நோலனின் த பிரஸ்டீஜ் ( The Prestige ) 2006
த. பிரஸ்டீஜ்
இயக்குனர் - கிறிஸ்டோபர் நோலன்
தயாரிப்பாளர் -
கிறிஸ்டோபர் நோலன்
ஆரான் ரைடர்
எம்மா தாமஸ்
இசையமைப்பு - டேவிட ஜூலியன்
ஒளிப்பதிவு - வால்லி பிஸ்தர்
படத்தொகுப்பு - லீ சிமித்
திரைக்கதை -
கிறிஸ்டோபர் நோலன்
ஜோனதன் நோலன்
கதை மூலம் - கிறிஸ்டோபர் பிரீஸ்ட் எழுதிய புதினம்
இந்த படத்தை பார்க்க முன் எனக்கு
மாஜிக் என்றால் ரொம்ப பிடிக்கும்.
யாருக்கு தான் மாஜிக் என்றால் பிடிக்காது. இந்த மாஜிக்கை எப்படியாவது கத்துக்கனும் என்று நிறைய Time என் நண்பர்களிடம் சொல்லியிருக்கேன்.
ஒரு நாள் நானும் நண்பர்களும் செல்லைசந்நிதி கோவிலுக்கு
போயிருந்தேன்.
கோவிலுக்கு போய் கும்பிட்டு
கோவிலுக்கு போய் கும்பிட்டு
பின் பக்கம் சுற்றி பார்க்கலாம்.
என்று போன போது.
ஒரு கடையில் மாஜிக் செய்வது எப்படி
என்று ஒரு புத்தகத்தை
பார்த்ததேன்.
இருந்த காசுக்கு அந்த புத்தகத்தை
இருந்த காசுக்கு அந்த புத்தகத்தை
வாங்கிக்கொண்டு வீட்டிக்கு வந்து
பிறகு படித்து பார்த்தேன்.
அதுக்கு அப்புறம் தான் தெரிச்சது
மாஜிக் எல்லாம் கண்கட்டி வித்தை
என்று என்னடா எதுக்கு இவன்
இதை பற்றி சொல்லுறான்
என்று கேட்கிறது புரிது.
இன்றைய பதிவில பார்க்கபோற
இன்றைய பதிவில பார்க்கபோற
படம் மாஜிக் பற்றிய படம் தான்
என்னடா மெக்கையா இருக்குமே
என்று நினைக்காதிங்க படத்தை
பார்த்தாலே சொல்லுவிங்க
எப்படி படம் என்று.
இந்த படத்தோட கதையை
இந்த படத்தோட கதையை
பார்க்கிறதுக்கு முன்னாடி
ஒரு விஷயத்தை
சொல்லலாம் நினைக்கிறேன்.
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச
படங்களில் இதுவும் ஒன்று
என்று சொல்லுவதை விட
நான் அடிக்கடி பார்க்கிற படம்
என்று சொல்லலாம்.
ஏனென்றால் இந்த படத்தோட
திரைக்கதை ரொம்ப சூப்பரா
எழுதி இருப்பார் நோலனும்
அவருடைய தம்பி ஜெனதன்
நோலனும்.
இதுவரைக்கும் நான்
இதுவரைக்கும் நான்
நினைத்துக்கொண்டு இருந்தது
மெமென்டோ படம் தான்
நோலனுடைய பெஸ்ட் படம் என்று.
மெமென்டோ படம் மாதிரி
திரைக்கதையில் ஒரு புதுமையை
நோலனால எழுத முடியுமா
என்று யோசிச்சிருக்கேன்.
ஆனால் முடியும் என்று நோலன்
மறுபடியும் நிருபிச்சிருக்கும் படம்
தான் த பிரஸ்டீஜ் இன்னும்
ஒரு படமும் இருக்கு .
அத பற்றி எழுதும் போது
சொல்லுறேன் .
எனக்கு நோலனும் அவருடைய
எனக்கு நோலனும் அவருடைய
தம்பி ஜெனதன் நோலனும் சேர்த்து.
திரைக்கதை எழுதின படங்கள்
என்றால் ரொம்ப பிடிக்கும்
எத்தனை தடவை பார்த்தாலும்
அலுக்காது.
இன்னும் ஒன்று நான் லீனியர்
திரைக்கதை எழுதுரத்தில நோலனை
அடிச்சிக்கவே முடியாது.
நோலன் தான் பெஸ்ட் என்று
நான் சொல்லுவேன்.
அதனாலதான் நோலனை என்னுடைய
மானசீக குருவாக நினைக்கிறேன்.
என்னடா இவன் நோலன் புராணம்
பாடுறான் என்று நினைக்காதீங்க .
நோலனை பற்றி தொரிச்சுகிட்டா
அப்படி நீங்க கேட்க மாட்டிங்க .
அதான் நோலனை பற்றிய
பதிவு போடுறன்....
ஒன்று மட்டும் உறுதியா சொல்லுவேன்.
ஒன்று மட்டும் உறுதியா சொல்லுவேன்.
நோலனுடைய படத்தை
உங்களுக்கு பிடிக்கும்.
நான் எழுதுற நோலனுடைய
எல்லா பதிவையும் வாசிச்ச
பிறகு கண்டிப்பா ஒரு
மாசத்துக்காவது உங்க மைண்டில
நோலலை பற்றி தான்
யோசிச்சிட்டு இருப்பிங்க .
ஓகே கதைக்கு வருவேம்.
இந்த படத்தை நோலன்
நான் லீனியர் எடுத்திருக்கிறாரு .
உங்களுக்கு புரியும் படி லீனியரா
எழுதி இருக்கிறான்.
கதை
In magic circles, every great trick consists
கதை
In magic circles, every great trick consists
of three acts.
The first is called The Pledge,
where the magician shows you
something ordinary but it probably isn’t.
The second act is called The Turn,
where the magician makes his ordinary
something do something extraordinary.
And the third act is called The Prestige,
the part with the twists and turns
that hides the secret and allows you
to see something shocking you’ve
never seen before .
மேலே உள்ளது பிரஸ்டீஜ்
மேலே உள்ளது பிரஸ்டீஜ்
படத்தின் துவக்கத்தில் வரும் வசனம் .
அதில் மேஜிக் எனும் இடத்தில்
சினிமா என்று மாற்றிப்படித்தால்
பிரஸ்டீஜ் படத்திற்கு
அப்படியே பொருந்தும் .
மெமென்டோ பற்றிய பதிவில்
மெமென்டோ பற்றிய பதிவில்
நான் – லீனியர் திரைக்கதை
பற்றி பார்த்திருக்கிறோம் .
மெமென்டோ படத்தை
நான் – லீனியரின் உச்சம் என்றால் ,
பிரஸ்டீஜ் திரைப்படத்தை
நான் – லீனியரின் மணிமகுடம்
என்றே கூறலாம் .
ரசிகர்களுக்கு புரிந்தாலும் சரி ,
புரியவில்லையாயினும் சரி என்ற
நோக்கில் நோலன் திரைக்கதை
எழுதிய படமே பிரஸ்டீஜ் .
மெமென்டோவில் முதல் பாதி
காட்சிகள் முன்னோக்கி நகரும்
வண்ணமும், கருப்பு வெள்ளைக்
காட்சிகள் பின்னோக்கியபடியும்
அமைத்திருப்பார் .
ஆனால் இப்படத்தில்
ஆனால் இப்படத்தில்
அப்படியெல்லாம் கிடையாது.
ஒன்றுக்கொன்று துளி சம்பந்தமும்
இல்லாமல் காட்சிகள் நகரும்
ஆனால் அதை நோலன்
பிளாஷ்பேக்கினுள் ஒரு பிளாஷ்பேக்
என்ற வகையில் எழுதியிருப்பார்.
மஹாபாரதம் படித்த பலரும் அதில்
மஹாபாரதம் படித்த பலரும் அதில்
ஆச்சரியப்படும் விஷயமாக
நினைப்பது கிளைக்கதைகள் .
அதாவது ஒரு கதை நடக்கும்போது
அதனுள் ஒரு கதையும் ,
அந்த கிளைக்கதையில் ஒரு
கதையும் நடப்பதை அறிவர் .
அப்படிப்பட்டதே இந்த பிரஸ்டீஜ் .
19 – ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
19 – ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
ஆஞ்சியர் மற்றும் போர்டன் என்ற
இரு மேஜிக் கலைஞர்களின்
பிரஸ்டீஜ் பிரச்சனையே இப்படம் .
ஆஞ்சியரும் போர்டனும் ஒரே மேஜிக்
கம்பனியில் வேலை செய்பவர்கள் .
ஆஞ்சியருக்கு தொழிலாக
தெரியும் மேஜிக் ,
போர்டனுக்கு கலையாக தெரிகிறது.
மேஜிக்கிற்காக வாழ்க்கையையே
அர்ப்பணிக்கலாம் என்று
வாழ்பவன் போர்டன் .
ரசிகர்களிடமிருந்து கைத்தட்டல்
வாங்கினால் போதும் என்று
நினைப்பவன் ஆஞ்சியர் .
த கிரேட் டான்டன் ஷோ என்றாலே
ரொம்ப பேமஸ்.
டான்டன்னுடைய
உண்மையான பேரு .
ராபர்ட் ஆஞ்ஜியர்.
ஆஞ்ஜியர்ருடைய TRANSPOTED MAN
என்ற ட்ரிக்கை பார்க்கிறதுக்காக
தான் மக்கள் ஆர்வமாக
காத்துகிட்டு இருக்காங்க .
அந்த மக்களில் ஒருவனாக
மாறுவேஷம் போட்டுக்கிட்டு
காத்துகிட்டு இருக்கான்.
ஆஞ்ஜியர்ருடைய எதிரி முன்னால்
நண்பன் ஆனா ஆல்பிரெட் பொர்டன் .
வழக்கம் போல ஆஞ்ஜியர்
அந்த ட்ரிக்கை பண்ணுறத்துக்கு.
முன்னாடி ஆடியஸ்ஸில இருந்து
நாலு பேரை கூப்பிட்டு.
அவன் இப்ப பண்ணப்போற
ட்ரிக்குக்காக வைச்சிருக்கிற
மிஷினை செக் பண்ண சொல்லுறான்.
அதுக்காக ஆடியன்சில இருந்து
நாலு பேர் வராங்க .
அதில ஆல்பிரெட் போர்டேனும் ஒருத்தன்.
போர்டேன் மேடையில் இருக்கிற
மிஷினை செக் பண்ணுற
மாதிரி நடிச்சிட்டு.
யாரும் பார்க்காத நேரத்தில்
மேடைக்கு பக்கத்தில் இருக்கிற
வழியில் ஓடி போயிடுறான் .
அந்த வழியால் போனால் மேடையின்
பேஷ் மண்டுக்கு வந்திடலாம் .
போடன்
ஆஞ்ஜியர் பண்ணப்போகும் ட்ரிக்குக்காக.
பேஷ் மண்டுடில் ஏதாச்சும்
வச்சிருக்கான என்று
தெரிச்சுக்க வந்திருக்கிறான் .
இதே நேரத்தில் ஆஞ்ஜியர்
அந்த ட்ரிக்கை பண்ணுறதுக்கு
தயார் ஆகுறான்.
மிஷினை ஒன் பண்ணுறாங்க .
மிஷினில் இருந்து மின்னல் போல
ஒளி வருது.
ஆஞ்ஜியர் மறைத்து போகிறான் .
இதை பார்த்த ஆடியன்ஸ்
வியந்து போறாங்க ,
ஆஞ்ஜியர் மறுபடியும்
எங்கிருந்து வரப்போகிறான்.
என்று வெயிட் பண்ணிட்டு இருக்காங்க .
ஆனா மேடையில் இருக்கிற
ஆஞ்ஜியர் மறையவில்லை.
மேடைக்கு கீழே இருக்கிற ரகசிய
வழி மூலமாக ஆஞ்ஜியர்
பேஷ் மண்டில் இருக்கிறான்.
தண்ணி டாங்குக்குள்ள விழுகிறான்.
அந்த டாங்கில் தண்ணி
நிறைச்சு இருக்கு.
அது மட்டும் இல்லாமல் தானாகவே
அந்த டாங்க் லாக் ஆகிடுது.
தண்ணி டாங்கில ஆஞ்ஜியர்
உயிருக்கு போராடுறத போர்டேன்
மட்டும் பார்த்துகிட்டு இருக்கான்.
அவன் ஆஞ்ஜியரை காப்பத்தணும்
என்று நினைக்கிறதுக்குள்ளயே
ஆஞ்ஜியர் தண்ணீருக்குள்ளேயே
மூச்சு திணறி இறந்து போயிடுறான் .
ஆஞ்ஜியர் சாவுக்கு காரணம்
ஆஞ்ஜியர் சாவுக்கு காரணம்
போர்டேன் தான் என்று
போர்டேனை கைது செய்யிறாங்க.
ஆஞ்ஜியரருடைய உதவியாளர்
ஜான் கட்டர்.
போர்டேனுக்கு எதிரா
சாட்சி சொல்லுறாரு .
ஆஞ்ஜியர் ட்ரிக் பண்ணுற நேரத்தில்
பேஷ் மண்டில் அந்த தண்ணி
டாங்க்கை வைச்சது போர்டேன்
தான் என்று கட்டர் சொல்லுறாரு .
ஆனா போர்டேன் அதை மறுக்கிறான்.
நீதிமன்றம் தீர்ப்பை தள்ளி
வைக்கிறாங்க .
அதுவரைக்கும் போர்டான் சிறையில்
இருக்கணும் போர்டேனுடைய கவலை
எல்லாம் அவனுடைய மகள்
Jess பார்த்துக்க முடியலை
நேரத்தில அவனை பார்க்க
ஒருத்தர் வராரு.
அவர் ஒரு ஏஜெண்ட்
என்று சொல்லுறாரு.
லார்ட் கார்டிலோ ஒருத்தர்
போர்டானுடைய மகளை
பார்த்துக்கிறாரு என்று சொல்லுறாரு.
ஆனா அதுக்கு பதிலா போர்டன்
அவன் மாஜிக் பண்ணுறதுக்காக.
எழுதி வைச்சிருந்த எல்லா
ட்ரிக்கையும் லார்ட்
கார்டிலோவுக்கு தத்திடனும்.
என்று அந்த ஏஜெண்ட் சொல்லுறாரு .
என்று அந்த ஏஜெண்ட் சொல்லுறாரு .
ஆனா ட்ரிக் எல்லாத்தையும்
தந்த பிறகு லார்ட் கார்டிலோ
தன் மகளை பார்த்துக்களை
என்றால் என்ன பண்ணுறது
என்று கேட்கிறான் .
அதுக்கு அந்த ஏஜெண்ட்
லார்ட் கார்டிலோ வாக்கு குடுத்த
மாற மாட்டர் என்று சொல்லுறாரு .
அது மட்டும் இல்லாமல்
செத்துப்போன ஆஞ்ஜியருடைய
டைரியை போர்டானுக்கு
லார்ட் கார்டிலோ
கொடுக்க சொன்னதாக
அந்த ஏஜெண்ட்
ஒரு டைரியை போர்டன்
கிட்ட குடுக்கிறாரு.
போர்டன் அந்த ட்ரிக்கை
குடுக்கிறதை பற்றி யோசிக்கிறான் .
என்று சொல்லிவிட்டு டையறியோடு
சிறைக்கு போறான் போர்டன்..
ஆஞ்ஜியருடைய டையரியை
படிக்க ஆரம்பிக்கிறான்.
அதில ஆஞ்ஜியர் தன்னுடைய
கடந்த கால நினைவுகளை
எழுதி வைச்சிருக்கிறான்.
ஆரம்பத்தில ஆஞ்ஜியரும் போர்டானும்
நண்பர்கள் மில்டன் என்கிற
மேஜிசியன் கிட்ட இருந்து
தொழில் கத்துகிறதுக்காக அசிஸண்டா
வேலை செய்துகிட்டு இருக்காங்க
மில்டனுடைய பெஸ்ட் ட்ரிக்
என்றால் தண்ணி
டாங்க் ட்ரிக் தான் ட்ரிக்
பண்ணுறதுக்கு முன்னாடி
மில்டனுடைய இன்னொரு
அசிஸண்டான ஜூலியா அடியன்சில
இருந்து இரண்டு பேரை
மேடைக்கு
கூப்பிடுவா .
அந்த இரண்டு பேர் வேறு
யாருமில்லை அடியன்சில ஒருத்தர்
மாதிரி நடிச்சுக்கிட்டு இருக்கிற
போர்டானும் ஆஞ்ஜியாரும்
தான் இன்னும் சொல்லப்போனால்
ஜூலியா ஆஞ்ஜியருடைய மனைவி
மேடைக்கு இரண்டு பேரும்
வந்த உடனே ஜூலியாவுடைய
கைகளையும் கால்களையும்
ஒரு கயிறால் கட்ட சொல்லுவாங்க .
ஆஞ்ஜியர் ஜூலியாவுடைய
கால்களை கட்டுவான்.
போர்டன் ஜூலியாவுடைய
கைகளை கட்டுவான் .
போர்டன் ஜூலியாவுடைய கைகளை
கட்டும்போது ஜூலியாவுக்கு எப்பவும்
சுலபமா கழட்டக்கூடிய ஒரு
முடிச்சை தான் போடுவான்.
ஜூலியாவுடைய கை கால்களை
கட்டின பிறகு அவளை
ஒரு தண்ணி டாங்க்குள் போட்டு
அந்த தண்ணி டாங்க லாக்
பண்ணிடுவாங்க .
அந்த டாங்க் ஒரு
துணியால் மறைச்சிடுவாங்க .
ஒரு சில நொடிகளுக்குள் மில்டன்
துணியை விளக்கும் போது
தண்ணி டாங்க்குள்
ஜூலியா இருக்கமாட்டாள் .
தண்ணி டாங்க் பக்கத்திலேயே
கை கால் கட்டப்படாமல்
நின்னிட்டு இருப்பாள் .
இது தான் அந்த ட்ரிக்.
இது தான் அந்த ட்ரிக்.
என்ன தான் ஆடியன்ஸ் கை
தட்டினாலும் போர்டானை
பொருத்தவரை மில்டனோட
ட்ரிக்கெல்லாம் பழசாகிட்டு வருது
அதனால் நாம புது ட்ரிக்கை
பத்தி யோசிக்க ஆரம்பிக்கணும்
என்று போர்டன் சொல்லுறான் .
ஆனா அதெல்லாம் ஒன்னும் வேணாம்
இப்ப இருக்கிற ட்ரிக்கே மக்களை
மகிழ்விக்க போதுமானது என்று
கட்டர் சொல்லுறாரு .
அந்த பேச்சு வார்த்தையில
ஜூலியாவுடைய கைகளை கட்டும்
போது எப்பவும் போடுற முடிச்சை
போடாமல் லாங் போர்ட் டபுள்
என்கிற ஒரு கஷ்டமான முடிச்ச
போட்டால் தான் மக்களுக்கு
ஒரு ஆர்வம் வரும் என்று
போர்டன் சொல்லுறான் .
ஜூலியா தன்னால எந்த முடிச்சையும்
சுலபமா அவுக்க முடியும்
என்று சொல்லுறாள் .
ஆனா ஆஞ்ஜியரும் கட்டரும்
லாங் போர்ட் டபுள் என்கிறது
ஒரு கஷ்டமான முடிச்சு அது
ஆபத்தான விஷயம் அத பத்தி
பேச வேண்டாம் என்று சொல்லுறார் .
இதுக்கு அப்புறம்
இதுக்கு அப்புறம்
போர்டானையும்
ஆஞ்ஜியாரையும்
CHUNG LING SOO
ஷோ பார்க்க சொல்லி கட்டர்
சொல்லுறாரு .
ஆஞ்ஜியாரும் போர்டானும் அந்த ஷோ
போய் பார்க்கிறாங்க .
அந்த சீனா மேஜிசியன் ஒரு சின்ன
மாஜிக் ட்ரிக்கை மக்கள
நம்ப வைக்கிறதுக்காக
தன்னோட உண்மையான
வாழ்க்கையில நடையையே
மாத்திக்கிட்டாரு அப்படின்னு
போர்டன் சொல்லுறான் .
ஒரு உண்மையான மஜிசியன்
மக்களோட நம்பிக்கையை
வாங்கிறதுக்காக அவன்
வாழ்க்கையையே அவன் பண்ணும்
ட்ரிக்குக்காக அர்ப்பணிக்கனும்
என்று போர்டன் சொல்லுறான் .
ஆனா ஆஞ்ஜியாரை பொருத்தவரைக்கும்
அதெல்லாம் தேவையில்லை
என்று நினைக்கிறான் .
போர்டன் ஒரு மேஜிசியனுக்கு
அஸிஸண்டா வேலை செய்யும்
போது சாரா என்கிற பெண்ணை
பார்த்து காதலில் விழுறான் என்ன
தான் காதலில் விழுத்தலும்
போர்டானை பொறுத்த வரைக்கும்
அவனோட ஒரு காதல் சாரா
என்றால் இன்னொரூ காதல் அவனுடைய
ட்ரிக் அதனால் போர்டன் ட்ரிக்கை
யாருக்கும் சொல்லக்கூடாது என்று
உறுதியாய் இருக்கான் .
அதுக்கு உதாரணம் சாரா கூட வந்த
ஒரு பையன் கிட்ட ஒரு மாஜிக்
ட்ரிக்கோட ரகசியம் மக்கள
எப்போதும் சந்தோஷப்பட வைக்காது
அதனால ஒரு ட்ரிக்கோட
ரகசியத்தை காப்பாற்ற போராடணும்
என்று போர்டன் அந்த சின்ன பையன்
கிட்ட சொல்லுவான்.
இதிலையே போர்டன் அவனுடைய
ட்ரிக்கை எந்த அளவு பாதுகாக்கிறான்
என்று நமக்கு புரிகிறது .
போர்டன் ஜெயில்ல டைரியை
படிச்சுக்கிட்டு இருக்கிற இதே
நேரத்தில் தான் ஆஞ்ஜியாருடைய
மிஷினை சோதனை போட
வாரரு நீதிபதி.
போர்டேனோட தீர்ப்புக்கு அப்புறம்
மிஷின் லார்ட் கார்டிலோ
என்பவருக்கு விற்கப்படும் என்று
நீதிபதி சொல்லுறாரு.
ஆனா கட்டர் இது ரொம்ப ஆபத்தான
மிஷின் என்று சொன்னாலும் .
அத பற்றி அந்த நீதிபதி
கண்டுக்கல அடுத்ததா ஆஞ்ஜியார்
மூச்சு திணறி செத்துப்போன
அந்த தண்ணி டாங்க பார்க்கிறாங்க.
இந்த தண்ணி டாங்க் தான்
ஆஞ்ஜியார் மற்றும் போர்டன்
வாழ்க்கையிலையே ஒரு பெரிய
பிரச்னையை கொண்டு வந்ததா
கட்டர் சொல்லுறாரு .
போர்டன் ஜெயில்ல தொடர்ந்து
ஆஞ்ஜியாருடைய டைரியை படிக்கிறான்
நல்லா போய்க்கொண்டிருந்த
ஆஞ்ஜியார் போர்டன் வாழ்க்கையில
பிரிவை ஏற்படுத்தின அந்த நாள்
இது தான் எப்பவும் போல
அந்த தண்ணி டாங்க்
ட்ரிக்கை பார்க்கிறதுக்காக
ஆடியன்ஸ் காத்துகிட்டு இருக்காங்க
வலக்கம் போல ஆஞ்ஜியாரையும்
போர்டேனையும் மேடைக்கு
கையையும் கால்களையும்
கட்ட சொல்லுறாங்க.
ஆனா இந்த தடவை போர்டன்
கண்ணலையே. ஒரு கஷ்டமான
முடிச்சை போடப்போறதாக
ஜூலியாகிட்ட கேட்கிறான் .
அதுக்கு ஜூலியாவும் ஒத்துக்கிறாள்.
மறுபடியும் வழக்கம் போல
ஜூலியாவை தண்ணி டாங்கில்
போட்டு லாக் பண்ணி துணியால
மூடுறாங்க. எல்லாரும் ஜூலியா
எப்படி வரப்போகிறாள் என்று
ஆர்வமாக வெய்ட் பண்ணிட்டு
இருக்காங்க .
ஆனா ஜூலியா சொன்ன டைமுக்கு
இன்னும் வெளியே வரல என்று
மேடையில் இருக்கிறவங்களுக்கு
மட்டும் தெறிச்சு போச்சு உடனே
கட்டர் துணியை விலக்கி
பார்க்கிறாரு .
அதிர்ச்சி தண்ணி டாங்குக்குள்ள
ஜூலியா கை கட்ட அவுக்க
முடியாமல் தண்ணில போராடிகிட்டு
இருக்க எல்லாரும் அதிர்ச்சி
ஆகிறங்க. உடனே கட்டர் தண்ணி
டாங்கை உடைக்கிறாரு .
ஆனா அந்த பலமான தண்ணி
ஆனா அந்த பலமான தண்ணி
டாங்க் உடைக்கிறதுக்குள்ளேயே
ஜூலியா தண்ணில மூச்சு திணறி
இறந்து போறாள் .
ஜூலியா இறந்து போன துக்கத்தை
ஆஞ்ஜியாரால் தாங்க முடியலை
அதுக்கப்புறம் ஜூலியாவுடைய
இறுதி சடங்கு நடக்கிற இடத்துக்கு
போர்டன் வாறன் .
ஜூலியா கையில போட்ட முடிச்சு
எந்த முடிச்சு என்று ஆஞ்ஜியர்
போர்டன் கிட்ட கேட்க .
போர்டன் எனக்கு தெரியல என்று
சொல்லிட்டு போயிடுறான் .
அது எப்படி தெரியாம போகும்
அப்படின்னு போர்டன் மேல
ஆஞ்ஜியார் கோவப்படுறான்
போர்டன் எதிரியாத்தான் தெரிவான்.
நாட்கள் கடந்து போகுது.
போர்டன் இப்ப கட்டர் ஆஞ்ஜியார்
கூட இல்லை போர்டன் சாராவை
கல்யாணம் பண்ணிகிட்ட
ஒரு சராசரி வாழ்க்கையை
வாழ்கிறான்.
என்ன தான் வறுமையில்
இருந்தாலும் அவனோட மாஜிக் ட்ரிக்
மேல அவனுக்கு நிறைய நம்பிக்கை
இருக்கு. அதனால தெருவில நின்னு
சில மாஜிக் ட்ரிக்கை பண்ணி
காசு சம்பாதிக்கலாம் என்று
போர்டன் தயார் ஆகுறான்.
அதுக்காக Fallon அப்படிங்கிற
ஒரு உதவியாளரை கூட
வைச்சிருக்கான். அப்போ தன்னோட
மனைவிகிட்ட புல்லட் கேட்ச்ன்னு
ஒரு ட்ரிக்கை பண்ணி காட்டுறான்.
அந்த ட்ரிக்கோட ரகசியத்தையும்
சொல்லுறான். ஆனா அது ஆபத்து
என்று சாராவுக்கு புரிது.
இருந்தாலும் போர்டன் அந்த
ட்ரிக்கை தெருவில் மக்களுக்கு
முன்னாடி பண்ணிக்காட்டுறான் .
அப்போ ட்ரிக்குக்காக புல்லட்டு
இல்லாமல் வைச்சிருக்கிற
துப்பாக்கியை ஆடியன்ஸ் ஒருத்தன்
கிட்ட குடுத்திட்டு. இப்போ துப்பாக்கில
இருந்து வார புல்லட்ட புடிக்கப்போறன்
என்று போர்டன் சொல்லிட்டு திருப்பும்
போது தான் தெரிது துப்பாக்கியை
வைச்சிருக்கிறது மறுவேஷத்தில்
வந்த ஆஞ்ஜியார் என்று ஜூலியாவுக்கு
எந்த முடிச்சை போட்ட என்று
ஆஞ்ஜியார் கேட்கிறான் .
அதுக்கு மறுபடியும் போர்டன்
தெரியலை என்று சொல்லுறான்.
அவ்வளவுதான் ஆஞ்ஜியார் பயங்கர
கோபம் வர யாருக்கும்
தெரியாமல் துப்பாக்கியில் புல்லட்டை
வைச்சு போர்டெனை சுட்டுர்றான்.
ஆனா அந்த நேரத்தில Fallon
ஆஞ்ஜியாரை தள்ளி விட்டதால
போர்டேனோட கை விரல்கள்ல
மட்டும் துப்பாக்கி குண்டு
துளைச்சு கொண்டு போயிடுது.
மறுபடியும் நாட்கள் கடந்து போகுது
போர்டன் அடிபட்ட விரல்களில்
இருந்து மறுபடியும் ரத்தம் வருது.
அத சரி பண்ணக்கூட காசு
இல்லாமல் கஷ்டப்படுறாள் சாரா .
சாராவுக்கும் போர்டெனுக்கு இப்போ
ஜெஸ் என்ற பெண் குழந்தை இருக்கு.
போர்டன் மறுபடியும் ட்ரிக் பண்ண
போறான் என்று முடிவு பண்ணுறான்.
ஆனா சாராவுக்கு அது பிடிக்கலை.
ஒரு நாள் ஆஞ்ஜியாரை
கட்டர் பார்க்கிறார்.
திடிரென்று நாம இரண்டு பேரும்
சேர்ந்தது ஒரு மாஜிக் ஷோ
பண்ணலாம் என்று ஒரு
யோசனை சொல்லுறாரு.
இப்போ ஆஞ்ஜியார் முதல் முறையாக
மேஜிசியனாக மாறுகிறதால்
ஒரு மஜிசியனுக்கான பெயரை
வைச்சுக்க சொல்லி
கட்டர் சொல்லுறாரு .
ஆஞ்ஜியார் தன் மனைவியோட
ஆசைப்படி த கிரேட் டான்டன் என
தன்னோட மேஜிசியன் பெயரை
வைக்கிறான் .
ஆஞ்ஜியாரும் கட்டரும் ஷோ
பண்ணுறதுக்கான வேலையில்
இறங்குறாங்க ஆஞ்ஜியாருக்கு
ஒரு அசிஸ்டண்டையும் கட்டர்
ஏற்பாடு பண்ணுறாரு .
அவ பெரு ஒலிவியா
இதுக்கு அப்புறம் அவங்க
ஷோவ்வில பண்ணப்போற
ட்ரிக் எல்லாத்துக்கும்
பயிற்சி எடுத்துக்கிறாங்க .
அதில முக்கியமான ட்ரிக் ஆனா
பறவையை கூட்டில் இருந்து
மறைய வைக்கிற ட்ரிக்குக்கு கட்டர்.
ஒரு மிஷினை செய்து தாரரு.
இந்த மிஷினை பயன்படுத்துறதால
பறவைகளை கொல்ல வேண்டிய
அவசியம் இங்க ஏற்படாது .
கடைசியா இவங்களுடைய பயிற்சி
கடைசியா இவங்களுடைய பயிற்சி
எல்லாம் பார்த்திட்டு ஒரு
அரங்கத்தோட ஓனர்.
ஆஞ்ஜியாருக்கு ஷோ பண்ணுறதுக்கு
அனுமதி தாரரு ..
வெற்றிகரமாக ஆஞ்ஜியார் ஷோ
நடத்துறான் ஆடியன்ஸ் பார்க்கிறாங்க
அப்போ பறவையை மறைய
வைக்கிற ட்ரிக்கை ஆஞ்ஜியார்
பண்ண தயார் ஆகுறான்.
அப்போ அடியன்சில இருந்து இரண்டு
பேரை மேடைக்கு கூப்பிட்டு
ஆஞ்ஜியார் இப்ப மறைய
வைக்கப்போற பறவையோட கூண்டு
மேல கைகளை வைச்சிக்க
சொல்லுறான் .
ஆனா அந்த இரண்டு அடியன்சில
ஒருத்தன் போர்டன் தான்
அப்படிகிறது ஆஞ்ஜியாருக்கு
அப்ப தான் புரிய வருது.
போர்டன் ஆஞ்ஜியாரோட ட்ரிக்கை
நாசம் பண்ணிட்டு போயிடுறான்.
அதனால இன்னொரு அடியன்ஸா
வந்த ஒரு பெண்ணோட கைகள்
நாசமாகிடுது.
இதனால் அரங்கத்தோட
ஓனர் கோவப்பட்டு ஆஞ்ஜியாரையும்
கட்டரையும் இதுக்கு அப்புறம்
ஷோ பண்ணக்கூடாது என்று
சொல்லி கிளம்பச் சொல்லுறாரு .
கட்டர் வேறு ஒரு அரங்கத்தை
புக் பண்ணலாம். அதுவரைக்கும்
ஆஞ்ஜியார் சோர்த்து போக
வேண்டாமுன்னு சொல்லுறார் .
இந்த நேரத்தில் தான் ஒரு
இந்த நேரத்தில் தான் ஒரு
சைன்ஸ் எஸ்பிஷன்ஸ் மாதிரி
ஒரு இடத்துக்கு ஆஞ்ஜியார் போறான் ,
அப்போ அங்கே நிகோலா டெஸ்லா
அப்படிங்கிற சைன்டிஸ்ஸோட
மிஷினை பார்க்கிறான்.
அதே இடத்தில் போர்டன் இருக்கிறதை
பார்த்த உடனோ ஆஞ்ஜியார்
போர்டன் எதுக்காக இங்கு வந்தான்
என்று தெரிச்சுக்க
அவனை பின்தொடர்கிறான்.
அப்போ போர்டன் சந்தோசமா
அவன் குடும்பத்தோட இருக்கிறதை
பார்த்திட்டு ஆஞ்ஜியார் கோவப்படுறான் .
அது மட்டும் இல்லாமல் போர்டன்
அது மட்டும் இல்லாமல் போர்டன்
ஒரு சின்ன அரங்கத்தை புக் பண்ணி
ஒரு மாஜிக் ஷோ
பண்ணப்போறன்.
என்று ஆஞ்ஜியார் தெரிச்சுக்கிட்டு
அந்த ஷோவ்வை நாசம் பண்ணி
பழியை தீர்த்துக்கலாம் என்று
கிளம்புறான் .
அங்கே அந்த மாஜிக்
ஷோவில போர்டன்
TRANSPOTED MAN
என்று ஒரு ட்ரிக் பண்ணுறதை
ஆஞ்ஜியார் கவனிக்கிறான்.
ஆனா அந்த ட்ரிக்கை பார்க்கும்
போது தான் ஆஞ்ஜியாரோட
மெத்த கவனமும் அந்த ட்ரிக்
மேலேயே போது போர்டன் ஒரு
பந்தை கதவு பக்கம் தூக்கி போட்டுட்டு
உடனுக் உடனே மறு கதவு
பக்கம் வந்து அந்த பந்தை பிடிக்கிறது
தான் ட்ரிக் இந்த ட்ரிக்கை பார்த்த
பிறகு தான் ஆஞ்ஜியார்
பிராமிச்சு போறான்.
வாழ்க்கையில் இதுவரைக்கும்
பார்த்த ட்ரிக்கிலையே இது தான்
சிறந்த ட்ரிக் என்று
சொல்லுறான் ஆஞ்ஜியார்..
தொடரும்......
பி . கு
எனக்கு ரொம்ப பிடிச்சது கிரிஸ்டியன்
பேல் தான் நடிப்பில மிரட்டி இருப்பாரு.
இவர் கிட்ட இருந்து தான் நடிப்பு
எனறால் என்ன என்று கத்துக்கணும்
அந்த கதாபாத்திரமாகவே
வாழ்த்து இருப்பார் ....
ஏற்கனவே நாம் பார்த்திருந்த
ஏற்கனவே நாம் பார்த்திருந்த
படி நோலனின் தயாரிப்பு
நிறுவனமான syncopy தான்
இப்படத்தினை தயாரித்தது .
நோலன் சகோதரர்கள் இணைந்து
திரைக்கதை எழுதியிருப்பார்கள் .
இப்படத்தில் RICKY JAY எனும்
புகழ்பெற்ற மேஜிக் நிபுணர் ,
படத்தில் வரும் மேஜிக்
காட்சிகளின் ட்ரிக்குகள்
மற்றும் காட்சியமைப்புகளை வடிவமைத்துக்கொடுத்துள்ளார் .
பிரஸ்டீஜ் படத்தை உற்றுநோக்கினால் ,
வில்லனும் ஹீரோவும் இல்லாத
ஒரு படமாகத்தான் தெரியும் .
நம் மனதிற்கு யார்
ஹீரோவாக தெரிகிறார்களோ ,
அவரையே நாம்
நினைத்துக்கொள்ள
வேண்டியதுதான் .
முன்னமே கூறியபடி இத்திரைப்படம்
ஒரு பக்கா நான் – லீனியர்
ஸ்கிரிப்டில் உருவாகியிருந்தாலும் ,
எது நிகழ்காலம் எது கடந்த காலம்
என்று உணர்வதற்குள்ளேயே
படம் முடிந்துவிடும் .
இன்னொரு முக்கியமான விஷயம் , நோலன் திரைப்படங்களில் எப்போதுமே கிளைமேக்ஸ் வரும்முன் வரை ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு நம்பிக்கையை உண்டாக்கியிருப்பார் . ஆனால் கிளைமேக்சின் முடிவில் அந்த நம்பிக்கை அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டு புதிதான ஒரு மாற்றத்தை கொடுத்திருப்பார் .
அதாவது 2 மணிநேர படத்தில் , 1.55 மணிநேரம் நம்மை ஒருவழிக்குக்கொண்டுவந்து நம் மனதையும் இதுதான் கதை , இதுதான் முடிவு என நம்பவைத்துவிட்டு பின் கடைசி 5 நிமிடத்தில் வைப்பார் பாருங்கள் ட்விஸ்ட் . அவ்வளவு நேரம் நாம் நம்பியது அனைத்தும் பொய் , இதுதான் இப்படத்தின் முடிவு என நம் நம்பிக்கையை அப்படியே மாற்றிவிடுவார் . இப்படத்திலும் அது அருமையாக அமைந்திருக்கும் . அதுவும் ஒன்று , ரெண்டு ட்விஸ்டுகள் அல்ல ! ஏராளம் .இன்சோம்னியா மற்றும் பேட்மேன் ட்ரையாலஜி நீங்கலாக மற்ற அனைத்து படங்களிலும் இதே வியூகத்தில்தான் படத்தை முடித்திருப்பார் .
CHRISTOPHER PRIEST –ன் THE PRESTIGE நாவலை ,திரைக்கதையாக மாற்ற , கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் நோலன் சகோதரர்கள் உழைத்தார்கள்
இப்படத்தில் ஆஞ்சியராக நடித்திருக்கும் ஜாக்மேன் , ஒரு ஆஸ்திரேலிய நடிகர் . மெமென்டோ படத்தின் GUY PIERCE கூட ஆஸ்திரேலிய நடிகர் தான் . இப்படத்திற்காக பல மேஜிக்களை கற்ற ஜாக்மேன் படத்தின் ஷூட்டிங் முடிந்த பின் தன்னுடைய மகளுக்காக ஒரு ப்ரைவேட் மேஜிக் ஷோவினை நடத்தினார் . ஆனால் அவருடைய மேஜிக்களை அவருடைய மகள் கண்டுபிடித்தது தனி விஷயம் .
படத்திற்காக அந்தளவு இன்வால்வ்மென்ட் ஆனாராம் . இப்படத்தில் வரும் மேஜிக் காட்சிகளுக்காக ஜொனதன் உட்பட அனைவருமே மிக ஆர்வமாக உழைத்தார்கள் . ஆனால் நோலன் மாத்திரம் ஜாலியாய் ஸ்கிரிப்டில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தார்.காரணம் , நோலனுக்கு மேஜிக்கின்பால் தனி ஈடுபாடு . அதன் உண்மைகளை அறிந்தால் , மேஜிக்கின்மீது இருக்கும் ஈடுபாடு சென்றுவிடும் என்பதே இதைப்பற்றிய அவருடைய கருத்து .
இப்படம் நடக்கும் காலம் 19 – ம் நூற்றாண்டு . ஆனால் நோலனுக்கு பீரியட் படம் எடுப்பதில் அவ்வளவாய் ஆர்வம் கிடையாது என்றே கூறினார் . காரணம் பிரஸ்டீஜ் ஒரு சுமாரான பட்ஜெட் உடைய திரைப்படம் . அந்த பட்ஜெட்டைக்கொண்டு 19 – ம் நூற்றாண்டை திரையில் காட்டுவது என்பது கொஞ்சம் கடினமான விஷயம் . அதுவும் இங்கிலாந்து 19 – ம் நூற்றாண்டில் உலகளவில் பெரியதொரு ராஜாங்கமாக உருவாகியிருந்த காலகட்டத்தில் கதை நடக்கிறது என்றால் எப்படியெல்லாம் செலவாகும். படத்தின் கதை நடப்பது இங்கிலாந்து எனினும் படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டது லாஸ் ஏஞ்சலஸில் தான் . படத்திற்காக உருவாக்கப்பட்ட செட்கள் நிஜத்தில் பார்ப்பது போல் அவ்வளவு தத்ரூபமாக இருக்கும். அதனால்தான் இப்படத்தின் கலைக்காக, கலை இயக்குனர்கள் நாதன் க்ரௌளி மற்றும் ஜூலி ஆகியோர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
இப்படத்தில் வரும் பல காட்சிகள் மேஜிக் கலைஞர்களின் வாழ்க்கை , அவர்களின் அர்ப்பணிப்பு , அன்றைய காலகட்டங்களில் இருந்த முதலாளித்துவம்– தொழிலாளித்துவம் போன்ற கருத்துகள் , எடிசனுக்கும் டெஸ்லாவுக்கும் இடைப்பட்ட பிரச்சனைகள் , மேஜிக் ட்ரிக்குகள் என பல விஷயங்களை கண்முன்னே காட்டியிருப்பார் . வழக்கமாக நோலன் சாத்தியமில்லாத விஷயங்களைத்தான் திரையில் கொண்டு வந்து நம்மை திரைக்கதையால் நம்ப வைப்பார் . இந்த படத்திலும் மனிதனையே க்ளோனிங் செய்யும் மெஷின் போன்ற விஷயங்களை கொண்டுவந்து நம்ப வைத்திருப்பார் . இத்தனைக்கும் இப்படத்தில் பல இடங்களில் க்ளூக்களை அள்ளித்தெளித்திருப்பார் .
மேலே பதிவின் தொடக்கத்தில் நான் சொன்ன படத்தின் வசனத்தை மீண்டும் ஒருமுறை படியுங்கள் .
இப்படத்தில் ஒரு சீனாக்கார மேஜிசியன் வருவார் . CHUNG LING SOO எனும் அவர் அக்காலகட்டங்களில் பிரபல மேஜிக் கலைஞர் .அவரின் மேஜிக் டெக்னிக் என்னவென்று வெறும் வார்த்தையால் மட்டும் விளக்கியிருப்பார்கள் . அதுவும் அருமையாக இருக்கும் . இந்த சூ தான் படத்தில் வரும் புல்லட் கேட்ச் மேஜிக்கை முயற்சி செய்து உண்மையில் மரணத்தை தழுவியவர் .
இப்படத்தில் HUGE JACKMEN மற்றும் CHRISTIAN BALE இருவரும் வாழ்ந்தே இருப்பார்கள் . ஜாக்மேனின் வெறி மற்றும் குரோதத்தை வெளிப்படுத்தும் நடிப்பாகட்டும் , போர்டெனின் பழிவாங்கும் முகமாகட்டும் அத்தனையும் அழகாய் வெளிப்படுத்தியிருப்பார்கள் . பார்டனின் மனைவி , ஆஞ்சியரின் மனைவி , ஆஞ்சியர் மற்றும் பார்டன் இருவரின் காதலி என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கார்கள் . வழக்கம்போல மைக்கேல் கைன் கட்டராக வந்து நம் மனதை கொள்ளை கொள்கிறார் . படத்தில் டெஸ்லாவாக வரும் டேவிட் பௌவி இசையமைப்பாளர் , நடிகர் , தயாரிப்பாளர் என பன்முகமுடையவர் . அவரிடம் கால்ஷிட் வாங்குவதுதான் நோலனுக்கு பெரும்பாடாய் இருந்ததாம் . அவருடன் நடிக்கையில் ஜாக்மேன் கூட பதட்டத்தில் பல டேக்குகள் வாங்கியிருந்தாராம். இரண்டுமுறை கிராமி விருதுகள் வென்றவர் என்பது கூடுதல் செய்தி .
இவரின் உதவியாளராக வரும் ஆன்டி செர்கிஸ்தான் , டான் ஆஃப் தி ஏப்ஸ் படத்தில் வரும் சீசர் என்றால் நம்பமுடிகிறதா ? மேலும் இத்திரைப்படம் நியூ மார்க்கெட் பிலிம்ஸால் இனைந்து தயாரிக்கப்பட்டது . அந்த தயாரிப்பு நிறுவனம் தான் நோலனுக்கு முதலில் மெமென்டோ வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது . டேவிட் ஜூலியன் இசை படத்தை அழகாய் நகர்த்திச்செல்லும் . 40 மில்லியனில் தயாரான இத்திரைப்படம் , 100 மில்லியன் வசூலை அள்ளியிருந்தாலும் இத்திரைப்படத்திற்கான வசூல் அதுவல்ல என்பது படம் பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாய் தெரியும் . படத்தை பார்க்கத்தொடங்கும்முன் வரும் வசனத்தை கவனமாக கொண்டு படத்தினை பாருங்கள் . ஒரே முறையில் படம் அழகாய் புரியும் . அட ! இவ்வளவு எழுதிவிட்டு அந்த வசனத்தை எழுதாமல் விட்டால் பதிவு முழுமையடையாதல்லவா !

ARE YOU WATCHING CLOSELY ?
ஓகே நண்பர்களே அடுத்த
ஓகே நண்பர்களே அடுத்த
பதிவில சந்திக்கலாம் ....
r .krushanth
r .krushanth
கருத்துகள்