மாதுரி தீட்சித் வாழ்கை பயணம்
மாதுரி தீட்சித் வாழ்கை பயணம்
நான் முதல் முதலில் பார்த்த பாடல்
நான் முதல் முதலில் பார்த்த பாடல்
Dola Re Dola Songs தான்
அதில இருந்து தான் மாதுரி தீட்சித்
ரொம்ப பிடிக்கும்.
அதில சூப்பரா நடனம்
ஆடி இருப்பாங்க.
எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்
அதுக்கு அப்புறம் அவங்க
நடிச்ச எல்லா படத்தையும்
பார்த்திருக்கேன்.
அவங்கள பற்றி பதிவை தான்
இன்றைக்கு பார்க்கபோறம்..
தேவதையாக வலம்வந்தவர்
மாதுரி தீட்சித்.
டாக்டர் ஶ்ரீராம் மாதவ்
உடனான திருமணத்துக்குப் பின்,
நடிப்புக்கு இடைவெளிவிட்ட
மாதுரி தீட்சித்,
பின்னர் சில படங்களில்
சிறப்புத் தோற்றங்களில் நடித்தார்.
தன் தனித்தன்மை வாய்ந்த
தன் தனித்தன்மை வாய்ந்த
நடன அசைவுகளால்,
ரசிகர்களின் இதயங்களை
கொள்ளையடித்தவர் மாதுரி.
இவரது நடனத்துக்காகவே,
பல படங்கள் வெள்ளி விழாவைக்
கடந்து ஓடின.
இன்றும் அவரது ரசிகர்களுக்கு
அவர் மீதான க்ரேஸ் அப்படியே
இருக்கிறது எனலாம்.
மாதுரி தீட்சித் ( மராத்தி ) (மே 15, 1967 அன்று பிறந்த மாதுரி ஷங்கர் தீட்சித் ) ஒரு இந்திய பாலிவுட் நடிகையாவார். 1980 மற்றும் 1990 ஆண்டுகளில் இந்தி படவுலகில் புகழ்பெற்ற நடிகைகள், நடன நாட்டிய நிபுணர்களின் வரிசையில், இவர் தன்னை ஒரு பெயர்பெற்ற நடிகையாகவும் நடன நாட்டிய கலைஞராகவும் நிலைநாட்டிக் கொண்டார்.
இவர் பல வகையான வணிகரீதியான வெற்றிப்படங்களில் தோன்றியதோடு பல படங்களில் அவருடைய நடிப்புத் திறமைக்காகவும் எண்ணற்ற மனம் கவரும் நடனங்களுக்காகவும் பெயர் பெற்றார். ஊடகங்கள் மாதுரியை பாலிவுட்டின் மிகவும் முதன்மை நடிகையாக அடிக்கடி மேற்கோள் காட்டுவதுண்டு. 2008 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது மிகவும் உயர்ந்த குடிமுறைசார்ந்த விருதான
பத்ம ஸ்ரீ பட்டத்தை அளித்து பெருமை செய்திருக்கிறது.
தொடக்ககால வாழ்க்கை
மாதுரி தீட்சித் மும்பையை சார்ந்தவர்.
மராத்தி சித்பவன் பிராம்மண குடும்பத்தைச் சார்ந்த ஷங்கர் மற்றும் ஸ்நேஹலதா தீட்சித்திற்கு பிறந்த இவர் டிவைன் சைல்ட் உயர்நிலைப்பள்ளியிலும்
மும்பை பல்கலைக்கழகத்திலும் படித்தார். மேலும் ஒரு நுண்ணுயிரியல் வல்லுனர் (microbiologist) ஆக விரும்பினார்.
இவர் பலமுறை மேடைகளில் நடனமாடி பெயர்பெற்ற கதக் நடனக் கலைஞராவார், இவர் கதக் நடனத்தில் எட்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.
திரைப்படத்தொழில் வாழ்க்கை
மாதுரி தீட்சித் முதல்முறையாக அபோத்
(1984) என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அவர் சில சிறிய மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்தபிறகு, தேஜாப் (1988) என்ற படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, இப்படம் இவரை ஒரு திரைநட்சத்திரமாக வானளாவுக்கு உயர்த்தியது, மேலும் இவர் இப்படத்தில் நடித்ததற்கான முதல் பிலிம்பேருக்கான பரிந்துரையும் (nomination) பெற்றார். இவர் அதற்குப்பிறகு பல வெற்றிப்படங்களில் நடித்தார், அவற்றில்
ராம் லகன் (1989), பரிந்தா (1989), த்ரிதேவ் (1989) மற்றும் கிஷன் கன்ஹையா (1990) போன்ற படங்கள் அடங்கும்.
இப்படங்களில் நடித்தான் மூலம் அனில் கப்பூரும் இவரும் நெருங்கிய நண்பர்களாயினர்.
1990 ஆம் ஆண்டில், மாதுரி இந்திர குமாரின்காதல்-நாடகமான தில் என்ற திரைப்படத்தில் ஆமிர் கானுடன் நடித்தார். இவர் மது மெஹ்ரா என்ற கதாப்பாத்திரத்தில் ஒரு பணக்கார மற்றும் சீரழிந்த இளம்பெண்ணாக நடித்தார். ராஜா என்ற வாலிபனைக் காதலிக்கிறார், அவ்வேடத்தில் கான் நடித்தார் மேலும் அதற்குப்பிறகு அவனை மணந்து கொள்வதற்காக தன் வீட்டைவிட்டு செல்கிறாள். அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக (பாக்ஸ் ஆபீஸ் ஹிட்) அந்தப்படம் இந்தியாவில் திகழ்ந்தது, மேலும் மாதுரியின் நடிப்பு அவருக்கு அவருடைய தொழில்வாழ்க்கையின் முதல் பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுத்தந்தது.
தில் படத்தைத் தொடர்ந்து அவர் வரிசையாக மேலும் பல வெற்றிப்படங்களை அளித்தார், அவற்றில்
சாஜன் (1991), பேட்டா (1992), கல்நாயக் (1993), ஹம் ஆப்கே ஹைன் கௌன் ! (1994) மற்றும் ராஜா (1995) போன்றவை அடங்கும். பேட்டா என்ற படத்தில் மாதுரியின் நடிப்பானது, அதில் அவர் ஒரு படிக்காதவனை மணந்து கொள்ள, பல இக்கட்டான சூழ்நிலைகளுக்குப் பிறகு, அவரது கணவன் முன் தனது சூழ்ச்சி செய்யும் மாமியாரைக் கையும் களவுமாக பிடிக்கிறார், இப்படம் இவருக்கு இவருடைய இரண்டாவது பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுத்தந்தது.
ஹம் ஆப்கே ஹைன் கௌன் ! என்ற படம் ஹிந்தி திரைப்பட வரலாற்றில் இதுவரை பெற்றிராத அளவுக்கு வசூலைப் பெற்றுத்தந்தது. அப்படத்திற்கு ரூபாய் 650 மில்லியனுக்கும் மேலாக இந்தியாவில் வசூலானது மற்றும் வெளிநாட்டில் ரூபாய் 150 மில்லியனுக்கும் மேல், மாதுரிக்கு அவருடைய மூன்றாவது பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுத்தந்தது. அதே வருடத்தில், மாதுரி அதே வகையான பகுப்பில் அன்ஜாம் என்ற படத்தில் அவருடைய சிறந்த நடிப்பிற்காக பரிந்துரைக்கப்பட்டார் மேலும் இவர் திறனாய்வாளர்களின் நன்மதிப்பையும் பெற்றார்.
1996 ஆம் ஆண்டு அவருக்கு வெற்றிகரமாக இருக்கவில்லை, 1997 ஆம் ஆண்டில் மாதுரி பூஜா என்ற பாத்திரத்தில் யாஷ் சோப்ராவின் படமான தில் தோ பாகல் ஹை (1997) யில் தோன்றினார். இந்தப்படம் தேசிய அளவில், விமர்சகர்களிடமும் மற்றும் வணிகரீதியிலும் மிகப்பெரிய வெற்றிப்படமாகத் திகழ்ந்தது மேலும் மாதுரி அவருடைய நான்காவது பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப்பெற்றார்.
அதே வருடத்தில், மாதுரி பிரகாஷ் ஜாவின் பலராலும் போற்றப்பட்ட ம்ரித்யுதண்ட் என்ற படத்தில் நடித்தார். வணிகரீதியாகவும் கலை நயத்துடன் கூடிய படமாகவும் இப்படம் திகழ்ந்து இரு எல்லைகளையும் தாண்டிய ஒரு படமாக இப்படம் அறியப்பெற்றது. ஜெனீவாவில் நடந்த சினிமா டோவ்த் எச்ரான் (Cinéma Tout Ecran) என்ற நிகழ்ச்சி மற்றும் பாங்கோக்கில் நடந்த திரைப்பட விழாவிலும் இப்படம் சிறந்த தேசிய திரைப்பட விருதைப் பெற்றது.
அப்படத்தில் அவரது நடிப்பிற்காக மாதுரிக்கு அவ்வாண்டின் ஸ்டார் ஸ்க்ரீன் திரைப்பட விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.
மாதுரி அவரது நடிப்புத்திறமைக்கு மட்டுமல்ல, ஆனால் அவரது நடனத்திறமைக்கும் பெயர்போனவர். பாலிவுட்டின் பிரபலமடைந்த திரைப்பட பாடல்களுக்கான அவளுடைய நடன வரிசை முறைகள், எடுத்துக்காட்டாக ஏக் தோ தீன் ( தேஜாபில் ), படா துக் தீன்ஹ
( ராம் லகனில்), தக் தக் ( பேட்டா) , சனே கே கேத் மெயின் ( அன்ஜாமி ), சோலி கே பீச்சே ( கல்நாயக் ), அகியான் மிலாவுன்
( ராஜா ) பியா கர் ஆயா ( யாரானா ), கே சரா ( புகாரி), மார் டாலா ( தேவதாஸ் ) போன்ற பல பாடல்கள் மக்களால் மிகையாக போற்றப்பட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டில் இவர் சஞ்சய் லீலா பன்சாலியின் தேவதாஸ் படத்தில் ஷா ருக் கான் மற்றும் ஐஸ்வர்யா ராயுடன் நடித்தார். இவருடைய நடிப்பு மிகவும் பாராட்டப்பெற்றது. மேலும் இப்படம் இவருக்கு பிலிம்பேர் சிறந்த துணைநடிகைக்கான விருதைப் பெற்றுத்தந்தது. இப்படம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது மேலும் கேன்ஸ் திரைப்பட விழா வில் திரையிடப்பெற்றது.
அதற்குப்பின் வந்த வருடத்தில் இவர் பெயரில், மை மாதுரி மாதுரி பன்னா சாஹ்தீ ஹூன் ! என்ற படம் வெளியானது.
இப்படத்தில் ஒரு பெண் (அந்தர மாலி என்பவள் அவ்வேடத்தில் நடித்தாள்) புதிய மாதுரியாக வருவதற்கு, பாலிவுட் தொழிலில் தனது யோகத்தை சோதித்துப் பார்த்தார்.
பெப்ரவரி 25, 2006 அன்று ஆறு வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக மேடையில் பிலிம்பேர் திரைப்பட விருதின் போது இவர் கடைசியாக நடித்த படமான தேவதாஸ் படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.
இவருடைய இந்த மேடை நிகழ்சிக்கான நடன அமைப்பை சரோஜ் கான் என்பவர் மேற்கொண்டார்.
இந்தியாவின் மிகப்பிரபலமான ஒவியரான எம். எப். ஹுஸேன், மாதுரி மீது மிகவும் அபிமானம் கொண்டிருந்தார் மற்றும் அவரை பெண்மையின் தொகுப்பு என்று கருதினார். அதனால் அவர் கஜ காமினி (2000) என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார், அதில் மாதுரியும் நடித்தார். ஹுஸேன், மாதுரி அவர்களைப் புகழுரைக்கும் நோக்கத்துடன் அவர் இப்படத்தை எடுத்தார். இப்படத்தில் அவர் பெண்மையின் பல்வேறு வடிவங்களை மற்றும் வெளிப்பாடுகளை சித்தரிப்பதைக் காணலாம், அவற்றில் காளிதாசரின் கற்பனையில் உதித்த அபிமான நங்கை, லியொனார்டோவின்
மோனா லிசா , ஒரு போராளி மற்றும் இசையின் நலஉணர்வுமிகு உளப்பிணியின் (நல நில உணர்வின்) அவதாரம் அதாவது விண்ணுலகிலிருந்து மண்ணுலகத்திற்கு வந்து பிறப்பது போன்ற தோற்றம் ஆகியவவை அவற்றிலடங்கும்.
டிசம்பர் 7, 2006 அன்று ஆஜா நாச்லே (2007) என்ற படத்தின் படப்பிடிப்பைத் துவங்க, மாதுரி தனது பிள்ளைகள் மற்றும் கணவனுடன் மும்பைக்கு திரும்பி வந்தார். இந்தப்படம் நவம்பர் 2007 இல் வெளியானது மற்றும் திறனாய்வாளர்கள் அதனை அலசி களைந்தும், மாதுரியின் நடிப்பு நல்லமுறையில் வரவேற்கப் பெற்றது. மேலும் நியூயார்க் டைம்ஸ் "அவரிடம் இன்னமும் திறமை இருக்கிறது" என்ற கருத்தை வெளியிட்டது.
2007 ஆண்டின் அனைத்துலக மகளிர் தினம் அன்று, மாதுரி ரிடிஃப் வரையறுத்த பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகைகளின் பட்டியலில் என்றென்றைக்கும் முதன்மை பெற்றவரானார். . மே 2008 ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்ற இந்தியன் பிலிம் பெஸ்டிவலில் இவர் கவுரவபடுத்தப்பட்டார். மார்ச் 2010 ல், தி எக்கனாமிக் டைம்ஸ் மாதுரியை, "இந்தியாவை பெருமை அடைய செய்த 33 பெண்மணிகள்" பட்டியலில் இவரையும் சேர்த்து பெருமைப்படுத்தியது.
தனிப்பட்ட வாழ்க்கை
1999 ஆம் ஆண்டில், மாதுரி தீட்சித் UCLA- என்ற அமைப்பில் இதயக்குழலிய அறுவை சிகிச்சை முறையில் பயிற்சி பெற்றவரும், அமெரிக்காவிலுள்ள டென்வெர் நகரத்தில் வசித்து வரும் ஸ்ரீராம் மாதவ் நேனே என்ற மருத்துவரை (டாக்டரை) மணந்தார்; டாக்டர். நேனே ஒரு மராத்தி கொங்கணஸ்த பிராம்மண குடும்பத்தைச் சார்ந்தவராவார். இவருக்கு இரு பிள்ளைகள் அரின் (மார்ச் 18, 2003 அன்று கோலோரடோவில் பிறந்தவன்) மற்றும் ராயன் (March 8, 2005 அன்று கோலோரடோவில் பிறந்தவன்).
இவருக்கு ரூபா மற்றும் பாரதி என்று இரண்டு அக்காவும் அஜித் என்ற ஒரு அண்ணனும் உள்ளனர். மாதுரி குடும்பத்தினருடன் அமேரிக்காவில் டென்வெர், கோலோரடோவில் வசிக்கின்றார்.
அவர் முன்பு நடித்துக் கொண்டிருந்தபோது இருந்த திரையுலகம், இன்றைய மாறுதல் பற்றி தன் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார்:
"80-களில் நான் சினிமாவில் நடிக்க தொடங்கியபோது சின்னசின்ன வேடங்களில் தான் நடித்து வந்தேன். கூடவே தொடர்ந்து நான் நடிப்பேனா என்ற சந்தேகமும் இருந்தது. என் வீட்டைப் பொறுத்த வரை அனைவருமே நன்கு படித்தவர்கள். நானும் அறிவியல் மாணவி என்பதால் மைக்ரோ பயாலஜி படிக்க விரும்பினேன். "அபோத்' என்ற படத்திற்குப் பின் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. என்னுடைய குடும்பத்தில் யாருக்குமே திரையுலக தொடர்பு இல்லாததால், படங்களை எப்படி தேர்வு செய்வது என்பது எனக்கு தெரியவில்லை. ஆரம்பத்தில் நான் நடித்த படங்கள் பெரிதும் பேசப்படவில்லை என்றாலும், சினிமாவைப் பற்றி நிறைய கற்றுக் கொண்டேன்.
நான் நன்றாக நடனமாடுவேன் என்பதால் எல்லா படங்களிலும் மாதுரி நடனமாடுவார் என்ற பொதுவான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. நடன காட்சி இல்லையென்றால் "ஏன் நடனமாடவில்லை?'' என்று கேட்பதும் உண்டு. கதைக்கு தேவை என்றால் மட்டுமே பாடலை வைக்க வேண்டுமே தவிர திணிக்கக் கூடாது. அப்போதுதான் இயற்கையாக இருக்கும் என்று நான் விரும்புகிறேன்.
இந்த 53 வயதிலும், என்னை நான் வயதானவளாக நினைப்பதில்லை. என் உடல், மனம், ஆத்மா ஒரே சீராக இருப்பதற்கு தொடர்ந்து நடனமாடுவதும் காரணமாகும். உங்கள் உடலையும், மனதையும் கவனித்துக் கொண்டால் வயதாவது ஒரு பிரச்னையே இல்லை.
நான் நடிக்க வந்தபோது இருந்த திரையுலகம் இன்றும் அப்படியே தான் இருக்கிறது. தொழில்நுட்பமும், இளம் கலைஞர்களும் வளர்ந்துள்ளனர். ஒரு வித்தியாசம் இப்போதெல்லாம் நாங்கள் நடிக்கும் காட்சிகள், வசனங்கள், எப்படி நடிக்க வேண்டும் என்ற விவரங்கள் முன்கூட்டியே தரப்படுகிறது. வரவேற்க தகுந்த மாற்றம். இது முன்பு இல்லை. பல விஷயங்களில் திரையுலகம் முன்னேறி வருகிறது.
நான் நடிகை என்பதால் வீட்டில் எந்தவிதமான விசேஷ கவனிப்பும் கிடைக்காது. இப்போதும் கூட என்னுடைய அம்மா என்னை அதட்டுவதுண்டு. நடிகை என்ற மதிப்பு, மரியாதை எல்லாம் ஸ்டூடியோவில்தான். வீட்டில் எதிர்பார்க்க முடியாது. நான் நடித்த படங்களை வீட்டில் இப்போது பார்க்கும்போது எனக்கே வேடிக்கையாகவும், வெட்கமாகவும் இருக்கும். உடனே சேனலை மாற்றச் சொல்வேன். ஆனால் என் பிள்ளைகள் மிகவும் ரசித்து பார்ப்பதுண்டு.
மீண்டும் நான் நடிக்க வந்ததற்கு என் கணவரின் ஆதரவுதான் காரணம். " நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ அதை செய். நான் உனக்கு துணையாக இருக்கிறேன்'' என்பார். ஏதாவது தவறு நடக்குமோ என்று அவர் நினைப்பதும் இல்லை. எங்களுக்குள் ஒருவருக்குகொருவர் புரிதலும், பாதுகாப்பும் உள்ளது. அவர் ஓர் இதய மருத்துவர் என்பதால் பல மரணங்களை நேரில் பார்த்துள்ளார். வாழ்க்கை என்பது மிக குறுகிய காலம் என்பதால் அதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும் என்பார்.
எங்களுக்குள் பல விருப்பங்கள் இருப்பதால் பார்ட்டிகளுக்கு போகமாட்டோம். குழந்தைகளுடன் சேர்ந்திருப்பதையே விரும்புவோம். என் சுயசரிதையை எழுதுவதற்கு முன், வாழ்க்கையில் நான் இன்னும் செய்ய வேண்டியது நிறையவே இருப்பதாகவே கருதுகிறேன்'' என்கிறார் மாதுரி தீட்சித்.
விருதுகளும் பரிந்துரைப்புகளும்
பிலிம்பேர் விருதுகள்
வென்றது
1990: தில் என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
1992: பேட்டா என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
1994: ஹம் ஆப்கே ஹைன் கவுன் என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
1997: தில் தொ பாகல் ஹை என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
2002: தேவதாஸ் என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த துணைநடிகை விருது
பரிந்துரைப்பு
1988: தேஜாப் என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
1989: பிரேம் பிரதிக்யா என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
1991: சாஜன் என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
1993: கல்நாயக் என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
1994: அன்ஜாம் என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
1995: ராஜா என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
1995: யாரானா என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
2000: புகார் என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
2001: லஜ்ஜா என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த துணைநடிகை விருது
2008: ஆஜா நாச்லே என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள்
வென்றது
1994: ஹம் ஆப்கே ஹைன் கவுன் என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் திரைப்பட விருது
1995: ராஜா என்ற படத்திற்கு என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் திரைப்பட விருது
1997: ம்ரித்யுதண்ட் என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் திரைப்பட விருது
2002: தேவதாஸ் என்ற படத்திற்கு சிறந்த துணை நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் திரைப்பட விருது
பரிந்துரைப்பு
2000: புகார் என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் திரைப்பட விருது
ஜி சினி விருதுகள்
வென்றது
1998: சிறந்த நடிகருக்கான ஜி சினி விருது - நடிகை தில் தொ பாகல் ஹை என்ற படத்திற்காக
2002: சிறந்த துணை நடிகருக்கான ஜி சினி விருது - நடிகை லஜ்ஜா என்ற படத்திற்காக
பரிந்துரைப்பு
2000: சிறந்த நடிகருக்கான ஜி சினி விருது - நடிகை புகார் என்ற படத்திற்காக
2003: சிறந்த நடிகருக்கான ஜி சினி விருது - நடிகை தேவதாஸ் என்ற படத்திற்காக
ஐஐஎப்எ விருதுகள்
பரிந்துரைப்பு
2000: புகார் என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான IIFA ஐஐஎப்எ திரைப்பட விருது
ஸ்டார் டஸ்ட் விருதுகள்
பரிந்துரைப்பு
2008: ஸ்டார் டஸ்ட் டின் இவ்வாண்டு நட்ச்சத்திரத்துக்கான விருது-பெண்
ஆஜா நாச்லே என்ற படத்திற்காக
விருதுகள், கவுரவங்கள், மற்றும் பாராட்டுதல்கள்
1997: ஆந்திர பிரதேஷ் அரசு அளித்த "களபநேத்ரி" விருது
2001: தேசிய குடிமகன்களுக்கான விருது (நேசனல் சிடிஜென்ஸ் அவார்ட்)
2001: போர்ப்ஸ் (Forbes) என்ற பத்திரிகை இந்தியாவின் முதன்மை பெற்ற முதல் ஐந்து திரைப்பட நடிகர்களில் ஒருவராக மாதுரி உள்ளதாக கூறுகிறது.
2007: "என்றென்றைக்குமான பாலிவுட்டின் மிக சிறந்த நடிகை"
2008: பத்ம ஸ்ரீ , இந்திய அரசு அளிக்கும் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமுறைசார்ந்த விருது.
2008: ஐ எப் எப் எல் ஏ (IFFLA) இந்தியன் பிலிம் பெஸ்டிவல் அட் லாஸ் ஏஞ்செல்ஸ் விழாவில் கவுரவிக்கப்பெற்றார்.
மிண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் ....

கருத்துகள்