நோலனின் இன்சாம்னியா (Insomnia) 2002


                    INSOMNIA   படத்தின்   கதை




Genres: Drama | Mystery | Thriller

Director: Christopher Nolan

Writers: Hillary Seitz (screenplay)

Color: Color











ஒரு     மாணவி     கொலை      
வழக்கின்    காரணமாக      தன்      
உதவியாளர்     ஒருவருடன்      
அலாஸ்கா      மாகாணம்     வருகிறார்.       


அல்பாசினோ      அவருக்கு       
கடந்தகால      மோசமான      நினைவுகள்       
காரணமாக     குழப்பங்கள்      
மனதின்      ஓரத்தில்     தேங்கி 






கிடக்கின்றன .       
அது      போதாதென்று       
அலாஸ்கா     மாகாணத்தின்       
வானிலை      வேறு      வாட்டியெடுக்கிறது .       
காரணம்      கிட்டத்தட்ட     நாம்      
பொது      அறிவு      
புத்தகத்தில்       படித்திருப்போமே .      
6   மாதம்     இரவு     6    மாதம்    பகல்     
மட்டும்     இருக்கும்     நாடு.     





அதன்      LANGTITUDE     மற்றும்     LAPTITUDE ,      
சூரியனிடமிருந்து      அமைந்திருக்கும்       
இட      அமைப்பு      போன்றவற்றின்      
காரணமாக       துருவப்பகுதிகளில்       
இம்மாதிரியான      காலநிலைகள்       
நிலவும் .      






பூமி     தன்     அச்சில்      
இருந்து    23 ½     டிகிரி      சாய்வாக      
சுற்றுவது     உங்களுக்கு       
தெரிந்திருக்கலாம் .       
இம்   மாதிரி    நிலை      தான்      
ஏறத்தாழ     அலாஸ்கா      
மாகாணத்திலும் .     
அல்  பாசினோ     சென்ற     நேரத்தில்      
அங்கு      24 




மணிநேரமும்        பகல      இருக்கிறது ,     
அவருக்கு      சரியான     படி      
தூக்கம்     அமைவதில்லை .       
இது       ஒரு    புறமிருக்க       
அந்த      மாணவியைக்      
கொன்றவனை      தேடிச்    செல்லும்போது      
ஏற்படும்      குழப்பத்தில்       தன்னுடன்      
வந்த     சக       அதிகாரியைத்       
தவறுதலாக      சுட்டுவிடுகிறார்     
அல்பாசினோ .






சில     காரணங்களால்      தான்      
சுட்டதை      மறைத்து.       
அந்த      கொலைகாரன்      மேலே      
பழியைப்போடுகிறார் .       
ஏற்கனவே     வானிலை      வாட்டியெடுக்க .      
மறுபுறம்   "  தன்      வினை     தன்னைச்     
சுடும்’    என்ற      வள்ளுவரின்       
பழமொழிக்கேற்ப      தான்       
செய்த     கொலையின்       
காரணமாக    மனது     போட்டு     வருத்த ,       
மனிதர்     தன்      தூக்கத்தை       
இழந்து     துக்கத்திற்கு      
இடமளிக்கறார் .       
இது     போதாதென்று       ஒருவன்      
போன்    செய்து ,      
அல்பாசினோ       சக    அதிகாரியை       
சுட்டதை      தான்     பார்த்ததாக      கூற ,







மனிதர்      நிம்மதியின்றி       தவிக்கிறார் .      
அந்த     விட்னசைக்      காண      
சென்றால்      அவர்   தான்      
அந்த     மாணவியைக்     கொலை       
செய்தவர்    என்று       தெரிகிறது .      
அந்த     கொலைகாரன்       
வேறு      யாருமில்லை .      
மறைந்த     முன்னாள்     நடிகர்     
ராபின்    வில்லியம்ஸ் .        
தன்னைக்காட்டி     கொடுக்காமல்       
இருந்தால் .     
தானும்     காட்டி     கொடுக்கமாட்டேன்     
என்று       அல்பாசினோவிடம்      
ராபின்    வில்லியம்ஸ்      டீல்   பேச,       
ஏதும்     செய்ய    இயலாமல்      
அல்பாசினோ     தவிக்கிறார் .




முழு     தூக்கத்தையும்      இழந்து     
தத்தளிக்கும்     அல்பாசினோ     
என்ன     செய்தார் ?        
ராபின்      எதற்காக     மாணவியைக்     
கொலை      செய்தார் ?      
கடைசியில்      ராபின்     என்ன     ஆனார் ?       
என்பதனை      படத்தைப்     பார்த்து      
தெரிந்து      கொள்ளுங்கள்.







எனக்கு     அல்பாசினோவை      
ரொம்ப     பிடிக்கும்      நல்ல      
நடிகர்      அவருடைய      படங்களில்      
எனக்கு     ரொம்ப     பிடிச்ச   படம்,      
தி  காட்   பாதர்      இந்த     
படத்தில     அல்பாசினோ      
சூப்பரா      நடிச்சிருப்பார்.







நோலன்       ஏற்கனவே      இரு      
படங்கள்      எடுத்திருக்கிறார்.      
மெமன்டோவைப்       பற்றி      
ஸ்பில்பெர்க்    தான்      செல்லும்       
இடத்தில்     எல்லாம்    மெமன்டோ      
படத்தை       பற்றி    சொல்லி       
இருக்கிறார் .      
அதாவது       நான்      பார்த்த      
படங்களிலேயே     பெஸ்ட்     படம்     
என்றால்     இது      தான்      
என்று     சொல்லி     இருக்கிறார் .      
அப்படி     அவர்     உதவி      செய்தும்





படம்    50    
மில்லியனுக்கும்    
குறைவுதான்.




Following     படத்திற்கு     முன் ,      
நோலன்     இதே     வார்னர்     பிரதர்சில்     
படம்    இயக்க    ஏறி     இறங்கினார்.     
சில    காரணங்களால்     அவர்     
இயக்குநராக      முடியாமல்     போனது .     
ஒரு     கட்டத்தில் ,    WB – ல்       
இருந்து     வந்த     ஒரு      
அழைப்பின்      பேரில்    சென்றார் .      
அங்கு      அவருக்கு    திரைக்கதை       
ஆசிரியர்      பணி     கிடைத்தது .      
அது     நார்வே     நாட்டில்      
வெளியாகி      ‘ஹிட்டடித்த      
ஒரு    படத்தின்     ரீமேக் .






அந்த     படத்தின்     திரைக்கதை      
ஆசிரியராக      நோலன்      
அமர்த்தப்பட     ஹிலாரி      
என்பவர்      படத்தின்      இயக்குநராக     
முடிவு      செய்யப்பட்டார் .       
வழக்கம்போல்     நோலனின்      
நேரமோ    என்னவோ ,      
அந்த     ப்ராஜக்டில்     
இருந்து      
வெளியேறிவிட்டார்.      
அல்லது      வெளியேற்றப்பட்டார் .      
அதன்பின்      FOLLOWING      
எடுக்க     லண்டனில்     
அலைந்தது      எடுத்து ,     
சான்பிரான்சிஸ்கோவில்       
அலைந்தது     மெமென்டோ      
ப்ராஜக்ட்     என    தன்      
திறமையை      அமெரிக்கா      
மற்றும்     லண்டனில்      
பரப்பவிட்டிருந்தார்      நோலன் .








என்ன     தான்     இருந்தாலும் ,     
இவரின்      திறமையை      
வெளிக்கொணரும்      பெரிய




அளவிலான      படங்கள்      
தயாரிக்க     யாருமில்லை     
என்றே     கூறலாம் .      
அப்போது       தன்னுடைய      
தயாரிப்பில்     இருக்கும்     
படத்தினை     இயக்கித்தருமாறு         
வந்தது     W.B .     
அந்த     படம்    வேறெதுவுமில்லை ,     
நோலன்      முதலில்      திரைக்கதை      
ஆசிரியராக      அமர்த்தபட்ட      படமான      
அதே      'நார்வே’      ரீமேக்     தான் .







அந்த    படம்   தான்     INSOMNIA .     
இப்போது      ஒரு     சிறு    மாற்றம்     
படத்தின்     இயக்குநர்     நோலன்     
என்று      முடிவானது    போல் ,      
ஹிலாரி     இப்படத்திற்காக     
உருவாக்கியிருந்த       
திரைக்கதையையே பயன்படுத்தியாகவேண்டும்      
என்று     கட்டாயத்தில்     நோலன்      
இருந்தார் .      
பின்     அந்த     திரைக்கதையை      
படித்து      முடித்து ,       
ஒ.கே     சொல்லிவிட்டு       
லொகேசன்      பார்க்க      கிளம்பிவிட்டார் .







இந்த      படத்தில்      மிக      
முக்கியமான     விஷயம்      
ஒளிப்பதிவு      நாம்     ஒளிப்பதிவாளர்      
WALLEY      பற்றி    சென்ற        
மெமென்டோ      பதிவில்     
பார்த்தோம் .       
இப்படத்தில்     WALLEY தன்     
திறமை      முழுமையும்     
அட்டகாசமாக       
வெளிப்படுத்தியிருப்பார் .      
முதல்     காட்சியில்      வரும்     
ப்ளைட்     பறக்கும்      காட்சியும் ,      
கீழே    அவ்விடத்தின்      இட        
அமைப்பையும்       
காட்சிப்படுத்தியிருக்கும்      விதமும்     
அதி     அற்புதமாக      எடுத்திருப்பார் .      
ராபினைத்துரத்தி      அல்பாசினோ    
துரத்தி       செல்லும்போது ,      
அந்த     ஆற்றின்      
மரக்குவியல்களும்    ஆற்றின்     
வேகமும்     காட்சிப்படுத்தியிருக்கும்     
அழகு    என    படத்தில்      விஷுவல்      
பட்டாசு      கிளப்பியிருப்பார் .






அடுத்து      நடிகர்     தேர்வு .        
நோலன்    முந்தைய      இருபடங்களிலும்       
தேர்ந்தெடுத்த       நடிகர்களை       
பயன்படுத்தவில்லை .          
காரணம்     பட்ஜெட்     மற்றும்        
கால்ஷிட்      பிரச்சனைகள்        
நோலனுக்கு     மாபெரும்        
நடிகர்களுடன்       பயணிக்கவேண்டும்        
என்ற       ஆர்வம்      அதிகம் .        
ஆனால்      அதற்கான      வாய்ப்பு        
இன்சோம்னியா      படத்தில்      
மாத்திரமே      சாத்தியமாயிற்று .







மெமன்டோ      படத்தில்    கூட     
CARRIE  ANNE  MOSE –      தவிர      
மற்ற     அனைவரும்     
டிவி      நடிகர்களே !       
இப்படத்தின்       நடிகர்      
தேர்வுகளைப்பொறுத்தவரை ,       
நோலன்     மனதில்       
அல்பாசினோவும் ,     ராபின்   வில்லியம்சும்        
உடனுக்குடனே      திரைக்கதையைப்       
படிக்கும்       போதே      வந்தனராம் .







அடித்து     பிடித்து      கால்ஷிட்      
வாங்கி     ஷூட்டிங்கை       நடத்தினார்       
நோலன் .      
மெமன்டோ     படத்தின்     பட்ஜெட்      
என்றால்    05   மில்லியன்        
மாத்திரமே !        
ஆனால்      இன்சோம்னியா      
படத்தின்     பட்ஜெட்      ஏறத்தாழ     
50   மில்லியன்.      
அதில்     கிட்டத்தட்ட      
பாதிக்குமேல்      நடிகர்களின்       
சம்பளத்திற்கே     சென்றது .       
காரணம்      நோலன்      ஒரு       
படத்தினை       எடுக்கும்போது       
எந்தளவு       மிச்சப்படுத்தமுடியுமோ       
அந்த      அளவு    பணத்தை       
மிச்சப்படுத்த     தான்     பார்ப்பார் .







தேவையில்லாத      விஷுவல்        
எபெக்ட் ,   CG        
போன்றவையெல்லாம்      
தவிர்த்துவிடுவார் .      
மேலும்     நோலன்     முதல்       
முதலாக       SECOND   UNIT      
வைத்து       படமாக்கிய       
படம்     இதுதான் .        
இபடத்திற்கு    முன்     இயக்கிய       
இரண்டு        படங்களிலும் ,    SECOND  UNIT       
இல்லாமலே       இயக்கியிருப்பார் .







இப்படத்தின்      மீது      வைக்கப்படும்       
அதிமுக்கியமான      குற்றச்சாட்டு      
என்னவெனில்       திரைக்கதை .      
இப்படத்தின்      திரைக்கதையை      
நோலனே      எழுதியிருந்தால்      
படம்     அட்டகாசமாக       
இருந்திருக்கும்     என்று     பரவலான       
கருத்து      உள்ளது .      



   
இந்த     படம்     ஒரு      
க்ரைம்     த்ரில்லர்     வகையறாவாக        
இருந்தாலும்     பரபரவென்று       
நகரும்படியாக      இருக்காது .








மெமென்டோ       படத்தில்      
நோலன்     என்ன     செய்தாரோ       
அதையே      இப்படத்திலும்       
செய்திருப்பார் .       
மெமென்டோவில்     10    நிமிடத்தில்      
மறக்கும்      ஹீரோவின்        
மனநிலையை      நமக்குக்காட்ட        
நான்   லீனியர்     தேவைப்பட்டது .       
ஆனால்     இங்கோ    தூக்கமின்றி       
மனப்பிரச்சனைகளால்     
தவிக்கும்       ஒருவனின்       
மனநிலையை      
காட்டியாகவேண்டிய         
கட்டாயத்தில்     நோலன்        
இருக்கிறார் .







ஒருவேளை       நோலனின்       
ஸ்பெசலான        நான்   லீனியரில்      
எடுத்திருந்தால் ,         
சத்தியமாக      இப்படம்      போட்ட        
பணத்தில்       பாதியைக்கூட       
எடுத்திருக்கமுடியாது       
என்பதே      உண்மை .      
காரணம்       என்னவெனில்     
இதன்      கான்செப்ட்      முழுக்க      
முழுக்க     ஒருவனின்      மனதினுள்        
எழும்     குழப்பங்கள்     மற்றும்       
பிரச்சனைகளால்       தூக்கமின்மை   நோய்      
ஏற்பட்டு      எப்படி      
பாதிக்கப்படுகிறான்      என்பதே !      
இந்த     கான்செப்டில்     
கொத்துபரோட்டோ      போல்          
நான்    லீனியர்      திரைக்கதை      
எழுதியிருந்தால்       கண்டிப்பாக       இப்படம்       
பார்வையாளர்களுக்கு      
விளங்கியிருக்காது .






அடுத்து      இப்படத்தின்      மூலம்     
நோலனிடம்      திரைக்கதை      
மாத்திரமே      ஸ்பெசல் ,       
அரைகுறையான       டைரக்சன்        
கற்றுக்கொண்டு      
திரைக்கதையால்      காலத்தைத்        
தள்ளிக்கொண்டிருக்கிறார்.       
என்று      கூறுபவர்களின்       
செவுனியை     சேர்த்து      
அடித்தாற்போல்     தன்னை      
நிருபித்திருப்பார்     நோலன் .





நோலனுடைய       மற்ற     
படங்களில்      திரைக்கதை     
மாபெரும்      கட்டுமானமாக      
இருக்கும்     பட்சத்தில் ,        
டைரக்சன்     திறமை     
முழுமையாக       
வெளிக்கொணரமுடியாத     
நிலையில்     இருக்கும் .       
ஆனால் ,      இப்படத்தில்     சாதாரண        
திரைக்கதையைக்     கொண்டு ,          
மிகச்சிறப்பான      டைரக்சனை      
நோலன்      வெளிப்படுத்தியிருப்பார் .      
நோலன்    படங்களை       உற்று         
நோக்கினால் ,      படத்தில்      வரும்       
பாத்திரம்      யாரையாவது        
பற்றி      கூறினால் ,      
அவர்களின்      காட்சி      ஓரிரு      
நொடிகள்      வந்து       செல்லும் .        
எடுத்துக்காட்டாக       மெமென்டோ      
படத்தில்      தன்     மனைவியைப்பற்றி     
GUY   PIERCE       சொல்லுமிடங்கள் ,     
TEDDY யாக     வருபவர்      LENNY      
பற்றி     கூறும்      காட்சிகளை         
உற்றுநோக்கினால்     தெரியும் .       
அதே      போன்று       இப்படத்திலும்      
நோலன்     டச் ,     
அமைத்திருப்பார்.







இப்படம்     முடிந்தபின்      நோலன் ,      
பேட்மேன்       பாகங்களை      
எடுக்க     ஆரம்பித்தார் .        
அந்நேரத்தில்       ஒரு      பத்திரிக்கையில்        
பேட்டி      கொடுத்திருந்த       
ராபின்    வில்லியம்ஸ் ,     
நோலனிடம்       பேட்மேன்      படங்களில்      
நடிக்க     வாய்ப்புத்தாருங்கள்      
என்று       வெளிப்படையாகவே         
கேட்டிருக்கிறார் .






இத்தனைக்கும்       ஏற்கனவே       
இருமுறை    பேட்மேன்       படங்களில்       
(  நோலனுக்கு    முன்     
இயக்கியவர்களின்      படங்களில்  )       
ஜோக்கராகவும் ,      ரிட்டிலராகவும்      
வாய்ப்பு       வந்தபோது       
மறுத்தவர் ,       
நோலனின்       இயக்கத்திற்காக      
தானே      வேண்டிகேட்டார் .      
இன்சோம்னியா –      தூக்கமின்மையால்     
வரும்      நோய் .       
இது       எதனால்     வருகிறது ,        
என்னென்ன      பிரச்சனைகள்       
இதனால்      வரும் ,       
இந்நோய்      வந்தவன்      
என்ன     ஆவான்.          
என்பதை      முடிந்தவரை     சிறப்பாக       
நோலன்      காட்சிபடுத்தியிருப்பார்.








இன்சோம்னியா      படம்     தான்       
நோலனின்      திரைப்   பயணத்தை      
முற்றிலும்      மாற்றி         
ஹாலிவுட்டின்      ப்ளாக்பஸ்டர்       
வட்டத்திற்கு       இழுத்துச்சென்றது .     
இதன்பின்     W.B     உடன்     இணைந்து       
நோலன்      இயக்கிய       படங்கள்       
அனைத்தும்      உலகளவில்       மாபெரும்        
ஹிட்     படங்கள்    தான் .       
இப்படத்தின்       வெற்றி      கொடுத்த        
தைரியத்தில்      அடுத்த      தலைவர்       
இயக்கிய       திரைப்படம்       உலகளவிற்கு       
இவ்வளவு      பெரிய       தாக்கத்தை        
ஏற்படுத்தும்      என்று      யாருமே        
எதிர்பார்த்திருக்க      மாட்டார்கள் .       
அது      வேறென்ன     BATMAN      தான் .













அடுத்த         பதிவில்       சந்திப்போம் .....












கருத்துகள்

பிரபலமான இடுகைகள்