தன்னம்பிக்கையின் நாயகன் தல

           தன்னம்பிக்கையின்   நாயகன்   அஜித்







இன்றைக்கு      தல     அஜித்தின்      
அவரை    பற்றி      ஒரு      பதிவு      
போடலாம் என்று          இருக்கேன்.      
தல    பற்றி     என்ன      
எமுத     போற.      
எங்களுக்கு    தல     பற்றி      
எல்லாம்      தொரியும்.     
நீ    என்ன     புதுசா     எமுத     போற.     
ஓகே     அப்படி     நிங்க     செல்லுறது    புரிது.      
இது     எமுத    காரணம்     தல     
என்ற     ஒரு     நல்ல     மனிதரை     
பற்றி     எமுதலாம்     என்று      தான்.      
நீங்க     அவரோட     ரசிகன்     
இவரோட     ரசிகன்     யாரோட     
ரசிகனாவும்     இருந்தாலும்      
பரவாயில்லை     இன்றைக்கும்      
மட்டும்     எல்லாத்தையும்     மறந்துட்டு      
ஒரு     நல்ல     மனிதனுக்கு      
வாழ்த்து     சொல்லுவோம்.








அஜித்     என்றால்      உழைப்பு,     
அஜித்     என்றால்     துணிவு     என      
அர்த்தம்      சொல்கிறார்கள்     ரசிகர்கள்.     
அதை      ஒப்புக்கொள்ளும்     
விதமாக      இருக்கிறது      
அஜித்தின்      வாழ்க்கை     16    வயதில்





11-ம்    வகுப்பைத்    தொடர     
விரும்பாத   ‘ட்ராப்  – அவுட்’    மாணவர்.      
19   வயதில்     டூ வீலர்      மெக்கானிக்.     
20   வயதில்    தொழில்     அதிபர்.      
22   வயதில்    சினிமாவில்      கதாநாயகன்.       
24   வயதில்     பைக்     பந்தய     வீரர்.     
மாநில     அளவிலான     பைக்     
பந்தயம்    ஒன்றில்      
பங்கேற்றபோது,      
நேர்ந்த     விபத்தில்      அஜித்தின்       
முதுகெலும்பு     முறிந்துபோனது.       
ஆனால்,       இன்றுவரை      தனது      
தன்னம்பிக்கையைக்       கைவிட்டதில்லை     
அஜித்.       
தன்னம்பிக்கை      கலைஞனாக      
ஜொலிக்கும்      அஜித்துக்கு       
இன்று    பிறந்த      நாள்.







''என்     வாழ்க்கையில      ஒவ்வொரு     
நாளும்     ஒவ்வொரு      நிமிஷமும்     
ஏன்    ஒவ்வொரு      நொடியையும்     
நானே      செதுக்குனதுடா''      
என்று    'பில்லா  2'      திரைப்படத்தில்      
அஜித்     வசனம்      பேசியிருப்பார்.      
அந்த     வசனம்     தான்      அஜித்தின்     
வாழ்க்கையும்     கூட.     
வார்த்தைக்கும்,      வாழ்க்கைக்கும்      
வித்தியாசம்








இல்லாமல்     இடைவெளி     
இல்லாமல்      வாழும்    நடிகர்      
அஜித்    என்பதைத்     தெரிந்துகொள்ள.     
அஜித்     வரலாறைப்     புரட்டியே      
ஆக    வேண்டும்.









எந்தவொரு     சினிமாப்     பின்னணியும்      
இல்லாமல்,      தமிழ்த்      
திரையுலகில்     நுழைந்து, 







தனது     கடின     உழைப்பால்     முன்னேறி,        
தனக்கென     ரசிகர்கள்     கூட்டத்தைத்       
தனது      நடிப்பால்     உருவாக்கி,       
அவர்கள்      மனத்தில்    ‘தல’      
என்று     நிலைத்திருப்பவர்,     அஜித்






அஜீத் குமார்     அவர்கள்,      
இந்தியாவில்     உள்ள   ஆந்திர      
மாநிலத்தின்     தலைநகரமான





ஹைதராபாத்தில்,     பாலக்காடு      
தமிழ்    ஐயரான      சுப்ரமணியம்      
என்பவருக்கும்,     கொல்கத்தா      
சிந்தி     சமூகத்ததை     சேர்ந்த     
மோகினி     என்பவருக்கும்     
இரண்டாவது      மகனாக      
மே  மாதம்  1  ஆம்  தேதி,    
1971 ஆம்    ஆண்டில்     பிறந்தார்.      
அவரது     அண்ணனான     அனூப் குமார்       
நியூயார்க்கில்     பங்குத்தரகராகவும்,       
அவரது    தம்பியான     அணில்   குமார்      
சியாட்டலில்     பணிபுரிகிறார்.








என்னதான்     பாலக்காடு      
வழி    தந்தைக்கும்,





சிந்தி     தாய்க்கும்     மகனாக,      
ஹைதராபாத்தில்     பிறந்திருந்தாலும்,     
அஜீத்   குமார்     அவர்கள்      
தமிழ்நாட்டில்     உள்ள      
சென்னையில்     வளர்ந்தார்.      
சென்னையில்     உள்ள      
ஆயிரம்    விளக்குப்     பகுதியில்      
இருக்கும்    ஆசான்     மெமோரியல்      
உயர்நிலைப்பள்ளியில்     தனது       
பள்ளிப்படிப்பைத்      தொடங்கிய     அவர்,     
படிப்பின்     மீது     பற்றற்றவராகவே      
காணப்பட்டார்.       
இதனால்,    1986ல்    தனது       
உயர்நிலைக்      கல்வியைத்      
தொடங்குவதற்கு     முன்பே,     
பெற்றோர்களின்     விருப்பத்தையும்      
எதிர்த்துத்     தனது      
பள்ளிப்படிப்பை      
நிறுத்திக்கொண்டார்.     
ஒரு     இரு    சக்கர     பைக்     
மெக்கானிக்காகப்     பணியில்      
சேர்ந்தார்.







பைக்,     கார்    ஓட்டுவதில்    அதிக      
ஆர்வம்    காட்டிய     அவர்,       
தானாகவே     அவற்றை     
ஓட்ட     கற்றுக்கொண்டு,       
அதற்கான     உரிமத்தையும்     பெற்றார்.     
பைக்    பந்தயம்     தான்     தனது      
தொழில்    பாதை    என்று      
தேர்ந்தெடுத்த    அவர்,      
அதில்     கலந்து     கொள்ளப்     
பணம்    வேண்டுமென்பதால்,        
அவ்வப்போது,    சிறு     சிறு     
பத்திரிக்கை     விளம்பரங்கள்      
மற்றும்    தொலைக்காட்சி      
விளம்பரங்களில்     நடித்து     வந்தார்.      
பைக்    பந்தயத்தின்     போது     
ஏற்பட்ட     காயத்தினால்,       
அவரைப்     பல    வணிக      
முகவர்கள்     அச்சு     ஊடகங்களின்









விளம்பரங்களில்      நடிக்க     வைக்க      
அவரைத்     தூண்டினர்.     
இதனால்,     அவருக்குப்    பல     
திரைப்பட    வாய்ப்புகள்      
குவிந்தது.     ‘பந்தயமா?    சினிமாவா?’      
என்று     வந்த    போது,      
அவர்   பணம்    சம்பாதிக்க     
வேண்டுமென்ற     எண்ணத்தினால்,     
சினிமாவில்     காலடி     எடுத்து    வைத்தார்.









திரையுலக   வாழ்க்கை



அப்போது     அஜித்     அப்பாவின்      
நண்பர்களில்      ஒருவரான.     
செண்பகராமன்      இயக்கிய   






என்  வீடு    என்   கணவர்   ’(1990)      
என்ற    படத்தில்      
( சுரேஷ்  –  நதியா  நடித்தது )     
இடம்பெற்ற.     
‘என்  கண்மணி’     என்ற    பாடல்     
காட்சியில்     பள்ளி     மாணவராகத்      
தோன்றினார்     அஜித்.     
சினிமா    கேமரா     முன்பு     அவர்     
நின்றது     அதுவே      முதல்முறை.








அஜித்தின்    அண்ணனோ     ( அனூப் குமார் ),    அவருடைய      தம்பியோ    ( அணில் குமார் )       
தொட    விரும்பாத     அப்பாவின்     
பைக்கைப்     பள்ளி     நாட்களில்     
துணிவுடன்    எடுத்து    ஓட்டுவார்     அஜித்.     
பத்தாம்     வகுப்புக்குப்      பின்னர்     
என்ஃபீல்டு      நிறுவனத்தில்      
இருசக்கர      வாகன     மெக்கானிக்காக      
ஒரு    வருடம்    பயிற்சி      பெற்று,      
டிப்ளமோ    பெற்றார்.      
அப்போது      பைக்    பந்தயம்      
மீதான     ஆர்வம்     மேலும்     அதிகரித்தது.       
இந்த     நேரத்தில்     ஈரோட்டில்      
உள்ள     ஒரு    ஆயத்த     
ஆடை    நிறுவனத்தில்      அவருக்கு      
வேலை      கிடைத்தது.       
அங்கே     நான்கு      ஆண்டுகள்      
பணிபுரிந்த     அஜித்,       
கிடைத்த     அனுபவத்துடன்     
‘டெக்ஸ்டைல்     புராசஸிங்’     
துறையில்    சொந்தமாகத்      
தொழில்     தொடங்கினார்.









அதில்     அவருக்கு     நஷ்டமே     மிஞ்சியது.       
அப்போது       மாடலிங்    வாய்ப்புகள்     
கை     கொடுத்தன.     
‘மியாமி  குஷன்’    காலணி     
உள்ளிட்ட     சில     விளம்பரங்களில்      
நடித்தார்.      
இந்த     நேரத்தில்      வாகன      
உதிரி    பாகங்கள்     தயாரிப்பு      
நிறுவனமான  டி.ஐ.    டையமண்ட்    
செயின்      நிறுவனம்,      
தனது      கார்ப்பரேட்      குறும்படத்துக்கு      
ஒரு     இளம்      பைக்     
பந்தய     வீரரைத்     தேடியது.       
மாடல்    ஒருங்கிணைப்பாளர்     மூலம்      
அந்த     வாய்ப்பு      அஜித்துக்குக்      
கிடைத்தது.      
பைக்     பந்தய     வீரராக     அந்தப்      
படத்தில்      நடித்தார்     அஜித். 









இந்தக்      குறும்படம்       காரணமாக     
‘பிரேம  புஸ்தகம்’  (1993)     
என்ற    தெலுங்குப்      படத்தில்       
கதாநாயகனாக      
நடிக்கத்       தேர்வுசெய்யப்பட்டார்.      
இரண்டாவதாக      அஜித்     
ஒப்புக்கொண்ட      ‘அமராவதி’(1993)    
அவரது     முதல்     தமிழ்ப்     படமானது.     
அஜித்தின்    தமிழ்     அறிமுகப்      
படத்தைத்       தொடர்ந்து,       
ஐந்துக்கும்     அதிகமான     படங்களில்     
நடிக்க     வாய்ப்புகள்      வந்தன      
ஆனால்     ‘அமராவதி’      
படத்துக்குப்பின்      பைக்    பந்தய       
விபத்தில்     சிக்கி      சுமார்     
ஒன்றரை    ஆண்டுகள்     வீட்டில்    
படுத்த    படுக்கையாக     இருந்தார்.      
உழைப்பை     நம்புபவராக     இருந்தாலும்      
இந்த    விபத்து, ‘   நேரம்,     
அதிர்ஷ்டம்,    தலைவிதி’      
ஆகியவற்றின்     மீது     நம்பிக்கை     
கொண்டவராக      அஜித்தை    
மாற்றியது.









அஜித்தின்     முதல்     வெற்றிப்      
படம்    ‘ஆசை’.     அஜித்தின்       
திரைப்பயணத்தில்      
திருப்புமுனையாக     அமைந்து,       
அவரைக்    காவிய     நாயகன்     
ஆக்கியது    ‘காதல் கோட்டை’.      
மூன்று     தேசிய    விருதுகளுடன்     
365   நாட்கள்    ஓடிய      
‘காதல்   கோட்டை’யின்       
வெற்றிக்குப்    பிறகு,     
ரசிகர்களின்     மனதில்    கோட்டை     
கட்டினார்    அஜித்.      
காதல்    கதைகளில்     மட்டும்தான்     
அஜித்    நடிப்பார்     என்பதை,    
‘வாலி’யும்     ‘அமர்க்கள’மும்





மாற்றின.     
‘அமர்க்களம்’    படத்தில்     
நடித்தபோது      ஷாலினியுடன்     மலர்ந்த      
காதல்    திருமணத்தில்    முடிந்தது.    
இந்து,   இஸ்லாம்,     கிறிஸ்தவ      
முறைகளில்      ஷாலினியை     
மணந்துகொண்டார்.       
திருமணத்துக்குப்     பிறகு








காதல்     கிசுகிசுக்களில்     
சிக்காத     நடிகராகவும்,      
பேட்மிண்டன்     விளையாட்டில்      
மனைவியை     ஊக்குவிக்கும்     அன்பான      
கணவராக     இருக்கிறார்.      
‘அமர்க்களம்’    படத்துக்குப்     
பின்     அடுத்தடுத்துப்    பல    
வெற்றிகள்      அமைந்தாலும்    
தீனா     படத்துக்குப்     பிறகு   ‘தல’     
என்று     அவருடைய     ரசிகர்கள்     
அழைக்கத்     தொடங்கினர்.      
பாக்ஸ்    ஆபீஸிலோ   ‘ ஓபனிங்  ஸ்டார்’     
என்று    பாராட்டத்      
தொடங்கினார்கள்.      
‘வரலாறு’     படத்தில்     பெண்     
தன்மை     இழையோடிய      நடனக்     
கலைஞர்     கதாபாத்திரத்திலும்,       
‘வில்லன்’     படத்தில்     சில     
நொடிகளில்    முகபாவங்களை      
மாற்றும்    எதிர்மறைக்      
கதாபாத்திரத்திலும்     நடித்தது,       
அஜித்துக்கான      வெகுஜன     
ரசிகர்களின்      
கூட்டத்தை     அதிகப்படுத்தியது.







“எனக்கு     கட்    அவுட்,       
பாலாபிஷேகம்    வேண்டாம்.       
அவரவர்     அம்மா,    அப்பாவைக்      
கவனியுங்கள்”    என்பது     தன்     
ரசிகர்களுக்கு      அஜித்தின்     
கண்டிப்பான     அறிவுரை.       
ஒரு    கட்டத்தில்     தனது     
ரசிகர்    மன்றங்களை     முற்றாகக்     
கலைத்த     துணிச்சல்     மிக்க      
இந்திய     நடிகர்     இவர்     மட்டுமே.           



 

‘அஜித்   ரசிகர்’    என்ற 






அடையாளத்துடன்     எனது      
பெயரைப்    பயன்படுத்தி     
அவதூறில்     இறங்குபவர்களுக்கு     
நான்     பொறுப்பேற்க     முடியாது      
என்று    சட்டரீதியாக     அறிவித்திருக்கும்     
முதல்    நடிகரும்     இவரே.      
அஜித்    தனது    ரசிகர்     மன்றங்களைக்      
கலைத்த     பிறகு    அவரது     
படங்களின்     வசூல்    இரண்டு     
மடங்காக     உயர்ந்தது.      
“நன்றாக     இருந்தால்    மட்டும்    
என்    படத்தைப்      பாருங்கள்.     
மற்ற     நடிகர்களின்      
படங்களையும்     பாருங்கள்”     
என்று     பரிந்துரைக்கும்    அஜித்,     
“எனது    தொழில்     நடிப்பதுடன்      
முடிந்துவிடுகிறது.      
” எனக்    கூறித்    தனது      
படத்தின்     விளம்பர     
நிகழ்ச்சிகளுக்கு     வருவதை     
நிறுத்தி     விட்டவர்.







தன்னிடம்    நீண்ட     காலமாகப்     
பணியாற்றிவரும்     
‘டச்  அப்’     உதவியாளர்     
தொடங்கி     பலருக்கும்     வீடு     
கட்டிக்கொடுத்திருக்கிறார்.     
தான்     செய்யும்     உதவிகள்     
வெளியே    தெரியக்      கூடாது      
என்பதில்     மிகக்    கவனமாக     
இருப்பவர்      அஜித்.     
தன்     பெற்றோரின்     பெயரில்    
‘மோகினி- மணி’ 





அறக்கட்டளை    தொடங்கி,     
அதன்    மூலம்    உதவிகள்     
தேவைப்படும்     
கையறுநிலையில்     
தவிப்பவர்களுக்கு     உதவி     வருகிறார்.      
தனது     முன்னாள்     
மேனேஜருக்கு     ஊதியம்      வாங்காமல்      
படம்     நடித்துக்கொடுத்திருக்கிறார்.







இந்த     ரசிகர்கள்     கூட்டத்தை     
அஜித்தின்     நேர்மைக்கும்     
உழைப்புக்கும்      கிடைத்த     
பரிசாகத்தான்     பார்க்கிறேன் .      
எவ்வித     வலுவான      பின்னணியும்      
இல்லாலம்     படிப்படியாக      
முன்னேறி,     நம்பிக்கைக்கு      
முன்னுதாரணமாகத்     திகழ்வது      
ஒரு    பக்கம்     என்றாலும்,     
ஓர்     உதவி     செய்துவிட்டால்,      
உடனே     அறிக்கை     
ஒன்றினை      வெளியிட்டு,     
அதை     வைத்து      பப்ளிசிட்டி      
தேடிக்     கொள்ளும்     நபர்கள்      
மத்தியில்     அஜித்     செய்து       
வரும்     உதவிக்கு     எல்லாம்     
தினமும்   2    முதல்    3    அறிக்கையாவது     
வெளியிட     வேண்டும்.      
அது    மட்டுமன்றி     அஜித்திடம்     
கறுப்பு    பணம்     என்பது     ஒரு    
ரூபாய்     கூட    கிடையாது.     
படத்தில்    நடிப்பதற்காக    சம்பளம்      
வாங்கிய     அடுத்த     தினத்தில்,    
அதற்கான     வரியை     செலுத்தி     விடுவார்.







அஜித்     தொட்டதெல்லாம்     
ஹிட்டாகவில்லை.      
வெற்றிப்     படங்களை     மட்டுமே      
தந்து      வசூல்     சக்கரவர்த்தியாக      
திகழவில்லை.       
ஆனால்,      ஏன்     அஜித்தை     
ரசிகர்கள்     மட்டுமில்லாமல்     
சினிமா     உலகமே     கொண்டாடுகிறது.       
காரணம்,     
அஜித்    ஒரு     நடிகராக     
மட்டுமில்லாமல்    நல்ல     
மனிதராக     இருக்கிறார்.     
அது    எப்படி     சாத்தியமானது     
என்பதை     நீங்கள்     கொஞ்சம்     
பொறுமையுடன்     படிக்க     
வேண்டியது      அவசியம்.








உதவி        இயக்குநர்களின்   தோழன்



அஜித்    நடித்த     பல    படங்கள்     
சறுக்கல்களைச்     சந்தித்தன.     
தோல்விப்      படங்களுக்காக    
அஜித்     கவலைப்படவில்லை.       
கார்   ரேஸ்     கவனத்தையும்     
திருப்பி     சினிமாவில்    மட்டும்     
முழு     மூச்சாக    இறங்கினார்.





அதற்காக     உதவி     
இயக்குநர்களை     இயக்குநராக்கி     
அழகு    பார்க்கவும்     அஜித்     தவறவில்லை.     
பெரும்பாலான     இயக்குநர்களுக்கு     
முதல்     பட    வாய்ப்பைக்     
கொடுத்தது     அஜித்    தான்.    
சரணின்     முதல்     படம்     
'காதல்  மன்னன்'.       
ஜேடி   ஜெர்ரியின்    முதல்   
படம்     'உல்லாசம்'.       
எஸ். ஜே   சூர்யாவுக்கு     முதல்    
படம்   'வாலி'.     
முருகதாஸின்     முதல்    படம்    'தீனா'.     
ஏ. எல். விஜய்யிடன்    முதல்    படம்   'கிரீடம்'.    
ரமேஷ்  கண்ணாவின்    முதல்    
படம்   'தொடரும்'.      
ராஜூ  சுந்தரத்தின்    முதல்   படம்   'ஏகன்'.      
சிங்கம்   புலியின்    முதல்   படம்    'ரெட்'.     
'ராசி',   'ஆழ்வார் '    என்று     பல    
படங்கள்    அறிமுக    இயக்குநர்கள்     
படங்கள்     தான்.






நடிகர்களின்   நண்பன்   அஜித்




'பாசமலர்கள்'     படத்தில்     
அரவிந்த்    சாமியுடனும்,     
'ராஜாவின்   பார்வையிலே'    படத்தில்     
விஜய்யுடனும்     அஜித்    
நடித்தது     குறிப்பிடத்தக்கது.    
அதற்குப்    பிறகு     அஜித்தும்,    
பிரசாந்தும்    'கல்லூரி   வாசல்'    படத்தில்     
இணைந்து      நடித்தனர்.      
'உல்லாசம்'    படத்தில்     அஜித்தும்,      
விக்ரமும்     இணைந்து      நடித்தனர்.    
'பகைவன்'     படத்தில்     அஜித்  -  சத்யராஜ்,      
'நீ  வருவாய்  என'    படத்தில்      
பார்த்திபன்  -  அஜித் 




இணைந்து      நடித்தது      
குறிப்பிடத்தக்கது.      
'ஆனந்த   பூங்காற்றே',     
'உன்னிடத்தில்   என்னைக்   கொடுத்தேன்'    
படங்களில்    அஜித்தும்  -  கார்த்திக்கும்     
நடித்தனர்.    
'தீனா'   படத்தில்     சுரேஷ்  கோபி,     
'மங்காத்தா'    படத்தில்     அர்ஜூன்,     
'ஆரம்பம்'    படத்தில்    ஆர்யா,      
'என்னை   அறிந்தால்'     படத்தில்     
அருண்   விஜய்     என     
அஜித்துடன்     நடித்தவர்களின்      
பட்டியல்     நீண்டது.





          ரிஸ்க்   எடுக்கப்   பழகியவர்




எந்த    வித     பின்புலமும்     இல்லாமல்     
சினிமாவுக்கு     வந்த     அஜித்     
தோல்வியைக்     கண்டது     
கலங்கியதில்லை.    
முதுகுத்     தண்டில்    பல்வேறு      
அறுவை     சிகிச்சைகள்     செய்த      
போதிலும்    சண்டைக்     காட்சிகளில்     
ரிஸ்க்     எடுக்கத்     தயங்கியதில்லை.    
இதனால்     அஜித்     உடல்     
குண்டானது     ஆனால்,      
அதற்காக     கிண்டல்     செய்பவர்களைக்      
கண்டு    மனம்    வருந்தாமல்     உடல்     
எடையைக்     குறைத்தார்.    
'ஆரம்பம்'    திரைப்படத்தின்     போது     
கூட     காலில்    அடிபட்டு     
ஆப்ரேஷன்     செய்யும்     அளவுக்கு     
அஜித்     ஆளானார்.



        அக்கறையில்   அண்ணன்


தன்னுடன்      இருப்பவர்கள்,     
நடிப்பவர்கள்      நலனில்      
அக்கறை     காட்டுவதில்     
அஜித்துக்கு      அலாதிப்    
பிரியம்      உண்டு.    
'வான்மதி'     படத்தில்     நடித்த     
போது     அஜித்துக்கும்,       
ஸ்வாதிக்கும்     காதல்     
என்று      கிசுகிசுக்கப்பட்டது.      
இருரும்     காதலிக்கவில்லை      
என்று     மறுத்தனர்.      
அதற்குப்     பிறகு,     ஸ்வாதிக்கு     
நடிக்க     வாய்ப்புகள்     வரவில்லை.      
சுந்தர்.சி     இயக்கத்தில்    அஜித்       
'உன்னைத்  தேடி'    படத்தில்     
நடிக்கும்      போது,      
வஸ்வாதிக்கு     வாய்ப்பு     கொடுத்தார்.









தமிழ்     சினிமா     பக்கம்      
தலை    காட்டாமல்     இருந்த     
தமன்னா     இடைவெளிக்குப்      
பிறகு     'வீரம்'    படத்தில்      
நடிக்க      வவைத்தார்.






கௌதம்    மேனன்     கடன்     
பிரச்னையில்     தவித்த     போது      
அஜித்     உங்கள்     இயக்கத்தில்      
நடிக்கிறேன்     என்று      முன்வந்தார்.     
'என்னை   அறிந்தால்'     படத்தின்     
ரிசல்ட்     குறித்த     முனைப்பில்      
பரபரப்பாக     இருந்த      
கௌதம்   மேனனிடம்,     
படத்துக்கு     ரசிகர்கள்     வரவேற்பு     எப்படி?     
என்று     அஜித்    கேட்கவில்லை.     
உங்கள்    பிரச்னை     தீர்ந்ததா?    
என்றுதான்     கேட்டார்.






தன்    வீட்டில்    பணிபுரியும்     
பணியாளர்கள்    12   பேருக்கு      
வீடு    கட்டிக்     கொடுத்திருக்கிறார்.    
விளம்பரம்     பிடிக்காதவர்    தன்     
படமாக     இருந்தாலும்    இசை   
வெளியீட்டு     விழா,     
பத்திரிகையாளார்     சந்திப்பு,      
வெற்றி    விழா    என     
எதிலும்     கலந்துகொள்ளாதவர்     அஜித்.     
என்   படத்தை     ரசிகர்கள்      
பார்க்கவேண்டும்    என்று     
கூட     சொல்லியதில்லை.



            கார்  ரேஸ்  -  தீராக்  காதலன்



கார்    ரேஸில்     கடும்    
பயிற்சியால்     ஃபார்முலா  2    
பந்தயத்தில்      கௌரவமான      
இடத்தைப்     பிடித்தார்.     
30   வயதைக்     கடந்த     பிறகு      
சிறுவயதைக்     கனவை நிறைவேற்றிக்கொண்டவர்.    
'தீனா'     படத்தில்    ஒரு     காட்சி    வரும்.     
தன்     தங்கை    சின்ன   வயதில்     
ஆசைப்பட்டதையெல்லாம்    டீன்    ஏஜ்     
கடந்த    பிறகு     வாங்கிக்    கொடுப்பார்.    
சின்ன    வயசுல     ஆசைப்பட்டது.     
ஆனா,    கொஞ்சம்      
லேட்டா     கிடைச்சிருக்கலாம்.      
எப்பவுமே     கிடைக்கலைன்னு 





ஆகிடக்கூடாதுல்ல     என்ற     
தொனியில்     வசனம்    பேசி     இருப்பார்.       
கார் ரேஸைப்      
பொறுத்தவரையில்     அஜித்துக்கு       
அப்படித்தான்      நடந்தது.







அஜித்தை       பற்றி        நடிகர்கள்   கூறியது....



விஜய்:     

''அஜித்திடம்     எனக்குப்   பிடித்தது      
அவர்     தன்னம்பிக்கை    தான்.       
என்னுடைய     பர்சனல்     வாழ்க்கையில்      
அவருக்கு     மிகப்   பெரும்      பங்குண்டு.      
நான்    தம்பி    என்றால்      
அவர்     அண்ணன்.   '' என்றார்   விஜய்.







சூர்யா :        

''அஜித்    சார்     எனக்கு    
வாழ்க்கை      கொடுத்திருக்கார்னு     
தான்     சொல்லுவேன்.     
நேருக்கு  நேர்,   நந்தா,    கஜினி   
படங்கள்ல     நடிக்க    அஜித்   சாருக்கு   
தான்     முதல்ல     வாய்ப்பு      
வந்தது''     என்றார்     சூர்யா.




தான்    புதிதாக     வந்தபோது     
அனுபவித்த      கஷ்டங்கள்      
யாவுமே     இன்றைக்கு     வரும்    
புதிய     இயக்குநர்களுக்கோ,      
நடிகர்களுக்கோ     இருக்கக்      கூடாது       
என்று     நினைப்பார்      அஜித்.     
புதிதாக     நிறைய      
இளைஞர்கள்      வரவேண்டும்      
என்று     நினைப்பார்.      
புதிய    இயக்குநர்     என்ற     
வித்தியாசம்     எதுவுமே     பார்க்காமல்     
சில    படங்களில்      நடித்தார்.       
அந்தப்     படங்கள்     
சரியாக    போகவில்லை.








இதனால்     'கிரீடம்'    படத்தின்போது,     
"அறிமுக     இயக்குநர்களுக்கு       
வாய்ப்பு     கொடுத்து      நான்     நடிச்ச     
படங்கள்    பெருசா     பேசப்படலை.      
இது     கடைசி     முயற்சி.      
இந்தப்    படம்    மட்டும்     சரியா      
போகலைன்னா     இன்னும்     அஞ்சு      
வருஷத்துக்கு     எந்த     ஒரு    புது       
இயக்குநருக்கும்     தேதிகள்    
கொடுக்க      மாட்டேன்"     என்று      
இயக்குநர்     விஜய்யிடம்     
தெரிவித்தார்     அஜித்.      
அப்படம்     எதிர்பார்த்த      
வரவேற்பை      பெறாததால்,      
புதுமுக      இயக்குநர்களின்      படத்தில்      
நடிப்பதை     தவிர்த்துவிட்டார்.       
'கிரீடம்'    படத்துக்குப்     பிறகு      
'ஏகன்'    ஏற்கனவே     
ஒப்புக்கொண்டதாலும்       
இயக்குநராக    நடன      இயக்குநர்      
ராஜு   சுந்தரம்     என்பதாலும்      
மட்டுமே     நடித்தார்.







படப்பிடிப்பில்     எப்போதுமே     மற்றவர்களின்    
பேச்சுகளை    அப்படியே      கவனித்து     
இமிடேட்    பண்ணி     கிண்டல்     செய்வார்.       
அந்த      காமெடியை     எல்லாம்     
படத்தில்     உபயோகிக்க     வேண்டும்     
என்று     பல    இயக்குநர்கள்     கூறியும்,       
இது      என்னோட      பர்சனல்,     
இதெல்லாம்      படத்தில்     
உபயோகிக்கலாமா      என்று      
சொல்லி     தவிர்த்துவிட்டார்.







ஒரு     முறை    ஆபரேஷன்      
முடிந்து     மருத்துவமனையில்     
இருந்த     அஜித்தை      பார்க்க      
சென்றார்     இயக்குநர்     சரண்      
தலையை     எந்தப்      பக்கமும்      
அசைக்க     முடியாதபடி      
படுக்க      வைத்திருந்த     
அஜித்தின்      முகத்திற்கு     நேராக     
சென்று     பார்த்தார்     இயக்குநர்    சரண்.    
அப்போது      அஜித்     கூறியது,     
"பரபரன்னு     ஒரு    ஆக்ஷன்      
கதை    ரெடி     பண்ணுங்க.       
இரண்டு     மாதத்தில்      வந்துவிடுகிறேன்"     
என்பதுதான்      அவர்     கூறியது     
போல     இரண்டு      மாதத்தில்       
ஆரம்பித்த     படம்     தான்       
'அமர்க்களம்'







அஜித்...   சில   குறிப்புகள்:




*    நம்மில்     பலரும்     காபி,      
ஜூஸ்    என    எது     கொடுத்தால்      
வலது    கையில்      பிடித்துக்      குடிப்போம்,     
ஆனால்    அஜித்     எப்போதுமே     காபி,     
ஜூஸ்     குடிக்கும்போது     இடது     
கையைதான்       உபயோகிப்பார்.







*   முதன்     முதல்     அஜித்      
மிகவும்     ஆசைப்பட்டு     வாங்கிய      
கார்     எக்ஸ்ப்ளோரர்.      
இப்போதும்     அதை     வீட்டில்       
பத்திரமாக      பாதுகாத்து     வருகிறார்.







*    பிரபல     வீரர்     அயர்டன்   சென்னா     
தான்     அஜித்துக்கு     ரேஸில்   ரோல்    மாடல்.  ஒரு    கார்    விபத்தில்    சிக்கி      மே 1-ம்     
தேதி     மரணமடைந்தார்.       
ஒவ்வொரு     பிறந்த    நாளின்      
போதும்      அயர்டன்    சென்னா     
மரணத்தை      நினைத்து       
வருந்துவார்.







*   தனது      குழந்தைகள்     பிறந்ததில்      
இருந்து      இப்போது      வரை      
அவர்களின்     உடல்     மொழிகளை      
புகைப்படம்     மற்றும்      வீடியோவாக      
எடுத்து      சேகரித்து      வருகிறார்.





*    இரவு    8   மணி     மேல்     
யாரையும்     உடனடியாக       
போனில்     அழைக்க     மாட்டார்     அஜித்.      
"நீங்கள்     ப்ரீயாக      இருக்கிறீர்களா?"      
என்று     குறுந்தகவல்       அனுப்புவார்.        
ப்ரீயாக     இருக்கும்      பட்சத்தில்      
மட்டுமே      அழைப்பார்.




*    மெமோரியில்     பள்ளியில்     படித்த      
ஏரோ     மாடலிங்     தான்      
தற்போது     ரிமோட்      விமானம்,      
பைலட்    நடவடிக்கையில்      
என      வளர்ந்து 




நிற்கிறது.











*     ஒரு     காலத்தில்      மிகத்     
தீவிரமான      கிரிக்கெட்     ப்ரியர்.      
ஆனால்      இப்போது      
'கிரிக்கெட்டுக்கான      முக்கியத்துவம்     
எல்லா     விளையாட்டுகளுக்கும்      
கொடுக்க     வேண்டும்'      
என்ற     கோரிக்கை      வைத்திருக்கிறார்.






*    தான்     நடித்த     படங்கள்      
வெளியாகும்      போது     படம்     
ஹிட்டா     என்றெல்லாம்      
யோசிக்க     மாட்டார்.      
நடித்து     முடித்து,    படம்    
திரைக்கு     வந்துவிட்டது.      
இனி     மக்கள்     தான்     தீர்மானிக்க      
வேண்டும்      என்று     நினைப்பார்.







இனிமேல்      அஜித்தின்     திரையுலக     
வாழ்க்கை     முடிந்தது     என்று     
பலரும்     பேச     ஆரம்பித்தார்கள்.     
அவ்வாறு      தன்னுடைய      வாழ்க்கையில்      
அடி    மேல்     அடி    விழுந்த    போது,      
ஒவ்வொரு    அடியிலும்      இருந்து     
"உங்களால்     முடியும்"    என்று      
அஜித்தை     தூக்கி      நிறுத்தியவர்      
ஷாலினி      மட்டுமே!





 
ஏப்ரல்    24, 2000-ம்      ஆண்டு     
ஷாலினியை     திருமணம்      
செய்தார்     அஜித்.       
திருமணத்துக்கு     பிறகு     ஷாலினிக்காக      
நிறைய     விஷயங்களை      
மாற்றிக்     கொண்டார்     அஜித்.       
அவருடைய      நண்பர்கள்      அனைவருமே     
இதை     பெரும்     
ஆச்சரியமாக      பார்த்தார்கள்.     
அதிகம்     கோபப்படுவது,      
அதீத     புகைப்பழக்கம்      உள்ளிட்ட     
பல    விஷயங்களை     மனைவிக்காக     
ஒரம்     கட்டினார்.









ஒரு     சமயத்தில்     கார்    ரேஸ்     
வெறியர்     அஜித்.       
அப்போது     ஸ்பான்சர்      கிடைக்காமல்       
தன்னுடைய     சொந்த     பணத்தை      
போட்டு    ரேஸில்     பங்கேற்றார்.       
படங்களும்     தோல்வி,     
நண்பர்களுடன்     பிரிவு,      
வரவேண்டிய     சம்பள    பாக்கி      
என     நீங்கள்    பார்க்கும்      
தற்போதைய      அஜித்தை     
ஒரு    காலத்தில்     சுழற்றி     
அடித்தது     வாழ்க்கை.     
அப்போது     மனைவி    ஷாலினியின்     
ஊக்கமும்     உறுதுணையும்தான்     
அஜித்     மீள்வதற்கு     வழிவகுத்தது.









*    அஜித்தை     பொறுத்தவரை     
தான்    எளிமையைப்      
பின்பற்ற     வேண்டும்     என்பதில்      
உறுதியாக     இருப்பார்.      
இப்போதும்     மாருதி     ஸ்விஃட்     
கார்   தான்     வைத்திருக்கிறார்.     
ஆனால்,     மனைவிக்கு     கார்     
என்று     வந்துவிட்டால்    பெரிய     
ரகக்    கார்கள்     தான்.








அஜித்    கார்   ரேஸ்     என்றால்     
ஷாலினி     பேட்மின்டன்     வீராங்கனை.      
எப்போதுமே     குடும்பம்     என்ற      
அரங்கில்      ஷாலினியை     
சாம்பியனாக்கி    ரசிப்பார்     அஜித்.







திருமண     நாளுக்கு      விலையுர்ந்த      
பொருட்கள்     வாங்கி     கொடுத்து      
ஷாலினியை     இன்ப     அதிர்ச்சியில்      
ஆழ்த்துவது     அஜித்துக்கு     பிடித்தமான      
வழக்கங்களில்     ஒன்று.     
திருவான்மியூரில்     உள்ள     அவரது     
வீட்டு    உட்புறம்    அனைத்துமே     
மர   வேலைகளால்    அலங்கரிக்கப்பட்டது.






ஒவ்வொரு    5   வருடதுக்கும்      
புதிதாக     மாற்ற     வேண்டும்.     
ஒரு    முறை    அவ்வாறு     
மாற்றிய     தருணத்தில்,     
ஒரு    மிகப்பெரிய     பூப்பந்தாட்ட      
அரங்கம்     ஒன்றை     வீட்டிற்குள்ளேயே     
நிறுவினார்     அஜித்.      
அப்போது     ஷாலினி    வேறு     
வீட்டில்    இருந்ததால்     
அவருக்கு     தெரியாது.     
எல்லாம்     வேலைகளும்     முடிந்து      
திருமண     நாளும்     வந்தது,      
அப்போது     அந்த    பூந்பந்தாட்ட      
அரங்கை     திருமண     நாள்   
பரிசாக    அளித்தார்     அஜித்.      
இவ்வளவு    பெரிய     அரங்கு      
வீட்டிற்குள்ளேவா    என    ஷாலினி      
தனது     கணவரின்    அன்பைக்      
கண்டு    நெகிழ்ந்து     விட்டார்      
அன்றைய     தினம்.







முன்பெல்லாம்     அஜித்,     
ரஜினியைப்    போல 








நானும்     பெரிய     நடிகராக.      
வளர்வேன்    என    பல    
பேட்டிகளில்     சொல்லியிருக்கிறார்.    
ரசிகர்    மன்றங்கள்     வைத்திருந்தார்.     
தற்போது     பேட்டியும்     அதிகமாக      
கொடுப்பதில்லை,     
ரசிகர்    மன்றமும்    இல்லை.      
படம்    நல்லாயிருந்தால்      
திரையரங்கிற்கு     சென்று     
பாருங்கள்     என்று     
கூறிவிடுகிறார்.      
அஜித்தின்     இந்த     மாற்றத்திற்கு       
காரணமே    ஷாலினிதான்      
என்கிறார்கள்.








"நீங்கள்    ஏன்     இப்படி     
பேசிக்    கொண்டிருக்கிறீர்கள்.      
நடப்பது    விதிப்படி     நடக்கும்.     
படம்    நன்றாக     இருந்தால்      
ஒடப்    போகிறது.       
சந்தோஷமாக     எதற்கும்     
கவலைப்படாமல்      இருங்கள்.      
வெற்றி    என்பது     தானாக      
உங்களைத்     தேடிவரும்"     
என்று     ஷாலினி     சொன்னவுடன்     
சரிதானே     என்று     உடனடியாக     
மாற்றிக்     கொண்டார்







அஜித்துக்கு    ரசிகர்கள்   எப்படி?






*   நற்பணி     இயக்கமே   கதி     
என்று    ரசிகர்கள்     இருப்பதை     
ஏற்கவே    மாட்டார்     அஜித்.     
எப்போதுமே    'முதலில்      
குடும்பத்தை     கவனியுங்கள்,     
அதற்கு    பிறகுதான்     ரசிகர்     
மன்றம்    உள்ளிட்ட     விஷயங்கள்     எல்லாம்'     
என்பதை     தன்னை      
சந்திக்கும்     ரசிகர்களிடம்





அடிக்கடி     வலியுறுத்தவார்.      
அதேபோல     ரசிகர்களின்      
திருமணங்களுக்குத்     தன்னுடைய     
பெயர்    போட்டு    ஃப்ளக்ஸ்     
பேனர்கள்    அடிப்பது     என்பது     
அஜித்துக்கு    பிடிக்காத     ஒன்று.     
'திருமணம்    என்பது    பெர்சனல்    
விஷயம்     அதில்     ஏன்     
எனது    புகைப்படம்     
எல்லாம்    போடுகிறார்கள்'     
என்று     நொந்துகொள்வார்.






*    'ஜி'    படம்   உருவான     
நேரத்தில்     கோயம்புத்தூரில்     
ரசிகர்களை    சந்தித்துதான்      
கடைசி    என்கிறார்கள்     அஜித்துக்கு      
நெருக்கமானவர்கள்.      
ரசிகர்களை    சந்திக்கும்போது     
மிகுந்த     சந்தோஷத்தோடு     
உரையாடுவார்.      
ரசிகர்களின்     வீடுகளின்    விஷேசம்     
என்று     வரும்போது     மோதிரம்,    
செயின்    போன்ற     பரிசுகளை     
மன்றம்    மூலமாக     அளித்து      
ஆச்சரியத்தில்     ஆழ்த்துவது      
அவரது     வழக்கம்.







படப்பிடிப்பில்     இருக்கும்      
நேரங்களில்    ரசிகர்களின்     தொந்தரவு      
இருந்தால்    அவருக்கு     
பிடிக்கவே     பிடிக்காது.     
'படப்பிடிப்பு    என்பது      தயாரிப்பாளரின்     
செலவில்     நடக்கிறது.     
அங்கு    வந்து     தொந்தரவு     
செய்யக்கூடாது'     என்பார்.









*    ஆரம்ப    காலத்தில்     அஜித்துக்கு     
வீட்டில்    சமைத்துக்    கொடுப்பதற்கு     
ஒரு    வயதான     பெண்     இருந்தார்.     
எப்போதுமே   அவர்    சமைப்பதை     
ருசித்து    சாப்பிடுவது     
அஜித்தின்    வழக்கம்.       
ஒரு    நாள்     படப்பிடிப்பு     
இல்லாமல்     வீட்டில்     
இருந்திருக்கிறார்    அஜித். 






காலையில்    சமைப்பதற்கு    அந்த     
பெண்     வந்து     நேரடியாக      
சமையலைறைக்கு     சமைக்கச்     சென்றார்.      
உடனே    அஜித்,     "நீங்கள்     இன்று     
சமைக்க     வேண்டாம்.    
நான்    சமைக்கிறேன்,     
நீங்கள்   சாப்பிட    இருக்கிறீர்கள்"    
என்று    கூறிவிட்டார்.      
அன்று     அவரே    சமைத்து,     
தான்     அமர்ந்து   சாப்பிடும்     
டைனிங்   டேபிளில்     அந்தப்     
பெண்மணியை      உட்கார     
வைத்து    பரிமாறி     
சாப்பிட     வைத்திருக்கிறார்.      
அஜித்தின்    இந்த     விருந்தோம்பலை      
கொஞ்சமும்    எதிர்பார்த்திராத      
அந்தப்    பெண்    
அப்படியே    நெகிழ்ந்துவிட்டார்.








*   அஜித்தின்    வீட்டில்   கார்    
நிறுத்தும்    இடத்தில்,     
கீழே    பதிந்திருக்கும்     கற்களை     
மாற்ற     ஆட்களை      வரச்     
சொல்லியிருக்கிறார்கள்.      
அங்கு    பணியாற்ற     வந்தவர்     
கற்களை    எல்லாம்     எடுத்துவிட்டு     
புதிய    கற்களை    பதிக்கும்    
வேலைகளை     ஆரம்பித்திருக்கிறார்.      
அவர்    வேலை     செய்வதைப்    
பார்த்துக்    கொண்டிருந்தார்      அஜித்.     
முதல்    வரிசையில்     கற்களை    
எல்லாம்     பதித்தவுடன்,       
"நீங்கள்     உட்காருங்கள்..      
நான்    பதிக்கிறேன்"     
என்று     கூறிவிட்டு,      
மீதமிருந்த    இடத்தில்    அஜித்தே      
கற்களை    பதித்து    விட்டார்.     
வேலை    முடிந்து     போகும்போது     
பேசியபடி     முழு    சம்பளத்தையும்      
கொடுத்து    அவரை    ஆச்சரியத்தில்    
ஆழ்த்தியிருக்கிறார்    அஜித்.






*   அஜித்துக்கு    எப்போதுமே    இரவு     
நேரங்களில்    காரை    எடுத்துக்     
கொண்டு     சென்னையைச்     
சுற்றுவது     பிடிக்கும்.      
ஒரு    முறை     அவருடைய     
டிரைவரை     அழைத்துக்    கொண்டு     
இரவு    11  மணிக்கு     
திருவான்மியூரில்    இருந்து      
தி.நகருக்கு    வந்திருக்கிறார்.      
தி.நகரில்     உள்ள     
கண்ணதாசன்    சிலைக்கு 






முன்பு     கார்    நின்றுவிட்டது.     
என்ன    பிரச்சினை    என்று    பார்த்தபோது     
காரில்    பெட்ரோல்    இல்லை.        
அப்போது     டிரைவர்     அஜித்திடம்     
"சார்..      நீங்கள்    ஸ்டீரிங்     
பிடித்துக்      கொள்ளுங்கள்     
நான்    தள்ளுகிறேன்.       
பென்ஸ்    பார்க்   ஹோட்டல்      
அருகில்     பெட்ரோல்   பங்க்    
இருக்கிறது.     
அங்கு    பெட்ரோல்     போட்டுக்     
கொண்டு     கிளம்பலாம்"     
என்று     சொல்லியிருக்கிறார்.      
அதற்கு   அஜித்,       
"ஏன்    நீங்கள்   தள்ளினால்    மட்டும்     
தான்     கார்    நகருமா..      
நான்   தள்ளினால்    நகராதா?"    
என்று    கூறிவிட்டு     
காரைவிட்டு     இறங்கிவிட்டார்.      
இரவு     என்பதால்     அங்கிருந்தவர்களுக்கு      
அஜித்     என்று     தெரியவில்லை.      
அங்கிருந்து      பென்ஸ்     பார்க்     
வரை    காரை    தள்ளிக்    
கொண்டே     சென்று     
பெட்ரோல்     போட்டுக்கொண்டு    
கிளம்பி    இருக்கிறார்கள்.







*   தன்னிடம்    டிரைவராக     
பணியாற்றியவருக்கு    வீடு    
ஒன்றை    வங்கியில்    மாதத்     
தவணை    முறையில்     முன்   பணம்     
கட்டி    வாங்கி     கொடுத்தார்    அஜித்.     
சில    நாட்களில்    அந்த     டிரைவர்     
வேலையை    விட்டுச்     
செல்ல     வேண்டியதாகிவிட்டது.     
ஆனால்,     வீடு    மட்டும்     
டிரைவரின்     பெயரிலியே     இருந்தது.    
மாத    தவணையை    அவரால்     
கட்ட    முடியாமால்,     
சில    மாதங்களில்    வங்கியில்     
இருந்து    நோட்டீஸ்     அனுப்பினார்கள்.     
வீடு    ஜப்தி    செய்வது     
வரை    வந்துவிட்டது.






முன்னாள்    டிரைவர்    மிகுந்த      
கவலையில்    இருக்கும்     தகவல்     
அஜித்திடம்    தெரிவிக்கப்பட,     
நேராக    வங்கிக்கு   போன்     
செய்து    மீதித்    தொகை     
எவ்வளவு    இருக்கிறது     
என்று     விசாரித்து,     
அனைத்து    பணத்தையும்     கட்டிவிட்டார்.     
அந்த    வீட்டை     உடனடியாக     
முன்னாள்    டிரைவரின்     
பெயருக்கே     முழுமையாக     
மாற்றியும்     கொடுத்துவிட்டார்.     
அந்த    டிரைவரின்     மகிழ்ச்சியை     
விவரிக்கத்     தேவையில்லை.




*   சமீபத்தில்    'என்னை   அறிந்தால்'    
படப்பிடிப்பு     சிக்கிமில்     நடைபெற்றது.     
அஜித்,    விவேக்    இருவரும்     
ஒன்றாக     படப்பிடிப்பு      
நடைபெறும்     இடத்துக்கு    காரில்     
சென்று     கொண்டிருந்திருக்கிறார்கள்.




 
அப்போது,     அந்தக்    காரின்     
டிரைவருக்கு    ஒரு    போன்    
கால்    வந்திருக்கிறது.      
காரை    நிறுத்திவிட்டு     பேசியிருக்கிறார்.      
பழைய    போன்    என்பதால்     
அவர்    அந்த    செல்போனைத்     
சுற்றி    ரப்பர்   பேண்ட்    எல்லாம்     
போட்டு     பேசி     இருக்கிறார்.       
ஆனால்     சிக்னல்     சரியாகக்      
கிடைக்காததால்     சரியாக     
பேச    முடியவில்லை.      
கார்    கிளம்பி    சென்று     
கொண்டிருக்கும்     போது,      
அஜித்    ஓர்    இடத்தில்     காரை     
ஒரமாக     நிறுத்துமாறு     சொல்லி,      
மொபைல்    போன்     கடைக்கு     
சென்று     புதிய   மாடல்    போன்     
ஒன்றை    வாங்கி    வந்து,     
டிரைவரிடம்      "உங்களுடைய    
போனை     கொடுங்கள்"     
என்று     கேட்டுவாங்கி,       
சிம்   கார்டை     கழட்டி    புதிய     
போனில்     போட்டு,     
"இப்போது    பேசுங்கள்    நன்றாக    கேட்கும்"     
என்று     டிரைவரிடம்      
கொடுத்திருக்கிறார்     அஜித்.





*   இப்படி     தன்னைச்     
சுற்றியிருப்பவர்களை     
சர்ப்பிரைஸ்     தருவதுதான்      
அஜித்தின்    சின்ன    சின்ன     
ஆசைகளின்      முக்கியமானவை.      
தேவையானவர்களுக்கு     அஜித்     
செய்திருக்கும்     உதவிகளை     
எழுதினால்     எழுதிக்கொண்டே     
இருக்கலாம்.     ஆனால்,      
அவர்    உதவிகளை    செய்துவிட்டு     
கூறுவது "    எந்த    ஒரு    காரணத்தைக்     
கொண்டும்     என்னுடைய    பெயர்     
வெளியே    தெரியக்    கூடாது"     
என்பது     தான்.




*   அஜித்    அளித்த     பேட்டி     
ஒன்றில்    கூறியது




இப்போது     நினைவுக்கு     வருகிறது...     
"என்னால்    தொடர்ந்து     வருஷத்துக்கு     
200   நாள்    கால்ஷீட்    கொடுத்து     
கோடி    கோடியாக     சம்பாதிக்க     முடியும்.     
ஆனால்,     எனக்கு    அதில்    
ஆர்வம்    இல்லை     இந்த     
அஜித்    மனசுக்குப்    பிடிச்சதை     
மட்டும்தான்     செய்வான்.     
மனுஷனுக்குச்     மகிழ்ச்சிதான்      
சார்    முக்கியம்!''





'நிஜ'   அஜித்தை    அறிந்தவர்!




 
"தல    அப்படினு     யாரையும்     
எனக்கு    தெரியாது",      
"அஜித்தை     வைத்து    
படம்    இயக்கமாட்டேன்"     
என்று     ஒரு   காலத்தில்    கூறியவர்      
கெளதம்   வாசுதேவ்    மேனன்.       
ஆனால்,     அவருக்கு    ஒரு   கஷ்டம்     
என்று     கேள்விபட்டபோது      
உடனடியாக     "நாம   படம்    பண்றோம்"     
என்று     கூறி    உருவான     படத்தின்     
தலைப்பு    'என்னை    அறிந்தால்'.     
'என்னை    அறிந்தால்'    படம்     
வெளியான     அன்று    இயக்குநர்    
கெளதம்   மேனனுக்கு    போன் 




பண்ணி    மற்ற    நடிகர்கள்    சிலர்    
போல    படம்    எப்படி    போகிறது?     
எந்த    ஊர்களில்     இருந்து     
ரிப்போர்ட்     வந்தது     
என்றெல்லாம்    கேட்கவில்லை.      
அஜித்    கேட்டதே     
"கெளதம்...     பிரச்சினை     
எல்லாம்    தீர்ந்துவிட்டதா?     
சந்தோஷமாக     இருக்கிறீர்களா?       
படம்    வெற்றி,    தோல்வி    
எல்லாம்    விடுங்கள்"    என்றுதான்.     
படம்    முடிந்து     வெளியாகிவிட்டது.     
அதற்குப்    பிறகு    தன்னை     
யாரென்றே    தெரியாது    என்று     
சொன்ன    இயக்குநரிடம்     அஜித்     
ஏன்    பேச    வேண்டும்    என்று     
நீங்கள்    நினைக்கலாம்.      
தன்னை    முழுமையாய்      
அறியாதவரையும்     நண்பராக்கி     
சந்தோஷப்படுத்த    வேண்டும்      
என்பது    அஜித்தின்   குணம்     
அல்ல...     அவரது     இயல்பு.






ஓகே    நண்பர்களே    அடுத்த      
பதிவில     சந்திப்போம்........







என்றும்   அன்புடன்

R. கிரிசாந்தன்










கருத்துகள்

mynaga இவ்வாறு கூறியுள்ளார்…
🙏🙏🙏👍

பிரபலமான இடுகைகள்