அமிதாப் பச்சன் வாழ்கை பயணம்

       அமிதாப்  பச்சன்   வாழ்கை   பயணம் 





















சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞரான ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்களின் மகனும், இந்தித் திரையுலகில் நான்கு தசாப்தங்களாக தனது பங்களிப்பை அளித்து, ‘சூப்பர் ஸ்டார்’ என்று போற்றப்படுபவர், அமிதாப் பச்சன் அவர்கள். இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில், முதல் இடத்தைத் தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் பிடித்திருப்பவரும் இவரே. திரையுலகில், நடிகர் என்ற ஒரே இலக்கோடு நிறுத்திக் கொள்ளாமல், பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவர், அமிதாப் பச்சன் அவர்கள். எண்ணற்ற ‘சர்வதேச விருதுகள்’, ‘பத்மஸ்ரீ விருது’, ‘பத்ம விபூஷன் விருது’, ‘4 முறை தேசிய விருதுகள்’, ’14 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ என 180 விருதுகளைத் தனது திரையுலக வாழ்வில் பெற்று, இன்றளவும் ஹிந்தித் திரையுலகில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். 






இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கிய நபர்களில் ஒருவராகவே மாறிவிட்ட அமிதாப் பச்சன் அவர்கள், 40 முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஒரே நடிகரென்ற பெருமைக்குரியவர். திரையுலகப் பின்னணியைத் தவிர, 1984 முதல் 1987 வரை இந்தியப் பாராளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருந்தார். இந்திய சினிமா வரலாற்றில் மிகப் பெரிய செல்வாக்கு மிகுந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழும் அமிதாப் பச்சன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.







அமிதாப் பச்சன் (பிறப்பு:அக்டோபர் 11, 1942) இந்தி : திரைப்பட நடிகர் ஆவார்.
அமிதாப் ஹரிவன்ஷ் பச்சன் என்பதன் சுருக்கமே அமிதாப் பச்சன் என்பதாகும். இவர் ' பிக் பீ' மற்றும் ' ஷாஹேந்ஷா' என்ற செல்லப் பெயர்களாலும் அழைக்கப் பட்டார். 1970களில் முதன்முதலாக பாலிவுட் திரை உலகில் கோபக் கனல் வாலிபன்' எனப் பெயர் பெற்றுப் பிரபலம் அடைந்தார். மேலும் இந்தியத் திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுள் ஒருவராக கருதப்பட்டார்.





பச்சன் தனது பணிவாழ்க்கையில் பற்பல
சிறப்பு விருதுகள் வென்றுள்ளார். அதில் 
























மூன்று தேசியத் திரைப்பட விருதுகள் , மற்றும் பன்னிரண்டு
பிலிம்பேர் விருதுகள் அடங்கும். அதிலும் பிலிம்பேர் விருதுகளில்,
சிறந்த நடிகர் என்ற தேர்வுகளில் அதிக பட்ச எண்ணிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி,
பின்னணிப் பாடகர் , படத்தயாரிப்பாளர் ,
தொலைக்காட்சி நிகழ்ச்சிஅளிப்பவர் என நடிப்புடன் பன்முகங்களையும் வெளிப்படுத்தியவர். 1984-87 வரை
இந்தியப் பாராளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருந்தார்.






பச்சன் பிரபல திரைப்பட நடிகை ஜெய பாதுரியை திருமணம் செய்து கொண்டார். பச்சன் தம்பதிகளுக்கு
ஷ்வேதா நந்தா மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருபிள்ளைகள் இருக்கின்றனர். மகன் அபிஷேக்கும் தந்தையைப் போலவே நடிகராக உள்ளார். அபிஷேக், நடிகையும் உலக அழகிப் பட்டம் வென்றவருமான
ஐஸ்வர்யராயை மணந்துள்ளார்.





                தொடக்க வாழ்க்கை




உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்தில் ஓர்
இந்துக்குடும்பத்தில் பிறந்தவர் அமிதாப் பச்சன். அவர் தந்தை டாக்டர் ஹரிவன்ஷ் ராய் பச்சன் ஒரு புகழ்பெற்ற இந்திக்கவிஞர் ஆவார். அவரது தாயார் தேஜி பச்சன் இன்றைய பாகிஸ்தான் , அன்றைய
பைஸாலாபாத்தை சேர்ந்த ஒரு
சீக்கியப்பெண்மணி ஆவார்.





ஆரம்ப காலத்தில் பச்சன் 'இன்குலாப்' என்றே அழைக்கப்பட்டார். அந்தப்பெயரானது இந்தியச் சுதந்திரப்போரட்ட காலத்தில் எழுப்பப்பட்ட தாரக மந்திரம் 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அவர் மறுநாமகரணமாக, அமிதாப் என்று அழைக்கப்பட்டார். அதன்பொருளாவது: ' அணையவே அணையாத சுடரொளி' என்பதாகும்.




ஸ்ரீவத்ஸவா என்பது குடும்பப்பெயராக 
















இருப்பினும், அவரது தந்தை பச்சன் எனும் பெயரைப் புனைப்பெயராக வைத்துக் கொண்டார். அந்தப் பெயரிலேயே, அவரது படைப்புகளை வெளியிட்டு வந்தார். திரைப்படங்களில் முதல்தோற்றத்தில் இருந்து அமிதாப் என்ற பெயரிலேயே நடிக்கத் தொடங்கினார். பச்சன் என்ற பெயரே நாளடைவில் எல்லா பொது நோக்கங்களுக்காகவும் அவரது தற்போதைய குடும்பத்தாரின் பெயராகவே மாறி விட்டது.
அமிதாப், ஹரிவன்ஷ் ராய் பச்சனின் இரு மகன்களில் மூத்தவர் ஆவார். இரண்டாம் மைந்தன் அஜிதாப் ஆவார். அவரது தாயார் மேடைநாடகங்களில் நடித்துள்ளார்.






அவருக்கும் திரைப்பட வாய்ப்பு தேடிவந்தது. ஆனாலும் குடும்பப் பொறுப்புகளுக்கு முன்னுரிமை தந்து அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பச்சனின் பணிவாழ்க்கையில் விருப்பத்தேர்வுகள் செய்யும் போதெல்லாம் தாயாரின் செல்வாக்கு உரிய தாக்கத்தைச் செய்தது. அவரும் தன்மகன் மேடையில் நடுஇடம் பெறுவதையே வலியுறுத்தி வந்தார்.





ஆரம்பக்கல்வியை அலகாபாத் ஞான பிரபோதினி மற்றும் சிறுவர்கள் உயர்நிலைப் பள்ளியில் பெற்றார். பிறகு
நைனிடாலில் உள்ள ஷேர்வுட் கல்லூரியில் கலைத்துறையையே முக்கியப் பாடமாகப் பயின்றார்.அதன்பின்
டெல்லிப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த
கிரோரிமால் கல்லூரியில் அறிவியல் பாடம் கற்று அதில் இளங்கலைப்பட்டம் பெற்றார். தற்போதைய கொல்கத்தா அன்று கல்கத்தாவாக இருந்தபொழுது அங்கிருந்த 'பேர்ட் அண்ட் கோ' கப்பல் கம்பெனியில் இருபது வயதில் சரக்குத் தரகராக வேலை பார்த்து அதைக் கைவிட்டார். தணியாத தாகம் நடிப்பின்மேல் இருந்ததால் அதையே பின்தொடர்ந்தார்.





1973 ஜூன் 3ஆம் நாள் நடிகை
ஜெயபாதுரியை , வங்காளத்திருமணச் சடங்குகள்படிக் கைப்பிடித்தார். தம்பதியர்களுக்கு இருபிள்ளைகள் பிறந்தனர் . மகள் ஷ்வேதா மகன் அபிஷேக் ஆவார்கள்.




                     பணித்துறை




ஆரம்ப காலப் பணி: 1969-72
1969ல் வெளிவந்த சாட்ஹிந்துஸ்தானி அவரது 'முதல்' திரைப்படமாகும்! ஏழு முக்கிய பாத்திரங்களுள் ஒருவராக அவர் திரையில் முதன்முதல் தோன்றினார்!
க்வாஜா அஹ்மத் அப்பாஸ் இயக்கத்தில்
உட்பல் தத் , மது , ஜலால் ஆகா ஆகியோர் நடிப்பில் வந்த சாட் ஹிந்துஸ்தானி படம் வருவாயில் வெற்றி பெறவில்லை. ஆயினும் பச்சனுக்கு சிறந்த புதுமுகம் என்ற தேசியத்திரைப்பட விருது கிட்டியது.






1971ல் வெளிவந்த 'ஆனந்த்' விமர்சனம் பாராட்டுதலும், வியாபார வெற்றியும் பெற்றது. அதில் ராஜேஷ் கன்னாவுடன் இணைந்து நடித்தார். பச்சனின் வேடம் வாழ்க்கையை வெறுக்கும் சிடுசிடுப்பான டாக்டர் வேடமாகும். அது பிலிம்பேர் சிறந்த துணைநடிகர் விருதுவாங்கித் தந்தது.






அதேவருடம்
பர்வானா படத்தில் மோகத்தில் லயிக்கும் காதலனாக, வில்லனாக, சிறப்பாக நடித்தார் உடன் நடித்தது நவீன் நிக்ஸல் ,
யோகீதாபாலி , மற்றும் ஓம்பிரகாஷ்,ஆவர். பல படங்கள் தொடர்ந்தன ரேஷ்மா அவுர் ஷேரா உள்பட பல வந்தாலும், வசூலில் வெற்றி பெறவில்லை! அடுத்து 'குட்டி' படம் வந்தது. அதில் கௌரவ வேடம் ஏற்றார். அப்படத்தில் அவரது வருங்கால மனைவி
ஜெயாபாதுரி தர்மேந்திராவுடன் நடித்தார்.







ஏற்றஇறக்கம் செய்யும் குரலுச்சரிப்பு வளம் கொண்டிருந்த அமிதாப்பச்சன் அதை 'பர்வார்சி'யில் வெளிப்படுத்தினார். அடுத்து எஸ் ராமநாதன் இயக்கத்தில் வந்த சாலை விபத்தை அடிப்படையாகக் கொண்ட நகைச்சுவைப்படம் 'பாம்பே டு கோவா' வில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் .








அருணா இராணி ,
மெஹ்மூத் , அன்வர் அலி, மற்றும் நஸீர் ஹூசேன் ஆகியோருடன் இணைந்து நடித்தார்.
நட்சத்திர அந்தஸ்து உயர்வு 1973-1983
1973 பச்சனுக்கு முக்கிய வளர்ச்சி வாய்ந்த வருடமாக அமைந்தது, இயக்குநர்
பிரகாஷ்மெஹ்ரா தனது 'ஜன்ஜீர்' படத்தில் முதன்மைப்பாத்திரம் வழங்கினார். அதில் இன்ஸ்பெக்டர் விஜய்கன்னாவாக அற்புதமாக நடித்தார்! முந்தைய காதல் தீவிர முனைப்புமிக்க திரைப்படங்ளைவிட மாறுபட்டதாக அது அமைந்தது. மேலும் அவருக்கு
'கோபக்கனல் மிக்க வாலிபன்'என
பாலிவுட்சினிமாவில. புதிய கீர்த்தி பெற்றுத் தந்தது.







அதையே தொடர்ந்து பிறபடங்களிலும் பின்பற்றினார். அது அவருக்குத் தொழில்ரீதியாக, பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற ஏதுவாகி, 73ல் பிலிம்பேர் மிகச்சிறந்த நடிகர் விருதுக்காக பெயர் முன்மொழியப்பட்டது. அதேவருடத்தில் அவர் ஜெய பாதுரியைத் திருமணம் புரிந்துகொண்டார். இருவரும் இணைந்து ஜன்ஜீர் , அபிமான் போல பலபடங்களைத் தந்தனர். பின்னாளில் பச்சன்
நமக் ஹராம் படத்தில் விக்ரம் வேடத்தில் நடித்தார். அந்த சமூக சித்திரம்
ரிஷிகேஷ் முகர்ஜீ இயக்க, பிரெஷ் சட்டேர்ஜீ நட்பின் பொருளில் ஸ்கிரிப்ட் பணி செய்து முடித்தார்.
ராஜேஷ் கன்னா , ரேகாவுடன் இதில் அவர் துணைவேடம் ஏற்று நடித்தது பாராட்டுதல்கள் பெறவைத்தது.
பிலிம்பேர் சிறந்த துணைநடிகர் விருது அதனால் பெற்றார்.







1974ல் பச்சன் பல கௌரவவேடங்களில் நடித்தார். 'கன்வாரா பாப்' மற்றும்
'தோஸ்து' அதில் குறிப்பிடத் தக்கதாகும். துணைவேடங்கள் தாங்கிய பிறகு பெற்ற அந்நிலை அந்த வருடம் அவரை வெகுஜன அந்தஸ்து பெறவைத்தது, 'ரொட்டி கபடா அவுர் மக்கான்' திரைப்படம் ஆகும். மனோஜ் குமார் எழுதி இயக்கிய அப்படம் நிலைகுலையாத நேர்மை வறுமையில் செம்மை குணாதிசயங்களை வெகுவாகச் சித்திரித்துக் காட்டியதால் விமர்சனம் வியாபாரரீதியில் வெற்றி பெற்றது. சசிகபூர், ஜீனத் அமன், மற்றும் குமாருடன் அமிதாப் போட்டி போட்டு நடிப்பில் வெளுத்துக் கட்டினார். 1976 டிசம்பர் 6 ஆம்நாள் வெளிவந்த 'மஜ்பூர்' முதன்மை வேடம் ஏற்று நடித்தார்
ஜார்ஜ்கென்னடி நடித்த ஹாலிவுட்
ஜிக்ஜாக் ஆங்கிலப்படத்தின் ஹிந்தி மறுவடிவப்படமாகும். அது பாக்ஸ் ஆபீஸ் சுமாரான வெற்றியைத்தான் தந்தது.






1975ல் மாறுபட்ட கதையம்சங்கள் கொண்ட படங்களில் நடித்தார். 'சுப்கே சுப்கே'
நகைச்சுவைப் படம், 'பரரர்' குற்றவியல் படம், 'மிலி' காதல்களிப்புப் படம் முக்கியமானவையாகும். அவைகளைத் தொடர்ந்து வந்த இருபடங்கள் இந்தித் திரைப்பட வரலாற்றில் அவரைப் புகழேணியின் உச்சியில் கொண்டுபோய்ச் சேர்த்தது. 'தீவார்' படம்
யாஷ்சோப்ரா இயக்கத்தில் சசிகபூர் ,
நிருபாராய், நீட்டுசிங் உடன் அவர் நடித்தார். 75ல் மிகப்பெரும் வெற்றிப் படமாக அது அமைந்து, மிகச்சிறந்த நடிக்கருக்கான பிலிம்பேர் விருதை அவருக்கு ஈட்டித்தந்தது. தரவரிசையில் எண் 4 பெற்றது. இன்டியாடைம்மூவிஸ்
டாப் 25' தீவார் படம் பட்டியலில்
கண்டிப்பாக பார்க்கத்தகுந்த பாலிவுட் படங்கள் அத்தரவரிசை கொடுத்தது.







இரண்டாவதாக 1975 ஆகஸ்ட் 15 சுதந்திரத்தினம் அன்று வந்த ஷோலே (பொருள்: தீப்பிழம்புகள்) இந்தியாவிலேயே அதிக மொத்த வசூல் அள்ளிக் குவித்த பெருமைபெற்றதாகும்.
ரூ 2,36,45,00,000 தொகை அமெரிக்க டாலர் மதிப்பில் 60 மில்லியன்களாகும்.
பாக்ஸ் ஆபீஸ்  சரிக்கட்டக் கூடிய அளவிற்கு அமைந்தது.






திரைப்படத் துறையில் மிகப்பெரும் நடிகர்களான தர்மேந்திரா, ஹேமாமாலினி, சஞ்சீவ்குமார், ஜெயபாதுரி, அம்ஜத்கான் ஆகியோருடன் பச்சன் ஜெயதேவ் பாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்தார் பணவீக்கம் 1999ல்
பிரிட்டிஷ் ஒலிபரப்பு கார்பரேஷன் ஆயிரம் ஆண்டுகளில் மிகச்சிறந்த படமெனப் பாராட்டுதல்கள் தெரிவித்தது.
தீவாரைப் போல் இண்டியாடைம்ஸ்மூவீஸ் 'கண்டிப்பாகக் காணவேண்டிய பாலிவுட் படங்கள்'  டாப்25' பட்டியலில் இடம் பெற்றாது.






அதேவருடம் ஐம்பதாதவது
பிலிம்பேர் வருடாந்திரவிழாவில் 50 ஆண்டுகளில் இல்லா தனிச்சிறப்புப் பெற்ற படம் என்ற பெருமையை வழங்கியது.
ஷோலே படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பச்சன் தொழில்துறையில் தனது நிலையை பலப்படுத்திக் கொண்டமையும் , 1976 முதல் 1984 வரைக்கும் முன் எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் பிலிம்பேர் சிறந்த நடிகர் விருதுகளும், பரிந்துரைகளும் ஏராளமாகப் பெற்றார். ஷோலே போன்ற படம் அவரது தகுதியைப் பாலிவுட்டின் மேம்பட்ட ஆக்க்ஷன் நாயகன் என்ற புகழ்உச்சிக்குக் கொண்டு சென்றது. பிறவகை வேடங்களையும் அவர் இலகுவாகக் கையாளமுடியும் என்று நிரூபித்துக் காட்டினார்.







1976ல் 'கபிகபி' படத்தில் காதல் வயப்படுபவராகவும், 1977ல்
'அமர்அக்பர்அந்தோணி'யில் நேரத்திற்கேற்ற நகைச்சுவையாளராகவும், அதேபோல் 75ல் 'சுப்கே சுப்கே'வில் சிரிப்பு வேடத்திலும் சோபித்துக் காட்டினார். 1976ல் இயக்குநர் யாஷ்சோப்ராவின் இரண்டாவது படமான ' கபி கபி'
காதல்படத்தில் அமிட்மல்ஹோத்ராவாகப் பூஜா என்ற ஓர் அழகான இளம்பெண் மேல் ஆழ்ந்த காதலில் விழுந்தவராக நடிகை
ராக்கி குல்ஜாருடன் கவர்ச்சிகரமாக நடித்தார். உணர்வு பூர்வமான உரையாடல்கள் மிருதுவான கதைப்போக்கு அவரை கோப தாபம் மிக்க முந்தைய வீர வேடங்களைக் காட்டிலும் மாறுபடுத்திக் காட்டியது. மறுபடியும் பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருது! மறுபடியும் பாக்ஸ்ஆபீஸ் பெரும்வெற்றி! 1977ல் 'அமர் அக்பர் அந்தோணி' படத்துக்கான சிறந்த நடிகர் பிலிம்பேர் விருது கிடைத்தது.






அதே
அமர் அக்பர் அந்தோணி படத்தில்
வினோத்கன்னா மற்றும் ரிஷிகபூருடன் அந்தோணிகான்சால்வ்ஸ் பாத்திரத்தில் அனைவரையும் கவர்ந்தார். 1978ஆம் ஆண்டு அவரை வெற்றிவிழா நாயகராக மேல்நிலையில் உயர்த்தியது.  அந்தவருடம்
 இந்தியாவிலேயே அதிகபட்சம் நடித்த பெருமை பெற்றார். தொடர்ந்து படங்களில் இரட்டை வேடங்களிலும் நடித்துத் தன்திறமையை வெளிப்படுத்தினார்.





'காஸ்மே வாடே' யில் அமிட்-ஷங்கராக நடித்தார் 'டான்' படத்தில் தலைமறைந்து வாழும் நிலவறைத் தாதாவாகவும், அவரைப் போன்ற உருவ அமைப்பைக் கொண்ட விஜய் பாத்திரமாகவும் நடித்தார். அந்த நடிப்பாற்றல் பிலிம்பேர் சிறந்த நடிகர் விருது பெறவைத்தது. அதேபோல்
'திரிசூல்' 'முக்தார் கா சிக்கந்தர்' படங்கள் இன்னும் பல விருதுகள் பெறவைத்தது. முன்எவரும் செய்யாத சாதனை, பெறாத வெற்றி அவர்பெற்ற காரணத்தால் பிரெஞ்சு இயக்குநர்
பிரான்காயிஸ்ட்ரூப்  அவரை 'ஒருநபர் தொழிற்சாலை' என வியந்து பாராட்டினார்.





1979ல் மிஸ்டர் நட்வர்லால் படத்தில் அவரது குரல் இசைக்குரலாக ஒலித்தது.
ரேகாவுடன் இணைந்து அதில் நடித்தார். அந்தப்படத்தால் அவர் பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருதுடன் சிறந்த ஆண்பாடகருக்கான விருதும் உடன்பெற்றார். அதே வருடம் வெளிவந்த
'காலா பாத்தர்' படத்துக்கான சிறந்த நடிகர்விருது பெற்றார். மறுவருடம்
ராஜ்கோஸ்லா இயக்கிய 'தோஸ்தானா' படத்துக்காகவும் விருதுக்கு முன்மொழியப்பட்டார்! அப்படத்தில்
சத்ருகன்சின்ஹா, ஜீனத்அமனுடன் சேர்ந்து நடித்தார். தோஸ்தானா அதிக மொத்த வசூல்பெற்ற பெருமை அந்தவருடம்1980 தந்தது. 1981ல் இசைஇன்ப மயமான யாஷ்சோப்ராவின் படம் 'ஸில்ஸில்' மனைவி ஜெயாவுடனும் கிசுகிசுக்கப்பட்ட காதலி ரேகாவுடன் நடித்தார். 1980 முதல் 1982 வரை வெளிவந்த பிறபடங்கள், 'ராம்பல்ராம்' , ' ஷான்', 'லாவாரிஸ்' 'ஷக்தி' ஆகிய யாவும் ஈடில்லாத நடிகர்
திலீப்குமாருடன் ஈடுகொடுத்து நடித்தார்.






1982 'கூலி' படப்பிடிப்பில் பட்டகாயம்
1982ல் கூலிப் படத்தில் நடிக்கும் பொழுது சண்டைக் காட்சியில்
புனீட்இஸ்ஸாருடன  மோதும் போது, உணவுக்குழாய் பாதிக்கும் வண்ணம் காயமடைந்தார். பச்சன் எப்போதும் சண்டைக் காட்சியில் அபாயகரம் எனினும் சுயமாகவே நடிப்பார் ஒருகாட்சியில் மேஜையில் விழுந்து தரையில் விழவேண்டும். மேஜை மூலையின் கூர்முனை அவரது அடிவயிற்றை ஊடுருவியது. அதிக அளவு குருதியும் கொட்டியது மண்ணீரல் முறிவு உடனடியாக மருத்துவமனையில் அவசரச்சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். மண்ணீரல் பாதிக்கப்பட்டிருந்தது உயிருக்கும் ஊசலாடும் நிலை! பல மாதங்கள் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம்! அவர் நலம் விரும்பும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் மருத்துவ மனையில் நின்றிருந்தனர். இழந்த வலுமீண்டும் பெற வேண்டினர் மாதக்கணக்கில் அவர் குணமடைய வேண்டி யிருந்தது. ஓர்ஆண்டு உடல்நலம் சீராகும் காலம் ஆனது. பிறகே படப்பிடிப்பில் கலந்து கொண்டார். நீண்ட இடைவெளிக்குப்பின் 1983ல் வெளிவந்த படம் அந்த விபத்தையே விளம்பரமாகப் பயன்படுத்தியதால் மிகப்பெரிய பாக்ஸ்ஆபீஸ வெற்றி பெற்றது
இயக்குநர் மன்மோகன் தேசாய் பச்சனின் விபத்திற்குப்பின் கூலி படத்தின் இறுதி முடிவை மாற்றினார்.






முதலில் இருந்தது போலவே சாகடிக்கப்பட்டால் அது கொஞ்சம் கூடப் பொருத்த மற்றிருக்கும் என்று இயக்குநர் கருதினார். நிஜவாழ்வில் மரணத்தின் விளிம்பைத் தொட்டுப் பிழைத்தவர் திரைப்படத்தில் மரண மடைந்திருந்தால்அது ஏற்புடையதாக அமைந்திருக்காதென்று எண்ணினார். படவெளியீட்டில் சண்டைக் காட்சிகள் அபாயக் கட்டத்தில் உறைந்து விடுவது போலக் காட்டினார். அந்தக் காட்சியில் முகப்புரை சேர்த்தார் அதன்படி நடிகர் அடிபட்ட நிகழ்ச்சி என்று குறிப்பிட்டிருந்தமையால் அந்த விபத்து அதிகவிளம்பரம் கொடுத்தது. நிஜவாழ்வில் மரணத்தின் விளிம்பைத் தொட்டுப் பிழைத்தவர் திரைப்படத்தில் மரணமடைந்திருந்தால் அது ஏற்புடையதாக அமைந்திருக்காதென்று எண்ணினார்.






பின்னாளில் அவருக்கு தசைநார்கள் பலவீன முற்ற நோய் உள்ளதாகக் கண்டறியப்பட்டது. எனவே திரைப்படத்துறையை விட்டு விலகி விட்டு அரசியலில் நுழைய முடிவுசெய்தார். அந்தக் கட்டத்தில் அவருக்கு அவநம்பிக்கை உணர்வு மேலோங்கியது. எனவே புதிய திரைப்படம் எப்படி வரவேற்கப்படுமோ என்ற மனக்கவலையை வெளிப்படுத்தினார். ஒவ்வொருபட வெளியீட்டின்போது அவர் எதிர்மறையாகவே சொல்லுவார்: 'ஹே!இந்தப் படம் தள்ளாடி வீழ்ச்சிபெறும்'(படம் தோல்வி காணும்






                 அரசியல்  1984-1987




1984ல் அமிதாப் நடிப்புத்துறையில் இருந்து விலகிக்கொண்டு அரசியல் துறையில் குறுகிய காலத்திற்குள் நுழைந்தார் அவருடைய குடும்ப நண்பர்
ராஜிவ்காந்தியின் ஆதரவே அதற்குரிய காரணமாகும். அலகாபாத் தொகுதியில் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் எதிர்த்துப் போட்டியிட்டார். அப்பொதுத் தேர்தலில்
எச்.என்.பகுகுணாவை அதிக பட்ச வாக்குகள் வித்தியாசம் காட்டி (68.2 சதவீதம் வாக்குகள் வென்றார். ஆனாலும் அவரது அரசியல் வாழ்க்கை அதிக காலம் நீடிக்கவில்லை! மூன்றே ஆண்டுகளுக்குள் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. அரசியலே ஒரு குட்டை என்று சொல்ல நேர்ந்தது.






அதன்காரணமாவது அவரும் அவரது சகோதரரும் போபர்ஸ் பீரங்கி ஊழலில் தொடர்புடையவர்கள் என்று வெளிவந்த பத்திரிகைச்செய்தி அவரை நீதிமன்றம் போகச்செய்து குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டியே அவர் பதவி விலகினார்.
அவரின் பழைய நண்பர் அமர்சிங் அவரின் ஏபிசிஎல் கம்பெனி நஷ்டமுற்று பணநெருக்கடி ஏற்பட்டதால் உதவிசெய்தார். அதன்விளைவாக அமிதாப் நண்பரின் அரசியல் கட்சியை ஆதரித்தார் அந்த சமாஜ்வாடி கட்சியில் மனைவி ஜெயா சேர்ந்து பிறகு
ராஜ்யசபா உறுப்பினரானார்.





மனைவிக்காக பச்சன் அவர் சேர்ந்துள்ள கட்சிக்கு அதாவது சமாஜ்வாடிக்கயாக பல உதவிகள் செய்யலானார். விளம்பரங்கள் அளித்தல், அரசியல் போராட்டக்கூட்டங்கள் நடத்துதல் அதில் அடங்கும் இத்தகைய நடவடிக்கைகள் அவரை தொல்லையில் வலுக்கட்டாயமாக ஆழ்த்தியது. அதன்விளைவாக, நீதிமன்றங்கள் செல்ல வேண்டியதாயிற்று. பச்சன் தன்னை ஒரு விவசாயி  என்று கூறி, சட்டப்பூர்வமான எழுத்துப் படிவத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் அது உண்மையல்ல என்று அவரை வழக்கில் சிக்கவைத்த சம்பவம் அவரை அலைக்கழித்தது.
பச்சனுக்கு எதிராகப் பத்திரிகைச்செய்தித்தடை அவர் படத்துறையில் உச்சத்தில் இருந்தவருடங்களில் கொணரப்பட்டது. அதுவும் ஓரு 15 ஆண்டுக்காலமாக அதுநிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
'ஸ்டார்டஸ்ட்' போன்ற திரைப்பட சம்பந்தப்பட்ட ஒருசில பத்திரிகைகள் அதற்கான காரணமாயின. தனது சுயகாப்பிற்காகவே 1989 இறுதி வரை அவரது படப்பிடிப்புத் தளங்களுக்குப் பத்திரிகையாளர்கள் வரக்கூடாதெனத் தடுத்திருந்ததாக பச்சன் தரப்பில் சொல்லப்பட்டது.







மந்தநிலையும், ஓய்வும்: 1988-1992
1988ல் பச்சன் மீண்டும் திரையுலகம் திரும்பினார். 'ஷாஹேன்ஷா' என்னும் பெயர்கொண்ட திரைப்படத்திற்காக அவர் பிரவேசித்தார். படத்திற்குப் பாக்ஸ்ஆபீஸ் வெற்றி கிடைத்தது. ஏனெனில் பச்சனின் மீள்வருகை பற்றிய செய்தி பிரசித்தியே காரணமாகும்! ஆனால் இவ்வெற்றியோ 





அவருக்குத்தொடர்ந்து கிடைக்கவில்லை. அடுத்து வந்த படங்கள் தோல்வியைத்தழுவின. எனவே அவரது நட்சத்திரப்புகழ் ஒளிமங்கலானது என்றாலும் 1991ல் 'ஹம்' என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தார். அது அன்றைய சரிவைச் சரிக்கட்டுவதாக தோற்றப்பொலிவு கொடுத்தாலும், சொற்ப காலத்திற்குப்பின் மந்தகதி தொடர்ந்தது. பெருவெற்றிப்படங்கள் தராத நிலை நீடித்தாலும், ஒன்றைக் குறிப்பிட்டாகவேண்டும். இரண்டாம் தடவையாக பச்சன் தேசிய விருது வாங்கினார் அதுவும் இந்தக் காலகட்டத்தில்! 1990ல் வெளிவந்த
'அக்னிபாத்' என்ற மாபியாதாதா படத்திற்காக அது தரப்பட்டது!! இந்த வருடங்களே அவர் திரையில் தோன்றிய கடைசி வருடங்களே ஆகும். 1992ல் வந்த
'குடாகாவா ' படத்திற்குப்பின் பச்சன் ஐந்தாண்டு ஓய்வைச் சுயமாகவே விரும்பி மேற்கொண்டார். 1994ல் தாமதம் தடங்கல்பட்டு வெளிவந்த 'இன்ஸானியாத்' படம் பாக்ஸ்ஆபீஸ் தோல்விப்படமாகவே அமைந்தது.







தயாரிப்பாளர் மற்றும் நடிகராக மறு              பிரவேசம் : 1996-1999






பச்சன் தாற்காலிக ஓய்வுகாலத்தில் படத்தயாரிப்பாளராக மாறினார். ஆங்கில அகரவரிசைப்படி ஏபிசி லிமிடெட் கம்பெனி 1996ல் தொடங்கினார்.(அமிதாப் பச்சன் கார்பரேஷன் கம்பெனி) அவரது தொலைதூர நோக்கத்தின் படி 10 பில்லியன் (கிட்டத்தட்ட 250 அமெரிக்க டாலர்கள்) 2000 வருடத்திற்குள் குவிய வேண்டும். ஏபீஸீஎல் வரைமுறைத்திட்டத்தின் படி, இந்தியதேசக் கேளிக்கைத் தொழிற்சாலை உற்பத்திகள் சேவைப் பணிகள் உள்பட தேசிய அளவில் விஸ்தாரம் ஆக்கப் படவேண்டும். முக்கியநீரோட்டமான இயக்கங்கள்படி, வர்த்தகத் திரைப்படங்கள் தயாரித்தல், விநியோகம் செய்தல், ஆடியோ ஒலிநாடக்கள், வீடியோ குறுந்தகடுகள் உற்பத்தி செய்தல், தொலைக்காட்சி மென்பொருள்கள் சந்தைக்குக கொண்டு வருதல், நிகழ்ச்சி மேலாண்மை, மற்றும் பிரபலஸ்தர்கள் பங்கு பெறவேண்டும் என்ற பற்பல செயல்திட்டங்கள் கொண்டு 1996ல் கம்பெனி உருவாக்கப்பட்டது.






உருவான உடனுக்குடன் கம்பெனியின் முதல்திரைப்படம் வந்தது. அதன் முதல்படம்
'தேரே மேரே சப்னே' வசூல்வெற்றி பெறவில்லை! ஆயினும் அர்ஷாத் வார்சி மற்றும் தென்னாட்டில் சிம்ரன் போன்ற நட்சத்திரங்கள் உதயமாக அது வழிவகுத்தது. பின்னரும் அவர் கம்பெனி ஒருசில படங்கள் தயாரித்தும் அதில் ஒன்று கூட உருப்படியான பலன்தரவில்லை. ஏபிசிஎல் தயாரிப்புகள் எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக அமையவில்லை.






1997ல் தனது கம்பெனியால் தயாரிக்கப்பட்ட படம் ' மிரிட்யூதத்தா ' மூலமாக பச்சன் மறுவருகை செய்தார் மிரிட்யூதத்தா அவரது ஏற்கனவே செய்யப்பட்ட சாதனைகளுக்கான அங்கீகாரம் அளிப்பினும் அவரை அதிரடி நாயகன் என்று ஏற்றுக்கொண்டாலும் அப்படம் விமர்சனம் மற்றும் வியாபார ரீதியில் தோல்வியே தந்தது. 1996ல் முக்கியப்பொறுப்பேற்று பெங்களுரில் நிகழ்த்திய உலகப்பேரழகியர் அணிவரிசை அரங்கம் பலமில்லியன் பேரிழப்பை பச்சனுக்குத் தந்தது! நிதிநெருக்கடிகள் உடன் வழக்கு விவகாரங்கள் பற்பல நிறுவனத்தைச் சூழ்ந்து கொண்டன! அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு பலபுகார்கள் வந்தன. முக்கியமாக உயர்மட்ட மேலாளர்களுக்காக மிகஅதிகப்பட்சம் பணம் 1977ல் வழங்கப்பட்டது கம்பெனியில் வீழ்ச்சிக்கு அடிகோலியது என்பதே ஆகும். மேலும் இந்தியத் தொழில்களின் கழகம் அதை ஓரு தோல்வி நிறுவனமாகவே அறிவித்தது. கம்பெனி நிர்வாகமும் அதற்குரிய காரணமாயிற்று. 1999ல் பச்சன் அவரது மும்பை பங்களாவையே (பிராக்தீட்ஷா) விற்க முனைந்தபோது பாம்பே உயர்நீதிமன்றம் அதற்குக்கட்டுப்பாடு விதித்தது. ஏற்கனவே கனராவங்கியிடம் பெறப்பட்ட கடன்கள் நிலுவையில் இருப்பதும் அதற்குரிய காரணமாக அமைந்தது. எனினும் பச்சன் தனது பங்களாவை விற்காது சஹாரா இந்திய நிதி நிறுவனத்திடம் அடமானம் வைத்திருப்பதாக நீதிமன்றத்தில் மன்றாடினார். அதுகூட அவர் கம்பெனி நிதிநிலை மேம்படவே அவ்வாறு செய்திருப்பதாக முறையிட்டார்.







பச்சன் நடிப்புத்தொழில் வாழ்க்கையைப் புதுப்பிக்க வேண்டி துறையில் மும்முரமானார். 1988ல் வெளிவந்த அவர்படம் 'பேடே மியான் சோடே மியான்'
 சுமாரான வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதேபோல் 1999ல் வெளிவந்த
'சூர்யவன்சம்' நேர்முகமான மதிப்புரைகளே ஈட்டியது. அதே வருடத்தில் வெளியிடப்பட்ட 'லால் பாட்ஷா' மற்றும் 'ஹிந்துஸ்தான் கி கஸம்'
போன்ற படங்கள் பாக்ஸ்ஆபீஸ் தோல்வியே கண்டன.





        தொலைக்காட்சிப்   பணிவாழ்க்கை





2000ம் ஆண்டில் பச்சன் பிரபல பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஆட்டமான 'யார் மில்லியனராக விரும்புவது?' என்பதன் இந்தி 'கவுன் பனேகா க்ரோர்பதி' நிகழ்ச்சி அதன் உபசரனையாளராக நடத்த முன் வந்தார். பிறநாடுகளைப்போலவே
(கவுன் பனேக க்ரோர்பதி) அந்நிகழ்ச்சி எடுத்தவுடனேயே இமாலய வெற்றிகண்டது. நவம்பர் 2000ல் கனரா வங்கி அவருக்கு எதிராக தொடுத்த சட்டபூர்வமான வழக்கு விலக்கிக்கொள்ளப்பட்டது. கனரா வங்கியால் பச்சனுக்கு உதவிகரமாக அமைந்தது. மேலும் அவரே வழங்குநர் ஆகி 2005 நவம்பர் நிகழ்ச்சியை நடத்திக்கொடுத்தார்.அந்த வெற்றி அவருக்குரித்தான சினிமாப்புகழை மறுபடி தந்தது. 2009ல் வெளிவந்த 'ஸ்லம்டாக் மில்லியனர்'( ஸ்லம்டாக் மில்லியனர் ) படம் ஆஸ்கார் விருதுவென்றது அனைவரும் அறிந்ததே! அந்த வார்த்தை விளையாட்டில் எழுப்பப்பட்ட துவக்கவினா: யார் கோட்டீஸ்வரன் ஆவது?
'ஜன்ஜீர் படத்தின் நாயகன் யார்?' என்பதேயாகும். அந்த வினாவிற்குரிய சரியான விடை அமிதாப்பச்சன்!! பெரோஸ்கான் ; அமிதாப்பச்சனாக ஒருகாட்சித்தோற்றமளித்தார்.
அனில்கபூரோ போட்டியின் உபசரிப்பாளராகத் தோன்றினார் விக்கி
முக்கியத்துவம் நோக்கி மீண்டும்வருகை:





           2000  முதல்   தற்காலம்வரை



2000 மே மாதம் 7ஆம் தேதி பச்சனின் தோற்றத்தோடு வெளிவந்த யாஷ் சோப்ராவின் ஹிட் படம் 'மொஹாபத்தீன்'
ஆதித்யா சோப்ரா இயக்கினார். நடிகர்
ஷத்ருகன் சின்ஹாவிற்கு நடிப்பில் போட்டியாக பச்சன்அப்படத்தில் ஓருவயதான கண்டிப்பானவராக செவ்வனே அந்தப் பாத்திரத்தைச் சித்திரித்துக்காட்டினார். பச்சன் குலபதியாக அதாவது குடும்ப முதல்வனாக நடித்து வெற்றிபெற்ற பிற ஹிட் படங்களாவன: ஏக்ரஸ்தா , தி பாண்ட் ஆப் லவ் (2001), கபி குஷி கபி காம் (2001),
பாக்பன் (2003) நடிகராகத் தொடர்ந்து பல்வேறுபட்ட பாத்திரங்களில் அவர்தோன்றியமையால் வெகுவானப் பாராட்டுதல்கள் பெறலாயினார். அக்ஸ் (2001), ஆங்கன் (2002), காக்கி (2004), தேவ் மற்றும் பிளாக் (2005) போன்ற படங்கள் அவ்வரிசையில் இடம்பெற்றன. இந்தப் புத்தெழுச்சியின் பலாபலனாக அமிதாப் பலதரப்பட்ட தயாரிப்புகள்,சேவைகளில் தொலைக்காட்சி மற்றும் விளம்பர ஒளிப்பலகைகள் சம்பந்தப்பட்டதில் மும்முரமாக ஈடுபட்டார். 2005 மற்றும் 2006ல் அவர் தன்மைந்தன் அபிஷேக்குடன் பல ஹிட் படங்கள் சேர்ந்தளித்தார், அவையாவன: பண்ட்டி அவுர் பப்லி (2005),
தி காட்பாதர் போன்ற சர்க்கார் (2005), கபி அல்விடா நா கெஹ்னா (2006) எல்லாமே பாக்ஸ்ஆபீஸ் வெற்றிப்படங்களாகும்.





அவரது அடுத்த வெளியீடுகள் 2006. 2007 வருடங்கள்: பாபுல் (2006) [29] ஏக்லவ்யா
நிஷாப்த் (2007) போன்ற பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெறவில்லையாயினும் அவரது நடிப்பாற்றல் அப்படங்களில் நன்கு வெளிப்பட்டதாக விமர்சனதாரிகள் கருத்து அபிப்பிராயங்கள் கூறினார். மேலும் கன்னடப்படமான அம்ருத்ததாரே படத்தில் கௌரவத்தோற்றம் அளித்தார். அப்படம் நாகத்திஹல்லி சந்திரசேகரால் இயக்கப்பட்டதாகும்.
அவரது மற்ற இருதிரைப் படங்களான சீனி காம் உடன் பல புகழ் பெற்ற நடிகர்கள் நடித்த திரைப்படம் ஷூட்அவுட் அட் லோகண்ட்வாலா 2007 மே மாதம் வெளிவந்தன. இரண்டாம் படம் ஷூட்அவுட் அட் லோகண்ட்வாளா பாக்ஸ் ஆபிஸில் வசூலில் நன்றாகப் போய் வெற்றி என்றும் அறிவிக்கப்பட்டது. முதலாம் திரைப் படம்
சீனி காம் தாமதாகத் தொடங்கிய பிறகு ஈடு கட்டவே மொத்தத்தில் சராசரி வெற்றி திரைப்படம் என்றே அறிவிக்கப் பட்டது.






2007 ஆகஸ்டில் இமாலய வெற்றி பெற்ற
'ஷோலே' வின் மறுபதிப்பு ' ராம் கோபால் வர்மா கி ஆக்' பாக்ஸ் ஆபீஸில் பாதாளச்சரிவாக படுதோல்வி கண்டதால் விமர்சனதாரிகளின் பார்வையிலும் பரிதாபகரமே தென்பட்டது.
அவரின் முதலாவது ஆஙகிலப்படம்
ரீட்டுபர்னோ கோஷின் 'தி லாஸ்ட் லியர்'
2007 செப்டம்பர் 9 அன்று டோரன்டோவில் நிகழ்ந்த சர்வதேசத் திரைப்பட விழாவின் முதல்வெளியீட்டுக் காட்சியின் பொழுது நேர்முகப்பாராட்டுதல்கள் விமர்சனதாரிகளிடமிருந்து பெற்றார். அப்படம் அவரது பிளாக் படத்திற்குப்பின் நடிப்பில் மிகச்சிறந்ததென்று உயர்த்திக் கூறினர். பச்சன் அவரது முதல் உலகளாவிய திரைப்படத்தில் துணைக்கதாபாத்திரத்தில் நடித்தார்.






'ஷாந்தாராம்' என்ற அந்தப் படத்தை மீரா நாயர் இயக்க, ஹாலிவுட் பிரபலநடிகர்
ஜானி டெப்ப் முக்கியப்பாத்திரத்தில் நடித்தார். படப்பிடிப்பு 2008 பிப்ரவரியில் தொடங்கவேண்டியது ஹாலிவுட் கதை ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தால் செப்டெம்பரில் நிகழ தள்ளிப் போடப்பட்டது.






'பூத்நாத்' என்ற படத்தில் தலைப்பிற்கேற்ற பேய் வேடத்தில் அவரே நடித்தார். 2008 மே 9 அன்று அதுவெளியானது. ஜூன் 2008ல்
'சர்க்கார் ராஜ்' படம் அவரின் 2005 'சர்க்கார் ' படக்கதையின் பின்தொடர் கதையாக அமைந்தது. அது பாக்ஸ்ஆபீஸில் நேர்முக ஆதரவுபெற்றது.
2008 டிசம்பர் 8 அன்று பெற்ற நேரடி 'எர்த்'
லைவ் எர்த் ஜோன் போன் சோவியுடன் உபசரனையாளர் என பங்கு கொண்டார்.
பம்பாயில் அது நடைபெற்றது.
2009 ஜனவரி, 26ல் மும்பை அந்தேரியில் திறக்கப்பட்ட கோகிலாபென் திருபாய் அம்பானி ஆஸ்பத்திரி விழாநாளில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று பெருமைப் படுத்தினார்.





                      உடல்  நிலை



2005 மருத்துவமனையில் அனுமதி
2005 நவம்பரில் அமிதாப் பச்சன் லீலாவதி மருத்துவமனையில் உடனடி அவசரச்சிகிச்கைப்பிரிவில் சேர்க்கப் பட்டார். ஏனெனில் சிறுகுடலில்
குருட்டுஅடைப்பு காண நேர்ந்தது. வெகுநாட்களுக்கு முன் வலிஅதிகம் என்று குறைபட்டுக்கொண்டிருந்தது காரணமாகும். அவர் உடல்நலம் மீளப்பெறவேண்டிய காலகட்டத்தில் பல திட்டங்கள் அப்படியே நிறுத்தவேண்டியதாயிற்று. அதில் முக்கியமாகக்குறிப்பிட வேண்டியது, பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான
'கவுன் பனேகா குரோர்பதியும்
அடங்கும்! 2006 மார்ச்சில் அந்தப் பணிநோக்கி அமிதாப் மீண்டும் திரும்பினார்.






குரல்  பச்சன் தனது ஆழ்ந்த ஏற்றஇறக்கம் காட்டும் குரல்வளத்திற்குச் சொந்தக்காரர் ஆவார். அந்தநேர்த்தியான குரலால் கதைசொல்பவர், பின்ணணிப்பாடகர், நிகழ்ச்சி வழங்குநர் ஆகிய பலபணிகளை மேற்கொண்டார். புகழ்பெற்ற வங்க இயக்குநர் சத்யஜித்ரே அவரது அபாரக்குரல்அழகால் அதன்மேல் நல்அபிப்பிராயம் கொண்டிருந்ததால், தன்
'ஷத்ரன்ஜ் கி கிலாடி' படத்திற்காக விளக்கஉரையாளராகப் பயன்படுத்திக்கொண்டதும் பெருமைதரும் சம்பவமாகும். அப்படத்தில் அமிதாப்பிற்கேற்ற வேடம்  அமைந்தது.





இதில் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவெனில் பச்சன் திரைபடத்துறைக்கு வருமுன் அகிலஇந்தியவானொலி அறிவிப்பாளர் வேலைக்கு விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டதும் காரணம் ஆகும்
முரண்பாடுகளும் விமர்சனங்களும்
பாராபங்கி நிலபேர வழக்கு
2007ல் ஆட்சிப்பிடிக்க
உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற மாநில சட்டமன்றத்தேர்தலில் பச்சன் முலாயம் அரசின் அருஞ்சாதனைகளை விளக்கி ஒருதிரைப்படம் உருவாக்கினார். எனினும் அத்தேர்தலில் சமாஜ்வாடிக்கட்சி தோல்விகண்டு மாயாவதி பதவிக்கு வரநேர்ந்தது.






நிலமற்ற தலீத் விவசாயிகள்  வசமிருந்த பயிர்நிலத்தை அமிதாப் வாங்கியுள்ளார் என்ற காரணத்தால், 2007 ஜூன் 2ல்
பைஸாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது . போலி ஆவணம் தயாரித்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்படும் என்ற வதந்தியும் கிளம்பியது. அவர் தன்னை ஒரு விவசாயி என்று கூறியதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 2007 ஜூலை 19ல் அவதூறு கிளம்பியதால் அமிதாப் உத்தரபிரதேசம் பாரபங்கி மற்றும்
புனே நிலன்களை திருப்பி அளித்தார்..






அதுமட்டுமின்றி மகாராஷ்டிர முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு பூனாவில் உள்ள தனது நிலங்களை தானமாக வழங்கிவிட கடிதம் எழுதி அனுப்பினார். ஆயினும் லக்னோ நீதிமன்றம் தடைஆணை பிறப்பித்து நிலநன்கொடையை நிறுத்தச் செய்தது. ஏற்கனவே இருந்த நிலையையே மறுபடி நிலைநிறுத்த ஆணை பிறப்பித்தது.






2007 அக்டோபர் 12ல் பச்சன் பாராபங்கி ஜில்லா தவுலத்புர் கிராமத்தில் உள்ள நிலத்தின்மேல் இருந்த உரிமையைக் கைவிட்டார். 2007 டிசம்பர் 11ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் லக்னோ பெஞ்சு அவரை வில்லங்கமற்றவர் என்று ஒப்புக்கொண்டு பாராபங்கி ஜில்லாவில் பச்சனுக்கு முறைகேடாக நிலம் வழங்கப்படவில்லை என்று தீர்ப்பளித்தது. லக்னோ ஒற்றை நீதிபதி கொண்ட பெஞ்சு தெரிவித்த கருத்தின்படி, பச்சன் மீது எந்த முகாந்திரமும் இல்லை வருமானத்துறைப் பத்திரங்கள் போலியாகவும் தயாரிக்கப் படவில்லை எனவும் அவர் அத்தகைய ஆவணங்களில் ரகசியமாக எதையும் பதிவு செய்யவில்லை எனவும் தெரிவித்தது..






பாரபங்கி நிலசம்பந்தாக நல்ல சாதககமான தீர்ப்பு வந்ததும் அமிதாப் பச்சன் மகாராஷ்டிர அரசாங்கத்திற்கு மறுபடி கடிதம் எழுதினார் அதன்படி பூனா ஜில்லா மாவல் தேசில் இடத்தில் உள்ள தனது நிலத்தை ஒப்படைக்க விரும்பவில்லை என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.






ராஜ்தாக்ரேயின் கண்டனம்
முதன்மைக் கட்டுரை: 2008 attacks on North Indians in Maharashtra
விளம்பரத்துக்காக அமிதாப் பச்சன் இந்திய ஷாப்பிங் மாலில்தோன்றியது.
2008 ஜனவரியில் அரசியல்பேரணி ஒன்றில்
ராஜ்தாக்ரே தன் நவநிர்மாண சேனா ஆதரவாளர்கள் முன்னிலையில் அமிதாப்பை குறிவைத்து கண்டனக்கணை தொடுத்தார்! 'வசிப்பதோ மகாராஷ்டிரம் ஆனால் வளர்ப்பதோ சொந்தமாநிலம்' என்று சாடினார்! உத்திரப் பிரதேசத்தில் பாராபங்கியில் ஒருபள்ளிக் கூடம் தன்மருமகள் நடிகை
ஐஸ்வர்ராயின் பேரில் தொடங்கியது அவருக்கு எரிச்சலூட்டியது. மகாராஷ்டிரத்தில் இல்லாமல் உத்திரப்பிரதேசத்தில் தொடங்கியது அவருக்குப் பிடிக்கவில்லை! ஆனால் அதற்கு அடிப்படை காரணம் உண்டு அதாவது, தன்மகன் அபிஷேக் ஐஸ்வர்யாராயின் திருமணத்திற்கு பால்தாக்கரே மற்றும் உத்தவ்விற்கு அழைப்பிதழ் தந்துவிட்டு ராஜ்தாக்ரேவுக்கு கொடுக்காததால் ஏற்பட்ட மனக்கசப்பே காரணம் ஆனது.





ராஜ்தாக்ரேயின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் தரவேண்டி, பச்சனின் மனைவி ஜெயா பச்சன் தாங்கள் மும்பையிலும் பள்ளி தொடங்கத்தயார் எனவும் அதற்கு உரிய நிலம் ராஜ்தாக்ரே அளித்துதவவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 'நான் கேள்விப்பட்டுள்ளேன் ராஜ்தாக்ரேவிற்கு மும்பையில் அதிக உடைமைகள் உள்ளது கோகினூர்மில்கள் உள்பட!' 'எனவே அவர் விரும்பினால் நிலம் நன்கொடையாக வழங்கினால் ஐஸ்வர்ராயின் பேரில் பள்ளி தொடங்குவோம் இங்கே'  மனைவியின் இந்தப் பதில் பற்றி அமிதாப் விளக்கம் ஏதும்சொல்லாமல் நழுவிவிட்டார்.





இதற்கு உடனடிப் பதிலடியாக பால் தாக்ரே மறுத்துப் பேசினார்: ' அமிதாப் பச்சன் ஒரு திறந்தமனதுடைய சிறந்தமனிதர் ஆவார். அவருக்கு மகாராஷ்டிரா மீது: அதிக அன்புண்டு. பலநிகழ்ச்சிகள் வாயிலாக அவர் அதை வெளிப்படுத்தியுள்ளார். அடிக்கடி அவரே மகாராஷ்ட்ரா அதுவும் மும்பைதான் அவருக்கு புகழும் அன்பும் கொடுத்துள்ளது. அவரே சொன்னதாவது 'நான் இன்றிருக்கும் இந்த நிலைக்குக் காரணம் மும்பை மக்கள் சொரிந்த அன்புப்பெருக்கே ஆகும்' எனவே மும்பைவாசிகள் அவரை ஓரு கலைஞனாகவே காண்கின்றனர். எனவே அவர்மீது குறுகிய நோககம்கொண்ட குற்றச்சாட்டுக்கள் அள்ளிவீசுதல் மடைமையேயாகும். மேலும் அவர் அகிலஉலகம் அளாவிய சூப்பர்ஸ்டாராவார். புவியெங்கும் மக்கள் அவர்மீது மதிப்பு மரியாதை வைத்துள்ளனர். இது யாராலும் மறுக்காத ஒன்றாகும். அமிதாப் இப்படிப்பட்ட அற்பக்குற்றச்சாட்டுக்கெல்லாம் பாதிக்கப்படாத வண்ணம் தனது நடிப்பின் மீது பெரும் அக்கறையைத் தொடர்ந்து செலுத்தவேண்டும்'





2008 மார்ச் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்தபின்னேரே ராஜ்ஜின் கண்டனத்திற்கு இறுதியில் அமிதாப் பதில் அளித்தார். உள்ஊர் செய்தி நிறுவனத்திற்கு தந்த பேட்டியின் போது சொன்னதாவது: அங்கொன்றும் இங்கொன்றும் சொல்லும் குற்றச்சாட்டுகள் வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே, நிச்சயம் நீங்கள் விரும்பும் அன்பான கவனத்திற்கு உகந்ததாக இருக்காது. அகில உலக இந்திய பிலிம் அகாடமி செய்தியாளர் கூட்டத்தில் வேறு மாநிலம் குடிபுகும் பிரச்சினை பற்றி கேட்ட போது அமிதாப் சொன்னார்: அது ஒவ்வொருவருடைய ஜீவாதர உரிமையாகும்  அரசியல் சாசனப்படி யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சென்று வசிக்கலாம் அவர் மேலும் சொன்னார்: ராஜ்ஜின் விமரிசனங்கள் அவரை பாதிப்படைய வைக்கவில்லை....










கருத்துகள்

பிரபலமான இடுகைகள்