இரும்பு மனிதன் புரூஸ் லீ

’ Empty your mind, be formless. Shapeless, like water. If you put water into a cup, it becomes the cup. You put water into a bottle and it becomes the bottle. You put it in a teapot it becomes the teapot. Now, water can flow or it can crash ….. Be water my friend’ – Bruce Lee


ப்ரூஸ் லீ என்ற மகத்தான, துடிப்பான, வசீகரமான, மிகவும் தெளிவான
சிந்தனையை உடைய நபரை இந்த உலகம் அதிகமாகக் கண்டதில்லை. லீ ஜுன் ஃபான் என்ற இயற்பெயரோடு, சான் ஃப்ரான்ஸிஸ்கோவின் சைனாடௌனில் 1940 நவம்பர் 27ல் பிறந்த ப்ரூஸ் லீ, தனது 32ம் வயதில் ஜூலை 20, 1973யிலேயே மறைந்துவிட்டாலும், சைனாவிலும் பிற நாடுகளிலும் இன்னும் அவருக்கு இருக்கும் பிரம்மாண்டமான இளைஞர் கூட்டம் இதனாலேயே சாத்தியம்.





இவரது தந்தை Lee Hoi - Chuen, ஒரு நடிகர். தாய் பெயர் Grace.தந்தை நடிகர் என்பதால் லீக்கும் சிறுயவயதிலேயே நடிப்பதற்கு வாய்ப்புக்கிடைத்தது.சிறியவயதில் 12 வயதிற்குள் 20 படங்கள் வரை நடித்துள்ளார்.சில தொலைக்காட்சித்தொடர்களிலும் நடித்துள்ளார்.1971இல் இவரது முதலாவது படம் வெளிவந்தது பிக் பாஸ் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே நடக்கும் போர் தொடர்பான கதை.ஊரில் இருந்து வேலைக்கு வரும் புரூஸ் லீ வேலை தளத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்கின்றார்.

புரூஸ்லீயின் குடும்பம் லீக்கு பெண்ணின் பெயரைத்தான் சூட்டினார்கள்.அவர்கள் Sai Fon/Little Phoenix என அழைத்தார்கள்.லீ பிறப்பதற்கு முன்னர் பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டது இதனால் லீயின் பெற்றோர் தமது குடும்பத்தில் ஆண்கள் பிறத்தலை கடவுள் அனுமதிக்கவில்லை என நம்பினார்கள் இதனால் லீ ஆணாகப்பிறந்தபோதிலும் பெண்ணின் பெயரையே சூட்டினார்கள்.
புரூஸ் என்ற பெயர் San Francisco வில் உள்ள Jackson Street Hospital இல் பணிபுரிந்த நேர்ஸினால் சூட்டப்பட்டது லீ அங்குதான் பிறந்தார்.அமெரிக்க பெயரைச்சூட்டினால் பேர்த் சேர்ட்டிபிக்கெட்டில் வேறு கோளாறுகள் வராது என்பதன் காரணமாகவே இப்பெயரைச்சூட்டினார்.புரூஸ்லி உண்மையில் சைனாவை சேர்ந்தவரும் அல்ல.இவரது தாயின் தகப்பனார் ஜேர்மனியை சேர்ந்தவர்.
லீ தனது ஆரம்ப கல்வியை முடித்ததும் ஆங்கிலத்தில் பாடங்களைக்கற்பிக்கும் La Salle College இல் சேர்க்கப்பட்டார்.ஆனால் அங்கு இவரின் முரட்டுத்தனமான நடவடிக்கை காரணமாக வெளியேற்றப்பட்டார்.லீயின் பெற்றோர் லீயை வேறு பாடசாலைக்கு மாற்றினார்கள் ஆனால் லீ வீதியில் வெட்டிச்சண்டைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
புரூஸ்லீக்கு Wing Chun என்ற தற்காப்புக்கலையை கற்றுக்கொடுத்தவர் Yip Man.புரூஸ் லீயின் குரு ..



ஆரம்ப நாட்கள்
நடிகரான ப்ரூஸ் லீயின் தந்தை லீ ஹோய் சுவென், 1940ல் பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்காக ஹாங்காங்கிலிருந்து யுனைடட் ஸ்டேட்ஸ் வந்திருந்த சமயம்தான் ப்ரூஸ் லீ பிறந்தார். மூன்று மாதங்களிலேயே ஹாங்காங் திரும்பச் சென்றுவிட்டனர் லீயின் பெற்றோர்கள். ஹாங்காங்கில் கௌலூன் பிராந்தியத்தில் லா சாலெ
பள்ளியில் படித்தார் லீ. அப்போதே, சிறுவயதிலேயே தெருச் சண்டைகளில் அவருக்கு மிகுந்த சுவாரஸ்யம் இருந்தது. அவருடன் பள்ளியில் படித்த உள்ளூர் தாதா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை சண்டையில் லீ தோற்கடித்துவிட, அவனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் லீயைப் பிடித்து அடித்தாகவேண்டும் என்று தேடிய சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. லீ படித்த பள்ளியில் அவருக்குப் பாடம் எடுத்த ஹென்றி என்ற ஆசிரியர், Life of Bruce Lee (1994) என்ற ஆவணப்படத்தில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்காலகட்டத்தில் ஹாங்காங்கில் பல உள்ளூர் மாஃபியா குடும்பங்கள் இருந்தன. இவர்கள் அனைவருமே மார்ஷல் ஆர்ட்ஸிலேயே கவனம் செலுத்தினர். எனவே தெருச்சண்டைகள் அங்கே அடிக்கடி நிகழ்வது சாதாரண நிகழ்வு.

சில தெருச்சண்டைகளில் வெற்றி; சிலவற்றில் தோல்வி என்ற நிலையில், தனது பதிநாலாவது வயதில் ஒரு பள்ளிச் சண்டையில் தோற்கிறார் ப்ரூஸ் லீ. அந்தத் தோல்வி அவரை பாதிக்கிறது. எப்படித் தோற்றோம் என்று தன்னைத்தானே ஆழமாகக் கேட்டுக்கொள்கிறார். உடல், தனது மனம் சொன்னபடிக் கேட்கவில்லை என்பது அவருக்குப் புரிகிறது. இஷ்டப்படி உடலை ஆட்டுவிப்பதில் பயிற்சி வேண்டும் என்று முடிவு செய்கிறார். மார்ஷல் ஆர்ட்ஸில் அவருக்கு இருந்த ஈடுபாட்டினால், லீயின் தந்தை, அந்தப் பிராந்தியத்தில் இருந்த புகழ்பெற்ற மார்ஷல்
ஆர்ட்ஸ் பயிற்சியாளர் ஒருவரிடம், லீயின் பதினாறாவது வயதில் அவரைச் சேர்க்கிறார். அவர்தான் இன்றும் புகழோடு விளங்கும் யிப் மேன்
Yip Man.புரூஸ் லீயின் குரு
(Ip Man). விங் சுன் (Wing Chun) என்பது சீனாவின் பழமையான மார்ஷல் ஆர்ட்ஸ்களில் ஒன்று. ஆயுதங்கள் இன்றி, அருகாமையில் நின்றுகொண்டு இருவர் சண்டையிடும்போது, கைகளையும் கால்களையும் உடலையும் பயன்படுத்தி எப்படி அந்தச் சண்டையில் வெல்வது என்பதே விங் சுன்னின் அடிப்படை. மூங்கில் எப்படி வளைந்து கொடுத்துக்கொண்டே மிகவும் சக்திவாய்ந்ததாக விளங்குகிறதோ அப்படி விங் சுன் பயின்ற நபரும் எதிராளியின் தாக்குதலை வளைந்து கொடுக்கும் உடலால் சமாளித்துக்கொண்டே, பலம் வாய்ந்த தாக்குதல்களால் எதிராளியை நிலைகுலையவைப்பார் (இந்தத் தத்துவத்தை ப்ரூஸ் லீ இயக்கிய அவரது இறுதிப் படமான Game of Death படத்தில் வசனமாகவே பேசுவார். இப்படம் முடிக்கப்படுவதற்குள்ளாகவே லீ இறந்துவிட்டார்).
இந்த விங் சுன்னில் யிப் மேன் அசைக்கமுடியாத மாஸ்டராக இருந்தவர். லீயை விங் சுன்னில் முறைப்படி பயிற்றுவித்தார். பிற மார்ஷல் ஆர்ட்ஸ் கலைகளைவிடவும் ப்ரூஸ் லீக்கு விங் சுன்னே பிடித்திருந்தது. ஏனெனில், பிற சண்டை முறைகளில், ஏராளமான, படிப்படியான பல ஸ்டெப்கள் இருந்தன. எதிராளியோடு பொருதும்போதும் இவற்றை ஒவ்வொன்றாக முறைப்படி செய்தே மோதவேண்டும். நிஜத்தில் இப்படி பரதநாட்டியம் ஆடிக்கொண்டு இருந்தால், எதிராளி நமது தலையை மிக எளிதாகக் கொய்துவிடுவான் என்பதால், நேரடியாக எதிராளியைக் குறைந்த ஸ்டெப்களில் நிலைகுலையவைக்கும் விங் சுன்னே ப்ரூஸ் லீயின் விருப்பத்திற்குறிய பாடமாக இருந்தது. இந்தக் கருத்தில் இறுதிவரை ப்ரூஸ் லீ உறுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றிக் கட்டுரையில் அந்தந்த இடங்கள் வரும்போது பார்க்கலாம்.

முறையாகப் பயிற்சி ப்எறும்போது ப்ரூஸ் லீயின் சண்டையிடும் திறமை
நன்றாக வளர்ந்தது. இதனால், அவரது சண்டைகளில் வன்முறை இன்னும் அதிகமானது. பள்ளியில் இது ஒரு பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக வளர்ந்து, இன்னொருமுறை சண்டையில் ப்ரூஸ் லீ ஈடுபட்டால், அவர் கைதாகவேண்டிவரும் என்று போலீஸ் அவரை எச்சரிக்கும் அளவு சென்றுவிட்டது. இதனால், அவரது தந்தை, ப்ரூஸ் லீக்கு அவரது சுற்றுப்புறத்தில் ஒரு சிறிய மாறுதலை அறிமுகப்படுத்தும் பொருட்டு, யுனைடட் ஸ்டேட்ஸுக்கு லீயை அனுப்புகிறார். அது ஏப்ரல் 1959. ப்ரூஸ் லியின் பதினெட்டாவது வயது. அந்தக் கப்பல் பயணத்தில் தந்தை வெறும் 100 டாலர்கள் மட்டும் கொடுத்திருந்ததால், ஹாங்காங்கில் இருக்கும்போதே கற்றுக்கொண்ட நடனத்தைக் கப்பலில் முதல் வகுப்புப் பிரயாணிகளுக்குக் கற்றுக்கொடுத்துக் கொஞ்சம் பணம் சம்பாதித்தார் லீ. நடனத்திலும் ப்ரூஸ் லீக்குப் பெரிய ஈடுபாடு இருந்தது.
சியாட்டிலில் தனது பள்ளி மேற்படிப்பைப் படித்தார் லீ. பின்னர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நாடகங்கள் பற்றிய படிப்பில் படித்துத் தேர்ந்தார். அப்போதே தத்துவங்கள் பற்றியும் அங்கேயே படித்தார். பிந்நாட்களில் ஒரு குறிப்பிட்ட சமயம் வரும்போது கிட்டத்தட்ட ஆறு மாதங்கள், வேறு எந்தச் செயலிலும் ஈடுபடாமல் தத்துவங்களையே இன்னும் ஆழமாக ப்ரூஸ் லீ படிக்கப்போவதற்கு ஆரம்பப் புள்ளி இது எனலாம். அந்தச் சம்பவம் வருகையில் அதனைக் கட்டுரையில் கவனிக்கலாம்.

இதே காலகட்டத்தில், கையில் பணம் மிகக் குறைவாக இருந்த ப்ரூஸ் லீயிடம், அவரது நண்பர்கள், அவர் கற்றிருந்த கலையைப் பிறருக்குச் சொல்லிக்கொடுத்து ஏன் கொஞ்சம் பணம் சம்பாதிக்கக்கூடாது என்று கேட்க, சுயமாக ஏதேனும் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருந்த ப்ரூஸ் லீ, யுனைடட் ஸ்டேட்ஸில் தனது முதல் பயிற்சிப் பள்ளியைத் துவங்குகிறார். தரைத்தளத்தில் ஒரே அறை. மாடியிலும் ஒரே அறை என்று மிகச்சிறிய அமைப்பில் உருவான பயிற்சிப் பள்ளி அது. ’ஜுன் ஃபான் கங்ஃபூ இன்ஸ்டிட்யூட்’ என்ற பெயரில் சியாட்டிலில், 1959ல் இந்தப் பள்ளி உருவானது. ப்ரூஸ் லீயின் பதினெட்டாவது வயது அது.
இதன்பின்னர், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்தார் லீ. அச்சமயத்தில், அந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகத்திலேயே இன்னொரு மார்ஷல் ஆர்ட்ஸ் பயிற்சிக் கூடத்தையும் துவங்கினார். அச்சமயத்தில், சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு லீ சென்று, அவரது கலையை டெமான்ஸ்ட்ரேட் செய்து காட்டுவது வழக்கம். அப்படி ஒரு நாளில்தான் லிண்டா எமெரி என்ற பதினேழு வயதுப் பெண்ணைப் பார்க்கிறார். உடனடியாகக் காதல். இந்த லிண்டாதான் பின்னர் ப்ரூஸ் லீயின் மனைவியாக ஆனார். இவர்களுக்கு ப்ராண்டன் லீ & ஷான்னன் லீ ஆகிய குழந்தைகள் பிறந்தன.
பயிற்சிகளில் ப்ரூஸ் லீ, பலமுறை ஒரு பெரிய பொம்மையை வைத்துக்கொண்டே சண்டை சொல்லிக்கொடுப்பது வழக்கம். மரத்தால் ஆன தலை மற்றும் உடல், இரும்புக் குழாய்களால் ஆன கால் பகுதி,
இன்னொரு இரும்புக் குழாய் மற்றும் ஸ்ப்ரிங்குகளால் இணைக்கப்பட்ட முதுகுப்புறம் என்று மிகவும் வலுவான பொம்மை இது. இதன் தலை, உடல் மற்றும் கால் பகுதிகளில் பலமுறை தனது வலுவான கைகள் மற்றும் கால்களால் தாக்கியே, விங் சுன் கலையை மாணவர்களுக்கு லீ சொல்லிக்கொடுத்தார்.
லாங் பீச்- கலிஃபோர்னியாவில் மார்ஷல் ஆர்ட்ஸ் போட்டிகள் அடிக்கடி நடக்கும். அப்படிப்பட்ட போட்டிகளில் இந்தச் சமயங்களில்தான் ப்ரூஸ் லீ விருந்தினராகச் சென்று, பல மார்ஷல் ஆர்ட் சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார் (இந்த வீடியோக்கள் இன்றும் இணையத்தில் உள்ளன). இரண்டே விரல்களை வைத்துக்கொண்டு தண்டால் எடுப்பது, அவரது மிகப்பிரபலமான ‘One Inch Punch’  எதிராளியின் மார்புக்கு ஒரே ஒரு இன்ச் முன்னர் தனது கையை வைத்துக்கொண்டு, வேறு எந்த பாகத்தையும் அசைக்காமல், இந்த முஷ்டியை வைத்துக்கொண்டே ஒரு ‘பஞ்ச்’ மூலம் எதிராளியை நிலைகுலையவைப்பதே அவரது ஒன் இஞ்ச் பஞ்ச். இதை அவர் செய்யும்போதெல்லாம், எதிராளிகள் அந்தத் தாக்குதலின் தாக்கத்தைத் தாங்க இயலாமல் பின்னால் நிலைகுலைந்து விழுவது வழக்கம். அந்த வலி, பல நாட்கள் இருந்துகொண்டே இருக்கும் என்பது அவர்களின் கூற்று.
ப்ரூஸ் லீ அவரது பயிற்சிப் பள்ளிகளில் பலதரப்பட்ட மாணவர்களையும் சேர்த்துக்கொண்டு சைனாவின் பாரம்பரியம் மிக்க மார்ஷல் ஆர்ட்ஸ்களில் ஒன்றான விங் சுன்னை சொல்லிக்கொடுப்பது சைனாவைச் சேர்ந்த பிற மார்ஷல் ஆர்ட்ஸ் பயிற்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை. முன்னரேயே, யிப் மேனிடம் ப்ரூஸ் லீ பயின்றபோதே, அவரது தாய் பாரம்பரியமான சீன வம்சாவளியைச் சேர்ந்தவராக இல்லாததால் அவருடன் பயின்ற பிற மாணவர்கள் ப்ரூஸ் லீயைத் தீண்டத்தகாதவரைப் போல் நடத்தியிருந்தது வரலாறு. இப்போதும் அவர் விங் சுன் பயிற்றுவிப்பதற்கு யுனைடட் ஸ்டேட்ஸில் இருந்த பிற சீனப் பயிற்சியாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
1964ல், ஓக்லாண்டில், வோங் ஜாக் மேன் என்ற மார்ஷல் ஆர்ட்ஸை நன்கு படித்த நபருடன் ப்ரூஸ் லீ பொருதினார். இந்தப் போட்டியில் ப்ரூஸ் லீ தோற்றால் அவர் இனிமேல் சைனாவைச் சேராத பிற நாட்டவருக்கு விங் சுன் சொல்லிக்கொடுக்கக்கூடாது என்பதே ஒரே நிபந்தனை. இந்தப் போட்டியின்போது உடனிருந்தவர் ப்ரூஸ் லீயின் மனைவி லிண்டா. The Life of Bruce Lee (1994) என்ற ஆவணப் படத்தில் அவர் இந்தப் போட்டியைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். ‘போட்டி நடந்தது வெறும் முன்றே நிமிடங்கள்தான். அந்த இடத்தைச் சுற்றிச்சுற்றி ஜாக் மேன் பயத்தில் ஓட, அவர் மீது பாய்ந்து, அவரைத் தரையில் வீழ்த்தி, ‘தோல்வியை ஒப்புக்கொள்கிறாயா இல்லையா?’ என்று ப்ரூஸ் லீ உறுமினார். உடனடியாகத் தனது தோல்வியை ஜாக் மேன் ஒத்துக்கொண்டார்’ என்பது அவரது கூற்று. இதனால் பிற சீனப் போட்டியாளர்களின் அதிருப்தி (ப்ரூஸ் லீ மீது இருந்த பயத்தால்) முடிவுக்கு வந்தது.

Jeet Kune Do – The Way of the Intercepting Fist
கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் உள்ளும் புறமும் விங் சுன்னைக் கற்றுத் தேர்ந்திருந்ததால், ப்ரூஸ் லீ அந்தக் கலையில் விற்பன்னராக இருந்தது ஆச்சரியம் அல்ல. ஆனால் அக்கலையைத் தனது வாழ்க்கையில் பெற்றிருந்த அனுபவங்களால் செப்பனிட்டு மேலும் உறுதியாகவும் வேகமானதாகவும் மாற்றினார் ப்ரூஸ் லீ. அதுதான் அவரது சிறப்பியல்பு. எதிராளியின் மீது தாக்குதலை உடனடியாக நிகழ்த்த முடியுமா முடியாதா என்ற ஒரே விஷயமே அவரது தேடுதலுக்கு மூலகாரணமாக இருந்தது. அப்படி விரைவில் பலவிதமான தாக்குதல்களை எதிராளியின் மீது தொடுத்தலே அவர் சொல்லிக்கொடுத்த விங் சுன்னில் பிரதான அம்சமாகவும் இருந்தது.
இதுதான் ஜீத் கூன் டோ (Jeet Kune Do) – ப்ரூஸ் லீ பிரத்யேகமாக உருவாக்கிய மார்ஷல் ஆர்ட்ஸ் முறை. விங் சுன் போன்ற பிற கலைகளை ஆழமாகப் படித்து, அவற்றில் இருக்கும் பிரதான அம்சங்களை எடுத்துக்கொண்டு, தனது புரிதலையும் அனுபவங்களையும் கலந்து ப்ரூஸ் லீ உருவாக்கிய மிக வேகமான, ஆபத்தான, சக்திவாய்ந்த மார்ஷல் ஆர்ட்ஸ் வடிவம். ஜீத் கூன் டோ என்ற பதத்துக்கு, ’இடைமறிக்கும்
கையின் வழி (The way of the intercepting fist)’ என்பது பொருள். கைகளை வைத்துக்கொண்டு விரைவாகப் பலவிதமான சக்திவாய்ந்த தாக்குதல்களைத் தொடுக்கும் முறையாக இதனை ப்ரூஸ் லீ பிரபலப்படுத்தினார்.
ஜீத் கூன் டோவை மிகச்சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், சண்டையிடும் முன்னரே எதிராளியைத் தோற்கடிக்கமுடிந்தால் எப்படி இருக்கும்? இதுதான் ஜீத் கூன் டோ. ‘You can call my style as the art of fighting without fighting’ என்பது அவரது மிகப்பிரபலமான மேற்கோள்களில் ஒன்று. ஆனால் இதை உள்ளது உள்ளபடி புரிந்துகொண்டவர்கள் மிகச்சொற்பமே. இதனால் ஒரு காலகட்டத்தில் தனது வகுப்புகளையே ப்ரூஸ் லீ இழுத்து மூடவேண்டி வந்தது. அதைப் பிறகு பார்க்கலாம்.
பயிற்சி கொடுக்கும்போது, குத்துச்சண்டை க்ளௌஸ்களையும் ஹெல்மெட்களையும் தனது மாணவர்களை அணியச்சொல்வார் ப்ரூஸ் லீ. யுனைடட் ஸ்டேட்ஸில் எந்த மார்ஷல் ஆர்ட்ஸ் பள்ளியும் கண்டிராத வினோதம் இது. காரணம் பிற பள்ளிகளில், நாம் முன்னரே பார்த்ததுபோல, வரிசையான ஸ்டெப்களையே சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தனர். இதனால் எதிராளி ஒரு ஸ்டெப் போடும்போது அதற்கு எசப்பாட்டாக இன்னொரு ஸ்டெப்பை நாம் போடவேண்டும். இப்படிப்பட்ட ஸ்டெப்களில் உள்ள நேர்த்தியை வைத்தே மதிப்பெண்கள் அளித்து, வெற்றியும் தோல்வியும் போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ப்ரூஸ் லீயோ, எந்த ஸ்டெப்பும் நிரந்தரம் இல்லை; எதிராளி மயங்கி விழுவதே நிரந்தரம்; எனவே எதிராளி தோற்கும் வரை கை, கால், வாய் (ஆம்.. எதிராளி நம்மை உடும்புப் பிடி போட்டுப் பிடித்துவிட்டால், சமயத்தில் அவனைக் கடித்தும் கூட அவனை நாம் வெல்லலாம் என்று அடிக்கடி சொல்வார் லீ) முதலிய உறுப்புகளை வைத்துக்கொண்டு, இயல்பான, எந்தத் தூண்டுதலும் இல்லாத spontaneous மூவ்களால் எதிராளியை முறியடிக்கவேண்டும் என்பதையே தனது தாரக மந்திரமாக வைத்திருந்தார். இதனால்தான் குத்துச்சண்டை க்ளௌஸ்களும் ஹெல்மெட்களும் அவரால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. சுருக்கமாக, எதிராளியை மனதளவில் பயமுறுத்துவது.
இதனால் அவரது மாணவர்கள் மிக விரைவில் திறமைசாலிகளாக மாறினர். கூடவே, கராத்தே மற்றும் கங் ஃபூவில் பிரபலமாக விளங்கிய பலரையும் ஜீத் கூன் டோ ஈர்த்தது. யுனைடட் ஸ்டேட்ஸில் நடந்த பல மார்ஷல் ஆர்ட்ஸ் போட்டிகளில் ப்ரூஸ் லீயின் மாணவர்களே இதன்பின் பல வருடங்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
ஜனவரி 1970. புகழின் உச்சத்தில் இருந்தபோது, தனது மூன்று மிக வெற்றிகரமான மார்ஷல் ஆர்ட்ஸ் பள்ளிகளையும் ப்ரூஸ் லீ திடீரென்று மூடிவிடுகிறார். மிகக்குறைந்த மாணவர்களையே அதன்பின் தனிப்பட்ட முறையில் பயிற்றுவிக்க ஆரம்பிக்கிறார். காரணம், மார்ஷல் ஆர்ட்ஸ் என்பவைகளைக் கற்றுக்கொண்டு, தனிப்பட்ட மனிதனாகத் தன்னை உயர்த்திக்கொள்ளும் நோக்கில் மாணவர்கள் இல்லாமல் இருந்ததே. கொஞ்சம் கூடத் தயங்காமல் இந்த முடிவை லீ எடுத்தார்.

வாழ்க்கையை முடக்கிய மரண அடி
சில மாதங்களுக்குப் பின்னர், ப்ரூஸ் லீயின் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனை ஒன்று நிகழ்ந்தது. ஜிம்மில் சரியாக வார்ம் அப் செய்யாமல் எடைகளைத் தூக்கியதால், முதுகின் மிக முக்கியமான ஒரு நரம்பில் ப்ரூஸ் லீக்கு அடிபடுகிறது (4th sacral nerve in the lower back). உடனடியாகவே படுத்த படுக்கையாகிவிடுகிறார் லீ. இனிமேல் லீயால் மார்ஷல் ஆர்ட்ஸ் பயிற்சிகள் எதையும் செய்ய இயலாது என்று மருத்துவர்கள் கைவிரித்துவிடுகின்றனர். வாழ்க்கை முழுதும் முதுகுவலியோடுதான் கழிக்க நேரும் என்றும் சொல்லிவிடுகின்றனர்.
இந்தச் சமயத்தில்தான், கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் படுக்கையை விட்டு எழ இயலாத சூழலில், இயல்பாகவே கல்லூரியில் படித்த தத்துவம் ப்ரூஸ் லீயின் உதவிக்கு வருகிறது. இதுவரை எதைச் செய்தாலும் துடிப்போடும் ஈடுபாட்டோடும் செய்துவந்த லீ, வெறித்தனமாகத் தத்துவம் சார்ந்த புத்தகங்களைப் படிக்க ஆரம்பிக்கிறார். உலகின் அத்தனை முக்கியமான தத்துவங்களையும் முழுமையாகப் படித்துத் தேர்கிறார். தத்துவம் மட்டுமன்றி, உளவியலும் படிக்கிறார். அவரது அத்தனை சக்தியையும் படிப்பதிலேயே செலவிடுகிறார்.
இதனால், ஆறு மாதங்களின் முடிவில் வாழ்க்கை பற்றிய மிகத்தெளிவான புரிதலுக்கு வந்திருந்தார் லீ. இந்த ஆறு மாதங்களில் அவர் படித்த தத்துவஞானிகளிலேயே, இந்தியாவைச் சேர்ந்த ஜே.கிருஷ்ணமூர்த்தியை அவருக்கு மிகவும் பிடித்துப் போகிறது. ’நீயே உனக்கான ஒளியாக இருக்கவேண்டும்; உன்னைப்பற்றிய உண்மையை அறிய, உனக்குள்ளேயே ஆழமாகப் பார்’ என்ற கிருஷ்ணமூர்த்தியின் எளிய – ஆனால் சக்திவாய்ந்த கூற்றுகளில் முழுமையாக ஈடுபடுகிறார் லீ. இந்தக் காலகட்டத்தில் தனது அனுபவங்கள் பற்றி ப்ரூஸ் லீ கைப்பட எழுதிய தொகுதிகள் மொத்தம் ஏழு என்று அவரது மனைவி குறிப்பிட்டிருக்கிறார்.
மிகவும் தெளிந்த மனநிலையை ப்ரூஸ் லீ அடைந்திருந்ததால், ஆறு மாதங்களின் முடிவில் மெல்லப் படுக்கையில் இருந்து எழுந்து, பயிற்சிகள் செய்ய ஆரம்பித்து, ஒரு சில மாதங்களிலேயே முந்தைய நிலையை விடச் சிறந்த, மேம்பட்ட மார்ஷல் ஆர்ட்ஸ் வீரராக மாறினார் லீ.
இந்தக் காலகட்டத்தில்தான், வெற்றி என்பது பலதரப்பட்ட ஸ்டைல்களில் இல்லை; மாறாக, அது ஒவ்வொருவரின் உள்ளேயும் தனிப்பட்ட முறையில் விளங்கும் உண்மையை வெளிக்கொணர்வதில்தான் இருக்கிறது என்று அனுபவபூர்வமாக உணர்ந்தார். இதை அப்போதில் இருந்து பேட்டிகள், புத்தகங்கள் வாலியாக எப்போதும் சொல்லிக்கொண்டே இருந்தார் லீ.
அப்போது அவர் உருவாக்கிய மிகப் பிரபலமான சொற்றொடர்தான் ‘Using no way as way, and having no limitation as Limitation’ என்பது. இதைத் தனது கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த பதக்கத்தின் பின்புறம் பொறித்தே வைத்தார் லீ. இதற்கு என்ன பொருள் என்றால், எந்தச் சூழலிலும், உள்ளுக்குள் முடங்கிப் போய்விடக்கூடாது; மாறாக, அங்கே என்ன இருக்கிறதோ அதனைப் பயன்படுத்தி வெற்றிகாணவேண்டும் என்பதே. Adapt என்பதே இதன் சுருக்கம்.

டிவி மற்றும் திரை அறிமுகங்கள்
இந்தச் சமயத்தில்தான், Green Hornet என்ற தொலைக்காட்சி சீரீஸ் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ப்ரூஸ் லீயைப் பற்றிக் கேள்விப்பட்டு, அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் ப்ரூஸ் லீயை அணுக, ப்ரூஸ் லீயின் நெடுநாளைய கனவு நிகழும் தருணம் அவரை நெருங்கியது. இந்த டிவி சீரீஸில் கதாநாயகனாக இல்லாமல், நாயகனின் side kickஆக ப்ரூஸ் லீ நடித்தார். ஒரே ஒரு சீஸனோடு இந்தத் தொடர் நிராகரிக்கப்பட்டாலும், ப்ரூஸ் லீயின் நடிப்பு சார்ந்த முயற்சிகளுக்கு இதுவே துவக்கமாக அமைந்தது. இதன்பின் க்ரீன் ஹார்னெட்டில் அவரது கதாபாத்திரமான ‘காடோ’ வேடத்திலேயே அப்போதைய பிரபலமான டிவி சீரீஸான பேட்மேனிலும் மூன்று எபிஸோட்கள் நடித்தார் லீ. இதன்பின் இன்னும் மூன்று தொடர்களில் சிறிய வேடங்களில் நடிக்க வாய்ப்புக் கிட்டியது.
ஆனால், என்னதான் முயன்றாலும், ப்ரூஸ் லீ ஹாலிவுட் படங்களில் நடிக்க இயலவில்லை. காரணம், சீன நபர் ஒருவர் ஹாலிவுட் படங்களில் பிரதான வேடங்களில் நடிப்பது அப்போது இருந்த தயாரிப்பாளர்களுக்குப் பிடிக்கவில்லை. இவரால் படம் ஓடுமா? வசூல் கிடைக்குமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. டிவி சீரீஸ்களில் நடிக்கும்போதுதான் ‘Silent Flute’ என்று மார்ஷல் ஆர்ட்ஸ் படம் ஒன்றை எழுதுகிறார் லீ. ஆனால் இப்படம் தயாரிக்கப்படவில்லை. இதன்பின் ‘கங் ஃபூ’ என்ற பெயரில் ஒரு டிவி சீரீஸையும் உருவாக்குகிறார் லீ. ஆனால் அதன் தயாரிப்பாளர்கள், ப்ரூஸ் லீ மீது இருந்த தயக்கத்தால் ப்ரூஸ் லீயை நிராகரித்துவிட்டு, இன்னொரு நடிகரை ஹீரோவாகப் போட (அவர்தான் டேவிட் காரடீன். யுனைடட் ஸ்டேட்ஸின் மற்றொரு பிரபல மார்ஷல் ஆர்ட்ஸ் நடிகர். கில் பில் படத்தில் வில்லன் பில்லாக நடித்தவர்), இனியும் ஹாலிவுட்டில் இருக்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு வருகிறார் லீ. அவரது தாய்நாடான ஹாங்காங் பயணிக்கிறார்.

ஹாங்காங்கில் ப்ரூஸ் லீ
ஹாங்காங்கில் அப்போது எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த மார்ஷல் ஆர்ட்ஸ் படங்கள், பெரும்பாலும் சரித்திரப் பின்னணியையே கொண்டிருந்தன. கூடவே, நியாயமே கற்பிக்கமுடியாத அளவுகடந்த வன்முறையும் அவற்றில் இருந்தது. இதனை ப்ரூஸ் லீ மாற்ற முடிவு செய்கிறார். தன்னை இங்கே யாருக்கும் தெரியாது என்று லீ நினைக்க, க்ரீன் ஹார்னெட் டிவி சீரீஸ் ஹாங்காங்கில் சூப்பர் ஹிட் என்பதை அப்போதுதான் உணர்கிறார். இதனால் திரைப்பட வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கின்றன. இருந்தாலும் மிகக் குறைந்த சம்பளமே கிடைக்கிறது. அதைப் பொருட்படுத்தாமல் ப்ரூஸ் லீ நாயகனாக நடித்த முதல் சைனீஸ் படம் வெளியாகிறது. அதுதான் ‘The Big Boss’ (1971). தனது படங்களில், கதாநாயகன் வன்முறையில் ஈடுபடுகிறான் என்றால் அதற்கேற்ற வலுவான காரணம் அவசியம் இருக்கும் என்பதை இப்படம் மட்டுமல்லாமல், தனது எல்லாப் படங்களிலும் காட்டினார் லீ. தேவையில்லாத வன்முறை என்பது போய், தேவைப்பட்டதால்தான் வன்முறை என்று அவரது படங்கள் நிலைநாட்டின.
அதுவரை சைனீஸ் மார்ஷல் ஆர்ட்ஸ் படங்கள் பெற்றிராத பிரம்மாண்டமான வெற்றியை பிக் பாஸ் பெறுகிறது. ஆசியா முழுக்க சூப்பர்ஹிட்டாக ஓடுகிறது. இந்தியாவிலும் இப்படம் பிரபலம் என்பது ப்ரூஸ் லீ ரசிகர்களுக்குத் தெரியும். ஹாங்காங்கின் சூப்பர்ஸ்டார் ஆகிறார் லீ. இதன்பின் அவர் நடித்த அவரது இரண்டாவது படமான ‘Fist of Fury’ (1972), பிக் பாஸ் அடைந்த வெற்றியை அடித்து நொறுக்கி, அதைவிடப் பிரம்மாண்டமான பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியாக ஆசியாவெங்கும் மாறுகிறது. ப்ரூஸ் லீயின் திரைலட்சியம் இவ்வாறாக அட்டகாசமாக வெற்றியடைந்தது.
இதன்பின் அவரது மூன்றாவது படம் – ‘Way of the Dragon (1972)’ வெளியாகிறது. இம்முறை, இப்படத்தின் சகல அம்சங்களும் ப்ரூஸ் லீயாலேயே முடிவு செய்யப்படுகின்றன. திரைக்கதை மற்றும் இயக்கமும் ப்ரூஸ் லீயே. இப்படமும் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது.
இதன்பின் தனது நான்காவது படமான ‘Game of Death’ பட வேலைகளில் 1972 முடிவில் ப்ரூஸ் லீ ஈடுபடுகிறார். படத்தின் பல காட்சிகளை எடுத்தார். படத்தில் ஒரு பௌத்த மடாலயம் வரும். அதன் ஒவ்வொரு தளத்திலும் ஒரு மார்ஷல் ஆர்ட்ஸ் வீரன் இருப்பான். அவனை முறியடித்தே அடுத்த தளத்துக்குச் செல்லமுடியும். இப்படிப்பட்ட வேடங்களுக்குத் தன்னிடம் மார்ஷல் ஆர்ட்ஸ் படித்த வீரர்களைப் பொறுக்கிப் போட்டுப் படமாக்கினார் லீ. மிகக்கடுமையான உழைப்பை இப்படத்துக்கு நல்கினார்.

இரண்டாம் அமெரிக்க விஜயம் – எண்டர் த ட்ராகன்
இந்த நேரத்தில்தான், எந்த ஹாலிவுட் ப்ரூஸ் லீயை வெறுத்து ஒதுக்கியதோ, அதே ஹாலிவுட் ப்ரூஸ் லீயின் காலடியில் பணிந்து கெஞ்சிய தருணம் நிகழ்ந்தது. வார்னர் ப்ரதர்ஸ், ப்ரூஸ் லீயை வைத்து ஒரு பெரிய பட்ஜெட் ஹாலிவுட் மார்ஷல் ஆர்ட்ஸ் படம் ஒன்றை இயக்க முன்வந்தனர்.
ப்ரூஸ் லீ, அவர்கள் செய்த வேலையை அவர்களுக்கே திருப்பிச் செய்யாமல், பெருந்தன்மையுடன் அவர்கள் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார். இதனால் கேம் ஆஃப் டெத் படத்தின் வேலைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு, வார்னர் ப்ரதர்ஸின் படத்தில் நடித்தார். அந்தப் படம்தான் Enter the Dragon (1973). இந்தப் படம்தான் முதன்முதலில் ஹாலிவுட் ஸ்டுடியோ ஒன்றினால் தயாரிக்கப்பட்ட சீன மார்ஷல் ஆர்ட்ஸ் படம். இந்தப் படத்தில், வழக்கப்படி நடிப்பு மட்டுமில்லாமல் படத்தின் ஒட்டுமொத்த உருவாக்கத்திலும் பெரும்பங்கு வகித்தார் லீ. படத்தின் அத்தனை ஸ்டண்ட் காட்சிகளையும் லீயே அமைத்தார். ப்ரூஸ் லீயின் அசைவுகள் மிகவும் வேகமாக இருந்ததால், அவற்றை வேகமாகப் படமெடுத்துப் பின்னர் ரிலீஸின்போது ஃப்ரேம்ரேட்டைக் குறைத்துக் காட்டியதும் நிகழ்ந்தது.
பொதுவாகவே, திரைப்படங்களில் மார்ஷல் ஆர்ட்ஸைக் காட்டுவதில் ப்ரூஸ் லீக்கு ஒரு தனிப்பட்ட கொள்கை இருந்தது. மார்ஷல் ஆர்ட்ஸின் நோக்கம் என்ன? அவை மூலம் தனிப்பட்ட மனிதன் எப்படி மாறுகிறான்? என்பதெல்லாம் அவசியம் திரைப்படங்களால் பதிவு செய்யப்படவேண்டும் என்பதே ப்ரூஸ் லீயின் எண்ணம். அதன்படித்தான் அவரது அனைத்துப் படங்களும் இருக்கும். எண்டர் த ட்ராகனும் அப்படியே.
உலகம் முழுக்க வெறித்தனமாக ஓடிய மார்ஷல் ஆர்ட்ஸ் படமாக எண்டர் த ட்ராகன் மாறியது. பலரையும் மார்ஷல் ஆர்ட்ஸ் கற்றுக்கொள்ளத் தூண்டிய படமாகவும் இருந்தது. தமிழகத்தில் பல மார்ஷல் ஆர்ட்ஸ் பள்ளிகள் திறக்கப்பட்ட காலகட்டம் இது

இந்தப் படத்தை முடித்ததும், நின்றுபோயிருந்த கேம் ஆஃப் டெத் படத்தை மறுபடியும் ப்ரூஸ் லீ துவக்குகிறார். கேம் ஆஃப் டெத் பட வேலைகளை மறுபடியும் ஆரம்பித்தபின்னர், எண்டர் த ட்ராகன் வெளியாவதற்கு ஆறு நாட்கள் முன்னர், ஜூலை 20, 1973ல், ஹாங்காங்கில் மரணமடைகிறார். மரணத்துக்குக் காரணம், அன்று அவர் சாப்பிட்ட ஒரு மாத்திரை. அவர் அன்று தலைவலிக்காக எடுத்துக்கொண்ட ஒரு மாத்திரையில் (Equagesic) இருந்த பொருட்களை அவரது உடல் ஏற்காததால் ஏற்பட்ட அலர்ஜி எதிர்வினை புரிந்ததால், தூக்கத்திலேயே மரணத்தைத் தழுவினார் லீ. ஆனால், இந்த மரணத்துக்கு இரண்டு மாதங்கள் முன்னர், இதே போன்ற ஒரு தலைவலி ஏற்பட்டு, மூளையில் நீர் கோத்துக்கொண்டு, அது வலிப்பில் கொண்டு விட, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குணாமானார். அதேபோன்ற எதிர்வினைகளையே அவரது உடல் தூக்கத்தில் அந்த மாத்திரை உட்கொண்டதும் புரிய, அதுவே அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்தது.
இறக்கையில் ப்ரூஸ் லீயின் வயது 32.
கேம் ஆஃப் டெத் படத்துக்காக ப்ரூஸ் லீ தனது கைப்பட எழுதி வரைந்த திரைக்கதை, வசனங்கள், வரைபடங்கள் ஆகியன அதன்பின்னர் பல வருடங்கள் கழித்தே கோல்டன் ஹார்வெஸ்ட் ஸ்டுடியோவுக்குள் கண்டெடுக்கப்பட்டன. இவை இணையத்தில் இன்றும் கிடைக்கின்றன. கேம் ஆஃப் டெத் படத்துக்காக ப்ரூஸ் லீ எடுத்த பல காட்சிகளும் 22 வருடங்கள் கழித்தே கோல்டன் ஹார்வெஸ்ட் ஸ்டுடியோவில் கண்டெடுக்கப்பட்டன. அவை இப்போது பரவலாகக் கிடைக்கின்றன.

ப்ரூஸ் லீயின் முக்கியத்துவம்
நாலரைப் படங்கள். ஒருசில டிவி சீரீஸ்களில் குட்டியான வேடங்கள். இவற்றில் நடித்திருக்கும் ஒரு நடிகரை உலகமே எப்படி இன்றுவரை – அவர் இறந்து 43 வருடங்கள் கழித்தும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது? எப்படி இன்றுவரை உலகின் முக்கியமான நபர்களில் ப்ரூஸ் லீயும் ஒருவராக இருந்துகொண்டிருக்கிறார்?
அவர் வெறுமனே மார்ஷல் ஆர்ட்ஸ் மட்டும் கற்றுக்கொண்டு திரைப்படங்களில் நடித்த நடிகராக இருந்திருந்தால் இப்படி நினைவுகொள்ளப்பட்டிருக்கமாட்டார். ஒரு முழுமையான ஆளுமையாக, தன் வாழ்க்கையே பிறருக்கு உதாரணமாக வாழ்ந்த நபராகவே ப்ரூஸ் லீ இருந்ததால்தான் இன்றும் அவரை உலகம் நினைவு வைத்திருக்கிறது. முழுமையான ஆளுமை என்றால், தான் கற்றுக்கொண்ட விஷயங்களை முழுமையாகப் பின்பற்றியவர். அவைகளை மேலும் செப்பனிட்டு உலகுக்கு வழங்கியவர். தனிப்பட்ட பெர்ஸனாலிடி உள்ளவர். யாரையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றவேண்டாம் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தவர். இதனாலேயே மாணவர்களை அவரை விட்டுவிட்டுப் போகச்சொன்னவர்.
ப்ரூஸ் லீயின் முக்கியமான கோட்பாடு – எப்போதுமே, உடல் பலத்தை மட்டுமே நம்பிக்கொண்டு எதிலுமே இறங்கக்கூடாது என்பதே. மாறாக, ஒரு மனிதனின் உண்மையான பலம் அவனது உள்ளத்தில் உள்ளது என்பதை அனுபவபூர்வமாக வாழ்ந்து காட்டியவர் லீ. மனம் முழுதும் ஆற்றல் நிரம்பிய வீரன், தன்னை எப்போதுமே வெளிக்காட்டிக்கொள்வதில்லை. அரைகுறைகளே தங்களை வெளிக்காட்டுவதில் முழுவீச்சாக இறங்கிக்கொண்டே இருக்கின்றனர். துளிக்கூட பலம் இல்லாமல் இப்படிப்பட்டவர்களே எப்போதும் கத்திக்கொண்டே இருக்கின்றனர். ப்ரூஸ் லீயின் பல பேட்டிகளிலும் அவரது உறுதியான உடல்மொழியையும், ஒரு ஜென் குருவைப் போல விளங்கும் அவரது மனதையும் யாருமே எளிதில் படித்தறிந்துவிட முடியும். ப்ரூஸ் லீ, goal setting என்ற முறைமையை ஆழமாக நம்பியவர். ஒரு மனிதன், உள்ளப்பூர்வமாக ஒரு முடிவை எடுத்துவிட்டால், கடவுளே வந்து தடுத்தாலும் அது நடக்காமல் போகாது என்பதை வாழ்ந்தே காட்டியவர்.
ப்ரூஸ் லீயின் மேற்கோள்கள் அடங்கிய பல புத்தகங்கள் தற்போது கிடைக்கின்றன. அவரைப்பற்றிய டாக்குமெண்ட்ரிகளும் ஏராளம். நேரம் கிடைக்கும்போது இவைகளைப் படித்தால்/பார்த்தால், ஒரு இரும்பு மனிதனைப் பரிச்சயம் செய்துகொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். அதன்மூலம் உங்களின் வாழ்க்கையில் நீங்கள் அடைய விரும்பும் அனைத்தையும் அவசியம் அடையமுடியும். இருபதாம் நூற்றாண்டின் மகத்தான மனிதர்களில் ப்ரூஸ் லீயும் ஒருவர் என்பதில் துளிக்கூட சந்தோகமில்லை

புரூஸ்லீயின் மரணம் குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுவதுண்டு. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஆனால் எல்லாமே அமானுஷ்யமும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும். புரூஸ்லீயைக் கொல்ல அவருடைய மனைவியே மோதிரத்திலிருந்த வைரத்தை பொடிபண்ணி பாலில் கலந்து கொடுத்ததாகவும், அதை குடித்ததால்தான் புரூஸ்லீ இறந்துபோனதாகவும் மிகபிரபலமான ஒரு கதை உண்டு.
புரூஸ்லீயை கொல்வது அவ்வளவு சுலபம் கிடையாது. அவர் ஷூட்டிங்கில் நிஜமாகவே அடித்துவிடுவார். அவருடைய மர்ம அடி தாங்காமல் நிறையபேர் ஷூட்டிங்கில் இறந்து போயிருக்கிறார்கள், அவர் ஒரு மாபெரும் பலசாலி, உக்கிரமானவர், துப்பாக்கி குண்டால் கூட அவர் உடலை துளைக்கமுடியாது என்றெல்லாம் பல கதைகள்! அதனால்தான் அவரை கொல்வதற்காக வைரத்தை பொடி பண்ணி உணவில் கலந்துகொடுத்து, அந்த வைரத்தூள் கூட அவருடைய இதயத்தில் சிக்கியதால் உண்டான மூச்சடைப்பால்தான் புரூஸ்லீ இறந்துபோனார் என்பதாக அந்தக் கதை விரியும்.
1964 இல் புரூஸ்லீ தற்காப்புக்கலைகளுக்காக ஸ்கூலை திறந்த போது Chinese community அதை எதிர்த்தது சைனிஸ் அல்லாத யாரும் தற்காப்புக்கலையை கற் பிக்க வேண்டாம் என்று அறிவித்த து. இதைத் தவிர்த்தால் லீ Wong Jack Man னுடன் நேரடியாக மோத வேண்டும் என்று அறிவித்தது லீ இதை ஏற்றுக் கொண்டார். ஜாக் மான் சைனாவின் மிகப் பிரபல மான martial arts வீரராக இருந்தவர்.லீ வெற்றி பெற்றால் தொடர்ந்து கற்பிக்கலாம் தோற்றால் ஸ்கூலைமூடிவிட வேண் டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.இருவரும் மோதிக்கொ ண்டார்கள் “நான் தோற்று விட்டேன்” என்று யார் ஒத்துக்கொண்டாலும் மோதல் நிறுத்தப்படும். இவர்களிடை யே நடை பெற்ற கடுமையான இந்த மோதல், பத்தே நொடியில் ஜாக் மான் புரூஸ் லீயால் தோற்கடிக்கப் பட்டார். ஒரே நாளில், அமெரிக்கா மற்றும் சீனாவில் லீயின் புகழ் கிடு கிடு வெனப் பரவியது.
இந்த மோதலுக்குமுன்பு புரூஸ் லீயிடம் சில பத்திரிகையாளர்க ள் ‘‘என்ன தைரியத்தில் அவருடன் மோத ஒப்புக்கொண்டீர்க ள்?’’-கேட்டதற்கு, ‘‘நான் தத்துவத் தை ப் பாடமாகப் படித்திருக்கி றேன். வாய்ப்புகள் தாமே வராது, நாம் தான் உருவாக்க வேண்டும் என்பதை அறி வேன். அதனாலேயே வெற்றி, தோல்வி பற்றிக் கவலை யின்றி, நானும் என் கலையும் புகழ் பெற இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன்’’ என்றார் புரூஸ்லி. 25 வயதுவைர ஒரு சாதாரண தொலை க்காட்சி நடிகராக இருந்து வந்த புரூஸ் லி , உலகப் புகழ் பெற்றது அதன் பிறேக

1971-ல் ‘தி பிக் பாஸ்’ வெளியாகி, உலெகங்கும் சக்கைப்போடு போட்டது. அதன்பின்னர் வெளியா ன ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’, ‘ரிடர்ன் ஆஃப் த ட்ராகன்’, ‘என்டர் தி ட்ராகன்’ எனப் பல படங்கள் வசூ லில் சாதனை படைத்தன. அவரது கனவுப் படமான ‘கேம் ஆஃப் டெத்’ படப்பிடிப்பின்போது, மர்மமான முறையில் இறந்து போனா ர் புரூஸ்ல. ‘‘அவர் எடுத்துக்கொண்ட வலி மருந்துகள் அலர்ஜியா கி, அவரது உயிரைப் பறித்து விட்டன’’ என்று டாக்டர்கள் சொன் னாலும், 33-வது வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத் தின் மர்மம் இன்றுவரை விடுபடேவ இல்லை. வாய்ப்புகள் வரும் என்று காத்திருப்பவர்கள் என்று மே வெற்றியைத் தொடேவ முடியாது; வாய்ப்புகைள உரு வாக்குபவர்களே சாதைனயாளர்கள் என்பது புரூஸ்லீயின் வாழ்க் கை சொல்லும் மந்திரம்!
முழுதாக நடித்தது, நான்கே நான்கு படங்கள்தான். அவை எல்லாமே மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சாதாரண படங்கள். ஆனால் நான்கே படங்களில் பல கோடி ரசிகர் சாம்ராஜ்யத்தை தனக்கென உருவாக்கியவர் புரூஸ்லீ. அவர் இறந்தபின்பும்கூட, இன்றுவரை அவருக்கென பிரத்யேக ரசிகர் பட்டாளம் தினம் தினம் உருவாகிக் கொண்டேயிருக்கிறது.
புரூஸ்லீக்கு பிறகு ஏகப்பட்ட தற்காப்புக்கலை பயின்ற, நடிகர்கள் ஹாங்காங்கிலிருந்தும், ஹாலிவுட்டிலிருந்தும் உருவாகிவந்தாலும், புரூஸ்லீ
புரூஸ்லீயின் .மகள் Shannon Lee
American actress, martial artist and businesswoman
அடைந்த புகழில் ஒரு சதவீதத்தை கூட அவர்களால் நெருங்க முடியவில்லை.

'குங்பூ ஹஸில், ஷாவலின் சாக்கர்’ படங்களை எடுத்த ஸ்டீபன் சாவ் கூட தன் படங்களில் இன்றுவரை தொடர்ந்து புரூஸ்லீக்கு மரியாதை பண்ணுகிறார். தாய்லாந்து நடிகரான டோனிஜா தன் படங்களின் திரைக்கதையில் புரூஸ்லீ பட பாணியை தொடர்ந்து புகுத்துவதை உணர்ந்திருக்கலாம்!
புரூஸ்லீ சிறப்பாக நடிக்க கூடிய நடிகரெல்லாம் கிடையாது. சொல்லப்போனால் அவருடைய படங்களில் அவர் நடித்ததை விட அடித்ததுதான் அதிகம். அப்படியிருக்க இத்தனை ரசிகர்களை கவரும்படி புரூஸ்லீ என்னதான் செய்துவிட்டார்? இவருடைய வெற்றி எதிர்பாராததா? புரூஸ்லீயின் மரணத்திற்கு பின்னாலிருந்த புதிர் என்ன? புரூஸ்லீயின் பாணி இன்றுவரை தொடர்கிற சூட்சுமம் என்ன?
புரூஸ்லீயின் வாழ்க்கையை பற்றிய அபிலாஷின் இந்த புத்தகம் புரூஸ்லீயின் பாசிட்டிவ் பக்கங்களைச் சொன்னாலும், நமக்குத் தெரியாத புரூஸ்லீயின் பலவீனங்களையும் சமரசமின்றி விமர்சிக்கிறது.
புரூஸ்லீயின் மரணத்துக்கு காரணமான கஞ்சாப்பழக்கம், அவருக்கிருந்த பெண்கள் தொடர்பு, புகழால் உண்டான காமவேட்கை, சிறுவயதிலிருந்து இருந்த மற்றவர்களை பொதுவில் வைத்து அசிங்கப்படுத்தி பார்க்கிற கிறுக்குத்தனம், தோல்வியைக் கண்டு அஞ்சி நடுங்குகிற உள்ளுணர்வு, மீடியாவை சமாளிக்க முடியாமல் திணறியது, தன்னுடைய வெற்றிக்காக நண்பர்களை பயன்படுத்திக்கொண்டு, தூக்கி எறிகிற குணம் என பல விஷயங்களையும் பட்டவர்த்தனமாக முன்வைக்கிறது.
"கடுமையாக உழைத்தால், வெற்றி நிச்சயம்" என்கிற ஒன்லைன்தான் புரூஸ்லீயின் கதையும். சிறுவயதிலிருந்து சண்டைக்காரனாக வளர்ந்து, குங்பூவால் மனதை ஒருநிலைப்பட்டுத்திக்கொண்டவர் புரூஸ்லீ. அவர் முழு சீனர் கிடையாது. ஜெர்மனிய வம்சாவழி தாய்க்கும், சீனருக்கும் பிறந்தவர். அதனாலேயே அவர் தன் வாழ்க்கை முழுக்க எந்த அடையாளமும் இன்றி வாழ வேண்டியிருந்தது. அமெரிக்காவில் மிகுந்த சிரமங்களுக்கு நடுவே, ஒரு ஆசியனாக பல்வேறு புறக்கணிப்புக்களுக்கு நடுவே வாழ்ந்து, தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, முதல் வாய்ப்புக்காக போராடிதான் வெற்றிபெற்றுள்ளார் புரூஸ்லீ! ஆனால் எந்த வெற்றிக்காக வெறித்தனமாக உழைத்தாரோ, அதே வெற்றியைக் கண்டு அஞ்சி நடுங்கி, அதிலிருந்து விடுபட போதைப் பழக்கத்துக்கு ஆளாகி மாண்டுபோனதுதான் புரூஸ்லீயின் கதை.
புரூஸ்லீ வெறும் குங்பூ கலைஞன் கிடையாது. குங்பூவும் வெறும் தற்காப்புக்
புரூஸ்லீயின் மகன் Brandon Lee American actor and martial artist
March 31, 1993 (aged 28) அன்று
மரணம்
 
கலை கிடையாது. குங்பூ எப்படி சீனக்கலாச்சாரத்தின் பிரதிபலிப்போ, ஒரு தத்துவத்தேடலோ அதைப்போலவேதான் புரூஸ்லீயும்! தன் வாழ்க்கை முழுக்க வாழ்தலின் களிப்பையும், உன்னத்ததிற்கான தேடலையும் கொண்டிருந்த ஒரு அற்புத கலைஞனாக வாழ்ந்திருக்கிறான். திரைப்படங்களில் நாம் பார்த்த! அசகாய சூரனான புரூஸ்லீக்கு அப்பால் குங்பூவை உயிராக நேசித்த ஒரு சாதாரண இளைஞனான புரூஸ்லீயை இப்புத்தகத்தில் தரிசிக்க முடிகிறது.

குங்பூவை கற்றுக்கொண்டதோடு நிறுத்திக்கொள்ளாமல், உலகின் மற்ற தற்காப்புக்கலைகளையும் படிக்கிற வெறியோடு திரிந்திருக்கிறார் புரூஸ்லீ. தன்னுடைய குங்பூவில் குத்துசண்டை தொடங்கி ஜூடோ வரைக்கும் பல்வேறு அடவுகளை புகுத்தியிருக்கிறார்.
ஒரு நல்ல தற்காப்பு கலைஞன் ஏதோ ஒரு கலையை அதன் தன்மையோடு கற்றுக்கொண்டு முடங்கிவிடக்கூடாது. அவன் மற்ற தற்காப்புகலைகளையும் தனக்கு உள்வாங்கிக்கொண்டு அனிச்சையான உணர்வோடு சண்டையிட வேண்டும் என்கிற கொள்கையைக் கொண்டிருந்தார் புரூஸ்லீ. தன்னுடைய ’கேம் ஆஃப் டெத்’ படத்தின் திரைக்கதையை அந்த நோக்கத்திலேயே அமைந்திருந்தார் லீ.
சினிமா இயக்கப் போகிறோம் என்று முடிவானதும், முதலில் புரூஸ்லீ செய்தது சினிமா குறித்து வெறித்தனமாக வாசிக்க ஆரம்பித்ததுதான்! அதை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று போராடியதுதான்.
தனக்கான வாய்ப்புகளை தானே உருவாக்கிக்கொள்ளும் முனைப்புடன் இருந்திருக்கிறார். முதுகுவலியால் அவதியுற்றபோது, ஓரு ஆண்டுக்கு குங்பூ பயிற்சியை தொடர முடியாமல் போகிறது. அந்த நேரத்தில் தொடர்ந்து நிறைய புத்தகங்கள் வாசித்து தனக்காக 'ஆழ்மன அமைதியை' அடையும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.
ஒருநாளும் தன்னுடைய மனதின் சமநிலை குலையாத வண்ணம் வாழ்ந்தவர் புரூஸ்லீ. அதுதான் அவருடைய ஆற்றலை அதிகமாக்கவும், அதைக் கட்டுப்படுத்தி சரியான நேரத்தில் வெளிப்படுத்தவும் வைக்கிற ஒன்றாக மாற்றியது.
ஆனால் தன்னுடைய முதல் மூன்று படங்களில் கிடைத்த திடீர் புகழும் எக்கச்சக்கமான பணமும், அவருடைய வாழ்க்கை முறையை சிந்தனைகளை புரட்டிப்போட்டிருக்கிறது. அவருடைய சமநிலை குலைந்ததும் அங்குதான். அதுவரை இருந்த புரூஸ்லீக்கு முற்றிலும் எதிர்மறையான ஒருவனாக அவரை வெற்றி மாற்றிவிடுகிறது. அவர் சில்லறைத்தனமான சண்டைகள் போடுபவராக, பொறாமையும், வஞ்சகமும் நிறைந்தவராகவும், தன்னைச் சுற்றியிருப்பவர்களைக் கண்டு அஞ்சி, நல்லவர், கெட்டவர் என்று இனம் பிரிக்க முடியாமல், அனைவரையும் வெறுத்து தனிமையில் சிக்கிகொள்கிறார்.
அவர் வெற்றியைக் கண்டு அஞ்சுகிறார். அது அவரை கொன்றுவிடும் என்பதை உணர்கிறார். அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள தொடர்ந்து கஞ்சா பிஸ்கட்டுகளை உண்டார். 'என்டர் தி டிராகன்' படம் எடுக்கப்படும்போது, அது தன் உச்ச நிலையை அடைகிறது. அப்படத்தின் டப்பிங் வேலைகளின் போதே, மூளையில் நீர்கோர்த்து மரணத்தின் வாயிலை நெருங்கிவிட்டு திரும்புகிறார்.
ஆனால் குணமான பின்னும், கஞ்சா பழக்கத்தை விடமுடியாமல் தொடர்கிறார். அதுதான் அவருக்கு எமனாகியிருக்கிறது. புரூஸ்லீ இறந்த தினத்தில் நடந்த சம்பவங்கள் கூட ஒரு திரைப்படத்தின் பரபரப்பான கிளைமாக்ஸின் திரைக்கதையை ஒத்திருக்கிறது.
தன் காதலியின் வீட்டுக்குச் செல்லும் புரூஸ்லீ தலைவலிக்காக சாப்பிடும் ’EQUAGESIC’ என்கிற மருந்துதான் எமனாகிறது. அவர் அரை உயிராக கிடக்கும்போதே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருந்தால், அவரை காப்பாற்றியிருக்கக் கூடும். ஆனால் வளர்ந்து வரும் நடிகையான புரூஸ்லீயின் கள்ளக்காதலியோ, அந்த நேரத்தில் புரூஸ்லீயை தன் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் பத்திரிக்கைகள் ஏடாகூடமாக எதையாவது எழுதநேரிடும். அது தன் வளர்ச்சியை பாதிக்கும் என அரைமணிநேரம் தாமதப்படுத்துகிறார். கடைசியில் புரூஸ்லீயின் நண்பர் ரேமன்ட் சாவ் என்பவரை போனில் அழைத்து வரச்சொல்கிறார்.
ஆனால் ரேமன்ட் சாவ் அன்றைய தினம் ஹாங்காங்கின் டிராபிக்கில் மாட்டிக்கொள்கிறார். அன்று அந்நகரை ஒரு புயல் கடக்கிறது. அனைத்தையும் தாண்டி ஒருவழியாக புரூஸ்லீயை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. புரூஸ்லீ இறந்துபோகிறார். புரூஸ்லீ இறந்தபின்பும் அவருடைய மரணம் குறித்து, பல்வேறு புனைவுகளை தொடர்ந்து ஊடகங்கள் உருவாக்கின.
புரூஸ்லீயின் மின்னல்வேக தாக்குதல்கள்:
வேகம் என்பதன் அர்த்தம் தேடிப்பார்த்தால் அதில் புரூஸ் லீ என்ற பெயர் நிச்சயமாக இருக்கும், இவரது வேகத்தை காமராவுக்குள் கொண்டு வரமுடியாமல் 24என இருந்த ஃபிரேமின் அளவை 34ஆக மாற்றிய ஹாலி வூட் வரலாற்றுச் சுவடுகளும் இருக்கின்றன,
புரூஸ்லீ ஒரு அதிசயப் பிறவி என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள், அதற்கு அவ ரது மிகத்துல்லியமான சண்டையிடும் முறைதான்காரணம் என்ப தும் யாவரும் அறிந்ததே.
புரூஸ்லீ இங்கே காட்டப்பட்டுள்ள வீடியோவில் செய்யும் சாகசத்தைப் பாருங்கள், ஒரு நெஞ்சாக்கில் தீப் பற்றவைக்கும் கடதாசி ஒட்டப்படுகின்றது பின் அவரது அதி வேக நெஞ்சாக் சுற்றுகையின்மூலம் ஒருவரின் வாயில் இருக் கும் தீக்குச்சியைப் பற்ற வைக்கிறார், பின்னர் தன்னை நோக்கி எறிய ப்படும் தீப்பற்றாத தீக்குச்சி களை தனது கவனம் சிதறாத நெஞ்சாக் சுற்றுகை யின் மூலம் பற்ற வைக்கின்றார்,
இது யாரால் முடியும், நிச்சய மாக அவர் ஒரு அதிசயப் பிறவிதான்!!! கொஞ்சக்காலம் தான் வாழ்ந்தாலும் நம் மனங்க ளில் நீங்கா இடம்பிடித்து விட்டார் எங்கள் மாஸ்டர் புரூஸ் லீ!
வாழ்க்கையே குங்பூதான் என்று வாழ்ந்த ஒரு மனிதனின் கதையை அக்கலை குறித்து கொஞ்சம் கூட தெரியாமல் அணுகவே முடியாது.

புரூஸ் லீயின் மரணத்திற்கு பிறகுவெளிவந்த “என்டர் தி டிராகன்” படம் சக்கைப்போடு போட்டு 200 மில்லியன் டாலர் வசூலைஅள்ளிக்குவித்தது. உலகெங்கும் பல இளையர்கள் கராத்தே பைத்தியமானார்கள். மூளைமுடுக்குகளிலெல்லாம் கராத்தே பள்ளிகள் தொடங்கப்பட்டன. இவ்வாறு உலக இளையர்களின்கவணத்தை தனி ஒரு மனிதனாக தற்காப்புக்கலைப்பக்கம் திருப்பிய பெருமை புரூஸ் லீயையேசேரும். வரலாற்றின் எந்த கால கட்டத்தையும்விட எழுபதுகளில்தான் மிக அதிகமானஇளையர்கள் தற்காப்புக்கலை பள்ளிகளில் சேர்ந்து பயின்றனர் என்ற உண்மையே அதற்குசான்று. தன் கனவை நனவாக்க அயராது பாடுபட்டவர் புரூஸ் லீ. உடல்தான் தனது மூலதனம்என்று நம்பிய அவர் அதை ஒரு கோவிலாகவே வழிபட்டார். தினசரி ஓடுவது,எடை தூக்குவதுஎன்று தனது உடலை வலுப்படுத்திக்கொண்டதோடு வைட்டமின்கள், ஜின்செங், ராயல் ஜெல்லிபோன்றவற்றையும் உட்கொண்டு உடலை திடமாக வைத்துக்கொண்டார்.
அகால மரணம் அவரது ஆயுளை குறைக்காமல்இருந்திருந்தால் சினிமாவிலும், தற்காப்புக்கலையிலும் இன்னும் மிகப்பெரிய வெற்றிகளைகுவித்திருப்பார் புரூஸ் லீ. 33 ஆண்டுகளே வாழ்ந்தாலும் ஓர் அர்த்தமுள்ள வாழ்கையைவாழ்ந்திருக்கிறார். குண்டர் கும்பலில் இருந்தாலும், ஒழுங்காக படிக்காவிட்டாலும்தான் தேர்ந்தெடுத்த
துறையில் அவர் செலுத்திய முழு கவணமும் காட்டிய ஆர்வமும் கொட்டியஉழைப்பும் சிந்திய வியர்வையும்தான் புரூஸ் லீக்கு அந்த இளம் வயதிலேயே வானத்தைவசப்படுத்தின.
நாம் எந்தத் துறையை தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமல்லதேர்ந்தெடுத்த பிறகு அந்த துறையில் முழு கவணம், ஆர்வம், உழைப்பு, வியர்வை, விடாமுயற்சி ஆகியவற்றை செலுத்துகிறோமா என்பதுதான் முக்கியம். இவ்வாறு ஈடுபடுத்திக்கொண்டால் நமக்கும் எந்த வானம் வசப்படாமல் போகும்,

நீ எப்படி சண்டை போட வேண்டும் என்பதை உனது எதிரி தீர்மானிக்கிறார் என்கிறார் லீ.பாரம்பரியமான குங்பூ சண்டை முறைகளுக்கு எல்லாம் மதிப்பு அளித்தார்.ஆனால் முக்கியத்துவம் அளிக்கவில்லை. அவற்றின் சாரத்தை மட்டும் உறிஞ்சிக்கொண்டார்.
மனத்தின் வலிமையை புரிந்துகொள்வதற்காக பழங்கால சீன தத்துவங்களை லீ விரும்பி படித்தவர்.இந்தியத் தத்துவ ஞானிகளில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தியையும் அவர் படித்துள்ளார். “எனக்கு எதிரியே கிடையாது. ஏனென்றால் மோதலின்போது நான் என்ற பிரக்ஞை எனக்கு இருப்பதில்லை” என்றார் லீ. மனம் பற்றிய ஆழமான தேடுதல் இருந்தாலும் லீ கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்துள்ளார்.
பல வகை சண்டை முறைகளின் தத்துவத்தைப் பிழிந்து எடுத்து ஜூட் குனே டூ என்றப் பெயரில் தனிவகையான ஒரு சண்டைத் தத்துவ முறையை அவர் அறிவித்தார். ஆனாலும் தனது அணுகுமுறையை ஒரு படகு என அவர் வர்ணித்தார். அந்த படகில் ஏறி குங்பூ பெருங்கடலை கடக்கலாம். ஆனால் “படகை தோளில் தூக்கித் திரியாமல் பயணத்தைத் தொடரு” எனச் சொல்லி விட்டார்.
நான் சொன்னேன் என்பதற்காக நீ நம்பாதே.உனது சொந்த தேடுதலை செய் என்ற இந்த தன்னம்பிக்கை மிக்க தத்துவ உபதேசம்தான் குங்பூ மாஸ்டர்களின் உலகில் புரூஸ் லீயை உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.
மனவலிமைப் பயிற்சிகளுக்கு தந்த அதே முக்கியத்துவத்தை அவர் உடல்வலிமைக்கும் அளித்தார். அவரது உடலின் ஒவ்வொரு சென்டிமீட்டரையும் அவர் பயிற்சிக்கு உட்படுத்தினார். வலிமைப்படுத்தினார்.அவரது உடற்பயிற்சி முறைகள் அவரது உடலைக்
கற்சிலையாகச் செதுக்கின.
நடிகரின் மகன் என்பதால் அவர் 18 வயதுக்குள் குழந்தை நட்சத்திரமாக இருபது படங்களில் நடித்துவிட்டார்.
ஆனால் சினிமாவை விட்டு ஒதுங்கி குங்பூ கலையில்தான் லீ மூழ்கி இருந்தார். குங்பூ கலையை மையமாக கொண்டு எடுக்கப்படும் படங்களில் நடிக்க ஒரு சமயம் அவருக்கு அழைப்பு வந்தது. அதனால் மீண்டும் சினிமாவுக்குள் வந்தார். 1971-ல் ‘பிக்பாஸ்’ படமும் 1972-ல் ‘பிஸ்ட் ஆஃப் பியூரி'யும் ‘ரிடர்ன் ஆப் த டிராகன்' னும் வெளியாகின.1973-ல் 'என்டர் த டிராகன்' னும் ‘கேம் ஆப் டெத்’தும் தயாராகின.
இந்தப் படங்களின் வழியாக அவர் வெளிப்படுத்தி யவை மனித இனத்தின்


புரூஸ் லீயின் . மனைவி . மகள் 


சண்டைத் திறனின் அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சி.அதனால்தான் அதன் பாதிப்பு மக்களிடம் நீடித்து நிற்கிறது.அதுவே அவரது அதிசயமிக்க வெற்றியின் ரகசியம்.
அவரது படங்களில் புரூஸ் லீயின் சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் தாக்கும் வேகத்துக்கு அன்றைய திரையுலகத் தொழில்நுட்பத்தால் ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 கட்டங்கள் என்பதே கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுக்க ஒரு வினாடிக்கு 34 கட்டங்களாக காமிரா வேகத்தை மாற்றியமைத்தனர். 




இப்படிக்கு 
கிருஷாந்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்