நோலனின் பேட்மேன் பிகின்ஸ் ( 2005 )
நோலனின் பேட்மேன் பிகின்ஸ் ( 2005 )
Genres - Action | Adventure
தயாரிப்பாளர் : எம்மா தாமஸ்
லாரி பிராங்கோ
சார்லஸ் ரோவன்
இயக்குனர் :கிறிஸ்டோபர் நோலன்
திரைக்கதை : கிறிஸ்டோபர் நோலன்
டேவிட் கோயர்
கதை மூலம் : பாப் கேன் எழுதிய புதினத்தின் கதாப்பாத்திரங்கள்
நடிப்பு : கிரிஸ்டியன் பேல்.
மைக்கேல் கேன்,
லியம் நீசோன்,
கேட்டி ஹோல்ம்ஸ்,
கேரி ஓல்ட்மன்,
சில்லியன் மர்பி,
மார்கன் ஃபிரீமன்,
இசையமைப்பு : ஹான்ஸ் சிம்மர்.
ஜேம்ஸ் நியூடன் ஹவார்ட்
ஒளிப்பதிவு : வால்லி பிச்டர்
படத்தொகுப்பு : லீ சிமித்
விநியோகம் :வார்னர் சகோதரர்கள்
டேவிட் கோயர்
கதை மூலம் : பாப் கேன் எழுதிய புதினத்தின் கதாப்பாத்திரங்கள்
நடிப்பு : கிரிஸ்டியன் பேல்.
மைக்கேல் கேன்,
லியம் நீசோன்,
கேட்டி ஹோல்ம்ஸ்,
கேரி ஓல்ட்மன்,
சில்லியன் மர்பி,
மார்கன் ஃபிரீமன்,
இசையமைப்பு : ஹான்ஸ் சிம்மர்.
ஜேம்ஸ் நியூடன் ஹவார்ட்
ஒளிப்பதிவு : வால்லி பிச்டர்
படத்தொகுப்பு : லீ சிமித்
விநியோகம் :வார்னர் சகோதரர்கள்
உலகில் எத்தனையோ சூப்பர்
ஹீரோ கதைகள் இருக்கின்றன .
பல சூப்பர் ஹீரோ
படங்கள் வெளிவந்துள்ளன .
சூப்பர் ஹீரோ என்றாலே ,
முதலில் ஞாபகத்திற்கு வருவது
சூப்பர்மேன் தான் .
சூப்பர்மேன் படங்களைப் பார்த்தால்
நாமும் சூப்பர்மேன்
ஆக இருந்தால் என்ன செய்வோம்
ஓட்டிக்கொண்டிருப்போம் . சூப்பர்மேனுக்கென்று
தனி சக்தி இருக்கிறது .
அவரால் எதையும் தூக்கியெறிய
முடியும் , பறக்கமுடியும் ,
இன்னும் என்னவெல்லாமோ
செய்யமுடியும் .
அடுத்து , அயர்ன்மேன் .
இவர் உருவாக்கிய
கவசத்திற்குள் புகுந்துகொண்டால்
கிட்டத்தட்ட ஒரு மினி
ராணுவமாகவே ஆகிவிடுவார் .
எனுமளவிற்கு அத்தனை
தொழில்நுட்பங்களையும்
இந்த கவசம் கொண்டிருக்கும் .
இவரை ஸ்கிப் செய்தால் ,
இவரை ஸ்கிப் செய்தால் ,
சிலந்திமனிதன் .
அதாங்க நம்ம ஸ்பைடர்மேன் .
ஒரு சிலந்தி கடித்ததால்
ஸ்பைடர்மேன் ஆகிவிடுவார் .
சிலந்தியைத் தாண்டி வந்தால்
பச்சைமனிதன் .
சிறுவயதில் ஏற்பட்ட காமா
கதிர்களின் தாக்குதல் மற்றும்
தந்தையின் ஆராய்ச்சியின்
காரணமாக. கோபம் வந்தால்
மனிதர் ஜிம்முக்கு செல்லாமலே
கட்டுமஸ்தாகி விடுவார் .
இவர்களெல்லாம் பத்தாதென்று
அஸ்கானிலிருந்து
வேறு , ஒருவர் வந்திரங்கினார் .
இன்று ஆங்கிலத்தில் THURSDAY
என்று அழைக்க காரணமாக
இருக்கும் கடவுள் தோரை
சூப்பர் ஹீரோவாக்கி
இரண்டு பாகம் எடுத்துவிட்டார்கள் .
அப்புறம் காலம் கடந்த ரோஜர்ஸ் ,
அப்புறம் காலம் கடந்த ரோஜர்ஸ் ,
கேப்டன் அமெரிக்காவாகி விட
என பல சூப்பர் ஹீரோக்கள்
கிராபிக்ஸ் சாகசம்
செய்து கொண்டிருக்கிறார்கள் .
எனக்கு காமிக்ஸ் படித்த
அனுபவம் கிடையாது .
நான் படித்த காமிக்ஸ் கதைகள்
என்றால் மாயாவி தான் .
அதுவும் இப்போது ஞாபகமில்லை .
எங்க வீட்டுக்கு பக்கத்தில
இருக்கிற நூலகத்துக்கு
என் நண்பர்களுடன் போவேன்.
படிக்கிரதுக்கு என்று தப்பா
நினைக்க வேண்டாம்.
சக்திமான் பார்க்கிறதுக்காக
நேரத்துக்கே போவோம்.
அப்போ படிச்சதுதான் மாயாவி காமிக்ஸ்
எனவே நான் பார்த்த சூப்பர்
ஹீரோ படங்களை
கொண்டுதான் இப்பதிவினை
எழுதுகிறேன் .
சரி , இப்போது மேட்டருக்கு வருவோம் .
சாதாரணமானவர்கள் கிடையாது .
அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ,
பூச்சி கடித்தோ , ஊசிபோட்டோ ,
இல்லை கிரிப்டானிலிருந்து
வந்ததாலோ தான் சக்தி கிடைக்கறது .
இந்த ஹீரோக்கள் பெரும்பாலும்
தங்களின் காதலிகளை
காப்பாற்றவோ , தங்களின்
அதிகாரத்தை நிலைநாட்டவோ
தான் உலகினை காப்பாற்ற
செய்கிறார்கள் .
உலகினை காப்பாற்றுவதாக கூறி ,
வில்லனை விட அதிக
பொருளாதாரப்பேரழிவினை உண்டாக்குபவர்கள்
இந்த ஹீரோக்களாக
தான் இருப்பார்கள் .
சண்டைனா சட்டை
கிழியத்தானச்செய்யும் என்று
நீங்கள் சொல்லலாம்.
சண்டை போடுபவன்
சட்டைக்கிழிந்தால் பரவாயில்லை.
வேடிக்கை பார்ப்பவனின் சட்டை
எதுக்குயா கிழிக்கிறிங்க ?
அயர்ன்மேனுக்கு மூளை
அயர்ன்மேனுக்கு மூளை
இருக்குமளவிற்கு
போராட்டகுணமோ ,
பொறுமையோ கிடையவே
கிடையாது . அவருக்குத் தேவை
பாராட்டு , புகழ் . அதற்காக
அவர் என்னவேண்டுமானாலும்
செய்வார் என்பதைத்தான்
அயர்ன்மேன் படங்கள் கூறுகிறதோ
என தோன்றுகிறது .
ஸ்பைடர்மேன் படங்களில்
பெரும்பாலும் வில்லனின்
வேலை ஹீரோயினைத்தூக்குவது ,
ஹீரோவின் வேலை முக்கி முக்கி
வில்லனை அழிப்பது .
தோர் ஒரு கடவுள் .
அவரின் தொழிலே ,
பிரபஞ்சங்களில் உள்ள
உயிரினங்களைக்காப்பது .
இதில் , தப்பிப்பிழைத்த சூப்பர்
இதில் , தப்பிப்பிழைத்த சூப்பர்
ஹீரோக்கள் இரண்டே
இரண்டு பேர் தான்.
ஒருவர் கேப்டன் அமெரிக்கா ,
மற்றொருவர் பேட்மேன் .
இதில் கேப்டன் அமெரிக்கா
நாட்டிற்காக உண்மையாக
உழைக்க நினைத்தாலும் ,
அவருக்கு இருக்கும் சக்தி
ஒரு மருந்து குப்பியில்
இருந்துதான் வந்திருக்கிறது .
எனவே அவருடைய சக்தி
இயற்கைக்கு எதிராக
கிடைக்கப்பட்டது எனலாம் .
ஆனால் , பேட்மேனோ அப்படி
கிடையாது .
அவன் ஒரு சாதரண மனிதன் .
ஒரு மாபெரும் தொழில்
சாம்ராஜ்யத்தின் வாரிசு .
கோதம் எனும் நகரத்தில் வாழும்
அவன் அந்நகரின் இளவரசன்
போன்றவன் .
அப்பேர்பட்டவன் எதற்காக
தன் நகரை கிரிமினல்களிடம்
இருந்து காப்பாற்றப்பாடுபடுகிறான்.
என்பதை விளக்கும் படமே
பேட்மேன் பிகின்ஸ் .
இதுவரை நான் பார்த்த
சூப்பர்ஹீரோ திரைப்படங்களிலே ,
சிறந்த படம் எதுவென்றால்
அது கண்டிப்பாக நோலனின்
பேட்மேன் படங்கள் தான் .
W.B நிறுவனம் பேட்மேன்
W.B நிறுவனம் பேட்மேன்
ரீபூட் சீரிஸ்காக ,
ஏற்கனவே பல இயக்குநர்களிடம்
கேட்டு வேறு வழியில்லாமல்
வந்து நின்றது .
சில இயக்குநர்கள் இயக்க
முன் வந்தாலும் ,
அவர்களின் ஸ்கரீப்டை படித்து விட்டு
W.B கண்ணீர் விடாத குறைக்கு
தள்ளப்பட்டது .
காரணம் அதற்கு முன் வந்த
பேட்மேன் படங்கள் .
ஒவ்வொரு படங்களும் இப்போது
பார்த்தால் செம காமெடியாக
இருக்கும் .
பேட்மேனைக்கொண்டு ,
SCARY MOVIE மாதிரியான
ஸ்பூஃப் படங்கள் தான்
எடுக்கப்பட்டிருக்கிறதா
எனும் சந்தேகம் வரும்
அளவிற்கு எடுத்திருப்பார்கள் .
பெங்குயின் படையைக் கொண்டு
பெங்குயின் படையைக் கொண்டு
கோதம் சிட்டியை அழிக்கவரும்
வில்லன் , ஐஸ் கன்னைக்கொண்டு
நகரையே ஐசாக்கும் வில்லன் ,
10. கிலோமீட்டர் ஆழத்திற்கு
பாதாளக்கிணறு தோண்டி
அதில் ஒவ்வொருவராக
தள்ளிக்கொல்லும் வில்லன்
என தமிழ்சினிமாவே அஞ்சி நடுங்கும்
பல காட்சிகளை கூச்சமே
இல்லாமல் வைத்து எடுத்திருப்பார்கள் .
டிம் பார்டன் இயக்கத்தில்
வெளிவந்த பேட்மேன்
மாத்திரம் உயிர்பிழைத்தது
போலிருக்கும் .
இத்தனைக்கும்
இத்திரைப்படங்களில் வில்லனாக
ஜிம் கேரி முதல் அர்னால்டு வரை
அத்தனை பேமஸ் ஹீரோக்களும் ,
பேட்மேனாக பல சூப்பர்டூப்பர்
ஹீரோக்களும் நடித்திருப்பார்கள் .
அதுவும் கடைசியாக வெளிவந்து
பேட்மேன் படத்தில்
அர்னால்டு வில்லனாக
நடித்திருக்கும் படத்தினை
சிரிக்காமல் பார்த்தால்
அதிசயம்தான் எனுமளவிற்கு
இருக்கும் .
வரிசையாக பேட்மேன் படங்கள்
எல்லாம் அட்டர்பிளாப் ஆன
காரணத்தினால் நோலனிடம்
வந்து நின்றது W.B .
நோலன் எப்போதுமே
தன் கதாபாத்திரங்களை
உளவியல் ரீதியாகத்தான்
திரையில் உலவவிட்டிருப்பார்
என்பதை முந்தைய பதிவுகளின்
வழியே தெரிந்துகொள்ளலாம் .
அதே பார்முலாவைப் பயன்படுத்தி
தான் பேட்மேன் படத்தையும்
எடுத்திருப்பார்.
இந்த பேட்மேன் நோலனால
தான் உயீர் பெற்றது என்று
செல்லலாம்.
கதைக்கு போறதுக்கு
முன்னாடி இந்த Batman
கதாபாத்திரத்தின் பின்னணி என்ன?
என்று பார்ப்போம் .
Batman என்ற கதாபாத்திரத்தின்
பின்னணி என்ன?
அதாகப்பட்டது என்னவென்றால்
( என்று ஆரம்பித்து இந்த
பேட்மேன் கதாபாத்திரம் எப்படி
உருவானது ( 1939 ல் சூப்பர்மேன்
கதாபாத்திரத்தின் வெற்றியைத்
தொடர்ந்து பாப் கேனால்
உருவாக்கப்பட்டது,
அதன் குணாதிசயங்கள் என்னென்ன ,
அதன் வில்லன்கள் யார் இதுவரை
எந்தெந்த பேட்மேன் படங்கள்
வந்துள்ளன ( ஜாக் நிகல்ஸன்
‘ஹீரோ’வாக நடித்த Batman,
அப்புறம் Batman Returns,
அப்புறம் Val Kilmer ஸ்பெஷல் – Batman
Forever followed by Batman & Robin
எல்லாத்தையும் நாங்க பார்த்துட்டோம்.
மவனே வளவளன்னு எயுதி
கொலைவெறியை தூண்டாத. )
ஆகிய விபரங்களை
இந்தமுறை எழுதப்போவதில்லை.
ஆகவே தப்பித்தீர்கள் )
என்றெல்லாம் இந்தக்
கட்டுரையை ஆரம்பிக்கமாட்டேன்.
அதற்குப் பதிலாக . . . . .
Batman & Robin படத்தின்
Batman & Robin படத்தின்
படப்பிடிப்பின்போதே அதன்
இயக்குநர் ஜோயல் ஷூமேக்கரின்
( Joel Schumacher ) படமாக்கும்
திறமையால் கவரப்பட்ட
வார்னர் ப்ரதர்ஸ், ஐந்தாவது பேட்மேன்
படமாக Batman Triumphant என்ற
படத்தை இயக்கச்சொல்லி
அவரை அணுகியது.
இதற்கு முந்தைய இரண்டு
பேட்மேன் படங்களின்
திரைக்கதையாசிரியரான
அகிவா கோல்ட்ஸ்மேன் ( Akiva Goldsman )
இந்த வாய்ப்பை ஒட்டுமொத்தமாக
நிராகரித்து எஸ்கேப் ஆகிவிட்டதால்,
வேறு ஒரு ஆளை வைத்து
( Mark Protosevich ) திரைக்கதை
ரெடி செய்யப்பட்டது.
படத்தின் வில்லனாக ஸ்கேர்க்ரோ
( Scarecrow ) இந்தக் கதையில்
வருவதாகவும், ஸ்கேர்க்ரோவின்
fear toxin என்ற மருந்து பேட்மேனுக்குள்
inject செய்யப்பட்டுவிடுவதால்,
பேட்மேனின் மனதில் எழும்
பிரமைகளில் ஜோக்கர்
உலவப்போவதாகவும்
திரைக்கதை பின்னப்பட்டது.
ஜோக்கராக அதே ஜாக் நிகல்ஸன்.
பேட்மேனாக அதே ஜார்ஜ் க்ளூனி.
ஆனால், அதுவரை வெளிவந்த
பேட்மேன் படங்களிலேயே
அரத மொக்கையாக
Batman & Robin இருந்ததால்,
( குறைவு என்றால் ஃப்ளாப் என்று
அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது.
கிட்டத்தட்ட 238 மில்லியன் வசூல்.
படத்தின் பட்ஜெட் 125 மில்லியன் ).
இதனால் வார்னர் ப்ரதர்ஸின்
கவனம் ஐந்தாவதாக அமைய
இருந்த Batman Triumphant
படத்திலிருந்து நழுவியது.
ஜோயல் ஷூமேக்கர்
ஏமாற்றமடைந்தார்.
இதன்பின் வார்னர் ப்ரதர்ஸ்
இதன்பின் வார்னர் ப்ரதர்ஸ்
நிறுவனம் எக்கச்சக்கமான
பேட்மேன் ஸ்க்ரிப்ட்களை பரிசோதித்தது.
சில வருடங்கள் இப்படிக் கழிந்தன.
இறுதியாக இயக்குநர் டேரன்
அரனாவ்ஸ்கி ( Darren Aronofsky )
வார்னரால் அமர்த்தப்பட்டார்.
உடனேயே அரனாவ்ஸ்கி
புகழ்பெற்ற காமிக்ஸ் ஆர்டிஸ்ட்
ஃப்ராங்க் மில்லரை ( Frank Miller
இவரது 1986 The Dark Knight Returns
காமிக்ஸே தொய்ந்து போயிருந்த
பேட்மேன் சீரீஸை உயிர்ப்பித்தது )
உள்ளே இழுத்துவிட்டார்.
இந்தக் கூட்டணி, பேட்மேன்
கதையை ஆரம்பத்திலிருந்து
மறுபடி எடுக்கப்போவதாக
அறிவித்தது.
இவர்கள் பேட்மேனாக
இவர்கள் பேட்மேனாக
நடிக்கச் சொல்லி
அணுகியது – Christian Bale !
வருடம் – 2002. ஆனால் க்ரிஸ்டியன் பேல்
இந்த வாய்ப்பை உடனடியாக
நிராகரித்தார்.
இதன்பின் மறுபடியும் ஆர்வம்
இதன்பின் மறுபடியும் ஆர்வம்
குறைந்த வார்னர் ப்ரதர்ஸ்,
இம்முறை Batman Vs Superman
என்ற கதையை படமாக
எடுப்பதாக அறிவித்தது.
பழைய திரைக்கதையாசிரியர்
அகிவா கோல்ட்ஸ்மேன்
ஒரு திரைக்கதையை முழுமையாக
எழுதியும் முடித்தார்.
இந்தப் படத்திலும் பேட்மேனாக
இந்தப் படத்திலும் பேட்மேனாக
நடிக்க வார்னர் ப்ரதர்ஸ் அணுகிய
நபர் – அதே க்ரிஸ்டியன் பேல்!
மறுபடியும் தயவு தாட்சண்யம்
பார்க்காமல் இந்த வாய்ப்பை
அவர் நிராகரித்தார்.
ஆனால் இந்தப் படத்தை இயக்க
வார்னர் ப்ரதர்ஸ் ஒப்பந்தம்
செய்த வுல்ஃப்கேங் பீட்டர்ஸன்,
டபக்கென்று Troy இயக்க ஓடிவிட்டதால்,
இந்தப் படமும் கைவிடப்பட்டது.
வருடம் 2003. இந்த நேரத்தில்தான்
வருடம் 2003. இந்த நேரத்தில்தான்
வார்னர் ப்ரதர்ஸ்,
அதுவரை மூன்றே மூன்று
படங்கள் இயக்கியிருந்த
ஒரு இயக்குநரை,
ஒரு புதிய பேட்மேன்
படம் இயக்கித்தரச்சொல்லி
அணுகியது.
அதற்குக் காரணம், திரைக்கதையில்
அவர் அசத்தியிருந்த படம்
ஒன்று – இதுவரை முதல் தடவை
பார்த்த யாருக்கும் புரியாத
லோ பட்ஜெட் படம்.
அதன் பெயர் – Memento.
அந்த இயக்குநர், அவருடைய
அந்த இயக்குநர், அவருடைய
முதல் பெரிய பட்ஜெட்
வாய்ப்பை ஒப்புக்கொண்டார்.
உடனடியாக, காமிக்ஸ்களில்
சம்மந்தம் உடைய David S Goyer
திரைக்கதை எழுத ஒப்பந்தம்
செய்யப்பட்டார்.
இவரும், க்ரிஸ்டோபர் நோலன்
என்ற அந்தப் புதிய இளம்
இயக்குநரும் அமர்ந்து
கதையை விவாதித்தனர்.
அப்போது, ஆல்ரெடி வெளிவந்து
பட்டையைக் கிளப்பிய
The Long Halloween என்ற காமிக்ஸ்
பற்றி Goyer நோலனுக்கு விளக்க,
அந்தக் காமிக்ஸ் அளிக்கும்
இருண்ட, தீவிரமான கதை
சொல்லல் முறையையே தனது
படத்துக்கும் அமைக்க முடிவு
செய்தார் நோலன்.
அந்தக் காமிக்ஸ் கதை,
டூ ஃபேஸின் உருவாக்கத்தையும்
விளக்கக்கூடிய கதை.
ஆகவே, முதலில் எடுக்கப்படப்போகும்
பேட்மேன் படத்தில் டூ ஃபேஸ்
கதாபாத்திரம் வருவதாக
முடிவு செய்தனர் இருவரும்.
ஆனால் அதன்பின் கதை
உருவானபோது டூ ஃபேஸ்
கதாபாத்திரத்துக்கான தளம்
இந்தக் கதையில் இல்லாததால்,
வேறொரு சந்தர்ப்பம் அமைந்தால்
அப்போது டூ ஃபேஸை
உபயோகித்துக்கொள்வதாக
முடிவு செய்தனர்.
இந்தக் கதையில் நோலன்
இந்தக் கதையில் நோலன்
பேட்மேனாக நடிக்க அணுகிய
நபர் – அதே க்ரிஸ்டியன் பேல்.
ஒருவழியாக, இம்முறை
ஒருவழியாக, இம்முறை
மீண்டும் நான்காவது தடவை
பேட்மேனாக நடிக்க வாய்ப்பு வந்தபோது ( ஏற்கெனவே வந்த இரண்டு
வாய்ப்புகளுக்கு மத்தியில்
மூன்றாவதாக வேறு ஒரு முறை
பேட்மேன் வாய்ப்பை ரிஜக்ட்
செய்திருந்தார் ),
உட்கார்ந்து யோசித்த க்ரிஸ்டியன் பேல்,
இந்த வாய்ப்பை ஒப்புக்கொண்டார்.
இதன்பின், இந்தப் படத்தில்,
ஸ்பெஷல் எஃபக்ட்களுக்கு
முக்கியத்துவம் தராமல், கதைக்கும்,
ப்ரூஸ் வேய்னின் குணாதிசயத்துக்கும்
முக்கியத்துவம் தரப்போவதாக
நோலன் முடிவு செய்தார்.
இதுவரை வந்த Batman படங்களில்
அந்தக் கதாபாத்திரத்தின்
பின்னணி இருக்காது.
ஆகவே, அதனை ஆடியன்ஸ்
மனதில் பதியும்படி
காண்பிக்கவேண்டும் என்பதும்
நோலனின் முடிவு.
இப்படியாக தனது படத்துக்கு
இப்படியாக தனது படத்துக்கு
Batman Begins என்று பெயர்
வைத்த நோலன்,
திரைக்கதை முடிந்ததும்
படப்பிடிப்பைத் துவக்கினார்.
சரி இனி கதைக்கு வருவோம்.
சரி இனி கதைக்கு வருவோம்.
கதை
ப்ரூஸ் வெய்ன் – கோதம் நகரின்
மாபெரும் பணக்கார வாரிசு.
அவரின் குடும்பம் பாரம்பரியமிக்க
மிகப்பெரும் பணக்கார குடும்பம்.
வாழ்கிறான் ப்ரூஸ் ஒரு நாள்
விளையாடிக்கொண்டிருக்கும்
சிறுவன் "ப்ருஸ் வெய்ன்"
தவறுதலாக அப்பகுதியில் உள்ள
ஒரு பாழுங்கிணற்றுக்குள்
விழுந்து விடுகிறான்.
அதனுள் வசிக்கும் வௌவால்கள்
இவனை கண்டவுடன் தாறுமாறாக
பறக்கத் தொடங்குகின்றன.
அவற்றின் கொடூர முகங்களை
அவற்றின் கொடூர முகங்களை
மிக அருகில் காணும் சிறுவன்
பயத்தினால் மிரண்டு போகிறான்.
அது அச்சிறுவனின் மனதில்
பாரிய தாக்கத்தை உண்டு
பண்ணிவிடுகிறது.
பின்னர் ஓர் நாளில் தன்
பெற்றோருடன் "மாஸ்க் ஃஒப் த சோரோ"
நாடகத்தை பார்க்க செல்கிறான்.
நாடகத்தின் இடையில்
காட்டப்படும் வௌவால்களைக்கண்டு
மன சஞ்சலம் அடைகிறான்.
மீண்டும் அவனுக்கு அந்த
கிணற்றுக்குள் நடந்த சம்பவங்கள்
கண்முன்னே வந்து செல்ல
நாடகத்தின் பாதியிலேயே
பெற்றோருடன் வெளியேறிவிடுகிறான்.
வரும் வழியில் ஒரு
கொள்ளைக்காரன் இவர்களை
துப்பாக்கிமுனையில் மிரட்டி
அவர்களின் நகை, பணம்
முதலியவற்றை கேட்க, திரு . வெய்ன்
அவர்கள் அதை மறுக்க,
திருடன் கையில் இருந்த
துப்பாக்கி சாராமாரியாக சுடப்பட
சம்பவ இடத்திலேயே
பெற்றோர்களை இழக்கிறான்
கொள்ளையடிப்பவன்.
ஆனால் போதைப்
பொருளுக்கு அடிமையானவன்
போலும். அதனால்தான்
இக்கொடூர சம்பவத்தை
அரங்கேற்றுகிறான்.
பல வருடஙகள் உருண்டோடுகின்றன.
பதின்ம வயதின் நடுப்பகுதியை
எட்டுகிறான் ப்ரூஸ்.
கொலைக்குற்றதிற்கான நிரந்தர
தண்டனை அளிக்கப்படாமல்
இன்னும் அலைகழிக்கப்படுகிறான்
அத்திருடன்.
ப்ருஸ் "சட்டம் தண்டிக்கும் முன்னதாகவே
நான் அவனை தண்டிக்க வேண்டும்"
என்ற எண்ணத்துடன் நீதிமன்ற
வளாகத்தினுள் கைத்துப்பாக்கியுடன்
நுழைந்து அவனை கொலை
செய்ய யத்தனிக்கிறான்.
ஆனால் வேறு ஒரு கும்பல்
ஆனால் வேறு ஒரு கும்பல்
'குற்றவாளி'யை தண்டித்து விடுகிறது.
ப்ரூஸ் கொலை முயற்சியில்
ஈடுப்பட்டதை அறியும் அவனது
தோழி ( Rachel ) ரேச்சல் ப்ரூசை
திட்டுவதுடன் பழிவாங்கல் வேறு ,
தண்டிப்பது வேறு என்று அவனிடம்
கூறிவிட்டு உன் தந்தை
என கூறுகிறாள்.
இதுவும் அவனது நடத்தையில்
பாரிய மாற்றத்தை உண்டு
பண்ணிவிடுகிறது.
தான் இந்நகரத்திற்கு ஏதாவது
செய்ய வேண்டும் என
அக்கணம் நினைக்கிறான்.
தனது திறனை விருத்தி செய்யும்
முகமாகவும் .
கோதம் நகரில் பெருகிவரும்
கோதம் நகரில் பெருகிவரும்
குற்றங்களுக்கு முக்கிய
காரணமான மார்க்கோனி
என்பவனைப்பற்றி கூறுகிறாள் .
மார்க்கோனியை சந்திக்கும்
ப்ரூசை , மார்க்கோனி மிரட்ட
கிரிமினல்கள் எப்படி இருப்பார்கள் ,
அவர்களின் நடவடிக்கை
பற்றியெல்லாம் அறிந்துகொள்ள
பல்வேறு நாடுகளுக்குச் சென்று
கிரிமினலாக வாழ்கிறான் .
அப்படி ஒரு முறை சீனாவில்
மாட்டிக்கொள்ள ஜெயிலில்
தள்ளப்படுகிறான் .
அங்கு ஒருவரை சந்திக்கிறான் .
அவர் தன் பெயர் மெர்லி எனவும்,
ராஸ் – அல் – குல் எனும்
சந்திக்க வந்திருப்பதாகவும் ,
குற்றங்களை களைய காலம்
காலமாக இருந்துவரும்
லீக் – ஆஃப் – ஷேடோஸ்
எனும் தங்களின் அமைப்பில்
சேருமாறு வேண்டுகிறார் .
ப்ரூசும் LEAGUE OF SHADOWS
அமைப்பில் சேர்ந்து ,
நிஞ்சா சண்டைமுறைகள் மற்றும்
தந்திரங்கள் ஆகியவற்றை
அறிந்து கொள்கிறான் .
அவனது ட்ரெய்னிங் முடிந்தபின் ,
அவன் அக்குழுவில்
முழுமையாக இணைய
வேண்டுமெனில் ,
தவறு செய்த ஒருவனை கொல்லுமாறு
ராஸ் – அல் – குல் பணிக்கிறார் .
கொல்லுவது சரியான நீதி கிடையாது ,
கொல்லுவது சரியான நீதி கிடையாது ,
அது தண்டனை என கொல்ல
மறுக்கும் ப்ரூஸ் ,
ராஸ் – அல் – குல்லிடம் சண்டையிட்டு ,
அந்த இடத்தையே அழித்து
விட்டுதனக்குப் பயிற்சியளித்த
மெர்லியுடன் தப்பிக்கிறார் .
மெர்லியை ஓரிடத்தில் விட்டுவிட்டு
தன் கோதம் நகருக்கு மீண்டும்
செல்கிறார் .
தன் நகரில் பெருகி வரும்
குற்றங்களைக் களை எடுக்கவேண்டு
மெனில் ப்ரூசாக இருந்தால்
முடியாது என்பதை உணர்ந்த
ப்ரூஸ் பேட்மேனாக உருவாகிறார் .
அவருக்குத் தேவையான ஆயுதங்கள்
மற்றும் பொருட்கள் ஆகியவற்றை ,
தன் நிறுவனத்தில்
இருந்து
உதவிகோருகிறார் .
ராணுவத்திற்காக தயாரிக்கப்பட்டு
வெளியிடாமல் வைத்திருக்கும்
வண்டிகள் மற்றும் ஆயுதங்கள்
ஆகியவற்றை கொண்டு
தனக்குத்
தேவையானவைகளாக
மாற்றி உபயோகிக்க ஆரம்பிக்கிறார்
ப்ரூஸ் இதற்காக அந்நகரின்
நேர்மையான
போலீஸ்காரரான கமிஷ்னர்
கோர்டான் அவர்களின்
உதவியை கோருகிறான்.
முதலில் மறுக்கும் அவர் பின்
முதலில் மறுக்கும் அவர் பின்
இவனது திடகாத்திர
செயல்களைக்கண்டு சம்மதம்
தெரிவிக்கிறார்.
இதே நேரம் புதிய நபர் ஒருவன்
கோதம்மை பயங்கொள்ளச்செய்கிறான்.
அவன்தான் "ஸ்கேயார் க்ரோ"
( Scare crow ). சதாரண சாக்கு
துணியை முகமூடியாக அணிந்து
கொள்ளும் இவன் மனிதர்களின்
மேல் ஒரு திரவத்தை
ஸ்பேரே செய்துவிடுவான்.
அந்த திரவம் தெளிக்கப்பட்ட
மனிதர்கள் பயத்தின் எல்லைக்கே
சென்று விடுவர்.
அவனது காமடியான முகம்
அத்தருணத்தின் போது அவர்களுக்கு
மிக கொடூரமாகக் காட்சியளிக்கும்.
வசியம் செய்தது போல் தமக்கு
தெரிந்த அனைத்து
விடயங்களையும் உளறத்தொடங்கி
தோற்றுப்போனாலும்
இரண்டாவது முயற்ச்சியில்
அவனது வழியிலேயே சென்று
அவனை மடக்குகிறார்.
அவனை விசாரித்து அவனது
அடுத்து கட்ட திட்டங்கள் என்ன?
அவன் யாருக்காக வேலை
செய்கிறான் என்பதை அறியும்
பேட்மேனுக்கு தலை சுற்ற
தொடங்குகிறது.
காரணம் அவன் வேலை செய்வது
"லீக் ஒப் ஷாடோஸின்" தலைவனான
ராஷ்-கல் இடமாகும். ராஷ்-கல்
இறக்கவில்லை உண்மையான
ராஷ்-கல் பேட்மேன் காப்பாற்றிய
ஹென்றி டூகார்ட் ஆவான்.
அவன் முதற்கட்டமாக ப்ரூஸின்
இருப்பிடத்தை அழிக்கிறான்.
பின்னர் அவனது நிறுவனத்தை
பின்னர் அவனது நிறுவனத்தை
அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான்.
பல இறுதி கட்ட சண்டைகளின்
பின் பேட்மேன் ப்ரூஸின்
நிறுவனத்தையும் கோதம்
நகரத்தையும் காப்பாற்றுகிறான்.
ராஷ்-கல் ரயில் விபத்தில் இறக்கிறான்.
இறுதியில் பேட்மேன் கமிஷ்னர்
கோர்டானை சந்திக்கிறான்.
அப்போது கோர்டான் மீண்டும்
நகரில் குற்றங்கள் தலைதூக்க
தொடங்கியுள்ளதாகவும்.
அதில் குற்றவாளி ஒருவன் சம்பவ
இடங்களில் கோமாளி படம் பொரித்த
சூதாட்ட அட்டைகளை விட்டு
செல்வதாகவும் கூறுவதோடு
படம் முடிகிறது.
இப்படியாக உருவானவன்
இப்படியாக உருவானவன்
தான் பேட்மேன் .
பேட்மேன் பிகின்ஸ்
படத்தைப்பொறுத்தவரை ,
பேட்மேனுக்கு இரண்டு முக்கிய
வில்லன்கள் . ஒருவன் , காமிக்ஸ்களில்
வரும் SCARECROW , இன்னொருவன்
ராஸ் – அல் – குல் . SCARE CROW
தன்னிடம் இருக்கும் ஒரு
விஷவாயுவை செலுத்தி
மற்றவர்களை பயத்தின்
உச்சிக்குக்கொண்டு சென்று
கிட்டத்தட்ட
பைத்தியக்காரனாக்கிவிடுவான் . இறந்துவிட்டதாக நினைத்த
ராஸ் –அல் – குல்லோ ,
மீண்டும் வந்து கோதம் நகரில்
பெருகிவரும் குற்றங்களின்
காரணமாய் அந்நகரை
அழிக்கப்போவதாய் கூறிவிட்டு ,
செய்ய ஆரம்பித்துவிடுவான் .
இவர்கள் இருவரையும் சமாளித்து ,
எப்படி கோதம் நகரை
காப்பாற்றப்போகிறான் என்பதே
பிகின்ஸ் படத்தின் கதை .
இதற்காக பேட்மேனுக்கு ரேச்சல்,
கோர்டன் எனப்படும் நேர்மையான
போலிஸ் அதிகாரி ,
தன் விசுவாசமான பட்லரான ஆல்பிரட்
மற்றும் ப்ரூசின் தொழிற்கூடத்தில்
இருக்கும் விஞ்ஞானி ஃபாக்ஸ்
ஆகியோர் உறுதுணையாய்
இருப்பார்கள் .
பேட்மேனிடம் இருக்கும்
பேட்மேனிடம் இருக்கும்
ஆயுதங்களைக்கொண்டு அவனால்
அழகாய் எல்லா
வில்லன்களையும்
போட்டுத்தள்ளிவிடமுடியும் .
ஆனால் மற்றவர்களைக்
கொல்லுவதென்பது நீதியாக முடியாது .
நீதி என்பது வேறு பழிவாங்கல்
என்பது வேறு என்பதே
பேட்மேன் கொள்கை .
அவனுக்குத்தேவை ,
தன் தந்தை உயிராய் நினைத்த
கோதம் நகரம் அமைதியாய்
வாழவேண்டும் .
குற்றங்களும் குற்றவாளிகளும்
இல்லாமல் மக்கள்
நிம்மதியாய் இருக்கவேண்டும் .
தன்னுடைய
நடத்தையைக்கொண்டு ,
யாரேனும் தான் பேட்மேன்
என்பதைக் கண்டுபிடித்துவிடுவார்கள
என்ற பயத்தின் காரணமாய்
பகலில் பல பெண்களுடன்
குடித்துவிட்டு கும்மாளமடிக்கும்
ஒரு பகட்டான பணக்கார
இளைஞன் ப்ரூஸாகவும் இரவானால்
ஒரு நகரை காக்க
தன்னுயிரையும் ஈயத்தயாராய்
இருக்கும் ஒரு தாயாகவும்
இரட்டை வாழ்க்கை வாழ்வான்
ப்ரூஸ் .
இதைக்கூறமுடியாமல் தவிப்பது ,
மற்றவர்கள் முன்னிலையில்
திமிராகத் திரிந்து ,
ஆடம்பரமாக செலவிட்டு கெட்ட
பெயர் வாங்கிக்கொண்டு வீட்டில்
தன் பட்லரான ஆல்பரட்டிடம்
புலம்புவது ,
பேட்மேனாக இரவு சென்று
வாங்கிய காயங்களைக்
காலையில் ஆல்பிரட்டுடன்
அமர்ந்து ஹாஸ்பெடல் கூட
செல்லமுடியாமல்
தனக்குத்தானே
தையலிட்டுக்கொண்டிருக்கும்
ப்ரூசை பார்க்கும் போது
நமக்குத்தோன்றுவது
ஒன்றே ஒன்றுதான் .
பேட்மேன் ஒரு சூப்பர் ஹீரோ
கிடையாது , அவன் ஒரு சூப்பர்மனிதன் .
திரைக்கதை அமைப்பும்
திரைக்கதை அமைப்பும்
காட்சிகளின் பிரமாண்டமும்
இட்படத்தை இன்னொரு லெவலுக்கு
இட்டு செல்கின்றன.
இதற்கு முன் வந்த பேட்மேன்
படங்களிலேயே சிறந்தது எதுவென்று
கேட்டால் நிச்சயமாக இப்படத்தைக்
கூறலாம். பேட்மேன் ரசிகர்கள்
பார்க்க வேண்டிய படம்.
பி.கு
இப்படத்தில் ப்ரூஸ் வெய்னாக ,
பி.கு
இப்படத்தில் ப்ரூஸ் வெய்னாக ,
என் அபிமான நடிகர்
கிறிஸ்டியன் பேல்.
இவரைப்பற்றிக்கூற வேண்டுமெனில்
பத்து பதிவுகள் தாராளமாக
எழுதலாம் நடிப்பிற்காக
என்னவேண்டுமானாலும்
செய்வார் .
அமெரிக்கன் சைக்கோ ,
தி மெஷினிஷ்ட் , RESCUE DAWN ,
போன்ற படங்களைப் பார்த்தால்
இவரின் நடிப்பார்வத்தை
தானாகத்தெரிந்து கொள்ளலாம் .
மனிதர் இப்படத்தில்
ப்ரூஸ் வெய்னாய் வாழ்ந்திருப்பார் .
ஒரு காட்சியில் கூட நடித்திருக்கிறார்
ஒரு காட்சியில் கூட நடித்திருக்கிறார்
என்று யாராலும் சொல்லமுடியாத
அளவு அந்த கேரக்டருடன்
ஒன்றிணைந்து இருக்கிறார் .
இப்படத்திற்காக MTV அவார்ட்
ஒன்றையும் தட்டிக்கொண்டு
சென்றார் .
ராஸ் - அல் - குல்லாக TAKEN படங்களில்
நடித்து தூள் கிளப்பிய
NIAM LEESON . பாக்சாக GARY OLDMAN .
ப்ரூசின் விஸ்வாசியான ALFRED
ஆக மைக்கேல் கெய்ன் .
மைக்கேல் கெய்ன் முதன்முதலில்
நோலனிடம் மாட்டியது
இப்படத்தில்தான் .
இதன்பின் வந்த அனைத்து
நோலன் படங்களிலும் இவர்
கண்டிப்பாய் இருப்பார் .
இவரின் மிகச்சரியான பிரிட்டிஷ்
இங்கிலிஷ் வசன
உச்சரிப்பிற்காகவே எவ்வளவு
முறை பார்த்தாலும் சலிக்காது.
அடுத்து ஒளிப்பதிவாளர்
அடுத்து ஒளிப்பதிவாளர்
வாலி ப்ளிஸ்டர் பற்றி ஏற்கனவே
மெமென்டோ பதிவில்
பார்த்தாகிய காரணத்தால் ,
அவரைப்பற்றி கூறுவதைவிடவும்
படத்தின் ஒளிப்பதிவு அமைப்பைப்பற்றி
ஒரு வார்த்தை காணலாம் .
இப்படம் ஒரு வகையான டார்க்
தீமில் எடுக்கப்பட்டிருக்கும் .
ஒருவித பழுப்பு வண்ணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில்
ஒளிப்பதிவு வழக்கம்போல்
அட்டகாசம்தான் .
78வது ஆஸ்கார் விழாவில்
இப்படத்தின் ஒளிப்பதிவிற்காக
தலைவர் நாமினேட்
ஆனதில் ஆச்சரியமில்லை .
ஆகவேண்டிய மற்றொரு
ஆள் இசையமைப்பாளர்.
ஹான்ஸ் சிம்மர் மற்றும் ஜேம்ஸ் நியூடன் ஹவார்ட் ஆகியோரால் இசையமைக்கப்பட்டது. முதலில் ஹான்ஸ் சிம்மரை மட்டுமே இசையமைக்க. அழைத்தார். பின்னர் சிம்மரின் வேண்டுகோளின்படி ஜேம்ஸ் நியூடன் ஹவார்தினையும் அழைத்தார். இருவரும் தனித்தனியாக புரூஸ் வேய்னின் இரு (பேட்மேன் மற்றும் தொழிலதிபர்) முகங்களுக்கு இசையமைத்தனர். முதலில் லாஸ் ஏஞ்செலஸ்சில் இசையமைக்க ஆரம்பித்தனர். பின்னர் இருவரும் இலண்டணிற்கு சென்று பன்னிரண்டு வாரங்களாக சேர்ந்து இசையமைத்தனர். தங்கள் இசையினை மேலும் மேம்படுத்த பேட்மேன் பிகின்ஸ் படப்பிடிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஹான்ஸ் சிம்மர் முந்தைய பேட்மேன் திரைப்படங்களில் பயன்படுத்திய இசையினை முற்றிலும் தவிர்க்க முயன்றார். ஆனால் முழுமையாக தவிர்க்க இயலவில்லை. இரு இசையமைப்பாளர்களும் இணைந்து திரைப்படத்திற்காக 2 மணி நேரம் 20 நிமிடங்கள் இசையமைத்தனர்.
இப்படம் , நோலனின் நான் – லீனியர் திரைக்கதையில் மிகத்தெளிவாய் எடுக்கப்பட்டிருக்கும் . மேலும் பக்காவான வசனங்கள் படத்திற்கு மாபெரும் பலம் சேர்க்கும். நோலன் படங்களை உற்றுநோக்கினால் , அரைநிர்வாண காட்சிகள் , மேட்டர் காட்சிகள் போன்றவை அறவே கிடையாது . அதனால் தான் என்னவோ , சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திருக்கிறான் இந்த பேட்மேன் . வழக்கம்போல் கிராபிக்ஸ் அதகளம் எல்லாம் பண்ணாமல் , ஒரு சாதாரண ஹீரோவால் என்ன செய்யமுடியுமோ அதை அப்படியே காட்டியிருப்பார்,
இத்திரைப்படம் சூலை 15 2005 அன்று அமெரிக்கா மற்றும் கனடாவில் திரையிடப்பட்டது. தனது முதல் வாரத்தில் $48 மில்லியன் வருவாயினை ஈட்டித் தந்தது. உலகம் முழுவதும் மொத்தம் $372 மில்லியன் வருவாயினை ஈட்டித் தந்து.
சனவரி 2003 இல் வார்னர் சகோதரர்கள் மெமன்டோ திரைப்பட இயக்குநரான கிறிஸ்டோபர் நோலனை ஓர் பேட்மான் திரைப்படம் ஒன்றை எடுக்க அழைத்தது. மேலும் இரண்டு மாதங்களுக்கு பிறகு டேவிட் கோயர் என்பவரை திரைக்கதை எழுத வைத்தது. மீண்டும் புதியதாக பேட்மான் திரைப்படங்களை உருவாக்க நோலன் தனது விருப்பத்தை தெரிவித்தார். மேலும் பேட்மானின் அசல் கதையினை வெளிக்கொண்டு வரப்போவதாக கூறினார்.
1978 இல் வெளியான ரிச்சர்ட் டான்னரின் சூப்பர்மேன் திரைப்படமே தனது உந்துகோல் என்று நோலன் கூறினார். சூப்பர்மேன் திரைப்படத்தைப் போன்றே பேட்மான் திரைப்படத்திலும் சிறந்த நடிகர்களை நடிக்க வைக்க விருப்பபட்டார். அதனால் கதைக்கும் திரைப்படத்திற்கும் உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பினார்.
படப்பிடிப்பு
தனது பிற திரைப்படங்களைப் போலவே திரைப்படமெடுக்க மற்றொரு குழுவினை பயன்படுத்துவதை தவிர்த்தார். தனது மேற்பார்வையிலேயே அனைத்து காட்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று நம்பினார்.
படப்பிடிப்பு மார்ச் 2004 இல் தொடங்கியது. நோலன் திரைப்படத்தின் காட்சிகள் நிறையவற்றை இங்கிலாந்திலேயே எடுத்தார். இத்திரைப்படத்தினை அனைத்து வயதினோரும் பார்க்குமாறு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார். அதற்காக கோரமான காட்சிகளைத் தவிர்த்தார்,
படப்பிடிப்பு நடந்த இடங்கள்
வத்னஜோகு பனிப்பாறை,
ஹான்ஸ் சிம்மர் மற்றும் ஜேம்ஸ் நியூடன் ஹவார்ட் ஆகியோரால் இசையமைக்கப்பட்டது. முதலில் ஹான்ஸ் சிம்மரை மட்டுமே இசையமைக்க. அழைத்தார். பின்னர் சிம்மரின் வேண்டுகோளின்படி ஜேம்ஸ் நியூடன் ஹவார்தினையும் அழைத்தார். இருவரும் தனித்தனியாக புரூஸ் வேய்னின் இரு (பேட்மேன் மற்றும் தொழிலதிபர்) முகங்களுக்கு இசையமைத்தனர். முதலில் லாஸ் ஏஞ்செலஸ்சில் இசையமைக்க ஆரம்பித்தனர். பின்னர் இருவரும் இலண்டணிற்கு சென்று பன்னிரண்டு வாரங்களாக சேர்ந்து இசையமைத்தனர். தங்கள் இசையினை மேலும் மேம்படுத்த பேட்மேன் பிகின்ஸ் படப்பிடிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஹான்ஸ் சிம்மர் முந்தைய பேட்மேன் திரைப்படங்களில் பயன்படுத்திய இசையினை முற்றிலும் தவிர்க்க முயன்றார். ஆனால் முழுமையாக தவிர்க்க இயலவில்லை. இரு இசையமைப்பாளர்களும் இணைந்து திரைப்படத்திற்காக 2 மணி நேரம் 20 நிமிடங்கள் இசையமைத்தனர்.
இப்படம் , நோலனின் நான் – லீனியர் திரைக்கதையில் மிகத்தெளிவாய் எடுக்கப்பட்டிருக்கும் . மேலும் பக்காவான வசனங்கள் படத்திற்கு மாபெரும் பலம் சேர்க்கும். நோலன் படங்களை உற்றுநோக்கினால் , அரைநிர்வாண காட்சிகள் , மேட்டர் காட்சிகள் போன்றவை அறவே கிடையாது . அதனால் தான் என்னவோ , சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திருக்கிறான் இந்த பேட்மேன் . வழக்கம்போல் கிராபிக்ஸ் அதகளம் எல்லாம் பண்ணாமல் , ஒரு சாதாரண ஹீரோவால் என்ன செய்யமுடியுமோ அதை அப்படியே காட்டியிருப்பார்,
இத்திரைப்படம் சூலை 15 2005 அன்று அமெரிக்கா மற்றும் கனடாவில் திரையிடப்பட்டது. தனது முதல் வாரத்தில் $48 மில்லியன் வருவாயினை ஈட்டித் தந்தது. உலகம் முழுவதும் மொத்தம் $372 மில்லியன் வருவாயினை ஈட்டித் தந்து.
சனவரி 2003 இல் வார்னர் சகோதரர்கள் மெமன்டோ திரைப்பட இயக்குநரான கிறிஸ்டோபர் நோலனை ஓர் பேட்மான் திரைப்படம் ஒன்றை எடுக்க அழைத்தது. மேலும் இரண்டு மாதங்களுக்கு பிறகு டேவிட் கோயர் என்பவரை திரைக்கதை எழுத வைத்தது. மீண்டும் புதியதாக பேட்மான் திரைப்படங்களை உருவாக்க நோலன் தனது விருப்பத்தை தெரிவித்தார். மேலும் பேட்மானின் அசல் கதையினை வெளிக்கொண்டு வரப்போவதாக கூறினார்.
1978 இல் வெளியான ரிச்சர்ட் டான்னரின் சூப்பர்மேன் திரைப்படமே தனது உந்துகோல் என்று நோலன் கூறினார். சூப்பர்மேன் திரைப்படத்தைப் போன்றே பேட்மான் திரைப்படத்திலும் சிறந்த நடிகர்களை நடிக்க வைக்க விருப்பபட்டார். அதனால் கதைக்கும் திரைப்படத்திற்கும் உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பினார்.
படப்பிடிப்பு
தனது பிற திரைப்படங்களைப் போலவே திரைப்படமெடுக்க மற்றொரு குழுவினை பயன்படுத்துவதை தவிர்த்தார். தனது மேற்பார்வையிலேயே அனைத்து காட்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று நம்பினார்.
படப்பிடிப்பு மார்ச் 2004 இல் தொடங்கியது. நோலன் திரைப்படத்தின் காட்சிகள் நிறையவற்றை இங்கிலாந்திலேயே எடுத்தார். இத்திரைப்படத்தினை அனைத்து வயதினோரும் பார்க்குமாறு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார். அதற்காக கோரமான காட்சிகளைத் தவிர்த்தார்,
படப்பிடிப்பு நடந்த இடங்கள்
வத்னஜோகு பனிப்பாறை,
ஐஸ்லாந்து. செப்பர்டன் ஸ்டுடியோஸ்,
இங்கிலாந்து. விமான நிலையம்,
கார்டிங்க்டன், பெட்போர்ட்ஷையர்,
இங்கிலாந்து மேன்ட்மோர் டவர்கள்
தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிலையம்,
தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிலையம்,
மில் ஹில், வடமேற்கு
இலண்டன், இங்கிலாந்து.
பல்கலைக்கழக கல்லூரி,
பல்கலைக்கழக கல்லூரி,
இலண்டன்சிகாகோ, இல்லியனாய்ஸ்,
ஐக்கிய அமெரிக்கா
வடிவமைப்பு
நோலன் 1982 இல் வெளியான
வடிவமைப்பு
நோலன் 1982 இல் வெளியான
பிளேட் ரன்னர் திரைப்படத்தினை
உந்துகோலாக பயன்படுத்தினார்.
அத்திரைப்படத்தினை
தன் திரைப்படக் குழுவினருக்கு
திரையிட்டுக் காட்டி அந்த
வகையில் திரைப்படத்தினை
எடுக்க வேண்டும் என்றார்.
நேதன் கிரோவ்லி திரைப்படத்திற்காக
நேதன் கிரோவ்லி திரைப்படத்திற்காக
கொதம் மாநகரத்தினை
வடிவமைத்தார்.
இதற்காக நியூ யார்க், சிகாகோ,
டோக்கியோ, ஹாங்காங்
போன்ற நகரங்களின்
பகுதிகளை பயன்படுத்தினார்.
பேட்மோபில்
கொதம் நகரத்தை வடிவமைத்த
பேட்மோபில்
கொதம் நகரத்தை வடிவமைத்த
நேதன் கிரோவ்லியே
பேட்மொபிலினை வடிவமைத்தார்.
நான்கு மாதங்களில் மொத்தம்
ஆறு வடிவமைப்புகளை செய்தார்.
பின்னர் தேர்வு செய்யப்பட்ட
பேட்மொபில் வடிவமைப்பினை
பிலாஸ்டிக்கில் உருவாக்க
இரண்டு மாதங்கள் ஆகின.
பின்னர் எஃகு பயன்படுத்தி
வாகனத்தின் உடம்பு
மட்டும் தயாரிக்கப்பட்டது.
வாகனத்தின் தயாரிப்பு
வாகனத்தின் தயாரிப்பு
ஒன்பது மாதங்களானது.
பல மில்லியன் அமெரிக்க
டாலர்கள் செலவானது.
பேட்மொபில் திரைக்காட்சிகள்
பேட்மொபில் திரைக்காட்சிகள்
சிகாகோ தெருக்களில் படமாக்கப்பட்டது.
அடுத்த பதிவில சந்திப்போம்
என்றும் அன்புடன்
கிருஷாந்
அடுத்த பதிவில சந்திப்போம்
என்றும் அன்புடன்
கிருஷாந்
கருத்துகள்