாக கொள்ளப்படுகிறது.   






ஆடி அமாவாசையின் ஆறாம் நாள் கொடியேற்றத் திருவிழாவுடன் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகிறது.   அத்துடன், ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி, சூரன்போர், இயமசங்காரம், கார்த்திகைத் திருவிழா,கற்பூரத்திருவிழா,தைப்புப சித்திரை வருடப்பிறப்பு என பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.





அத்துடன், யாழ்ப்பாணத்தில் ஆறுகாலப்பூசைகள் நடைபெறும் ஒரே ஒரு ஆலயம் நல்லூர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.




மகோற்சவ காலங்களில் மெய்யடியார்கள் காவடியாட்டம்|காவடி எடுத்தல், தீச்சட்டியெடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், அடியழித்தல், முதலான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.
இக்காலத்தில் புராண படனம் செய்தல், சமயப் பிரசங்கம் செய்தல், திருமுறைகள் ஓதுதல், ஓதுவார்களை அழைப்பித்து ஓதுவித்தல் முதலான சமய நிகழ்ச்சிகள் மக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக நடத்தப்படுகின்றன.






ஆலயத்தைச் சூழ இலங்கையிலேயே ஒரேயொரு சைவ ஆதீனமாகத் திகழும் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர் ஆறுமுக நாவலர் மணி மண்டபம், நல்லூர் அறுபத்து மூன்று நாயன்மார் குருபூசை மடம், நல்லூர்
துர்க்கா மணி மண்டபம், நல்லூர் நடராஜர் பரமேஸ்வரன் மணி மண்டபம் ஆகிய பல மடங்களும், மண்டபங்களும் காணப்படுகின்றன. 






ஆலய மஹோற்சவப் பெருநாட்களில் மேற்படி மண்டபங்களில் ஆன்மீகக் கலை, கலாசார நிகழ்வுகளுடன், சில மண்டபங்களில் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் நன்மை கருதி அன்னதானமும் வழங்கப்படுகிறது.
நாள் தோறும் இங்கு ஆறுகாலப் பூசைகள் இடம்பெறுகின்றன. வாரத்தில் வெள்ளிகிழமைகளிலும், விசேட நாட்களிலும் கந்தன் திருவடியைத் தரிசிக்க வரும் அடியவர்கள் பலர்.






நல்லூர்க் கந்தன் மஹோற்சவம் ஆவணி மாத அமாவாசையைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு 25 தினங்கள் மஹோற்சவப் பெருவிழா சிறப்பாக இடம்பெறுகின்றன. ஈழத்திலே நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திலுமே 25 தினங்களாக மஹோற்சவப் பெருவிழாக்கள் வருடம் தோறும் நடைபெற்று வருகின்றன. மஹோற்சவ நாட்களில் மொத்தமாக 55 திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இவற்றுள் கொடியேற்றம்,
திருமஞ்சத் திருவிழா, கார்த்திகைத் திருவிழா, கைலாசவாகனத் திருவிழா, சப்பறம், தேர்த் திருவிழா, தீர்த்தத் திருவிழா என்பன முக்கியமானவை.









காலைத் திருவிழாவுக்கு 150 ரூபாவும், மாலைத் திருவிழாவுக்கு 235 ரூபா 50 சத்தமும் மாத்திரம் பெற்றுக் கொள்ளும் தனித்துவம் வாய்ந்த ஆலயமும் இதுவாகும்.





ஆலய உற்சவ காலங்களில் பெருந் தொகையான அடியவர்கள் உள்நாட்டிலிருந்து மாத்திரமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்து கலந்து கொள்ளுவர். ஆலயத் தேர், தீர்த்த உற்சவ நாட்களில் இலட்சோப இலட்சம் அடியவர்கள் ஆலய வீதிகளில் ஒன்று கூடி முருகப் பெருமானைப் பக்திப் பரவசத்துடன் வழிபாடாற்றுதலும், நூற்றுக் கணக்கான ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்ஷணம் செய்தும், காவடிகள் எடுத்தும் மெய்யுருக வழிபடும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைப்பன.






யாழ்ப்பாணத்தின் மாவிட்ட புரத்திலுள்ள மாவிட்டபுரம் கந்தனை அபிடேகக் கந்தன் எனவும், செல்வச்சந்திநி முருகனை அன்னதானக் கந்தன் எனவும், நல்லூர்க்கந்தனை அலங்காரக் கந்தன் எனவும் வரலாறுகள் சிறப்பித்துக் கூறுகின்றன.






நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு கோயிலின் அர்ச்சனைப் பற்றுச்சீட்டுக்கள் பல விலைகளுக்கும் மாற்றப்பட்டுள்ள போதிலும் நல்லூரான் ஆலயத்தின் பற்றுச்சீட்டு இன்றுவரை ஒரு ரூபாவிற்கு மட்டுமே விற்கப்படுகின்றது.







அத்துடன், வருடாவருடம் ஆலயத்தின் பகுதிகள் புனரமைக்கப்பட்டு வருவதுடன், 2011ம்ஆண்டு தெற்கு வாயில் பகுதியில் இராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிடேகம் செய்யப்பட்டதுடன், முருக பக்தரான அருணகிரி நாதருக்கு ஆலயத்தின் தெற்குப் பக்கமாக சிறிய ஆலயம் அமைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் நடாத்தப்பட்டு வரப்படுகின்றது
ஆண்டுதோறும், கந்தபுராண படன வாசிப்பு நடைபெற்று வருவதுடன், திருவிழாக்காலத்தில் ஒவ்வொரு நாளும் மாலை நிகழ்வுகளாக ஆன்மீகப் பிரசங்கங்கள், சொற்பொழிவுகள், நாட்டி நடனங்கள் மற்றும் இசைக்கச்சேரிகள் என்பன நடைபெற்றுவருவதுடன், பஜனை படிக்கம் வழக்கமும் இந்த ஆலயத்தில் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






ஆலயம் பற்றிய நூல்கள்





கூழங்கைத் தம்பிரான் பாடிய நல்லைக் கலிவெண்பா .
இருபாலைச் சேனாதிராச முதலியாரின் நல்லை வெண்பா.
நல்லையந்தாதி .
நல்லைக் குறவஞ்சி .
நல்லை நகர்க் கந்தன் பேரில் திருவூஞ்சல் .
"" திருநல்லூர்த் திருப்பள்ளியெழுச்சி"
உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின்
நல்லை கந்தசுவாமி விஞ்சதி .
நல்லை சரவணமுத்துப் புலவரின்
நல்லை வேலவருலா' .
ஆறுமுக நாவலரின் தனி நிலைச் செய்யுள் ஒன்று.





                         வரலாறு




இந்த ஆலயம் 13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சிசெய்த ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கலிங்கமாகன் அல்லது கூழங்கை சக்கரவர்த்தியால் கட்டுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலையில் கூறப்பட்டுள்ளது.(கை ஊனமான நிலையில் உள்ளதால் இந்த அரசன் கூழங்கைச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டான்)






எனினும் 15ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பதினேழு ஆண்டுகள் ஆட்சி செய்த சிங்கள அரசின் பிரதிநிதியும், பிற்காலத்தில் ஸ்ரீ சங்கபோதி 7ஆம் புவனேகபாகு என்ற பெயர்கொண்டு அழைக்கப்பட்ட கோட்டை அரசனான ஸ்ரீ சண்முகப்பெருமாள் என்பவனால் இக்கோவில் கட்டப்பட்டதாகவும் வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
அத்துடன் பாடசாலைகளில் கற்பிக்கப்படும் இலவசபாடநூல்களிலும் இந்த விடயமே கூறப்பட்டுள்ளது.







நல்லூர் கந்தசுவாமி கோவில் முத்திரைச் சந்தியிலுள்ள ‘குருக்கள் வளவு’ என்ற காணியில் கட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கச்சேரியில் 1882ம் ஆண்டு உருவாக்கபட்ட சைவசமயக் கோவில்கள் தொடர்பான பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரில் இருந்த மிகப்பெரிய கோவில் இது என போர்த்துக்கேயர்களுடைய குறிப்புக்களில் இருந்து அறியமுடிகிறது.
அத்துடன், யாழ்ப்பாண மன்னனான ஆரியச்சக்கரவர்த்திகளின் அரண்மனையை அண்டிய பகுதியிலேயே பழைய கோவில் அமைந்திருந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.




யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் நல்லூரை மையமாக வைத்து கிழக்கில் வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும், தெற்கில் கைலாசநாதர் கோயிலையும், மேற்கில் வீரமாகாளி அம்மன் கோயிலையும், வடக்கில் சட்டநாதர் கோயில் என ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் அரண்களை அமைத்திருந்தார்கள்.






நல்லூர்க் கந்தசுவாமி கோவிலை இரகுநாத மாப்பாண முதலியார் வம்சத்தினரே பரம்பரையாக நிர்வகித்து வருகின்றனர்.
மாப்பாண முதலியார் பரம்பரையினால் இக்கோவிலில் நித்திய நைமித்தியங்கள் நடைபெறுகின்றன.






ஈழத்திலுள்ள கோவில்களுள் நேரம் தவறாத நித்திய, நைமித்திய பூசைகள் மூலம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றைய கோவில்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றது.




முருகன் குமரன் குகன்என் றுமொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவும்
குருபுங் கவஎண் குணபஞ் சரனே.
-அருணகிரிநாதர்






இலங்கையின் வடபகுதியில் பண்டைஞான்று நாகர்கள் என்ற நாகரிகம் மிகுந்த குழுவினர் வாழ்ந்து வந்த படியால், அப்பகுதி நாகதீபம் என்றழைக்கப்படலாயிற்று. இந்நாட்டுக்குப் புண்ணியபுரம், காந்தருவ நகரம், வீணாகானபுரம், எருமை முல்லைத்தீவு, மணற்றிடர், மணற்றி, யாழ்ப்பாணம் எனப் பல பெயர்கள் வழங்கலாயின. இப் பெயர்க் காரணங்களை விளக்கப் பல கதைகளுமுண்டு.







நாகர்கள் ஆட்சிபுரிந்த காலத்தில் கந்தரோடையென இப்பொழுது வழங்கப்படும் கதிரமலை அல்லது கதுருகொடையே இராசதானியாக விளங்கியது. இந்த நாகர்கள் தமிழர் இனத்தின் பாற்பட்ட ஒரு திராவிட வகுப்பினர் எனச் சரித்திர ஆராய்ச்சியறிஞர் கருதுகின்றனர்.   பின்னர் தமிழர் சிறிது சிறிதாகச் செல்வாக்குப் பெற்றுத் தனியரசு நிறுவவும் முற்பட்டனர்.







கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கலிங்க அரசன் உக்கிரசிங்கன் கதிரைமலையரசைக் கைப்பற்றி மாருதப் புரவல்லியெனும் சோழ ராசகுமாரியை மணந்து, பின்னர் கதிரைமலையை விட்டு நீங்கி, சிங்கை நகரைத் தன் இராசதானியாக்கினான். பருத்தித்துறைக்கண்மையில் மணல்மேடுகள் உள்ள வல்லிபுரமே சிங்கைநகராகப் பண்டைக்காலத்தில் விளங்கியது.






சிங்கை நகரும் நல்லூரும் :
சிங்கை நகரைப்பற்றிச் சரித்திரவாராய்ச்சி யறிஞர், சுவாமி ஞானப்பிரகாசர் பின்வருமாறு கூறுகின்றார் :






* “ ஆதி ஆரியச்சக்கரவர்த்தி எடுப்பித்த யாழ்ப்பாண நகரி யாது? அது நல்லூராதல் கூடுமா? கூடாது என்பர் ஶ்ரீ இராசநாயக முதலியார். இவ் வியுற்பத்திமானின் அனுமானப்படி பருத்தித்துறை கணித்தாய் மணல்மேடுகள் பொருந்தியிருக்கின்ற வல்லிபுரமே  பூர்வகாலச்  சிங்கைநகராம். நல்லூர், புவனேகவாகுவெனப் பிற்படக் கோட்டை இராச்சியம் வகித்த செண்பகப்பெருமாள் பதினைந்தாம் நூற்றாண்டிற் கட்டுவித்ததாம். இம்மதம் எமக்கும் சம்மதம். வல்லிபுர மணற் கும்பிகளுள் காற்றுக் காலங்களில் அகப்படும் பழம் பொருட்கள், அங்கு பலவிடங்களிற் குவிந்து கிடக்கின்ற பூர்வகாலக் கல்லோடுகள், கீச்சுக்கிட்டம் ஆதியனவும், அங்கிருந்து கரை மார்க்கமாகப் போன பெரும் வீதியின் அடையாளங்களும் ஓர்நாள் விஸ்தார நகராய் விளங்கியது எனக் கரதலாமலகமாய்க் காட்டும். அப்பால் ஆரியச்சக்கரவர்த்திகள் தம் செல்வாக்கு நிரம்பிய நாட்களில் பெருங் கப்பற் படையுள்ளோராய்ப் பிரக்யாதி பெற்றுள்ளமையினால், அம் மரக்கலத்திரள் ஆழியிற் சுலபமாய்ச் சென்று திரும்புவதற்கு அநுகூலமான துறைமுகம் உள்ளோராய் இருந்தமை அவசியம்.




கேகாலைப் பகுதியிலுள்ள கொத்தகமத்திற் கண்டெடுத்த கல்வெட்டும் அன்னோரைப் பொங்கொலிநீர்ச்
சிங்கை நகர் ஆரியர் எனச் சூசிப்பிக்கின்றது. பெருங்கடற் சமீபமும் சிறந்த துறைமுகப் பொலிவும் பொருந்தக்கொண்டது வல்லிபுரமே.


“சிங்கை நகர் வல்லிபுரத்தி லிருந்ததெனக் கொள்ளுதல் அமைவுடைத்தாயின், பறங்கிக்காரர் கி.பி. 1590 இல் கொழும்புத்துறையிலிறங்கி நல்லூரைச் சருவியகாலையில், சிங்கைநகரெனும் பெயரோடு ஓர் பெலத்த அரணிருந்ததென பாதர் குவேறோஸ் * கூறுகின்றமை எவ்வாறென ஓர் ஆசங்கை நிகழும். பூர்வ சிங்கைநகர் கொழும்புத்துறைக்கும் நல்லூருக்குமிடையிலாமெனக் கொள்ள வேறு சான்றில்லாமையால், அச்சிங்கைநகர் அழிந்து பட்டு நல்லுஸர் தலைநகராயின பின், அப்பழைய நகர்ப் பெயரோடு ஓர் அரண் இங்கு விளங்கியதெனக் கொள்ளலாம் என்க.
“ மேலே குறிப்பிட்டவாறு கி.பி. எட்டாம் நூற்றாண்டு தொடக்கம் சிங்கை நகரிலிருந்தரசாண்ட கலிங்க அரசனாகிய உக்கிரசிங்கனும் அவன் வழியினரம் சில காலம் பிறர் ஆட்சிக்குட்படாமலும் சிலகாலம் சோழ அரசுக்கும் பொலனறுவை அரசுக்கும் கீழடங்கியும் சிங்கை நகரில் அரசுபுரிந்து வந்தார்கள்.




இவர்கள் இராமேஸ்வரத்துப் பிராமண அரசகுடியிற் சம்பந்தஞ் செய்த பின், ஆரியவரசர் எனும் நாமம் புனைந்து இராமேஸ்வரத்தையும் தம் ஆளுகைக்குட்படுத்தி, அதனால் சேதுகாவலன் எனப் புதுப் பெயரையும் புனைந்து, இடபக் கொடியும் சேதுலாஞ்சனையும் பெற்றவர்களாய் பரராசசேகரன், செகராசசேகரன் எனும் சிங்காசனப் பெயர்களை மாறிமாறியுடையவர்களாய் அரசு செலுத்தி வந்தனர்.”


பேராசிரியர் திரு.க. கணபதிப்பிள்ளை அவர்கள் கருத்தின்படி ஆரியச்சக்கரவர்த்தி பாண்டிநாட்டுத் தண்டத் தலைவனாவான் :
* “ பின்பு பாண்டி நாட்டில் மாறவர்மன் குலசேகரன் (கி.பி. 125- 1301) பட்டத்திற்கு வந்ததும் இலங்கைக்குத் தளபதியாக
ஆரியச்சக்கரவர்த்தி என்னுந் தண்டத்தலைவனை அனுப்பினான்.



அவன் நாட்டை மேற்பார்வையிட்டுக் கொண்டு வட – இலங்கையிலேயே தங்கினான். இவனிலிருந்தே யாழ்ப்பாணத்தெழுந்த புதிய அரச பரம்பரை தோன்றியிருத்தல் வேண்டும். இவனுக்குப் பின் வந்த யாழ்ப்பாணத்து மன்னர் யாவரும்
ஆரியச்சக்கரவர்த்தி என்னும்அரசபட்டப் பெயரைக் கொண்டு விளங்கினர்.”


செகராசசேகரன் :


கி.பி. 1380 ஆம் அண்டளவில் செயவீரசிங்கை ஆரியன் என்பவன் செகராசசேகரன் (ஐந்தாவது) என்னும் பட்டத்துடன் அரசனானான். இவனே செகராசசேகரம் என்னும் வைத்திய நூலையும், செகராசசேகரமாலை என்னும் சோதிட நூலையும், காரிவையாவின் கணக்கதிகாரம் என்னும் நூலையும், இயற்றுவித்தவன். தட்சண கைலாச புராணமும் இவன் காலத்திலேயே ஆக்கப்பட்டது.




யாழ்ப்பாணத்த அரசர் பலருள்ளும் இச் செயவீரனே நடுநிலை தவறாத செங்கோற் சிறப்பாலும் படைவலியாலும் செந்தமிழ் அறிவாலும் சிறந்தவன். செகராசசேகரன் என்னும் பட்டப் பெயர் புனைந்த மற்றைய அரசர்களின் பெயர்கள் வழக்கிழந்தொழிய இவன் பெயர் மாத்திரம் மிகச் சிறந்து புகழ்பெற்று நின்றமையால் பிற்காலச் சரித்திரக்காரர் செகராசசேகரன் ஒருவனே என்று எழுதி விட்டனர்.






கி.பி. 1414 ஆம் ஆண்டளவில் செயவீரன் சகோதரன் குணவீர சிங்கையாரியன், பரராசசேகரன் என்னும் பட்டத்துடன் அரசனானான். இவனுக்குப் பின் இவன் மகன் கனகசூரிய சிங்கையாரியன் பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகதியில் சிங்கை நகரில் ஆட்சி புரிந்து வந்தான். அக்காலத்தில் (ஜயவர்த்தனபுரம்) கோட்டையை ஆண்ட ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுமாறு தனது வளர்ப்புப் பிள்ளையாகிய செண்பகப் பெருமாளை (சப்புமால் குமாரய) ஒரு செனையுடன் அனுப்பினான்.


செண்பகப்பெருமாள் :


இந்தச் செண்பகப்பெருமாள் அறாம் பராக்கிரமபாகுவின் தத்தபுத்திரனாவான் என்பது முதலியார், செ. இராசநாயகம் அவர்கள் கருத்தாகும். இவனைப்பற்றி முதலியார் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள் :


“கோட்டை அரசனாகிய ஆறாம் பராக்கிரமபாகு சபைக்க மலையாளத்தேசத்திலிருந்து பணிக்கன் ஒருவன் வந்தான். அவனை அரசன் உபசரித்து, அவன் தேகவலியாலும் வாட்போர்த்திறத்திலும் ஈடுபட்டவனாய்த், தன் குலத்தினளாகிய ஒரு கன்னிகையை அவனுகு மணம் முப்பித்தான். இப் பணிக்கனுக்குச் செண்பகப்பெருமாள் (சப்புமால் குமாரய), ஜெயவீரன் (அம்புலகலகுமாரய) எனவிரு குமாரர்கள் பிறந்தார்கள். பராக்கிரமபாகு தனக்குப் புத்திரர்கள் இல்லாமையால் இவர்களைத் தனது தத்த புத்திரர்களாக வைத்து வளர்த்து வந்தான். இஃதிங்ஙனமாக, பராக்கிரமபாகுவின் மகள் உலகுடையதேவி நன்னூர்த் துணையார் * என்பவனை மணந்து ஜெயவீரன் என்னும் மகனையீன்றாள். இந்நிகழ்ச்சி பராக்கிரமபாகுவின் எண்ணங்களை மாற்றிவிட்டது.






தான் இறந்தபின் தத்த புத்திரர்களில் ஒருவன் இராச்சியத்துக்குவரின் தன் பேரப்பிள்ளைக்கு அரச பதவி இல்லாது போய்விடும் என்ற அச்சத்தால் பராக்கிரமபாகு அவ்விரு குமாரர்களையும் அகற்ற வேண்டுமென எண்ணி, வன்னியர்களை யடக்கி, யாழ்ப்பாண அரசனையும் வென்று வருமாறு செண்பகப்பெருமாளை அனுப்பினான். இவர்கள் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்று பராக்கிரமபாகு கருதினான்.



செண்பகப்பெருமாள் பிரபலம்பெற்ற குதிரை வீரன் ; உருவத்தால் இராட்சதனைப்போலும் காத்திரமுடையவன்; மகா பலங்கொண்டவன். தகுந்த படையுடன் வந்த இவன் கறப்புக்குதிரை மீதமர்ந்து, எதிரி படையுட் புகுந்து அநேகரைத் தன் வாளுக்கிரையாக்கி, தமிழ்ச் சேனையைப் புறங்கொடுத்தோடச் செய்தான். போர்க்குடைந்த
கனகசூரியன் தன் குடும்பத்தாருடன் இந்தியாவுக்கோடித் திருக்கோவலூரிற் கரந்துறைவானாயினான்.


“ செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத் தலைநகருட் புகுந்து, மாடமாளிகைகளைத் தரைமட்டமாக்கி, அநேக அதிகாரிகளைச் சிறைப்படுத்தி அவர்களுடன் ஜயவர்த்தன கோட்டைக்க மீண்டான். பராக்கிரமபாகு இவனை ‘



ஆரிய வேட்டையாடும் பெருமாள் ’ எனப் புகழ்ந்து, யாழ்ப்பாணத்தையே அரசுபுரியுமாறு அனப்பினான். பராக்கிரமபாகுவின் கபட சிந்தையையறியாத செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணம் போய்ப் பழைய தலைநகர் பாழாய்விட்டமையினால், நல்லூரிலே கி.பி. 1450 அம் ஆண்டளவில் ஒரு புத நகர் எடுப்பித்துச் சிறீசங்கபோதி
புவனேகவாகு என்னும் சிங்கள நாமத்தோடு பதினேழு வருடங்களாக அரச செய்து வந்தான்.




இவன் யாழ்ப்பாணத்தை வென்ற புகழ் சிங்கள நாடெங்கும் பரவிப் பேரானந்தத்தை விளைத்தது. இவ் வெற்றியைப் புகழ்ந்து ‘கோகிலசந்தேஸ’ என்னும் குயில்விடு தூதுப் பிரபந்தம் தேவி நுவரையைச் சேர்ந்த இருகல்
கலத்திலக்க பரிவேனாதிபதி எனும் பெளத்த குருவினால் இயற்றப்பட்டது.”


செண்பகப்பெருமாள் ஆண்ட நகர் விசாலித்த தெருக்களும், உப்பரிகை பொருந்திய வீடுகளும், மாளிகைகளும், இராமன் கோயில் முதலிய கோயில்களும் உள்ளதாக இந்நூல் கூறுகின்றது.



புவனேகவாகு கட்டிய புராதன ஆலயம்
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டியவன் புவனேகவாகு என்பது “கைலாயமாலை” யில் வந்துள்ள பின்வரும் தனிச் செய்யுளால் அறியக்கிடக்கின்றது :


“ இலகிய சகாத்த மெண்ணூற் றெழுபதா மாண்ட தெல்லை
அலர்பொலி மாலை மார்ப னும்புவனேக வாகு
நலமிகும் யாழ்ப்பா ணத்துநகரிகட் டுவித்து நல்லைக்
குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித் தானே.”



இப் புவனேகவாக திரிசங்கபோதி எனவும் அழைக்கப்பட்டான் என்பது ஶ்ரீமான் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையவர்கள் எழுதிய ‘யாழ்ப்பாணச் சரித்திரத்தில், விசுவநாத சாஸ்திரியார் சம்பவக் குறிப்பு எனும் கையெழுத்துக் பிரதியிலிருந்த எடுத்துக் காட்டிய செய்யுளால் நன்கு புலப்படுகின்றது. அச் செய்யுள் வருமாறு :



“இலகிய சகாத்த மெண்ணூற் றெழுபத்து நான்கி
னலர்திரி சங்க போதி யாம்புவ னேக வாகு
நலமுறும் யாழ்ப்பாணத்து நகரி கட்டுவித்து
குலவியகந்தனார்க்குக் கோயிலொன்றமைப்பித்தானே.”



இவன் தான் நல்லூர்க் கந்தசுவாமி கோயிற் கட்டியத்தில் இன்றும்,
சிறீமான் மஹாராஜாதிராஜ அகண்ட பூமண்டலப்ர
தியதிகந்தர விச்றந்த கீர்த்தி
சிறீ கஜவல்லி மாவல்லி சமேத சுப்பிரமண்ய
பாதாரவிந்த ஜநாதிரூட சோடச
மகாதான சூர்யகுல வம்சோத்பவ சிறீசங்க
போதி புவனேகவாகு
என்று போற்றப்படுகிறான்.


தமிழ் அறிவு :


மாவிட்டபுரக் கொயிலாதீனப் பிராமணர் சின்னமனத்துளார் என்பவர் இவ்வரசனுக்கு விருந்தளித்ததாகவும் அவ்விருந்தைப் புகழ்ந்து சில பாக்கள் பாடியதாகவும் ‘ யாழ்ப்பாண வைபவமாலை’ குறிப்பிடுகின்றது. அப்பாடல்களுள் ஒன்று பின்வருமாறு :



“ சின்ன மனத்தான் செயும்விருந்திற் சாற்றுருசி
அன்னதனை விண்னோர் அறிந்திருந்தால் – முன்னலைவாய்
வெற்பதனைக் காவியுய்த்து வேலைகடைந் தேயுலைதல்
அற்பமெனத் தள்ளுவரே யாம்.”



இந்தச் செய்யுளை நோக்குமிடத்து செண்பகப் பெருமாள் சிறந்த தமிழ்ப் புலவனாக விளங்கினான; என்பது தேற்றம்.
யாழ்ப்பாணத்து இராசதானியாகிய நல்லூரைச் செண்பகப் பெருமாள் நன்கு திருத்தி, நல்லைக் கந்தவேள் ஆலயத்தையம் ஆக்குவித்தான். “செண்பகப்பெருமாள் தமிழ்க்குருதி தன் நாளங்களில் ஓடக் கொண்டவனாதலாலும்,



தமிழுற்பத்தியாளனேயாகிய அளகேஸ்வரன் காலந்தொட்டு ஜயவர்த்தன கோட்டையிலேயும் வழிபாடு பயின்று வந்தமையாலும், கோகில சந்தேசமுடையார் அவனைப் புத்தமத தாபகனெனப் புகழ்ந்தோதியவிடத்தும் தமிழ்ப் பிரசைகட்கிதமாய்த் தமிழ்த் தெய்வ வழிபாடுகளையே யாழ்ப்பாணத்தில் வளர்த்திருப்பான் என்பதிற் சிறிதும் சந்தேகமின்று” எனச் சுவாமி ஞானப்பிரகாசர் தாம் எழுதிய ‘யாழ்ப்பாண வைபவ விமர்சன’ த்திற் (பக்.107) கூறியிருத்தலும் ஈண்டு நினைவுகூர்தற்பாலது.




கி.பி.1467 ல் கொட்டையை யாண்ட ஆறாம் பராக்கிரமபாகு தன் பேரன் ஜெயவீரனுக்கு இலங்கையரசை யீந்து முடிசூட்டிச் சிலநாளில் இறந்தான். இதைக் கள்வியுற்ற செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்திலிருந்த புறப்பட்டுக் கோட்டைக்குச் சென்ற ஆங்கரசனாயிருந்த சிறுவனைக் கொண்று ஆறாம் புவனேகவாகு எனும் பெயருடன் கோட்டை யரசனானான்.



நல்லூர் நல்ல ஊராதல் :
“ஆறு முகனீ யடியார்க் கிரங்கியவர்
தேறு முறையருளுந் தெய்வதநீ – வேறுதுணை
இல்லேன் மிடியனைத்து மில்லார்க்கு வானமைந்தாய்
நல்லூர்ப் பதியி னயந்து.”



-நல்லை நான் மணிமாலை : – குகதாசர் ச. சபாரத்தின முதலியார்
கனகசூரியன் மீண்டு வருதல் :
யாழ்ப்பாணத்தில் விஜயபாகு என்னும் சிங்களனொருவன் அரசனாகப் புவனேகவாகுவால் நியமிக்கப்பட்டான். இவன் ஆட்சிக்காலத்தில் கனகசூரியன் தன் புத்திரர்களுடனும் சேனைகளுடனும் யாழ்ப்பாணம் மீண்டும் வந்து, விஜயபாகுவுடன் போர் தொடுத்து அவனைக் கொன்று மீண்டும் தானே வட இலங்கை அரசனாகி நல்லூரில் இருந்தரசாண்டான்.
நல்லூர் – பெயர்க்காரணம் :



“சீர்விளங்க மேப்பதிக்குஞ் செப்புகின்ற சொற்பெயரே
யூர்விளங்க நாமமா நல்லூரே.”


தமிழ்நாட்டு ஊர்கள் நல்லூர் என்றும், புத்தூர் என்றும் வகுத்துக் கருதலாகும். பெண்ணையாற்றங் கரையில் அமைந்தது. திருவெண்ணெய் நல்லூர். அது சுந்தரமூர்த்தியைத் தடுத்தாட்கொண்ட ஈசன் கோவில் கொண்டுள்ள இடம். (‘பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் ’- சுந்தரர்).
சைவசமய ஞான நூலாகிய ‘சிவஞானபோத’ த்தை அருளிச் செய் மெய்கண்டதேவர் பிறந்தருளும் பேறு பெற்ற நல்லூரும் அதுவே. கும்பகோணத்துக்கருகே நல்லூர் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது.
அமர்நீதி என்னும் அடியார் அவ்வூரிலே தொண்டு செய்த சிவப்பேறு பெற்றார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.





மண்ணியாற்றங்கரையில் முரகவேளின் பெயரால் அமைந்த சேய்சல்லூர் இந்நாளில் சேங்கனூர் என்று வழங்கும். “சேயடைந்த சேய்ஞலூர்” என்பது தேவாரம். சூரனோடு போர்செய்யக் கருதி எழுந்த முருகவேள் சிவபெருமானை வழிபட்டுச் சர்வசங்காரப் படைக்கலம் பெற்ற ஸ்தலம் சேய்நல்லூர் (சேய்ஞலூர்) என்று கந்தபுராணம் கூறும். வடஆர்க்காட்டிலுள்ள மற்றொரு சேய்நல்லூர் சேனூர் எனப்படும்.



சிங்கைப் பரராசசேகரன்:


கனகசூரியனுக்குப் பின் அவன் மகன், சிங்கைப்பரராசசேகரன் எனும் நாமத்தோடு கி.பி. 1478ஆம் ஆண்டளவில் அரசனானான். இவன் தந்தையினும் சிறந்தவனாய் நல்லூர் இராசதானிக்கு வடபாலில் சட்டநாதர் கோயிலையும், குணபாலில் வெயிலுகந்த பிள்ளையர் கோயிலையும், தென்பாலில் கைலாயநாதர் ஆலயத்தையும், குடதிசையில் வீரமாகாளியம்மன் ஆலயத்தையுங் கட்டுவித்துத் தன் தலைநகரை முன்னையிலும் அணிபெற விளங்கவைத்தான்.




கந்தசுவாமி கோயிலுக் கண்மையிற் பகர வடிவினதாய ஓர் ஏரி அமைப்பித்து, யமுனா நதியின் திவ்ய தீர்த்தத்தைக் காவடிகளிற் பெய்வித்து, அதனை யமுனையேரி (யமுனாரி) எனப் பெயர் தந்தழைத்தான். இந்த முப்புடைக் கூபம் இப்பொழுது நல்லூர்க் கிறீஸ்தவ தேவாலயத்துக்கண்மையில் உள்ளது. இதுவே தீர்த்தக் கேணியாக உபயோகிக்கப்பட்டதெனக் கருதப்படுகின்றது.
இங்ஙனம் ஆரியச்சக்கரவர்த்திகள் நல்லூரிலிருந்து அரசாண்ட காலத்தில் முடியுரை மன்னரும் சென்று தலைவணங்கும் தலைசிறந்த ஆலயமாக நல்லூர்க் கந்த சுவாமி கோயில் விளங்கியது. அக்காலத்தில் இதன் சிறப்பு இத்தகைத்தென்று இயம்ப முடியுங்கொல்!


முன் செண்பகப்ருமாள் 


வெற்றிகொண்டபோது சிதைத்த தழிழ்ச் சங்கத்தை மீண்டும் தாபிக்க விரும்பி, இவன் புலவர்களை ஒருங்கு சேர்த்து முன்போற் கழகம் நிறுவி, வித்துவான்களுக்கு வேண்டிய சன்மானங்கள் செய்து, தமிழ் மொழியைப் பொன்போற் பேணி வளர்த்து வந்தான். இவன் அவையில் இவன் மைத்துனரும், வடமொழி தென்மொழியாகிய இருமொழிகளிலும்; வல்ல புலவருமாகிய அரசகேசரி, ‘ இரகுவம்சம் ’ எனும் நூலை வடமொழியிலிருந்து பெயர்த்துத் தமிழிலாக்கி அரங்கேற்றினார். இவர் நல்லூரிலேயே வாழ்ந்து வந்தார். ‘ பரராசசேகரன் உலா ’ வும் இவ்வரன் காலத்திலேதான் ஆக்கப்பட்டது.





நீர்வேலியிலுள்ள அரசகேசரிப் பிள்ளையார்கோயிலும், நல்லூரிலுள்ள அரசகேசரி வளவும் இப்புலவரின் பெயரை எங்களுக்கு இன்றும் ஞாபகப்படுத்தும் சின்னங்களாகவுள்ளன. இந்த அரசகேசரி எதிர்மன்னசிங்கப் பரராசசேகரன் காலத்தில் (பதினாறாம் நூற்றாண்டு) வாழ்ந்தவன் என்பது சுவாமி ஞானப்பிரகாசர் கருத்தாகும். சிங்கைப் பரராசசேகரனுக்குப் பின் ஆண்ட யாழ்ப்பாணத்தரசர்களும் இக்கோயிலின் பரிபாலனத்தில் அக்கறை எடுத்து வந்தனர் என்பது கூறாதேயமையும். எனவே முடிமன்னரும் சைவப் பொதுமக்களும் சுந்தர நல்லூரில்வாழ் சோதி வடிவேல் பிடித்த கந்தனை வந்தனை செய்து வந்தனர்.



போர்த்துக்கீசர் காலம் :


பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அதாவது 1560ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆந் திகதி கொன்ஸ்தாந்தீனு தே பிறகன்சா என்ற படைத் தலைவனின் தலைமையில் போர்த்துக்கீச கப்பற்படை யாழ்ப்பாணக் களப்பில் (கரையூர்) நங்கூரம் போட்டது. 1200 பேரைக் கொண்ட பறங்கிப் படையினர் கரையில் நின்ற தமிழ்ப்படையை வென்று, நல்லூர் நகர் மதிலை உடைத்து உட்சென்றனர். சங்கிலி அரசன் கோப்பாய்க்கு ஒளித்தோடினான். பின்னர் போர்த்துக்கீசர் இவ்வரசனுடன் சமாதான உடன்படிக்கையை செய்து மீண்டனர்.





யாழ்ப்பாணத்தரசன் போர்த்துக்கீசரை ஒதுக்கிவிட முயற்சி செய்வதை மன்னாரிலிருந்த போர்த்துகீச தளபதி கோவை அதிபதிக்கறிவித்தான். அதனால், அந்திரேபூர்த்தாடு தே மென்டொன்சா என்னும் தளபதி பெரிய கப்பற் படையுடன் 1591ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி கொழும்புத்துறையி லிறங்கினான். யாழ்ப்பாணத்தரசனுடைய படை வீரர் எதிர்த்துப் போராடியும், அவர்கள் இறங்குவதைத் தடுக்க முடியவில்லை. ஒக்ரோபர் மாதம் 28ஆம் திகதி பறங்கிப்படை நல்லூரை நோக்கி நடந்தது.


சைவசமயிகளின் தியாகம்:


தங்கள் நாட்டை அந்நியர் கைப்பற்றாமற் காப்பதில் தங்கள் உயிரையும் ஒருபொருளாக மதியாது யுத்தஞ் செய்யத் தமிழர் திரண்டெழுந்தனர், சைவக் கோயில்களை அழியாமற் காக்கவேண்டுமானால், அந்நியர்களை ஒதுக்கவேண்டு மென்று சைவர்கள் வீராவேசத்துடன் போர்புரிந்தனர். கோயிற் பூசர்கள், யோகிகள் முதலியோரும் இதில் ஈடுபட்டனர். பறங்கிப்படை முன்றேிச் செல்ல, வீரமாகாளியம்மன் கோயிலுக்கும் கந்தசுவாமி கோயிலுக்கும் இடையில் அரசனின் மெய்காப்பாளர்களாகிய மகா வீரர்களைக் கொண்ட அத்தப்பத்துப்படை தங்கள் உயிரைக்கூட வெறுத்துச் சத்துருக்களை எதிர்த்துப் போராடியது அக் கடும் போரிற் கலந்த தமிழரெல்லாம் மாண்டனர். இவர்களை உற்சாகப்படுத்தி நின்ற யோகியும் மாண்டார்.பெரிய ஆலயத்து (கந்தசுவாமி கோயிற்) பிராமணரும் மாண்டார்.




கந்தசுவாமி கோயிலை அழித்தல் :



நல்லூர்க் கந்தசுவாமி கோயிலையும் ஏனைய சைவக் கோயில்களையும் பாதுகாக்கச் சைவர்கள் தம் உயிரையே தியாகஞ் செய்தார்கள். இதன் பின்னரும் இடைக்கிடை தமிழர் தஞ்சாவூர்ப் படைகளினுதவியுடன் பறங்கிகளுக்கெதிராகக் கிளம்பியும் வெற்றிபெற முடியவில்லை.



யாழ்ப்பாணத்தரசர்களும் ஒழுங்காகத் திறை கொடுத்துவரவில்லை. எனவே கொழும்பிலிருந்த போர்த்துக்கீசத் தேசாதிபதி கொன்ஸ்தாந்தீனு தெசா என்பவன் பிலிப்தெ ஒலிவெறா எனும் வீரசூரத் தளபதியை யாழ்ப்பாணத்துக்கனுப்பினான். இவன் யாழ்ப்பாணத்தரசனைச் சிறைப்படுத்தி, 1621ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 2ஆந் திகதி நல்லூரைத் தனது உறைவிடமாக்கினான். இவன் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைத் தரைமட்டமாக்கி, அஃது இருந்த இடமுந் தெரியாமல் அத்திவரத்தையும் கிளறிவிடும்படி கட்டளையிட்டான். ஊரவர்கள் மனம் நொந்து வருந்தி ஓலமிட்டனர். இக் கோயிலை அழியாமல்விட்டால் அவன் கேட்ட வற்றையெல்லாம் தருவதாகப் பலமுறை கூறினர். போர்த்துக்கீச வன்கணாளன் இவற்றிற்குச் செவிமடுக்காது நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைத் தரைமட்டமாக்கினான். அந்தோ! சைவசமயத்தின் அரணாகவிருந்த கோயில் அழிந்தமை சைவசமையம் குன்றுங் காலம் ஆரம்பித்துவிட்டதற்கு அறிகுறிபோலும், சைவ மன்னர்கள் தாபித்து தலைவணங்கி வந்த பெருங் கோயில் அவர்கள் ஆட்சிமுடிவடையவே அக்கோயிலும் தரைமட்டமாயிற்று, நல்லூர்க் கந்தன் ஆலயத்தை அழித்துவிட்டதால், அப்பெருமான் வழிபாட்டையும் வேருடன் ஒழித்துவிட்டதாகப் பகற்கனவு கண்டான் ஒலிவேறா.


“நல்லைக் கந்தசுவாமி கோயிலை இடிக்குமுன் அதன் மெய்காப்பாளனா யிருந்த சங்கிலி என்னும் சைவப் பண்டாரம் அக் கோயில் விதானங்கள் வரையப்பட்டிருந்த செப்புச் சாசனங்களையும் திருவாபரணங்களையும் கொண்டு மட்டக்களப்புக்கு ஓடினான். அங்கிருந்த சிலாவிக்கிரகங்களை எல்லாம் அக்கோயிற் குருக்கள்மார் பூதராயர் கோயிலுக்குச் சமீபத்திலுள்ள குளத்தில் புதைத்துவிட்டு நீர்வேலிப்பகுதிக்கு ஓடினர்.” என
ஶ்ரீமான் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை
அவர்கள் தமது நூலிற் கூறியுள்ளார்கள்.


ஒல்லாந்தர் காலம் :


1658ஆம் ஆண்டு ஜீன் மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கைவசமாயிற்று. இவர்கள் புறொட்டஸ்தாந்த கிறீஸ்தவ மதத்தைப் பரப்புவதிலும் அதற்குரிய தேவாலயங்களை நிறுவுவதிலும் ஈடுபட்டனர். நல்லூர் கந்தசுவாமி கோவில் இருந்த இடத்திலே கிறீஸ்தவ தேவாலயம் அமைக்கப்பெற்றது.


தற்போதுள்ள கந்தசுவாமி கோயிலுக்குத் தென்கபுறமாகக் கிழக்கு நோக்கிச் செல்லும் தெருவழியாகச் சிறிது தூரம் சென்றதும், பண்டாரமாளிகை என்ற பெயர் ஒரு வாயிற்றூணிற் காணப்படுகின்றது. இது யாழ்ப்பாணத்தரசர்களுள் ஒருவரான பரராசசேகர பண்டாரத்தை நினைவுீட்டுகின்றது. இது இப்போது கோயிலுக்குச் சேர்ந்த தென்னந்தோப்பாகவே இருக்கிறது. இதன் விஸ்தீரம் 6ஏக்கர். இங்கே யாழ்ப்பாணத்தரசனுடைய மாளிகை ஒன்றிருந்ததெனக் கருத இடமுண்டு.
இம் மாளிகையின் வடபாகமாகப் பண்டாரக்குளம் எனப் பெயரிய குளம் ஒன்றுண்டு.
இக்குளத்திற்கருகாமையிற் பழைய கட்டடச் சிதைவுகள் காணப்படுகின்றன.




“1697ஆம்  ஆண்டு  ஜீலை மாதம் 22 ஆந் திகதி திங்கட்கிழமை பிற்பகல் தேசாதிபதி யாழ்ப்பாணப் பட்டினத்திலிருந்து  புறப்பட்டு நல்லூரிலுள்ள. கொம்பனியின் தோட்டத்திற்குச்  சென்று  தங்கினார்.”
இவர் தங்கிய இடம் பண்டார மாளிகையாக இருக்கலாம் என யூகிக்க இடமுண்டு.  எனவே போர்த்துக்கீசத் தேசாதிகளைப் பின்பற்றி ஒல்லாந்தத் தேசாதிபதிகளும் நல்லூரையே தாம் தங்குவதற்கச் சிறந்த இடமாக தெரிந்தெடுத்தனர்.  பண்டாரக்குளத்திற்கு மேற்குப்பக்கமாக ஒரு பெரு நிலப்பாகம் உண்டு.  இதற்கு அரச வெளி என்று பெயர். இஃது அக்காலத்தில் முற்றவளியாக இருந்தது.



கொழும்பிலுள்ளவர்கள் தங்கள் வார இறுதி நாட்களை, அதாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளைக் கல்கிசையிற் கழிப்பதை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டிருப்பது போலவே, யாழ்ப்பாணத்தில் வசித்த ஒல்லாந்தர் நல்லூரை வார இறுதியில் பொழுதுபோக்கும் நந்தவனமாகக் கொண்டார்கள்.


அழிபாடுகள் :


யாழ்ப்பாணத்திலிருந்து பருத்திததுறைக்குச் செல்லும் பாதையில் ஏறக்குறையய இரண்டரைமல் தூரத்தில் சங்கிலித்தோப்பு எனப் பெயரிய தென்னந்தோப்பு உண்டு. இந்நகரின் அரண்மனை இங்கிருந்தபடியால், இது இப்பொழுது சங்கிலித்தோப்பு என்று வழங்கப்படுகின்றது. யமுனாரி எனப்படும் பகர வடிவமுள்ள சிறந்த கேணியும் இத் தோப்பு எல்லைக்குள்ளேயே உண்டு. நல்லூரில் இருந்து ஆட்சி செய்த அரசர்களும் அரசிகளும் நீராடிய ஏரி இதுவேயெனச் சரித்திர அறிஞர் திரு. ஜே. பி. லூயி கருதுகின்றார். இந்தக் கேணியின் கிழக்குப் பாரிசத்திலும், மேற்குப் பாரிசத்திலும் ஆடவரும் மகளிரும் நீராடினர் என்றும், இதன் தென்கோடியில் ஆடைகள் மாற்றியணிவதற்கான மண்டபம் இருந்திருந்திருத்தல் வேண்டும் எனவும் இவ்வறிஞர் கருதுகின்றார்.




யமுனா நதியிலிருந்து தமிழ் மன்னர் சிலர் பட்டாபிசேகத்திற்காக கொணர்ந்த தீர்த்தம் விடப்பட்ட ஏரியாதலின் யமுனா ஏரி எனப் பெயர் பெற்றதெனவும் கூறுவர் வேறுசிலர். தெருவோரத்திற் காணப்படும் கட்டடம் சங்கிலி மன்னன் கட்டிய அரண்மனை வாயில் எனப் பொது மக்கள் கருதுகின்றார்கள். ஆனால் இது டச்சுக் கட்டடம் என ஜே. பி. லூயி சுவாமி ஞானப்பிரகாசர் போன்ற சரித்திர அறிஞர் கருதுகின்றார்.



போர்த்துக்கீசரால் இடிக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை இரகுநாத மாப்பாண முதலியார் 1734 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கற்களினாலும், செங்கற்களினாலும் மீளவும் அமைத்தார். இது தொடர்பில் "யாழ்ப்பாண வைபவ மாலை" நூலிலும் கூறப்பட்டுள்ளது.
ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் சிறப்பாராகக் கடமையாற்றி வந்த தொன் ஜீவான் மாப்பாண முதலியார் தனது பதவிச் செல்வாக்கைப் பயன்படுத்தி மீளவும் ஆலயத்தை நிர்மாணிப்பதற்கான உத்தரவைப் பெற்றுக் கொண்டதாகவும் அறியக் கிடைக்கிறது.




ஆலயத்தின் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய திசைகளில் வானளாவிய ரீதியில் உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் ஆலய வளர்ச்சிக்கான அடையாளங்களாகவுள்ளன. ஆலயத்தின் வடக்குப் பக்கமாக இலங்கையிலேயே மிகவும் உயரமான குபேர வாசல் நவதள இராஜ கோபுரம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக் கடந்த வருடம் ஆலய வருடாந்தப் பெருந் திருவிழாவின் 18 ஆம் நாளாகிய கார்த்திகைத் திருவிழாவன்று கும்பாபிஷேகப் பெருஞ் சாந்தி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சம்.




இந்த ஆலயத்தினை இரகுநாத மாப்பாண முதலியாரின் வம்சத்தினர் பரம்பரை பரம்பரையாகச் சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர். ஆலயத்தில் பூசைகள் காலநேர ஒழுங்கு தவறாது நிகழ்வதற்கு அல்லும் பகலும் அயராது தொண்டாற்றியவர் சங்கரப்பிள்ளை இரகுநாத மாப்பாண முதலியார். திருவிழா உபயகாரர்களின் வருகையையோ,நாட்டின் தலைவர்கள், அரசியல் வாதிகள், பிரபலங்கள் ஆகியோரின் வருகையையோ எதிர்பார்த்து ஆலயத்தின் வழமையான பூசைகள் மற்றும் விசேட உற்சவங்களை பின்படும் வழக்கம் இந்தக் கோயிலில் அறவே கிடையாது.
ஒரு ரூபாவுக்கு அர்ச்சனை இடம்பெறும் ஆலயம் இந்த ஆலயமாகும். இது ஈழத்து ஆலயங்களில் வேறெங்கும் காண முடியாத தனிச் சிறப்பெனலாம்.




ஈழத்தின் தலை சிறந்த சித்தர்களான செல்லப்பா சுவாமிகளும், அவரது சீடரான யோகர் சுவாமிகளும் தடம் பதித்த புண்ணிய திருக் கோயிலாக நல்லூர்க் கந்தன் ஆலயமும், திருவீதியும் திகழ்கிறது.



இவ்வாலயத்தின் மூலஸ்தானத்திலே முருகப் பெருமானின் திருவுருவம் வைக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக முருகப் பெருமானின் ஞான சக்தியாகிய வேலே பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.



ஊரும் பேரும் : –


திரு.ரா.பி.சேதுப்பிள்ளை – பக். 31-32.
‘ திராவிட தேயத்துப் பழம்பெயர் பெற்றிருக்குந் தானங்கள்’ எனும் பொருள்பற்றி எழுதிய திரு. எஸ். டபிள்யு. குமாரசுவாமி அவர்கள் நல்லூரினையே முதற்கண் எடுத்துக் காட்டுகின்றார்கள். “ஈழத்திலேயம் நல்லூர் எனப் பெயரிய கிராமங்கள் ஐந்துள. மற்றைய நாலும் பூனகரியிலும், குருநாகற் பகுதியிலும், கழுத்துறையிலும் உள்ளனவாம். சிங்கள நாட்டிலுள்ளன ஆங்குப் பூர்வத்திற் குடியேறிய திராவிடரால் இடப்பட்டுப் பின்னர்ச் சிங்களராலே வழங்கப்படுகின்றமையின் நல்லூர, நல்லூரெ, நல்லூருவ எனச் சற்றே விகாரப்பட்டிருக்கின்றன” என இவ்வறிஞர் குறிப்பிட்டிருப்பது பொருள்பொதிந்த கருத்தாகும்.



நல்ல ஊர் :


கனகசூரியன் நல்லூர் நகரைச் சிறந்த இராசதானியாக்கப் பெருமுயற்சி செய்தான். இராச வீதிகளும், அரண்மனைகளும், அவற்றைச் சூழ்ந்து குதிரைப்படை, யானைப்படைக் கொட்டாரங்களும், சிங்கார வனமும், பட்டாலும் பருத்தி நூலாலும் நுண்ணிய தொழில் புரி மக்கள் இருக்கைகளும், தச்சர், கொல்லர், ஓவியக்காரர், பொன்செய்வினைஞர், இரத்தின வணிகர், புலவர், பாணர் இவர்களுக்கு வெவ்வே றிருக்கைகளும், வேதமோதும் அந்தணர் மந்திரங்களும், மருத்துவர், சோதிடர் வைகும் வளமனை வீதிகளும் அமைத்து நல்லூரை நல்ல ஊராகப் பிரபல்யமுறச் செய்தான்.




வெவ்வேறு தொழிலாளர் வாழ்ந்த வீதிகள் அவர்களின் பெயரால் இன்றும் வழங்கப்படுகின்றன. மேலும் இவர்களுக்கெனப் பல குளங்களும் தலைநகரில் அமைக்கப்பெற்றன. அடியார்க்குநல்லார் குளம் அல்லது கண்ணாதிட்டிக்குளம் அம்மைச்சிகுளம் அல்லது அம்பச்சி குளம், அஞ்சுதேவன்குளம் அல்லது வட்டக்குளம், ஆரியக்குளம், இலந்தைக்குளம், இளம்பிள்ளையார் கோயிற்குளம், உப்புக்குளம், கற்குளம், சின்னக்குளம், தாமரைக்குளம், தேவரீர்குளம் (தாராக்குளம்), நரியன் குண்டுக்குளம், நாயன்மார்குளம், நெடுங்குளம், பண்டாரக்குளம், பூதராயர் அல்லது கல்லவிராயகுளம், பரவைக்குளம், பாற்குளம், பிரப்பங்குளம், பிராமண கட்டுக்குளம், புல்லுக்குளம், அல்லது புளுக்குளம் (மணிக்கூட்டுக் கோபுருத்தடி), மக்கிக்கிடங்குக்குளம், மக்கியக்குளம், மறவக்குளம், முதலிக்குளம், மூன்றுகுளம், யமுனாரி, வண்ணாண்குளம் (இப்பெயருடன் மூன்று குளங்கள் உண்டு) முதலிய குளங்கள் ஆங்காங்கே வாழும் மக்களுக்கு நீர் வசதிகளை அளித்து வந்தன.



நல்லூர் சண்முகப் பெருமானுக்கு பொற்கூரை அமைத்து கலச கும்பாபிஷேகம் - 02.09.2018  முதல் முதல  தங்க கூரை செய்தது முருகனுக்கு மட்டும் தான் என்று நினைக்கிறேன் ..




தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானை சமேதரராய். அருள் புரிய வாழ்த்துக்கள்
அழகு என்ற சொல்லுக்கு முருகா...




அடுத்த பதிவில் சந்திப்போம் ........









கருத்துகள்

பிரபலமான இடுகைகள்